Saturday, October 23, 2010

முட்டைகோஸ் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள் ;
முட்டை கோஸ் - கால் கிலோ
முட்டை -2
வெங்காயம் - 2
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் -2
கடுகு ,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால் ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிள்குத்தூள் - கால்ஸ்பூன்
கரவேப்பிலை,மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முட்டை கோஸ், வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை சிறிது உப்பு,மிள்குத்தூள் போட்டு அடித்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,வெங்காயம்,பச்சை மிள்காய் சேர்த்து வதக்கவும்,அத்துடன் இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.வதங்கியதும்,நறுக்கிய முட்டை கோஸ் சேர்க்கவும்,பிரட்டி விடவும்.மஞ்சள்,சீரக,பெருஞ்சீரகதூள்களை சேர்க்கவும்.
கோஸ் நன்கு வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.




பின்பு அடித்து வைத்த முட்டை சேர்க்கவும்.பிரட்டி சிறிது மூடி போட்டு வேக விடவும்.


கோஸ்,முட்டை இரண்டும் சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்க்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பிரட்டி விடவும்.



சுவையான முட்டைகோஸ் முட்டை பொரியல் ரெடி.



கோஸ் முட்டையும் சேர்ந்து பொரியல் செய்யும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.மூளை பொரியல் போன்று மணக்கும்.விரும்பினால் தக்காளி,மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.உப்பு அளவாய் போடவும்,கொஞ்சம் கூடினால் கூட கடுத்த மாதிரி இருக்கும்.விரும்பினால் கரம் மசாலா,தேங்காய் சேர்க்கவும்,சேர்க்காமலும் அருமையாக இருக்கும்.
--ஆசியா உமர்.



22 comments:

மகி said...

super proiyal! I love it.:)

asiya omar said...

thanks mahi.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கோஸ்ல முட்டை, வித்தியாசமா தான் இருக்கு.

LK said...

முட்டை போடாம இருந்த இன்னும் அருமையா இருக்கும்

தேவன் மாயம் said...

பொ ரி ய ல் அ ரு மை!

asiya omar said...

புவனா மிக்க நன்றி.

எல்.கே முட்டை போடாமல் தான் எப்பவும் செய்வதுண்டு.மாறுதலுக்கு இப்படி.மிக்க நன்றி.

asiya omar said...

தேவன் மாயம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

கோஸ் முட்டைப்பொரியல் வித்தியாசமாக உள்ளது.முட்டைக்கோஸ் முட்டைப்பொரியல் என்று பெயர் வைத்து இருந்தால் நன்ராக இருந்திருக்கும்.:-)

அஹமது இர்ஷாத் said...

என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌து மு.கோஸ்..






Dr.Sameena Prathap
said...

Hi,

Nice and simple poriyal...

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Gopi Ramamoorthy said...

புதுசா இருக்கு.

asiya omar said...

ஸாதிகா நாங்க எப்பவும் முட்டையும்,கோஸும் -என்று சொல்லுவோம்.பெயர் எடிட் செய்து விட்டால் போச்சு.

asiya omar said...

அஹமது இர்ஷாத் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

டாக்டர் சமீனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோபி வருகைக்கு நன்றி,மகிழ்ச்சி.

புதிய மனிதா. said...

சண்டே ஸ்பெஷல் அருமை படங்கள் இன்னும் அருமை ..

asiya omar said...

புதிய மனிதா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...

விரத நாட்களைத் தவிர காய் பொரியல் என்றால் எங்கம்மா முட்டை ஊற்றிதான் செய்வாங்க..ரொம்ப பிடிக்கும் எனக்கு.சூப்பர் அக்கா...

Kurinji said...

Puthu dish for me...

http://kurinjikathambam.blogspot.com/

சே.குமார் said...

புதுசா இருக்கு.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பார்க்கவே டேஸ்டா இருக்கு ஆசியா..:))

asiya omar said...

குறிஞ்சி முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

குமார் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

தெய்வசுகந்தி said...

நான் இதுல எல்லா காயும் போட்டு செய்வேன். நல்ல பொரியல்.

Geetha6 said...

super!!!!!