Thursday, September 30, 2010

பேச்சிலர்ஸ் ப்லைன் ரவா கிச்சடி


தேவையான பொருட்கள்;
ரவை - 300 கிராம்
தண்ணீர் - 900 மில்லி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
மல்லி,கருவேப்பிலை,புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்பு தூள்)
மிளகாய்த்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

ரவையை நல்ல மணம் வர மிக நன்கு வறுத்து கொள்ளவும்.வெங்காயம்,தக்காளி,மல்லி புதினா கட் செய்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கி கொள்ளவும்.நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்க்கவும்.



நன்கு வதக்கவும்,தக்காளி,மல்லி,புதினா,கருவேப்பிலை,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும், மூடி சிம்மில் போடவும்.
திறந்து வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.



நன்கு சேர்த்து வதக்கவும்.எண்ணெய் தெளிந்து மேல் வரும்.


ரவைக்கு 3 அளவு தண்ணீர் சேர்க்கவும்,அல்லது நான் குறிப்பிட்ட அளவு சேர்க்கவும்.நுரை கூடி கொதி வரும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.உப்பு சரி பாருங்க.


ரவையை சிறிது சிறிதாக தட்டி கிண்டவும்.ரவையை நன்கு வறுத்து இருப்பதாலும்,அடுப்பை சிம்மில் வைப்பதால் ரவை கட்டி பிடிக்காது.


ரவை கிண்டும் பொழுது இப்படி அழகாய் திரண்டு வரும்.இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மறுபடி கிளறவும்.கிச்சடி ரெடியாயிடுச்சி.



ரெடியான சுவையான ப்லைன் ரவா கிச்சடியை சுடச்சுட அருமையாய் பரிமாறுங்க.

-ஆசியா உமர்.

26 comments:

LK said...

thangs ooruku ponalum rangs easya pannalam

asiya omar said...

ஆமாம் எல்.கே .இங்கேயும் நான் இல்லைன்னால் அவர் இதனை ஈசியாக செய்து சாப்பிடுவதாக சொல்வார்.

மங்குனி அமைசர் said...

////தேவையான பொருட்கள்;
ரவை, - 300 கிராம்
தண்ணீர் - 900 மில்லி
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
மல்லி,கருவேப்பிலை,புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்பு தூள்)
மிளகாய்த்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு////

என்னைய மாதிரி (??@@##??) பேச்சிலர் பசங்களுக்கு சிம்பிளா ரெசிபி சொல்லாம , தேவையான பொருட்கள் இவ்ளோ இருக்கு , நான் ஒரு சிம்பிள் ரேரிபி சொல்றேன் பாருங்க ....

தேவையான பொருட்கள் :
ரூபாய் 15 /-

செய்முறை :
பைக்க எடுத்துகிட்டு பக்கத்துல இருக்க லட்ச்சுமி பவன்ல போயி ஒரு கிச்சடி கொடு என்று ரூபாய் 15 கேட்க்க வேண்டும் , உடனடியாக உங்கள் கையில் ஒரு பார்சல் தரப்படும் , வீட்டிருக்கு வந்த அதை பிரித்துப் பார்த்தால் சூடான , சுவையான கிச்சடி ரெடி

இது எப்படி இருக்கு , சிம்பிளா

ஸாதிகா said...

காய்கறி இல்லாமல் சுலபாமக் செய்யும் முறை.பார்க்கவும் அழகாக உள்ளது.

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

Bachelorsக்கு ரொம்ப உதவியாயிருக்கும்.

சே.குமார் said...

எங்க அறையில் நாங்க வெள்ளிக்கிழமைன்னா இதைதான் செய்யிறோம். ஊர்ல ரவா உப்புமா, கிச்சடி எதையும் தொடமாட்டேன். இங்க அப்ப அப்ப சாப்பிட்டுக்கிறதுதான்... படங்கள் அருமை.

asiya omar said...

அமைச்சரே இது ரூமில் சமைச்சு சாப்பிடுற பேச்சிலர்ஸுக்கு.பதினைந்து ருபாய்க்கு ஒரு ஆள் சாப்பிடலாம்,ஆனால் இந்த அளவை 4 நபர் சாப்பிடலாமே!
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.

செஃப் கருத்திற்கு மிக்க நன்றி.

குமார் ,இப்படி ஒரு முறை செய்து பாருங்க.கருத்திற்கு மிக்க நன்றி.

Kousalya said...

அருமையான ரவா கிச்சடி....! தோழி ஒரு வராம் கழித்து இன்று தான் பதிவுலகம் பக்கம் வந்து இருக்கிறேன்...காலையில் வந்ததும் உங்க கிச்சடி தான் என்னை வரவேற்றது....அதுக்கு நன்றி தோழி.

எம் அப்துல் காதர் said...

// அமைச்சரே பதினைந்து ருபாய்க்கு ஒரு ஆள் சாப்பிடலாம்,ஆனால் இந்த அளவை 4 நபர் சாப்பிடலாமே! //

நீங்கள் சொல்வது மிகவும் சரியே!!

சசிகுமார் said...

தேவையான பொருட்கள் :
ரூபாய் 15 /-

//செய்முறை :
பைக்க எடுத்துகிட்டு பக்கத்துல இருக்க லட்ச்சுமி பவன்ல போயி ஒரு கிச்சடி கொடு என்று ரூபாய் 15 கேட்க்க வேண்டும் , உடனடியாக உங்கள் கையில் ஒரு பார்சல் தரப்படும் , வீட்டிருக்கு வந்த அதை பிரித்துப் பார்த்தால் சூடான , சுவையான கிச்சடி ரெடி

இது எப்படி இருக்கு , சிம்பிளா//

அதே தான்

சிநேகிதி said...

ஆசியா அக்கா ஈசியான கிச்சடி...

Umm Mymoonah said...

Wow! very clear instructions. Looks yummy, thank you so much for linking with Any One Can Cook.
Manguni amaichar comment is really funny :-)

நாடோடி said...

சூப்ப‌ர் கிச்ச‌டி..

asiya omar said...

நன்றி கௌசல்யா.மிக்க மகிழ்ச்சி.

அப்துல் காதர் கருத்திற்கு மகிழ்ச்சி.

சசி குமார் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.ஆமாம் ரொம்ப ஈசி தான் என்ன செய்ய?இங்கு எங்கு போய் லட்சுமி பவனை தேடுவது.

asiya omar said...

சிநேகிதி

உம்மைமூனா

ஸ்டீபன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Mrs.Menagasathia said...

ஈசியான சூப்பர்ர் கிச்சடி அக்கா...

prabhadamu said...

ஆசியா அக்கா super

Kanchana Radhakrishnan said...

அருமையான ரவா கிச்சடி.

asiya omar said...

மேனகா

காஞ்சனா

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

ப்ரபாதாமு நலமா?ரொம்ப நாளாய் பார்க்கலை.வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

தெய்வசுகந்தி said...

Easy & Yummy!!!!!!!!!!

Riyas said...

கிச்சடி சூப்பர் படங்களும் அருமை..

Mahi said...

இஞ்சி-பூண்டு பேஸ்ட்,கரம்மசாலா சேர்த்து இதுவரை செய்யல ஆசியாக்கா. கிச்சடி நல்லா இருக்கு.

அன்னு said...

இது மாதிரியே ஆங்கிலத்திலும் போட்டா இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு ஒரியாக்காரருக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும் ஆஸியாக்கா. இல்லைன்ன வெறும் எலைதழைலயே வாழச் சொல்லிடுவார்!! ;)

vanathy said...

super recipe, akka.