Saturday, October 9, 2010

உல்லன் ஹேர்பேண்ட் - படம் பார்த்து செய்யுங்க.

குட்டீஸ் டிரஸ்க்கு மேட்ச்சாக இப்படி கலர் கலராக ஹேர்பேண்ட் பின்னி கொடுத்தால் அசத்தலாக இருக்கும்.

இதுவும் இலகுவாக பின்னக்கூடியது தான்,சின்னக்குழந்தைகளுக்கு தொப்பி.அருமையாக இருக்கு தானே ?

தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.


இனிமேல் என்ன பின்ன ஆரம்பிங்க,இதில் ஆர்வம் உள்ளவங்க பின்னி அசத்தலாம்.


படிப்படியாக படம் எடுத்து போட்டு இருக்கேன்.பார்த்து செய்யுங்க.
அரம்பிச்சாச்சா,இவ்வளவு தான்...







தொடர்ந்து பின்னி ஒரு கலர் பின்னி முடியுங்க.

அடுத்து விருப்பமான இன்னொரு கலர் எடுத்து இணைக்க ஆரம்பியுங்க.

இங்கே ஒயிட் & ரெட் எடுத்து பின்னி இருக்காங்க.


ஒயிட் , ரெட் முடிந்ததும் திரும்ப ஒயிட் ஆரம்பியுங்க.

இப்படியே தொடர்ந்து தேவையான அளவிற்கு பின்னி முடிச்சிடுங்க.

இப்ப அழகான அருமையான ஹேர்பேண்ட் ரெடி.நீங்களும் முயற்சி செய்தால் இலகுவாக செய்திடலாம்.
பில்டப்பை பார்த்து நான் பின்னியது என்று நினைச்சிட்டீங்களா?இல்லைபா,என் மகள் பின்னியது.அதனை ஹேரில் போட்டு காட்டலாம் என்றால் பின்னிய எல்லாவற்றையும் கிஃப்டாக கொடுத்து விட்டாளாம்.நீங்க செய்து போட்டோ எடுத்து எனக்கு அனுப்புங்க.அந்த தொப்பி என் மகள் பின்னியதே எனக்கு தெரியாது,மம்மி கேமராவை தூக்கிட்டு வந்திடுவாங்கன்னு தெரியாமல் பின்னி முடித்து காட்டினாள்.தொப்பி எப்படி இருக்கு.நமக்கு இது மாதிரி பின்றதில் எல்லாம் ஆர்வமும் இல்லை,பொறுமையும் இல்லை.மகளுக்கு ஆர்வம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கு.இனி அவளோட ஆர்ட் & கிராஃப்ட் ஒர்க் அப்ப அப்ப போட முயற்சி செய்றேன்.
--ஆசியா உமர்.


18 comments:

சிநேகிதி said...

எனக்கு இந்த ஓர்க் அவ்வளவாக தெரியாது.. கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கு..
உங்களின் இந்த பதிவு ஈசியாக கற்றுக்கொள்ளும் படி புகைப்படம் மிகவும் தெளிவாக இருக்கு.. ஊசி நூலும் இருக்கு... இப்பவே ஸ்டார்ட் பண்ணுகிறேன்.. நன்றி அக்கா

asiya omar said...

சிநேகிதி உடன் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி.மகிழ்ச்சி.

Krishnaveni said...

Lovely work, looks so good, you are really lucky...thanks for following my blog

Chitra said...

பார்க்க அழகாக இருக்குதுங்க. பகிர்வுக்கு நன்றி.

LK said...

நமக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா

ஈரோடு தங்கதுரை said...

ரொம்ப அழகா இருக்குங்க... ! சின்ன வயசுல நானும் என்னோட சிஸ்டரும் இது மாதிரி நெறைய செய்வோம் . அதை மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

asiya omar said...

கிருஷ்ணவேணி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சித்ரா மிக்க மகிழ்ச்சி.நன்றி.

எல்.கே திவ்யாவை வைத்து கொண்டு சம்பந்தமில்லாத ஏரியான்னு சொல்லலாமா?

asiya omar said...

தங்கதுரை உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.விசுவின் அரங்கத்தில் ரொம்ப அருமையாக பேசியிருக்கீங்க.பாராட்டுக்கள்.

நாடோடி said...

ரெம்ப‌ அழ‌கா இருக்கு... :)

அமைதிச்சாரல் said...

அருமையான க்ரோஷா வேலைப்பாடு.இது கைவிரல்களுக்கும் நல்ல பயிற்சி தெரியுமோ.. பாதி பின்னிட்டு அப்படியே விட்டுவெச்சிருக்கிற ஷாலை சீக்கிரம் முடிக்கணும்ன்னு ஞாபகப்படுத்திடுச்சு உங்க இடுகை:-)))

Geetha6 said...

super!!!!!!!

kavisiva said...

ரொம்ப அழகா இருக்கு ருமானாவோட கைவண்ணம் :). மலரும் நினைவுகள் வந்திடுச்சு :)

ஸாதிகா said...

ருமானாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள்.

asiya omar said...

ஸ்டீபன் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

அமைதிச்சாரல் பாராட்டிற்கு மிக்க நன்றி.தொடர்ந்து உங்க பின்னலை முடிங்க.

கீதா மிக்க நன்றி.உங்க ப்ளாக்கில் இடுகையையும் படிக்க முடியலை,கருத்தும் தெரிவிக்க முடியலை.

கவிசிவா மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஸாதிகா நிச்சயம் ருமானாவிடம் சொல்லிவிடுகிறேன்,மகிழ்ச்சி தோழி.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு , தொப்பி சூப்பர்,
எனக்கு இது போல் கை வேலைகள் பிடிக்கும் ஆனால் பொறுமை கிடையாது .

ரூமானாவிற்கு வாழ்த்துக்கள்.

angelin said...

lovely knitt work asiya .give my wishes to your daughter ask her to keep continuing her hand works.

asiya omar said...

ஜலீலா

ஏஞ்சலின்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, நல்லா இருக்கு. ஆனால், எனக்கும் இந்த வேலைகளுக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது.