Friday, October 22, 2010

பாலக் பனீர்

தேவையான பொருட்கள்;
பசலைக்கீரை - 1 கட்டு
பனீர் - 150 கிராம்
வெங்காயம்- 1
முந்திரி பருப்பு - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2-3
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு



கீரையை ஆய்ந்து கழுவி தண்ணீர் வடிகட்டவும்.

பின்பு ஒரு கடாயில் கீரையை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் சிறிது வெந்தவுடன் எடுத்து ஆறவைக்கவும்.


ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம்,நறுக்கிய வெங்காயம்,இஞ்சிமுந்திரி வதக்கி எடுக்கவும்.
ஆறிய கீரையுடன் சேர்த்து அரைத்து எடுக்கவும்.



கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பனீரை லேசாக சிவற பொரித்து எடுக்கவும்.அத்துடன் ரெடி செய்த பாலக்கை சேர்க்கவும்.

நன்கு சேர்ந்து ஒரு கொதி வரும்.இந்த முறையில் செய்தால் அப்படியே பச்சையாகவே இருக்கும்.அடுப்பில் இருந்து இறக்கவும்.கீரீம் பதில் தான் நான் முந்திரி சேர்த்து அரைத்து இருக்கிறேன்.எனவே கிரீமியாக இருக்கும்.

சத்தான சுவையான பாலக்பனீர் ரெடி.
இதனை பரோட்டா,நாண்,சப்பாத்தி,ரைஸ் உடனும் பரிமாறலாம்.சாதத்தில் கலந்தால் பாலக் பனீர் சாதம் ரெடி.டேஸ்ட் அருமையாக இருக்கும்.



Sending this Recipe to Nithu's Healthy Food for Healthy Kids Series - Paneer Delicacies for Kids.

-ஆசியா உமர்.

28 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

சத்தான சைட் டிஷ் நல்லாயிருக்கு.

asiya omar said...

நன்றி புவனா,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் said...

ருசியான குறிப்பு..

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அக்கா டிரை பண்ணி பார்கிறேன்.

புதிய மனிதா. said...

வழக்கம்போல் படங்களுடன் அசத்தல் ....

மங்குனி அமைசர் said...

கீரை...ஹி.ஹி.ஹி.... கீரை.....ஹி.ஹி.ஹி...... என்னைய டாக்டர் கீரை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கார் . (புடிக்காத ஐட்டத்த எப்படியெல்லாம் பொய் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு )

சசிகுமார் said...

அருமை மிகவும் சத்தான டிப்ஸ்

asiya omar said...

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

சாருஸ்ரீ மிக்க நன்றி.செய்து பாருங்க.

asiya omar said...

புதிய மனிதா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

அமைச்சரே வருகைக்கு நன்றி.பாலக் பச்சைமிளகாய் சீரகம் ,இஞ்சி போட்டு சமைத்ததை சாப்பிட்டு பாருங்க.பிடித்து போய்விடும்,இப்படி ப்லைன் பாலக்கும் செய்யலாம்.

சசிகுமார் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா said...

பாலக் பனீரை அழகாக சமைத்து அசத்திய ஆசியாவுக்கு நன்றி.

asiya omar said...

ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

LK said...

nice one

Mrs.Menagasathia said...

பச்சை பசேல்ன்னு அருமையாக இருக்குக்கா...

Vijiskitchen said...

எல்லோருக்கும் பிடித்த கீரின் டிஷ். நல்ல ரெசிப்பி.

Noorul said...

Salam Akka,
Palak keerai nu onnu irukka? As far as I know Palak (Hindi) means Keerai in Tamil. Anyway thanks for the recipe ... I will try it for sure.
-Nurul Alina

asiya omar said...

எல்.கே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மேனகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

விஜி வாங்க,நலமா?கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

நூருல் ,உங்கள் விபரத்திற்கு மிக்க நன்றி.நான் பசலைக்கீரை என்று குறிப்பிட்டு இருக்க வேண்டுமோ!இந்த கீரையை பாலக் என்று நாம் அனைவரும் சொல்லி பழ்கிவிட்டோமே!

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் பழகிய, தெரிந்த குறிப்புதான் என்றாலும் உங்களின் புகைப்படத்தில் ரொம்பவும் புதியது போல பசுமையாக மின்னுது ஆசியா!!

asiya omar said...

நன்றி மனோ அக்கா,உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

பாலக் நல்ல பிரெஷாக இருக்கு,. இங்கு சிறிது வாடியது தான் கிடைக்கும்.
பாலக் பனீர் பச்சை பசேலுன்னு இருக்கு.

asiya omar said...

ஜலீலா கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

மகி said...

I like Palak but not paneer!;)
Helathy n colorful recipe asiya akka!

asiya omar said...

கருத்திற்கு நன்றி மகி.ப்லைன் ஆகவும் செய்யலாம்.

vanathy said...

Wow! super & healthy recipe.

asiya omar said...

நன்றி வானதி.

Umm Mymoonah said...

Very healthy and yummy. i love the green colour of your dish. thank you for linking it with Any One Can Cook.

asiya omar said...

thanks umm mymoonah for your visit &comments.

divya lakshmi said...

Superb..i tried this yummy dish...wat a taste.....thanx a lot