Monday, October 11, 2010

கேரள அவியல்

தேவையான பொருட்கள் :
சேனைக்கிழங்கு - ஒரு துண்டு
வெள்ளைப் பூசணி - ஒரு துண்டு
கேரட் - 1
கொத்தவரை அல்லது பீன்ஸ் - 6
கத்திரிக்காய் சிறியது 4 அல்லது முருங்கைக்காய் - 1
புளிப்பில்லாத மாங்காய் சிறியது- 1 (விரும்பினால்)
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3
தயிர் - 250 மில்லி
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு

காய்கறிகள் அனைத்தையும் ஒரு போல் நறுக்கி ஒரு கடாயில் போட்டு,மஞ்சள் தூள்,உப்பு ,தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.



மூடி போட்டால் 10 நிமிடத்தில் வெந்து விடும்.



தேங்காய்,மிளகாய், சீரகம் சேர்த்து பரபரவென்று அரைத்து எடுக்கவும்.தயிர் ரெடியாக வைக்கவும்.


காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும்.




5 நிமிடம் கொதிக்க விடவும்.



அடுப்பை அணைக்கவும்.தயிரை சேர்க்கவும்.கலந்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,மிளகாய் வற்றல் ,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் தாளித்ததை ரெடியான அவியலில் கொட்டவும்.கலந்து பரிமாறவும்.



சுவையான அவியல் ரெடி.ப்ளைன் சாதம்,புலாவ்,அடை ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

குறிப்பு:

தேங்காய் எண்ணெய் தான் சேர்க்க வேண்டும்,அப்பொழுது தான் அவியல் மணமாக இருக்கும். சிறிது கெட்டியாக இருக்க வேண்டும். தண்ணீர் பிரிந்தால் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை சிறிது தண்ணீரில் கலந்து கொதிக்க விடலாம்.சேனைக்கிழங்கு கிடைக்கவில்லை என்றால் வாழைக்காய்,முருங்கை கிடைக்கவில்லை என்றால் கத்திரிக்காய் கொத்தவரை கிடைக்கவில்லை என்றால் பீன்ஸ் சேர்க்கலாம்.உங்களுக்கு பிரியாமான காய் வைத்தும் செய்யலாம்.காய் அவரவர் தேவைக்கு குறைத்தோ கூட்டியோ கொள்ளவும்.

--ஆசியா உமர்.

19 comments:

புதிய மனிதா.. said...

படங்களுடன் அருமையான விளக்கம் ..

நாடோடி said...

எங்க‌ ஊர் அவிய‌ல் வித்தியாச‌மா இருக்கும்... :)

அதை ப‌ற்றியும் ஒருநாள் ப‌திவு போடுங்க‌..

ஸாதிகா said...

மண் சட்டியில் அவியல் செய்து காடி அசத்திட்டீங்க ஆஸியா தோழி

Chitra said...

vegetarian ஐட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த வகைகளில் ஒன்று, அவியல். நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

asiya omar said...

புதிய மனிதா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ஸ்டீபன் உங்க ஊர் கன்னியாகுமரி தானே?நான் அங்கு அவியல் சாப்பிட்டதில்லையே.இது தான் நான் செய்யும் முறை.

ஸாதிகா இப்ப இரண்டு மண்சட்டியை வைத்து சமையல் ஓடிட்டு இருக்கு.

சித்ரா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

புவனா கருத்திற்கு மிக்க நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

"ஒரப்படை " செய்யும்போது தொட்டுக்கொள்ள இந்த அவியல் செய்தால் பிரமாதமாய் இருக்கும்.

சசிகுமார் said...

"அவியல்" என்பதை தவறாக அறிவியல் என படித்தேன். என்னடா அறிவியல்ன்னு சொல்லிட்டு சமையல போட்டு இருக்காங்கன்னு பார்த்தால் நான் தவறாக படித்தது உணர்ந்தேன். ஹி ஹி ஹி

asiya omar said...

கக்கு மாணிக்கம் மிக்க நன்றி.

தம்பி சசி குமார் அறிவு ஜீவிகளுக்கு அவியல் கூட அறிவியலாய் தான் தெரியுமாம்.மிக்க மகிழ்ச்சி.

மனோ சாமிநாதன் said...

நல்லாயிருக்கு அவியல் ஆசியா! கிளி மூக்கு மாங்காய் கிடைக்கும் சமயம் அதைப்போட்டால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் அவியலை ஞாபகபடுத்திட்டீங்களே அக்கா..அருமையாக இருக்கு!!

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.


மேனகா செய்து சாப்பிடுங்க.கருத்திற்கு நன்றி.

jagadeesh said...

அருமை அக்கா. எனக்கு தெரிந்த பெண் தோழிகள் எல்லாருக்கும் உங்கள் தளத்தை பரிந்துரைக்கிறேன்.

சுந்தரா said...

மண்சட்டியில் அவியல்...பாக்கும்போதே ஆசை வருது.

அஸ்மா said...

பார்க்கவே நல்லா இருக்கு, ஆசியாக்கா!

vanathy said...

looking yummy & nice photos, Akka.

asiya omar said...

ஜெகதீஸ் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

சுந்தரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அஸ்மா மிக்க நன்றி.

வானதி மிக்க நன்றி.

ஹர்ஷினி அம்மா said...

இன்னைக்கு எங்க வீட்டுலே இந்த அவியல் தான் அக்கா...ரொம்ப அருமையா இருந்தது..காய் சாப்பிட அடம்பிடிக்கும் ஹர்சினி கூட இன்னைக்கு சமத்தா சப்பிட்டா.. சுவையான குறிப்புக்கு நன்றி ஆசியா அக்கா :-)

asiya omar said...

அவியல் செய்து பார்த்து பின்னூட்டம் தெரிவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஹர்சினி அம்மா.