Tuesday, October 19, 2010

மட்டன் ஸ்நோபீஸ்தேவையான பொருட்கள்:

மட்டன் - 400 கிராம்

ஸ்நோபீஸ்- 200 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - சிறியது 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - கால்டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கறிமசாலா தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மல்லி இலை - சிறிது

தயிர் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

முதலில் மட்டன் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்,எப்பவும்,மட்டன் சிக்கன் சமைக்கும் பொழுது நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டுவது அவசியம்.மட்டனுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு,தயிர் ,சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன்,நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி,1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்,கால்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

அத்துடன்,நறுக்கிய தக்காளி,மல்லி இலை சேர்த்து பிரட்டவும்,பின்பு மிளகாய்த்தூள்,கறிமசாலா தூள் சேர்க்கவும்.உப்பு சரி பார்த்து மூடவும்.5 விசில் வைத்து குக்கரை இறக்கவும்.


ஸ்நோபீஸ் நார் எடுத்து தண்ணீரில் கழுவி வடிகட்டவும்.


குக்கரை ஆவியடங்கியவுடன் திறக்கவும்.
ஸ்நோபீஸ் சேர்க்கவும்.பிரட்டி விட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.வெயிட் போட வேண்டாம் ,விரைவில் வெந்து விடும்.இல்லாவிடில் தனியாக சிறிது உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வெந்தும் தட்டலாம்.
இது மட்டனோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். விரும்பினால் சிறிது தேங்காய் அரைத்து விட்டு கிரேவி மாதிரியும் வைக்கலாம்.
சுவையான மட்டன் ஸ்நோபீஸ் ரெடி.இதனை சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறலாம்.

- ஆசியா உமர்.

29 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அடடா.. அருமை.

asiya omar said...

முதல் கருத்திற்கு நன்றி புவனா.மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

இதை செய்து சாப்பிடாம போனா கனவில் வந்து படங்கள் 'சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லுமோ'!! அது சரி 'ஸ்நோபீஸ்'ன்னா என்ன?? அவரைக்காயா??

என்ன மாதிரி படிக்காதவங்க எத்தன பேர் வர்றாங்க. இங்கிலிஷ்ல சொன்னா எப்படி புரியும். தமிழ் ப்ளீஸ்?? ஹி..ஹி

asiya omar said...

ஸ்நோ பீஸ் என்பது வேறு ஒண்ணுமில்லீங்க சகோ.அப்துல் காதர்,பச்சை பட்டாணி பிஞ்சியாக இருக்கும் பொழுது பறித்தால் அப்படியே சமைக்கலாம்.அதை தான் இங்கு பேக் செய்து ஸ்நோபீஸ் வச்சிருக்காங்க.நம்ம ஊரில் கறியோடு அவரைக்காய் சமைப்பது வழக்கம் ,அந்த நினைவில் இதை போட்டு சமைத்தேன் அவ்வளவே.

புதிய மனிதா. said...

கலக்கல் "மட்டன் ஸ்நோபீஸ்

சுல்தான் said...

சாப்பிடத்தான் தெரியும் - எனக்கு
சமைக்கத் தெரியலேயே!

Chitra said...

ஜொள்ளிங் ..... ஜொள்ளிங்..... ஜொள்ளிங் .....

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

புதிய மனிதா மிக்க நன்றி,மகிழ்ச்சி.

சுல்தான் வருகைக்கு மிக்க நன்றி.

Mahi said...

உங்க ரெசிப்பி பார்க்கும்போது நான்வெஜ் சமைச்சு குடுக்கலாம்னு நினைப்பேன் ஆசியாக்கா.ஆனா கடைல மீட் செக்ஷன் போனாலே தாங்கமுடியல.அங்கே நிற்ககூட முடியாம ஓடி வந்துடறேன். :-|

இந்த ரெசிப்பியும் நல்லா இருக்கு.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் கலக்கலா இருக்கு...

LK said...

:)

Kousalya said...

ம்.....சாப்பிடனும் போல இருக்கு தோழி.

asiya omar said...

மகி,கருத்திற்கு நன்றி.இங்க எல்லாம் நம்ம ஊர் மாதிரியே ஃப்ரெஷாக ஆனால் நல்ல ஹைஜீனிக் பேக்கிங் கிடைப்பதால் நல்லாயிருக்கும்.

asiya omar said...

மேனகா கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

எல்.கே வருகைக்கு நன்றி.

asiya omar said...

கௌசல்யா வாங்க,கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமையா இருக்கு ஆசியா..

பதிவுலகில் பாபு said...

ஆஹா!! படங்களைப் பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்குதே..

asiya omar said...

தேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

பாபு,வருகைக்கு நன்றி.கருத்திற்கு மகிழ்ச்சி.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆஜர் ஆசியா.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு

asiya omar said...

நித்திலம் வருகைக்கு மிக்க நன்றி.

சாருஸ்ரீ கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு ஆசியா.

தியாவின் பேனா said...

good tip

asiya omar said...

தியா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு பிரட்டினாற் போல் சாத்ததில் போட்டு சாப்பிட நலல் இருக்கும்

asiya omar said...

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.