Wednesday, October 6, 2010

சேனைக்கிழங்கு ஃப்ரை


தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு -300கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1(மீடியம் சைஸ்)
தக்காளி - பாதி
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மல்லி,கருவேப்பிலை -சிறிது
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமாக கட் செய்து அலசி எடுத்து கொள்ளவும்.அத்துடன் அரைத்த வெங்காயம் தக்காளி விழுது,இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா,சோம்பு,மிளகாய்த்தூள்,தேவைக்கு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

அதனை குக்கரில் அடியில் தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து 2 விசில் வீட்டு வேக வைத்து எடுக்கவும்,


ஒரு நான்ஸ்டிக் கடாய் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை போட்டு வெடித்ததும் மசாலா தடவி வெந்த சேனைக்கிழங்கை போட்டு சிவந்ததும் திருப்பி போட்டு வறுத்து எடுக்கவும்.எண்ணெய் நிறைய இழுக்கும்.ஆனால் சாப்பிட ருசியாக இருக்கும்,இதற்கு சோம்பும்,கரம்மசாலா(ஏலம் பட்டை கிராம்புதூள்)மிக முக்கியம்,


சுவையான சேனைக்கிழங்கு ப்ரை ரெடி.இது எல்லா வகை சாதத்திற்கும் பொருந்தும்.

-ஆசியா உமர்.

22 comments:

ஸாதிகா said...

வாவ்..புது விதமாக சேனைக்கிழங்கை சமைக்க குறிப்புத்தந்தமைக்கு நன்றி ஆசியா.படங்கள் அழகு.

Mrs.Menagasathia said...

சாம்பார்,ரச சாதத்துடன் சாப்பிட சூப்பர்ர்ர்...

Kousalya said...

வறுவல் சூப்பர் தோழி....

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமாக இருக்கு அக்கா , கட்டாயம் செய்து பார்க்க வேண்டிய ரெசிபி , செய்துட்டு சொல்கிறேன்.

LK said...

thanks for sharing sago

புவனேஸ்வரி ராமநாதன் said...

பார்க்கவே சூப்பரா இருக்கு.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் புரட்டாசி மாசத்துல அசைவம் இல்லாத குறையை தீர்த்துடும்

மங்குனி அமைசர் said...

///வைத்து 2 விசில் வீட்டு வேக வைத்து எடுக்கவும்,///

எச்சூச்மி மேடம் எனக்கு விசில் அடிக்க தெரியாதே , என்ன பன்றது?

மங்குனி அமைசர் said...

உண்மையில் நைஸ் ரெசிபி மேடம் , பஸ்ட்டு படம் பாத்துண்டன் நான் பிஸ் பிரான்னு நினைச்சேன் , நல்ல லுக்

சசிகுமார் said...

அக்கா இதையும் பிரிண்ட் எடுத்து விட்டேன். என் மனைவிக்கு பிடித்த தளத்தில் உங்கள் தளமும் ஒன்று

Chitra said...

எனக்கு சேனை கிழங்கு பிடிக்கும். ஆனால் இந்த ஊர் பக்கம் கிடைப்பதில்லை. :-( இந்தியர்கள் அதிகம் வாழும் நகரங்களில் கிடைக்குமாம்.

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.
மேனகா மிக்க நன்றி.
கௌசல்யா மிக்க நன்றி.
சாருஸ்ரீ மிக்க நன்றி.
எல்.கே மிக்க நன்றி.
புவனேஸ்வரி மிக்க நன்றி.
சதீஷ்குமார் மிக்க நன்றி.
மங்குனி அமைச்சர் வருகைக்கு நன்றி.
சசிகுமார் மிக்க நன்றி.
சித்ரா மிக்க நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

Kanchana Radhakrishnan said...

வித்யாசமாக இருக்கு.

Mahi said...

வித்யாசமான ரெசிப்பி ஆசியாக்கா! சூப்பரா இருக்கு.

Mahi said...

ஆசியாக்கா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

ஜிஜி said...

எனக்கும் சேனை கிழங்கு பிடிக்கும்.சூப்பரா இருக்கு வறுவல்.செஞ்சு பாக்கணும்.

Sunitha said...

very nice recipe

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

asiya omar said...

காஞ்சனா
மகி
ஜிஜி
உங்கள் அன்பான கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

சுனிதா உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

vanathy said...

வெரி நைஸ், அக்கா. அழகா இருக்கு படங்கள்.

Umm Mymoonah said...

Very different preparation, looks very apptezing. Thank you for linking it with Any One Can Cook.

asiya omar said...

thanks vanathy

and

umm for your loving comments.