Thursday, October 21, 2010

பீஃப் 65/ Beef 65

தேவையான பொருட்கள் ;

பீஃப் (இந்தியன் வீல்) -அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 1
சிறிய தக்காளி - 1
மல்லி இலை - சிறிது
தயிர் - 1 டீஸ்பூன்
கார்ன் ப்ளோர் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
ரெட் கலர் -பின்ச்
உப்பு- எண்ணெய்- தேவைக்கு

Serves - 4 -6


சுத்தம் செய்து சிறிய துண்டுகள் போட்ட கறியை நன்கு அலசி தண்ணீர் வடிகட்ட வேண்டும்.பின்பு அதனை குக்கரில் எடுத்து,அத்துடன்,தயிர்,உப்பு,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மல்லி இலை சேர்த்து கலந்து 5 விசில் வைத்து இறக்கவும்.தண்ணீரே சேர்க்க கூடாது.தண்ணீர் ஊறி இருந்தால் வற்ற வைக்கவும்.
வெந்த கறியை குறிப்பிட்ட அளவு கார்ன் ஃப்ளோர்,கடலைமாவு,அரிசிமாவோடு,பின்ச் ரெட் கலர் சேர்த்து கொஞ்சம் கறியில் ஊறி இருக்கும் தண்ணீரை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் தேவைக்கு எடுத்து காய்ந்ததும் கறியை போட்டு முறுக பொரித்து எடுக்கவும்.அரிசி மாவு,கடலை மாவு சேர்ப்பதால் ருசியாக எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.

பேப்பர் டவலில் வைத்து எடுத்து பரிமாறவும்.


அலங்கரிக்க கொடைமிளகாய் அல்லது பச்சை மிளகாய் கீறி விதை நீக்கி ஒரு ஸ்பூன் எண்ணெயில் வறுத்து போடலாம்.இன்னொரு முறையாக கறியை வெந்தபின்பு,அதனை ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கருவேப்பிலை,மிளகாய் வற்றல் கிள்ளி போட்டும் வறுத்தும் பரிமாறலாம்.இது தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும்.

சுவையான பீஃப் 65 ரெடி.
இப்படி அலங்கரித்து பரிமாறும் பொழுது அருமையாக இருக்கும்.
இது வெளிப்புறம் கிரிஸ்பியாகவும்,உள்ளே சாஃப்டாகவும் அசத்தலான சுவையுடன் இருக்கும்.கறி வெந்த மசாலாவை போட்டு கலந்து பொரிப்பதில் தான் டேஸ்ட் வரும்.


--ஆசியா உமர்.

19 comments:

kavisiva said...

அசத்தல் குறிப்பு ஆசியா! நான் மட்டனில் செய்து பார்க்கிறேன்.

ஆசியா இங்கே கிடைக்கும் மட்டனில் கொஞ்சம் வாடை வருகிறது(வெள்ளாடு இல்லையாம் செம்மறி ஆட்டு இறைச்சிதான் இங்கு கிடைக்குமாம்). அதைப் போக்க ஏதாச்சும் டிப்ஸ் இருக்கா?

Mrs.Menagasathia said...

பீஃப் சாப்பிடமாட்டேன்,ஆனாலும் உங்க குறிப்பு அசத்தலா இருக்கு..அவருக்கு இப்படி செய்து கொடுக்கனும்.அவரே வாங்கி வந்து வருத்து சாப்பிடுவார்...

asiya omar said...

கருத்திற்கு நன்றி கவிசிவா,வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.மொச்சை அடிக்கிற கறியை இது வரை வாங்கியதில்லை.அதனால் எனக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டதுன்னு நினைக்கிறேன்.

asiya omar said...

மேனகா தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Chitra said...

Maybe, I will try with boneless mutton pieces. :-)

asiya omar said...

thanks for your nice comments chitra.

Mrs.Menagasathia said...

கவி செம்மறி ஆட்டு கறி என்றால் 2,3 முறை வினிகரில் கழுவி பின் மஞ்சள்தூள்+எண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராது...

LK said...

present

அமைதிச்சாரல் said...

என்னோட டிபார்ட்மெண்ட் இல்லை.. ஆனாலும், சிக்கன் மற்றும் இறாலில் செஞ்சாலும் நல்லாருக்குமோன்னு தோணுது. கரெக்டா!!!

jagadeesh said...

அக்கா! என்ன இது. ஐயோ!. நாங்கள் பசுவை புசிப்பதில்லை. இதே கலவையை, நாங்கள் மற்ற இறைச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். கோமாதா எங்க குலமாதா!

asiya omar said...

எல்.கே.வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.


ஜெகதீஸ் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.உங்கள் உணர்வை மதிக்கிறேன்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பீஃப் சமையல் ரேர்...அதையும் நீங்க விட்டு வைக்கல..நல்ல படங்களுடன் அழகா எழுதி இருக்கீங்க..

asiya omar said...

சதீஸ்குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா said...

பார்க்கவே அருமையாக உள்ளது.ஆனால் நான் பீஃப் சாப்பிடுவதில்லையே!

asiya omar said...

ஸாதிகா எப்பவாவது வாங்கி சமைப்பதுண்டு.எங்க வீட்டில் எல்லோருக்குமே பிடிக்கும்.

Jaleela Kamal said...

நல்ல் இருக்கு பீஃப் 65நானும் சாப்பிட மட்டேன் , ஆனால் செய்வேன், மற்றவர்கலுக்கு பிடிக்கும்,

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

vanathy said...

சூப்பர் ரெசிப்பி & அழகான படங்கள்.

asiya omar said...

நன்றி வானதி.