Thursday, October 14, 2010

கச்சா சிக்கன் பிரியாணி / Kacha Chicken Briyani ( Mughal Style)


இந்த பிரியாணி செய்முறை மற்ற முறையை விட கொஞ்சம் சிரமமானது.என்றாலும் ருசி அமோகமாக இருக்கும்.

செய்முறை:
முதலில் செய்ய வேண்டியது.
அரிசியை அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 900 கிராம்

பாசுமதி அரிசி - 600 கிராம்

பொரித்த வெங்காயம் - 1 கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்ஃபுல்

மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - ஒன்னரை டீஸ்பூன்

முழு மிளகு -அரைடீஸ்பூன்

ஷாஜீரா - அரைடீஸ்பூன்

லைம் ஜூஸ் - 1 பழம்

மல்லி புதினா - தலா ஒரு கைபிடிஅளவு

கசூரி மேத்தி - 2 டேபிள்ஸ்பூன்

தயிர் - 250 மில்லி

சாஃப்ரான் - 2 பின்ச் அரை கப் பாலில் கரைக்கவும்.

உப்பு - தேவைக்கு

மைதா மாவு தம் போட - அரை கிலோ பிசைந்து வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் கட் செய்து இப்படி சிவற பொரித்து எடுக்கவும்.கிட்சன் டவலில் வைக்கவும்.

மைதா மாவை குழைத்து இப்படி உருட்டி ரெடி செய்யவும்.
சிக்கனை சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டி வைக்கவும்.

தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும்.
சிக்கனை ஒரு பவுலில் போட்டு தயிர்,உப்பு,1 டீஸ்பூன் கரம் மசாலா,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மல்லி ,புதினா சேர்ந்து 1 கைபிடி,கசூரிமேத்தி,வறுத்த வெங்காயம் பாதி கப் கலந்து குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.விரும்பினால் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயும் கலந்து ஊற வைக்கலாம்.

சிக்கனை ஊறவைத்து, விட்டு ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் கொதிக்க வைத்து தலா அரைஸ்பூன் கரம்மசாலா,ஷாஜிரா,மிளகு போட்டு கொதிவரவும் ஊறிய அரிசியை தட்டி,உப்பு சரியாக போட்டு பாதி வேக்காட்டில் வெந்து வடித்து வைக்கவும்.

கச்சா பிரியாணி செய்ய அடிகனமான பாத்திரத்தில் முதலில் ஊறிய சிக்கன் பாதி வைக்கவும்.அதன்பின்பு வேகவைத்து வடித்த பாதிபதம் வெந்த சோறு பரத்தி,மல்லி,புதினா சிறிது,பொரித்த வெங்காயம்,சாஃப்ரான் மில்க்,லைம் ஜூஸ் சிறிது சேர்க்கவும்.

அடுத்த லேயரில் முதலில் வைத்தது போல் சிக்கன் வைக்கவும்.வடித்த சாதம் போடவும்.மல்லி,புதினா,வறுத்த வெங்காயம்,சாஃப்ரான் மில்க்,லைம் ஜூஸ் சேர்க்கவும்.இப்ப இரண்டு லேயர் சிக்கன்,இரண்டு லேயர் சாதம் வைத்தாயிற்று. சிக்கனில் தண்ணீர் ஊறும்.அந்த தண்ணீர் சிக்கன் வேக போதுமானது.

குழைத்து ரெடி செய்த மைதாமாவை பிரியாணி பாத்திரத்தில் சுற்றி வைத்து மூடி போட்டு அழுத்தி மூடவும்.டைட்டாக இருக்க வேண்டும்.முக்கால் மணி நேரம் அடுப்பை சிம்மில் வைக்கவும்,இப்படி மூடுவதால் ஆவி வெளியே வர வழியில்லை.


ஆவி பத்திரத்தில் இருந்து வெளியே வராமல் அந்த ஆவியில் தான் நாம் பச்சையாக வைத்த சிக்கன்,அரைவேக்காடு சோறு ஆகியவை வேகும். அடுப்பை சிம்மில் வைத்து  அடியில் பழைய தோசைக்கலம் வைத்து பிரியாணி பாத்திரம் வைத்து  45 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்,கால் மணி நேரம் கழித்து திறக்கவும்.திறந்தால் இப்படி அழகாக வெந்து மணம் கமழும்.குக்கிங் ரேஞ்சில் கூட 200 டிகிரி செட் செய்து பாத்திரத்தை அரைமணி நேரம் வைத்து எடுக்கலாம்,கவனம் அடி பிடித்து விடக்கூடாது.உப்பு சிக்கனில் பின்பு சோறு வடிக்கும் பொழுதும் போட வேண்டும்.உப்பு சோறில் சரியாக இருக்கா என்று பார்த்து கொள்ளவும்.பொறுமையாக செய்தால் அருமையாக வரும்.சிறிது ஃப்ரைட் ஆனியனை அலங்கரிக்க தனியாக எடுத்து வைத்து பரிமாறும் பொழுது தூவி பரிமாறலாம்.


பிரியாணி சோறு,சிக்கன் உடையாமல் பிரட்டி விட்டு சூடாக பரிமாறவும்.
சுவையான வித்தியாச ருசியுள்ள கச்சா சிக்கன் பிரியாணி ரெடி.பிரியாணி சோறும் சிக்கனும் பஞ்சாக இருக்கும்.இதில் நாம் தக்காளி சேர்க்கவில்லை,நெய் உபயோகிக்கலை,எண்ணெய், வெங்காயம் பொரிப்பதற்கு சிறிது தான் அதனையும் வடிகட்டி விடுகிறோம்.ஆரோக்கியமான பிரியாணி ரெடி.
மிளகு,ஷாஜிரா,சாஃப்ரான் மில்க்,கசூரி மேத்தி சேர்ப்பதால் மருத்துவ குணம் மிக்கது.உடல் நலத்திற்கு மிக நல்லது.மட்டனிலும் இப்படி செய்யலாம்.

இதனை நாம் பார்ட்டியில் நிறைய மற்ற டிஷ்சஸ் வைக்கும் பொழுது ரைஸ் டிஷ்க்கு இது மாதிரி செய்து வைக்கலாம்.


- ஆசியா உமர்.

23 comments:

Cool Lassi(e) said...

My, this is how I eat my biryani too..with egg and pachidi. I even have one post coming up similar to this.
Your Biryani is making me salivate. Love the step-by-step procedure. Usually I make "DUM" by putting a heavy weight on top, like a pestle for instance. I am too lazy to line the pot wit dough, but MIL makes it this way.

Chitra said...

உங்களுடைய மற்ற பிரியாணி ரெசிபிஸ் விட, இது கொஞ்சம் டைம் எடுத்து செய்ற டிஷ் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த பிரியாணி படத்தை பார்க்கும் போதே, ரொம்ப tempting ஆக இருக்குதே!

LK said...

ithuku nan present mattumthan solla mudiyum

அமைதிச்சாரல் said...

கொஞ்சம் வித்தியாசமான பிரியாணி ரெசிபி. பகிர்விற்கு நன்றி ஆசியா..

asiya omar said...

cool lassie thanks for your visit &loving comments.

asiya omar said...

chitra,கருத்திற்கு மிக்க நன்றிபா.வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

l.k.வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

அமைதிச்சாரல்
கருத்திற்கு மிக்க நன்றி/மகிழ்ச்சி.

சசிகுமார் said...

கச்சா - ஏதாவது புது உயிரினமா என்று நினைத்தேன். நாமதான் எதையும் விடுறதில்லையே

asiya omar said...

சசிகுமார் சிக்கனை வேகாமல் (raw)அப்படியே தம் போடுவதால் கச்சா என்ற பெயர்.வருகைக்கு கருததிற்கு நன்றி.

சுந்தரா said...

இதுவரை இதுமாதிரி செய்ததில்லை. ஆனா, ஆரோக்கியமான முறைன்னு சொன்னதால இனிமேல் அடிக்கடி இந்த பிரியாணி செய்யலாம்.

நன்றி ஆசியா!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நானும் பிரசண்ட் ஆசியா.

asiya omar said...

சுந்தரா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

நித்திலம்
உங்கள் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...

வாவ்வ்வ் சூப்பர் பிரியாணி,நல்லா உதிரியா இருக்கு....

எம் அப்துல் காதர் said...

'கச்சா எண்ணெய்' தான் கேள்வி பட்டிருக்கேன். இதென்ன 'கச்சா பிரியாணி'..சரி என்னென்னமோ சொல்றீங்க. சாப்பிட்டு தான் பார்ப்போமே.(ஷாஜிரா, கசூரிமேத்தி) விபரம் சொல்லுங்க. நம்ம பக்கமெல்லாம் இதை யூஸ் செய்வதாக தெரியல மேடம்!!

asiya omar said...

மேனகா கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.இது அக்கா வீட்டில் செய்ய தெரிஞ்சிகிட்டேன்.ஷாஜீரா,சீரகம் மாதிரி கருப்பாக சின்னதாக இருக்கும்.கசூரி மேத்தி காய்ந்த வெந்தயக்கீரை.

ஸாதிகா said...

வேலை பெரிசா இருக்கும் போல் இருக்கே.வித்தியாசமாக உள்ளது ஆசியா.

asiya omar said...

ஸாதிகா ஒரு மாற்தலுக்காக செய்தேன்/சேர்க்கும் பொருட்களை உங்க இஷ்டத்திற்கு மாற்றியும் செய்து பார்க்க்லாம்.

vanathy said...

சூப்பர் பிரியாணி. படங்கள் அருமையா இருக்கு.

asiya omar said...

வானதி அக்காவை மறக்காமல் வந்து செல்லுவது மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

ஹைத்ரா பாத் பிரியாணி ரொமப் நல்ல இருக்கு.
பாயிஜா, தனிஷா பார்த்து செய்தது,
நானும் இரண்டு முன்று முறை செய்து இருக்கேன், தக்காளி இல்லாததால் அந்த அளவுக்கு யாருக்கும் பிடிக்கல.ஆனால் இந்த மசாலாதிரித்து வைத்து எல்லாத்துக்கு கொஞ்சம் ஆட் பண்ணுவேன் நல்ல இருக்கும்.

asiya omar said...

ஜலீலா இதனை நாங்க கச்சா பிரியாணின்னு தான் சொல்லுவோ.ஹைதராபாத் பிரியாணி ஹெவி மசாலாவோடு இருக்கும்.இது என் பெங்களூர் அக்காவிடம் தெரிஞ்சிகிட்டது.கருத்திற்கு நன்றி.