Monday, October 18, 2010

பாகற்காய் பொரியல்


தேவையான பொருட்கள் ;
பாகற்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி- 100 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உ.பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3
கருவேப்பிலை - 2 இணுக்கு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு


இப்படி சிறியதாய் கட் செய்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்பு பாகற்காய் சேர்த்து பிரட்டி,சிறிது உப்பு போட்டு ,மூடி 5 நிமிடம் வேக விடவும்.


திறந்து அத்துடன் தக்காளி சேர்த்து பிரட்டவும்.எல்லாம் சேர்ந்து மசிந்து வரும்.


உப்பு சரி பார்த்து தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டவும்.

சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.கசப்பு அவ்வளவாக தெரியாது.அருமையாக இருக்கும்.



இதனை ப்ளைன் சாதத்துடன்,குழம்பு,கூட்டோடு பரிமாற அசத்தலாக இருக்கும்.


இதனை நித்துபாலாவின் vegetable marathon - bitter gourd - இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
--ஆசியா உமர்.




35 comments:

LK said...

paagarkaai enakup pidikkathu

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆஹா, எனக்கு பிடிக்குமே.......நன்றி ஆசியா, இந்த ரெசிபி எனக்கு புதுசு.வீட்டில் பாகற்காயும் இருக்கு...நாளைக்கே செய்ய வேண்டியதுதான்.

asiya omar said...

எல்.கே கருத்திற்கு மிக்க நன்றி.எங்க வீட்டில் பாகற்காய் சமைத்தால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.மீதியே இருக்காது. பாகற்காயில் புளிக்கறி வைத்தால் அடடா அதன் சுவையே தனி தான்.

அமைதிச்சாரல் said...

பாகற்காய்துவரன் நல்லாருக்குப்பா..

Chitra said...

நேயர் விருப்பம்: மட்டன் ரெசிபி போட்டு நாள் ஆச்சுதே....

asiya omar said...

நித்திலம் மிக்க நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

சித்ரா மட்டன் ரெசிப்பி ரெடியாக இருக்கு.சமைத்த அனைத்தும் என்னை வெளியிடேன், என்னை வெளியிடேன்ன்னு கெஞ்சுவதால் எதைன்னு ஒரே குழப்பம்.நாளக்கு தான் மட்டனுக்கு வேளை போல சித்ரா.ஓ.கே.டன்.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு ஆசியா.

asiya omar said...

மிக்க நன்றி ஸாதிகா.முடிந்தால் செய்து பாருங்க.

Krishnaveni said...

bitter gourd is my fav veggie, looks great

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

v nice dear

Mrs.Menagasathia said...

எனக்கு மிகவும் பிடித்த பொரியல்,அருமை!!

Gopi Ramamoorthy said...

கொடி பாவக்கா ருசியே தனி. எங்க கிடைக்குது இப்போ?

புவனேஸ்வரி ராமநாதன் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

vanathy said...

super recipe, akka.

asiya omar said...

கிருஷ்ணவேணி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

தம்பி மோகன் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

மேனகா எனக்கும் இந்த பொரியல் மிகவும் பிடிக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

கோபி u.a.e -யில் எல்லாமே கிடைக்குது.நன்றி கோபி.

asiya omar said...

புவனா கருத்திற்கும் வருகைக்கும் நன்றி மகிழ்ச்சி.

வானதி கருத்திற்கும் வருகைக்கும் நன்றி,மகிழ்ச்சி.

புதிய மனிதா. said...

அசத்தல் அக்கா..

நாடோடி said...

ப‌ட‌ங்க‌ளுட‌ன் ரெசிபி ரெம்ப‌ ந‌ல்லாயிருக்குங்க‌..

jagadeesh said...

அருமை அக்கா. பதிவின் முடிவுல முடிந்தால் மருத்துவ பயன்களையும் சொல்லுங்க.

முஹம்மத் ஆஷிக் said...

//சுவையான பாகற்காய் பொரியல் ரெடி.கசப்பு அவ்வளவாக தெரியாது.//--கசப்பு இல்லாமல் இருக்க இது மரபணு மாற்றப்பட்ட விதைமூலம் வந்த புது பாகற்காயா, அல்லது அதன் கசப்பு போக தாங்கள் என்ன செய்தீர்கள் என்பதை தெரிவிக்க மறந்துவிட்டீர்களா?

சசிகுமார் said...

பிடித்த பொரியல்

சே.குமார் said...

ஆஹா, எனக்கு பிடிக்கும்.

ப‌ட‌ங்க‌ளுட‌ன் ந‌ல்லாயிருக்குங்க‌..

அன்புடன் மலிக்கா said...

எனக்கு மிகவும் பிடித்த பொரியல்,அருமை!!

அதிலும் எங்கம்மா வைத்து தருவாங்கக்கா வெகு அருமையாக இருக்கும்..

indianspicemagic said...

Bitter gourd poriyal is new to me.....

asiya omar said...

புதிய மனிதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸ்டீபன் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

ஜெகதீஸ் முயற்சி செய்கிறேன்.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

முஹம்மது ஆஷிக் வருகைக்கு நன்றி.சின்ன வெங்காயம்,தக்காளி பாகற்காய் அளவிற்கே சேர்ப்பதால் அவ்வளவாக கசப்பு தெரியாது.

asiya omar said...

குமார் வாங்க வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

மலிக்கா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.அம்மா கைமணம் அது தனி தானே.

Padhu said...

Delicious bitter gourd curry!!

asiya omar said...

thanks padhu.