Tuesday, September 28, 2010

Easy kerala spicy fish curry / ஈசி கேரளா ஸ்பைசி மீன் கறி

Easy Kerala Spicy Fish Curry


தேவையான பொருட்கள்;

மீன் - 1 கிலோ (கோலா மீன்)


கொடம்புளி - 4 துண்டு பெரியது அல்லது சிறியது என்றால் 8

தேங்காய் எண்ணெய் - 100 மில்லி

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

இஞ்சி- 50 கிராம்

பூண்டு - 50 கிராம்

கருவேப்பிலை - 3 இணுக்கு

உப்பு - தேவைக்கு.


செய்முறை:

இஞ்சி பூண்டை தோல் நீக்கி இப்படி சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடேறியதுன் நறுக்கிய இஞ்சி பூண்டை ஒரு கடாயில் போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு சிவற வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.
வதக்கி ஆறவைக்கவும்.


வதக்கிய மசாலாவை நைசாக அரைத்து எடுக்கவும்.

கேரளாவில் மீன் கறி மண்சட்டியில் தான் சமைப்பதுண்டு.எனவே நானும் மண்சட்டியில் மீதமுள்ள தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு ,வெந்தயம் போட்டு வெடித்ததும் கருவேப்பிலை போட்டு அரைத்த மசாலாவை போட்டு சிறிது வதக்கவும்.


இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

சுத்தம் செய்து மஞ்சள் உப்பு போட்டு அலசிய மீன் துண்டுகளை போடவும்.பெரிய துண்டாக கட் செய்து இருப்பதால் இடையில் கீறி விட்டுக்கொண்டேன்.அத்துடன் கொடம்புளியை தண்ணீரில் அலசி போடவும்.மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து மீனை திருப்பி போட்டு சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.இறக்கும் முன்பு 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விரும்பினால் விட்டு இறக்கவும்.

சுவையான ஈசி ஸ்பைசி கேரள மீன் கறி ரெடி.இதனை 3 நாட்கள் வெளியே வைத்து சாப்பிட்டாலும் கெடாது.ஃப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை வைக்கலாம்.வெங்காயம்,தக்காளி,தேங்காய் சேர்க்கவில்லை.ஆனாலும் கேரள உணவு விரும்பிகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.-ஆசியா உமர்.

24 comments:

ஸாதிகா said...

அருமையாக இருக்கு ஆசியா.

LK said...

:)

kavisiva said...

ம்ம்ம் டேஸ்டி டேஸ்டி :)

கொடம்புளிக்கு பதில் சாதாரண புளி சேர்த்து செய்தால் நல்லா இருக்குமா ஆசியா? தற்போது கொடம்புளி கைவசம் இல்லை :(

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

அருமையான preparation

சசிகுமார் said...

நன்றி அக்கா

சே.குமார் said...

Padangaludan kurippu super akka.

சிநேகிதி said...

அக்கா தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு செய்ததே இல்லை.. செய்துபார்ப்போம்

Umm Mymoonah said...

Looks very delicious, very clear instructions.

நாடோடி said...

ந‌ல்லா இருக்குங்க‌..

asiya omar said...

ஸாதிகா நேரில் வந்து கருத்து சொல்வது போல் இருக்கு.நன்றி.

எல்.கே வருகைக்கு மகிழ்ச்சி.

கவி,கொடம்புளி பதில் கெட்டியாக புளி கரைத்து விட்டு பாருங்க.ஆனால் எடிபிள் கோகனெட் ஆயில் சேர்த்து செய்யுங்க.அப்பதான் அந்த டேஸ்ட் வரும்.

asiya omar said...

செஃப் பாராட்டிற்கு மிக்க நன்றி.

சசி குமார் மிக்க மகிழ்ச்சி.

சே.குமார் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

சிநேகிதி நான் தேங்காய் சேர்க்காமலும் சில சமயம் செய்வதுண்டு.இது என்னோட கேரள தோழி சொல்லி தந்தது.

உம்மைமூனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஸ்டீபன் மிக்க நன்றி,மகிழ்ச்சி.ஒரு தடவை நீங்க உங்க ப்ளாக்கில் முழு மீன் பொரித்த படம் போட்டதை பார்த்து தான் உங்க பக்கம் வந்தது நினைவு வருகிறது.

asiya omar said...

ஸ்டீபன் மிக்க நன்றி,மகிழ்ச்சி.ஒரு தடவை நீங்க உங்க ப்ளாக்கில் முழு மீன் பொரித்த படம் போட்டதை பார்த்து தான் உங்க பக்கம் வந்தது நினைவு வருகிறது.

Mrs.Menagasathia said...

மிகவும் அருமையா வித்தியாசமா இருக்குக்கா...கொடம்புளின்னா என்ன புளிக்கா?

asiya omar said...

மேனகா கொடம்புளின்னு{black tamarind} கருப்பு புளியை கேரளாவில் சொல்றாங்க.அதைப்பதப்படுத்தி சின்ன துண்டாக பேக் செய்து வருது,அதை அப்படியே குழம்பில் போட்டு குழம்பு சாப்பிடும் பொழுது புளியை எடுத்து விடலாம்.புளிப்பு தன்மை குழம்பில் இறங்கிவிடும்.

மனோ சாமிநாதன் said...

மீன் குழம்பு குறிப்பு நன்றாக இருக்கிறது ஆசியா! அது என்ன மீன்? பார்த்தால் பெயரை அறிந்து கொள்ள முடியவில்லை.

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கு மகிழ்ச்சி.இது முறல் மீன் ,தலை ஊசி மாதிரி இருக்கும்.இது தூத்துக்குடி,ராமேஸ்வரம் சைட் நிறைய கிடைக்கும்.ஃபிஷ் மார்க்கெட் போயிருந்தேன்,பார்த்தவுடன் வாங்கிவிட்டேன்.சீப்&பெஸ்ட்.டேஸ்ட் வாளை மீன் ருசி இருக்கும்.முள் அவ்வளவாக இருக்காது.சதைப்பற்றுடன் இருக்கும்.

vanathy said...

very delicious & mouth watering recipe.

மனோ சாமிநாதன் said...

விளக்கத்துக்கு அன்பு நன்றி ஆசியா! வழக்கம்போல உங்களுடைய விளக்கம் அருமை!

kavisiva said...

ஆசியா! கேரளா ஸ்பைசி மீன் கறி செய்து சாப்பிட்டாச்சு. வெரி டேஸ்டி! கொஞ்சம் கூட மீதியில்லாம முடிஞ்சு போச்சு :). நன்றி ஆசியா!

asiya omar said...

கவி மிக்க மகிழ்ச்சி.செய்து சாப்பிட்டு பின்னூட்டமும் கொடுத்தமைக்கு நன்றி.

Umm Mymoonah said...

Thank you so much for linking this delicious recipe to Any One Can Cook.

asiya omar said...

umm mymoonah,thanks for your immediate response.