Monday, October 11, 2010

மஞ்சள் பூசணி கூட்டு - எரிசேரி


தேவையான பொருட்கள் ;
மஞ்சள் பூசணி - ஒரு துண்டு(அரை கிலோ)
தட்டைபயறு - 50 கிராம்
மிளகாய்த்தூள் - அரை -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரைடீஸ்பூன்
தேங்காய் துருவல் - 6 டேபிள்ஸ்பூன
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 1 பல்(விரும்பினால்)
கடுகு,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
சின்னவெஙகாயம் -4
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு


மஞ்சள் பூசணியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாய் நறுக்கி வைக்கவும்.


தட்டைபயறை 4 மணி நேரம் ஊறவைத்து,பின்பு குக்கரில் சிறிது தண்ணீர் , உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைக்கவும்.

அத்துடன் நறுக்கிய பூசணி துண்டுகள்,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.


4 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,சீரகம்,பூண்டு பல்(விரும்பினால்) சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.தாளிப்பிற்கு தேவையான பொருட்களை ரெடி செய்யவும்.


இப்ப தட்டைபயறு மஞ்சள் பூசணி சேர்த்து வெந்து விட்டது.


அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

கூட்டை கொதிக்க விடவும்.காய் உடையக்கூடாது,துண்டாக இருக்கவேண்டும்.


வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவிடவும்.அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,இளஞ்சிவப்பாக வதங்கியதும் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து பொன்வறுவலாக வதக்கவும்.


வதக்கியவற்றை கூட்டில் கொட்டவும்.கலந்து பரிமாறவும்.



சுவையான மஞ்சள் பூசணி கூட்டு ரெடி.இதனை கேரளாவில் எரிசேரின்னு சொல்வாங்க.இனிப்பாக இருக்கும். வேண்டுமானால் தேங்காயுடன் 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.இதனை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

-ஆசியா உமர்.

22 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

கூட்டு சூப்பர். படங்களும் விளக்கங்களும் அருமை.

Chitra said...

அவியல், எரிசேரி என்று கேரளா ஓணம் சாப்பாடு ஸ்பெஷல் ஆக இருக்குதே..... சூப்பர்! சூப்பர்! சூப்பர்!

asiya omar said...

புவனா உடன் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

சித்ரா ஆமாம் எனக்கு ஓணம்சத்யான்னா ரொம்ப இஷ்டம்.அபுதாபியில் இருக்கும்பொழுது எதிர்த்த ப்ளாட்டில் இருந்த கேரள தோழிகிட்ட நிறைய தெரிஞ்சுகிட்டேன்.நாங்கள் இருவரும் சமையலை நிறைய பகிர்ந்து கொள்வோம்.

ஸாதிகா said...

அட..வித்தியாசமான கூட்டு..சூப்பர்.

சசிகுமார் said...

பிரிண்ட் எடுத்து எடுத்து பேப்பர் தான் காலியாகுது வீட்ல தான் செய்து தர மாட்டேங்குறாங்க.

சே.குமார் said...

படங்களும் விளக்கங்களும் அருமை.

asiya omar said...

தோழி ஸாதிகா மிக்க நன்றி.

asiya omar said...

சசி குமார் கருத்திற்கு மகிழ்ச்சி.பிரிண்ட் எடுத்தது வீண் போகாது,விடுந்தினர் வரும் பொழுது பயன்படும்.

asiya omar said...

சே.குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.






Dr.Sameena Prathap
said...

Hi,

Ippothu thaan naan ungal blogil serthein!!Nice recipe..

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Mrs.Menagasathia said...

செய்முறை படங்களுடன் அசத்தலா இருக்குக்கா...கேரளா சாப்பாடு செய்து அசத்துறீங்க..

asiya omar said...

You are most welcome.Thank you very much Dr.Sameena.

asiya omar said...

மேனகா மகிழ்ச்சி.ஏதோ செய்றதை போடறேன்.மற்ற இடங்களில் நான் முன்பு கொடுக்காத ரெசிப்பியாக வேறு இருக்கவேண்டுமே.

எம் அப்துல் காதர் said...

இது நல்ல இருக்கும் போல!! ஆனா நான் சாப்பிட்டதில்லை மேடம்! நாளை செய்ய சொல்லிடுவோம்.

asiya omar said...

கருத்திற்கு நன்றி சகோ.அப்துல் காதர்.

மின்மினி RS said...

அருமையான கூட்டு.. நல்ல செய்திருக்கீங்க அக்கா.. நானும் வீட்டில் செய்து பார்க்கிறேன்..

asiya omar said...

வருகைக்கு மகிழ்ச்சி ,நன்றி மின்மினி.

Kanchana Radhakrishnan said...

அவியலும் எரிசேரியும் சூப்பர்.

asiya omar said...

காஞ்சனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

எரிசேரி கேரளா ஐட்டம்தானே, சூப்பர்........நன்றிங்க் ஆசியா..

vanathy said...

looking yummy. Very nice photos!