Tuesday, October 5, 2010

ஈசி எண்ணெய் கத்திரிக்காய்

தேவையான பொருட்கள்:
சின்ன வயலட் கத்திரிக்காய் - கால் கிலோ
நல்லெண்ணெய் - 75 மில்லி
கடுகு - அரைடீஸ்பூன்
வெந்தயம் - அரைடீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
பூண்டு - 6 பல்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
கருவேப்பிலை - 2 இணுக்கு
மல்லி - சிறிது
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்`
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,வெந்தயம் போடவும்.


பின்பு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.


நறுக்கிய பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும்.

நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போடவும்.உப்பு தேவைக்கு போட்டு வதக்கவும்.


பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி மூடி போடவும்.10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
கத்திரிக்காய் வெந்து விடும்.

மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்க்கவும்.பிரட்டவும்.


புளி கரைத்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.நன்கு கொதி வரும் மூடி விடவும்.அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து திறந்தால் வற்றி வரும்.

எண்ணெய் தெளிந்து கத்திரிக்காய் வெந்து இருக்கும்.மல்லி இலை தூவி பிரட்டவும்.

இதனை ப்ளைன் சாதத்துடன் பரிமாறலாம், ஏன் அவசரத்திற்கு பிரியாணிக்கு கூட சைட் டிஷ்க்கு இப்படி செய்து கொள்ளலாம்.
பிரியாணிக்கு இன்னும் ஒரு விதமாக வழக்கமாக செய்வேன்.அதனை பார்க்க அறுசுவையை கிளிக் செய்யவும்.


---ஆசியா உமர்.

29 comments:

LK said...

எனக்கு ரொம்பப் பிடிக்கும்

asiya omar said...

போஸ்ட் செய்ததும் முதல் கருத்து சொல்வது மிக்க மகிழ்ச்சி.நன்றி சகோ.

எம் அப்துல் காதர் said...

எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

Umm Mymoonah said...

Very tempting one and clear instruction.

புதிய மனிதா.. said...

சுப்பர் டிப்ஸ் ....எனக்கு பார்சல் அனுப்புங்க

புதிய மனிதா.. said...

சுப்பர் டிப்ஸ் ....எனக்கு பார்சல் அனுப்புங்க

asiya omar said...

அப்துல் காதர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி உம் மைமூனா.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

புதிய மனிதா மிக்க நன்றி,மிக்க மகிழ்ச்சி.

Nithu Bala said...

Delicious..my favou..

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் எச்சில் ஊறுது,அட்டகாசமா இருக்குக்கா...

asiya omar said...

nithubala
menaga

thanks for your loving comments.

Mahi said...

ஆஹா..அருமையா இருக்கு ஆசியாக்கா! :P :P

வெங்காயம் அழகா கட் பண்ணிருக்கீங்க.:)

Kanchana Radhakrishnan said...

nice and easy recipe.

vanathy said...

looking very delicious. Yummy!!!

Chitra said...

கத்திரிக்காவை பார்த்தும் ஸ்ஸ்ஸ் ....சப்பு கொட்ட வச்சிட்டீங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா இருக்கு. படங்களும்.

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் விள‌க்க‌ம் ந‌ல்லா இருக்கு ச‌கோ..

asiya omar said...

மகி மிக்க நன்றி.

காஞ்சனா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி.

வானதி செய்து பாருங்க,கத்திரிக்காய் பிரியர்களுக்கு பிடிக்கும்.

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

நன்றி புவனா.

ஸ்டீபன் வாங்க,மிக்க மகிழ்ச்சி,நன்றி.

ஸாதிகா said...

அருமையான எண்ணெய் கத்தரிக்காய்.இந்த கடாய் உங்கள் வீட்டு ஆல்பர்பஸ் கடாயா?அன்னிக்கு வந்திருந்த பொழுது இதே சட்டி நிறைய மீன் குழம்பு வைத்து இருந்தீர்கள்.எங்கே பிடித்தீர்கள் மெக்கா சைஸ் மண்ணாலான சட்டியை

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி ஸாதிகா,எங்க வீட்டில் கிளீனிங் செய்யும் குமார் என்பவர் கேரளாவில் இருந்து தருவித்து தந்தார்.இந்த கருப்பு மண் சட்டியின் மகிமையே என்ன குழம்பு வைத்தாலும் கழுவி விட்டால் அந்த சட்டியில் என்ன குழம்பு வைத்தோம் என்றே கணிக்க முடியாது.இரண்டு கிலோ வரை மீன் ஆக்கலாம்.என் பாத்திரத்தில் எனக்கு பிடித்தமான ஒன்று.இப்ப சின்னதாக தினமும் உபயோகிக்க சட்டி கிடைச்சிருக்கு.மண் சட்டியில் சமைத்த பின்பு ஏனோ பிடித்து போயிற்று.

சசிகுமார் said...

நல்ல குறிப்பு அக்கா பிரிண்ட் எடுத்தாச்சு.

Kousalya said...

எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் தோழி. படங்களுடன் அட்டகாசமா இருக்குப்பா.

சாருஸ்ரீராஜ் said...

today i did this romba nalla irunthathu , thanks for sharing

asiya omar said...

கௌசல்யா செய்து பாருங்க,கருத்திற்கு நன்றி.

சசிகுமார் சிம்பிளாக இருக்கும்,மிக்க மகிழ்ச்சி.

சாருஸ்ரீ செய்து பார்த்தாச்சா? மிக்க நன்றி பின்னூட்டத்திற்கு.

ஜிஜி said...

படங்களைப் பார்க்கும்போதே நாக்குல எச்சில் ஊறுது..சூப்பரா இருக்கும்போல.செஞ்சு பாக்கணும்.

சி.பி.செந்தில்குமார் said...

படங்களும் ,பதிவும் அழகு,நல்ல லே அவுட்,இதை அவள் விகடனுக்கு அனுப்புங்கள்

அன்னு said...

ஆஸியாக்கா,
உங்க சிம்பிள் வெஜ் புலாவுடன் சேர்த்து இதனை செய்தேன். ஒரியாக்காரர், ஆஹா எப்படி எங்க ஊரு கத்திரிக்காயை செஞ்சே...எந்த வெப்சைட் என்று கேட்டார். நாந்தேன், இது அட்சரசுத்தமா தமிழ் செய்முறை, ஆஸியாக்கா செஞ்சதுன்னு சொல்லியிருக்கேன். அதுலயும் அவர்க்கு ஒரு பெருமை, நம்ம சிஸ்டர்தானேன்னு :)) செம டேஸ்டி. தேன்க்ஸ்க்கா.

asiya omar said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.அன்னு உங்கள் இருவருக்கும் பிடித்தது மிக்க மகிழ்ச்சி.