Friday, October 8, 2010

சிக்கன் ஃப்ரான்க்ஸ் பாஸ்தா

இந்த பாஸ்தா ரெசிப்பியை Shama's Fast Food Event Pasta மற்றும் Snehithi's Party Snacks Event அனுப்புகிறேன்.

Chicken Franks Pasta

தேவையான பொருட்கள் :
பாஸ்தா (மக்ரோனி) - 200 கிராம்
சிக்கன் ஃப்ரான்க்ஸ் - 4 பீஸ்
எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
கொடைமிளகாய் - 1
தக்காளி - சிறியது 1
டொமட்டோ சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ்- 1 -2 டீஸ்பூன்
ஆயிஸ்டர் சாஸ் - 1 -2 டீஸ்பூன்
ஹாட் சாஸ் - 1-2 டீஸ்பூன்
சிக்கன் சூப் கியூப்- 1
பெப்பர் பவுடர் - 1 டீஸ்பூன்


பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு தேவைக்கு உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீர் வடித்து ஆற வைக்கவும்.சாஸ் வகைகளை ரெடியாக எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன்,நறுக்கிய வெங்காயம்,கொடைமிளகாய் சேர்த்து வதக்கவும்,சிறிது வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

சிக்கன் சூப் கியுப் பொடித்து போடவும்.உப்பு தேவையில்லை,நன்கு வதக்கவும்,பின்பு அத்துடன் வேகவைத்த சிக்கன் ப்ரான்க்ஸ் கட் செய்து போடவும்.( சிக்கன் ஃப்ரான்க்ஸ் கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து வடித்து கட் செய்து கொள்ளவும்.)


மேலே குறிப்பிட்ட அனைத்து சாஸ் வகையும் அவரவர் டேஸ்ட்டுக்கு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பெப்பர் பவுடர் சேர்க்கவும்.


நன்கு கலந்து விடவும்.சுவையான ஜூஸி சிக்கன் ப்ரான்க்ஸ் பாஸ்தா ரெடி.
விருப்பப்பட்டால் மொசரல்லா சீஸ் தூவி பரிமாறவும்.
எப்பவாவது இப்படி செய்து சாப்பிடலாம்.ப்லைன் வெஜ் பாஸ்தா இதே முறையில் செய்யலாம்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எப்பவும்,இட்லி,பூரி,சப்பாத்தி பரோட்டான்னு கொடுக்கும் பொழுது மாறுதலுக்கு இப்படி பாஸ்தா செய்து கொடுக்கலாம்.
--ஆசியா உமர்.

21 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

Colourful and Superb.

asiya omar said...

thanks bhuvana for your loving comments.

jagadeesh said...

ஆஹா. பார்க்கவே, கொஞ்சம் எடுத்துக்கலாம்னு தோணுது. அருமை அக்கா.

ஸாதிகா said...

அருமையான பாஸ்தா.படத்தைப்பார்த்ததும் உடனே செய்ய வேண்டும் போல் உள்ளது.

Mrs.Menagasathia said...

looks superb!!

vanathy said...

looking super. very nice presentation.

Riyas said...

நல்லாயிருக்கு மிகவும் சுவையா இருக்கும் போல..


http://riyasdreams.blogspot.com/2010/10/blog-post_08.html

பிரவின்குமார் said...

அசத்துங்க மேடம்..!!

Umm Mymoonah said...

Easy, cheesy and delicious pasta, thank you so much for linking it with Any One Can Cook.

Mahi said...

பாஸ்தா நல்லா இருக்கு ஆசியாக்கா.

சிநேகிதி said...

சூப்பர் பாஸ்தா

எம் அப்துல் காதர் said...

நான் இதை அதிகமா விரும்பி சாப்பிட மாட்டேன். இருந்தாலும் சிக்கன் ஃபிராங்க்ஸ் போட்டிருப்பதால் நல்லாவே இருக்கும் என்று படங்கள் சொல்லுது!! அதுக்காக ஒரு ஜே!!

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கு...நன்றி ஆசியா அக்கா..இவர் 1 மாதம் இந்தியாவிற்கு போகலாம் என்று Vacation எடுத்து இருக்கின்றார்.ஆனால் இந்தியா போகவில்லை....அதனான் வரமுடியவில்லை....இங்கேயே USயில் தான் ஊர் சுற்றி பார்க்கிறோம்...

நாடோடி said...

பார்க்க‌வே சூப்ப‌ரா இருக்கு ச‌கோ..

asiya omar said...

ஜெகதீஸ்

ஸாதிகா

மேனகா

வானதி

ரியாஸ்

பிரவீன் குமார்

உம் மைமூனா

மகி

சிநேகிதி

அப்துல் காதர்

கீதா ஆச்சல்

ஸ்டீபன்

அனைவரின் அன்பான கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Kousalya said...

super dish friend..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

2 நாளைக்கி முன்னாடி இதேமாதிரி தான் செய்து சாப்பிட்டேன்.. ஆனால் நான் துனா (டின் பிஷ்) போட்டு செய்திருந்தேன். சாப்பிட்ட நண்பர்கள் நல்லாருக்குன்னு பாராட்டினாங்க..

இதேபோல சிக்கன் ஃப்ரான்க்ஸ் போட்டு செய்து பாக்கணும்.

நன்றி ஆசியாக்கா.

சசிகுமார் said...

நல்லா பசியை கிளப்பி விடுராங்கையா

Mano Saminathan said...

பாஸ்தா நன்றாக இருக்கிறது ஆசியா! அதில் சேர்க்கும் கலவைகள் எல்லாமே சுவையான விஷயங்கள்! விளக்கங்கள் எப்போதும்போல் மிகத் தெளிவு!!

சே.குமார் said...

படங்களுடன் நல்ல சமையல் குறிப்பு.

asiya omar said...

கௌசல்யா
ஸ்டார்ஜன்
சசிகுமார்
மனோ அக்கா
குமார்

வருகைக்கும் அன்பான கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.