Sunday, October 17, 2010

ஈஸி இறால் கூட்டு

தேவையான பொருட்கள் ;
இறால் உரித்த பின்பு - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம்மசாலா - அரைஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
சிவப்பு மிள்காய் - 1
லைம் ஜூஸ் - 2 டீஸ்பூன்
கார்ன்ப்ளோர் - 2 டீஸ்பூன்
பின்ச் - ரெட் கலர்(விரும்பினால்)
எண்ணெய் - 3- 4 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது

வெங்காயம்,தக்காளி,சிவப்பு மிளகாய்,மல்லி இலை சேர்த்து அரைக்கவும்.


உரித்து சுத்தம் செய்து கழுவி நீர் வடிகட்டிய இறாலோடு,அரைத்த விழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய்த்தூள்,
தேவைக்கு உப்பு,லைம் ஜூஸ் சேர்த்து கலந்து குறைந்தது 1 மணி நேரம் வைக்கவும். இப்படி வைப்பதால் இறால் நொடியில் வெந்து மெதுவாக இருக்கும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலாவில் ஊறிய இறாலை போட்டு பிரட்டி பிரட்டி விடவும்.முதலில் நெருப்பை கூட்டி வைத்து பின்பு மீடியம் வைத்து 10 நிமிடம் பிரட்டினால் கூட்டு சுண்டி இறால் வெந்து வரும்.


அத்துடன் 2 டீஸ்பூன் கார்ன்ப்ளோர் சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.கார்ன்ப்ளோர் இறாலில் கோட் ஆகி எண்ணெய் பிரிந்து விடும்.இது தான் பக்குவம்.

நறுக்கிய மல்லி இலை தூவி ஒரு பிரட்டு பிரட்டி பரிமாறவும்.இது எல்லாவகையான சாதம் சப்பாத்தி,நாண் ஆகியவற்றுடன் பரிமாறாலாம்.தேங்காய் எண்ணெய் விரும்புபவர்கள் பாதி தேங்காய் எண்ணெயும்,பாதி சன்ப்ளவர் ஆயிலும் சேர்த்து செய்யலாம்.ரெஸ்ட்டாரண்ட் சுவை கிடைக்கும்.
-ஆசியா உமர்.



29 comments:

ஸாதிகா said...

வாவ்..நான்தான் பர்ஸ்ட்.அப்படியே இறால் பிளேட்டை இப்படித்தள்ளுங்க.

Umm Mymoonah said...

Eral kuttu evalavu easy preparation, super ah irrukku parkave.

asiya omar said...

ஸாதிகா எடுத்துக்கோங்க,உடன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.இனி தாங்கள் அமீரகம் வரும் பொழுது நிச்சயம் செய்து தருவேன்.

Gopi Ramamoorthy said...

தேங்காய் துருவிப் போட மாட்டீங்களா?

அமீரகம் எங்க இருக்கு? துபாயா? அடுத்த வாட்டி வரும்போது அங்க வந்துடறேன்

asiya omar said...

Thanks umm mymoonah for lovely comment.

asiya omar said...

நன்றி சகோ.கோபி,உங்க வருகைக்கும் கருத்திற்கும்,எப்படி இருக்கு லண்டன் சுற்றுப்பயணம்.

Mrs.Menagasathia said...

மிகவும் அருமையாக இருக்குக்கா...

asiya omar said...

வருகைக்கு மிக்க நன்றி மேனு,வீக்கெண்ட் பிஸியா?

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

DEAR SO SUPER FANTASTIC

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையாயிருக்கு.

Krishnaveni said...

tempting dish, great

asiya omar said...

mohan,thanks for your first visit and nice comment.

asiya omar said...

புவனேஸ்வரி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

கிருஷ்ணவேணி வாங்க கருத்திற்கு மிக்க நன்றி.

LK said...

present sago

சசிகுமார் said...

ஈசி இறால் அப்படின்னு ஒன்னு இருக்கா ஹா ஹா ஹா

நாடோடி said...

ரெம்ப‌ க‌ல‌ர்புல்லா இருக்கு.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

மங்குனி அமைசர் said...

நம்ம பேவரைட் கூட்டு மேடம் இது , மன்குனிக்கு ஒன்னு பார்சல் (ஒண்ணுன்னா ஒரே ஒரு இறால் அனுப்பிடாதிங்க )

asiya omar said...

சசி குமார் வருகைக்கு நன்றி.சுலபமாக சமைப்பதால் அந்த பெயர்,ஈசின்னா ஒரு அட்ராக்‌ஷன்.ஈசியாக சமைத்து விடலாம்..ஆனால் உரிக்கிறது கொஞ்சம் வேலை தான்.

asiya omar said...

சகோ.ஸ்டீபன் வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

அமைச்சர் வாங்க,உங்க வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

Chitra said...

mouth-watering! :-)

வார்த்தை said...

நமக்கு சமையக்காரம்மா வராத அன்னைக்கித்தான் இந்த மாதிரி கலர் போட்டோவோட பதிவு போடுவாங்கப்பா இவங்க...
அவ்வ்வ்வ்வ்....
(சமையல் மெனு பாத்து சப்புகொட்டுவோர் சங்கம்)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஓட்டு மட்டும் தான் ஆசியா.......நன்றிங்க.

asiya omar said...

thanks chitra.

asiya omar said...

வார்த்தை
உங்க வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து
மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

இறால்கூட்டு நல்ல இருக்கு

போன வாரம் தான் இறால் முறை முடிந்தது, அடுத்த முறை இது போல் செய்து பார்க்க்கிறேன்.

asiya omar said...

கருத்திற்கு நன்றி.

vanathy said...

நல்லா இருக்கு உங்கள் ரெசிப்பி. படங்கள் சூப்பர்.