Wednesday, September 29, 2010

சேனைக்கிழங்கு பொரியல்



தேவையான பொருட்கள் ;

சேனைக்கிழங்கு - 300 கிராம்

கடுகு,உளுத்தம் பருப்பு - 1டீஸ்பூன்

மிளகாய் வற்றல்-2

மல்லி,கருவேப்பிலை - சிறிது

பெரிய வெங்காயம்- 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரைஸ்பூன் (விரும்பினால்)

அல்லது பெருங்காயம் - 2 பின்ச்

மஞ்சள் தூள் - அரைஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால்ஸ்பூன்

சீரகத்தூள்- கால்ஸ்பூன்

பெருஞ்சீரகத்தூள் -கால்ஸ்பூன்(விரும்பினால்)
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு


சேனைக்கிழங்கை தோல் சீவி இப்படி துண்டாக கட் செய்து கொள்ளவும்.



அரிசி களைந்த நீர் இருந்தால் அதில் சேனைகிழங்கை போட்டு அத்துடன் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

இப்படி வெந்து விடும்.குழைந்துவிடக்கூடாது.



வெந்த கிழங்கை தண்ணீர் வடிகட்டி விட்டு சிறிய துண்டாக கட் செய்து கொள்ளவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவிடவும்.



பின்பு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.



நறுக்கிய சேனைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்,மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,பெருஞ்சீரகத்தூள் (விரும்பினால்) சேர்க்கவும்.பிரட்டி விடவும். சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.உப்பு சரிபார்க்கவும்.


தேங்காய்த்துருவல்,நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் சென்று இறக்கவும்.

சுவையான சேனைக்கிழங்கு பொரியல் ரெடி.


--ஆசியா உமர்.

21 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா இருக்கு ரெசிப்பி. விளக்கப்படங்களும் சூப்பர்.

LK said...

i love it

புதிய மனிதா said...

அருமை..

சிநேகிதி said...

எப்பொழுதும் போல் உங்கள் கை மணம் சூப்பர்

சசிகுமார் said...

அருமை அக்கா வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

விளக்கபடங்களுடன் சூப்பர்ர் அக்கா..காரகுழம்புடன் சாப்பிட செம ஜோர்!!

asiya omar said...

புவனா மிக்க நன்றி.

எல்.கே.மிக்க நன்றி.

asiya omar said...

புதிய மனிதா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சினேகிதி
சசிகுமார்
மேனகா சத்யா

தொடர்ந்த அன்பான கருத்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மோகன் said...

படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

நாடோடி said...

நீங்க‌ளும் சேனைக்கிழ‌ங்கு என்று தான் சொல்லுவீங்க‌ளா?.. நாங்க‌ளும் சேனைக்கிழ‌ங்கு என்று தான் சொல்வோம்.. சில‌ர் க‌ருணைக்கிழ‌ங்கு என்று சொல்லுவார்க‌ள்.. அதான் கேட்டேன் :)

asiya omar said...

மோகன் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

ஸ்டீபன்,சேனைக்கிழங்கு வேறு, கருணைக்கிழங்கு வேறு -கருணைக்கிழங்கு இதே மாதிரி சின்னதாக இருக்கும்.சேப்பங்கிழங்கு மாதிரி கருப்பாக இருக்கும்,அதை விட சின்னது சிறு கிழங்கு.
கருத்திற்கு நன்றி.

எம் அப்துல் காதர் said...

அருமையான ரெசிப்பி மேடம்!! இந்த வகை கிழங்குகள் சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் என்று சொல்வாங்களே!! அது எது சேப்பங் கிழங்கா, சேனை கிழங்கா, கருணை கிழங்கா?? எனக்கு இது பெரிய குழப்பம் மேடம்! அதனால் "எஸ்"

asiya omar said...

கருணைக்கிழங்கு தான் அதிகமாக நாக்கு அரிக்கும்,அதற்கு,புளி,தக்காளி.வெங்காயம் சேர்த்து கடைந்தால் கட்டி பருப்பு மாதிரி சப்புக்கொட்டி சாப்பிடலாம்.சேனைகிழங்கும் லைட்டாக நறுக்கும் பொழுது கை அரிக்கும்,அதற்கு தான் கழனியில் போடுவது.சாப்பிடும் பொழுது ஒன்றும் தெரியாது.

Mahi said...

கர்ர்ர்!!நானும் இதே ரெசிப்பி போஸ்ட் பண்ண ரெடியா இருந்தேன்.முந்திகிட்டீங்க!! :)

நல்லா இருக்கு ஆசியாக்கா!சோம்பு அடுத்தமுறை சேர்க்கிறேன்.

vanathy said...

அக்கா, நல்லா இருக்கு. இந்த கிழங்குக்கு நான் எங்கே போறது! கிடைச்சா செய்து பார்க்கணும். நல்ல ரெசிப்பி.

asiya omar said...

மகி நீங்க செய்த பொரியலை போடுங்க.சுவைக்க ஆசை.

வானதி வருகைக்கு மகிழ்ச்சி.

Noorul said...

"asiya omar said...
கருணைக்கிழங்கு தான் அதிகமாக நாக்கு அரிக்கும்,அதற்கு,புளி,தக்காளி.வெங்காயம் சேர்த்து கடைந்தால் கட்டி பருப்பு மாதிரி சப்புக்கொட்டி சாப்பிடலாம்..."

படிக்கும் போதே சூப்பரா இருக்கு, ப்ளீஸ் full ரெசிப்பி தாங்க அக்கா (when time permits)

Mahi said...

/இந்த கிழங்குக்கு நான் எங்கே போறது!/வானதி,இண்டியன் ஸ்டோர்ல ப்ரோஸனா கிடைக்குது சேனைகிழங்கு."Suran"என்று இருக்கும்,பாருங்க.

ஆசியாக்கா,கிட்டத்தட்ட இதே மாதிரிதான் நானும் செய்வேன்.சீக்கிரமா போஸ்ட் பண்ணறேன்.

yarl said...

இதை இன்று உங்கள் முறைப்படி செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. எல்லோரும் ரசித்து உண்டோம். நன்றி சகோதரி.