Saturday, October 2, 2010

எந்திரன்


வருடம் ஒரு படம் தியேட்டரில் பார்ப்பது அபூர்வம்,அப்படியிருக்க எப்படி படம் ரீலீஸ் ஆன இரண்டாம் நாளே பார்த்தோம், ஆச்சரியம் தான் பிள்ளைகள் ஆசைப்படுறாங்கன்னு சொல்லி நாங்களும் ஆசைப்பட்டதால் போய் பார்த்து வந்தாச்சு.

இப்ப கதைக்கு வருவோம்.


சிட்டி டிஸ்மேண்டில் ஆனப்போ என் இதயம் நெருடியதும்
மனதை என்னவோ செய்ததும் உண்மை.இதுவே கதைக்கு கிடைத்த வெற்றி.


கலாநிதிமாறனின் தயாரிப்பில் இணையற்ற சங்கரின் பத்து வருட கனவு நிறைவேறியது.சுஜாதாவின் கதையை சொல்லவும் வேண்டுமா?

வசீகரன்,சிட்டியாக நடித்த ரஜினி நடிப்பிற்கு ஈடுஇணையே கிடையாது.சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்.

சனாவாக பிரம்மிக்க வைத்த ஐஸ்வர்யாவின் நடிப்பையும் அழகையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

கிராபிக்ஸ் சும்மா அதிர்ந்தது.

ஏ.ஆர்,ரஹ்மானின் இசை மனதை வருடி புத்தம் புத்துணர்ச்சியை தந்தது.

கவியரசு,கார்க்கி,பா.விஜய் இவர்களின் பாடல்கள் அற்புதம்.

கருணாஸ்,சந்தானம் காமெடி கலக்கல்.டேனியின் வில்லன் நடிப்பு மிகப்பொருத்தம்.

பீட்டர் ஹெய்ன் சும்மா செம அட்டகாசம்

டாண்ஸ் நிஜமாக ஒரு ப்ளஸ்பாயிண்ட்.

இப்ப விஷயத்திற்கு வருவோம்.

படம் முடிக்க சன் பிக்சர்ஸ்க்கு கிட்டதட்ட 190 கோடி செலவு,இன்னும் ரஜினி சம்பளம் வாங்கலையாம்,படம் ஓடி செலவை எடுத்தபின்பு தந்தால் போதும் என்ற ரஜினிக்கு சம்பள்மாக 45 கோடி கிடைக்க வாய்ப்பு இருக்காம்.

2250 ப்ரின்ட்ஸ்,4 ஷோ,500 சீட்ஸ்,டிக்கட்டின் விலை சராசரியாக 150 ருபாய் இப்படி பார்த்தால்

2250x4x500x150=67.5 கோடி ஒரு நாளைக்கு வசூல் ஆனால் மூன்று நாளில்

67.5 கோடி ருபாய் x 3 நாள் =202.5 கோடி எடுத்துவிடலாம்னு கணக்கிட்டு சொல்றாங்க.

அப்பாடா இதெல்லாம் நமக்கு எதுக்குன்னு எல்லாரும் கேட்பது தெரியுது.சும்மா ஒரு தகவலுக்கு தாங்க.

இதுவரை சினிமா விமர்சனம், சினிமா பற்றி எல்லாம் பெரிசாக பேசியது கூட இல்லை.ப்ளாக்கர் ஆனபின்பு எந்திரனை கண்டுக்காமல் இருந்தால் எப்படி?அதுக்கு தான் இந்த பதிவு.


-ஆசியா உமர்.


25 comments:

எம் அப்துல் காதர் said...

என்னாதிது விமர்ச்சனமெல்லாம் தூள் கிளப்புறீங்க மேடம்! ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். இப்படி தான் அப்பப்ப கொஞ்சம் அசத்தனும்!!

asiya omar said...

அப்துல் காதர் வாங்க,முதல் கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

சௌந்தர் said...

விமர்சனம் வித்தியாசமா இருக்கு

ஸாதிகா said...

// எந்திரனை கண்டுக்காமல் இருந்தால் எப்படி?அதுக்கு தான் இந்த பதிவு.
// :-(

Anonymous said...

வணக்கம்
சின்னதா அழகா எழுதி இருக்கீங்க...
ரொம்ப நல்லா இருக்கு...

நானும் தலைவர் படத்தை பார்த்தாச்சு...
பட்டையை கிளப்பி இருக்காங்க எல்லோருமே...

மீண்டும் சந்திக்கலாம்
என்றும் உங்கள் அருண் பிரசங்கி

கே.ஆர்.பி.செந்தில் said...

ரைட்டு...

LK said...

ada namma aasiya sagova kooda cinma elutha vachiruchilaa.. athuthan thalaivar

Kousalya said...

//ப்ளாக்கர் ஆனபின்பு எந்திரனை கண்டுக்காமல் இருந்தால் எப்படி?அதுக்கு தான் இந்த பதிவு.//

U TOO....FRIEND :))

இந்த எந்திரன் யாரையும் விட்டுவைப்பது இல்லை போலும்........சந்தோசமா இருக்கு தோழி....உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்கு....

ரஜினி படம் என்றாலே தைரியமாக குழந்தைகளுடன் சென்று பார்த்து விட்டு வரலாம் ...நாங்கள் இனி தான் செல்ல வேண்டும் .

jagadeesh said...

அருமை அக்கா. நிச்சயம் பார்த்து விடுகிறேன்.

asiya omar said...

சௌந்தர்
ஸாதிகா
அருண் பிரசங்கி
கே.ஆர்.பி
எல்.கே
கௌசல்யா
ஜெகதீஸ்

அனைவரின் அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நாடோடி said...

ரைட்டு..நீங்க‌ளும் க‌ள‌த்தில் இற‌ங்கியாச்சா?... :)

ஜெகதீஸ்வரன். said...

அனுபவத்தை சொல்லவே இல்லையே.

prabhadamu said...

அருமை அக்கா. நிச்சயம் பார்த்து விடுகிறேன்.

R.Gopi said...

ஆஹா....

மேடம்.... இப்போ இந்த சிங்கமும் களம் இறங்கியாச்சா!!! சூப்பர்....

“எந்திரன்” ரிலீஸான இரண்டாம் நாளே பார்த்தாச்சு... கலக்கல் தான்... நான் இங்கே ஷார்ஜாவில் முதல் நாள் மதியம் பார்த்தேன்....

படம் கலக்கல்... இது போன்ற ஒரு படம் இதுவரை இந்தியாவில் வந்ததில்லை... அவ்வளவு ஏன், முயற்சித்தது கூட இல்லை...

கௌசல்யா அவர்கள் சொன்னது இது :

//ரஜினி படம் என்றாலே தைரியமாக குழந்தைகளுடன் சென்று பார்த்து விட்டு வரலாம் .//

இதை நான் ஆமோதிக்கிறேன்...

எந்திரன் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது...

இது போன்றதொரு முயற்சியை தமிழர்கள் செய்தார்கள் என்பதே நமக்கு கிடைத்த பெருமை தான்...

moulefrite said...

ஏன் வீனான அலட்டல் எல்லாம் கீழெ உள்ள லிங்கில் எந்திரன் காம் காப்பி உள்ளது,சற்று தெளிவாகவே உள்ளது,படம் பார்த்துவிட்டு ஒரு ஐடியாவுக்கு வாந்து பின் தியட்டறுக்கு போங்களேன்

http://www.123tamiltv.com/endhiran-2010.html

asiya omar said...

ஸ்டீபன்
ஜெகதீஸ்
ப்ரபாதாமு
கோபி
moulefrite

உங்கள் அனைவரின் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.

sakthi said...

Aiyyayo neegaluma???????

Riyas said...

சும்மா அதிருதில்லே... உங்க விமர்சனம் கூட

asiya omar said...

சக்தி
ரியாஸ்
வருகைக்கு மிக்க நன்றி.எந்திரன் பார்த்திருப்பீங்க தானே.

vanathy said...

நீங்கள் எழுதிய விமர்சனம் அருமை. நான் படம் பார்க்க 4, 5 மாசங்களாகும்.

சாருஸ்ரீராஜ் said...

அடுத்த வாரம் தான் போகனும் .

asiya omar said...

வானதி
சாருஸ்ரீ

கருத்திற்கு நன்றி, மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

அசத்தலானா விமர்சனம்

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

Honey Dates Top 10 - விமர்சனம் பார்த்த மாதிரியான ஒரு உணர்வுகள் என்னுள்.

asiya omar said...

நன்றி,ஹாஜி.