Sunday, October 24, 2010

வறுத்தரைத்த மோர் குழம்பு

தேவையான பொருட்கள் ;
வெண்டைக்காய் - கால் கிலோ
மோர் - 300- 500 மில்லி
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1டீஸ்பூன
அரிசி - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2+1
மிளகு - கால்ஸ்பூன்
சீரகம் - அரைஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6
கருவேப்பிலை- 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
து.பருப்பு,க.பருப்பு,அரிசி மூன்றையும் வறுத்து கொள்ளவும்,இளஞ்சிவப்பாக எடுக்க வேண்டும்.

பின்பு அதே வாணலியில் மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் போட்டு வறுத்து எடுத்து,பின்பு தேங்காய் துருவல் போட்டு வறுத்து எடுக்கவும்.


பின்பு வறுத்த அனைத்து பொருட்களும் ஆறிய பின்பு பொடி செய்து அத்துடன் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வெங்காயம்,வெண்டைக்காய் சுத்தம் செய்து கழுவி நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.பெருங்காயப்பொடி சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.நன்கு காய் வதங்க வேண்டும்.


வெண்டைக்காய் வதங்கிய பின்பு வறுத்தரைத்த விழுதை சேர்க்கவும்.


ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்,கொதிக்க விடவும்.


குழம்பு நன்கு கொதித்து நிறம் மாறி வரும்.கொழ கொழன்னு இருக்கும்.அதனில் மோர் சேர்க்கவும்.கொழ கொழப்பு மாறிவிடும்.இப்ப குழம்பு ஊற்றி சாப்பிடும் பதத்தில் இருக்கும் படி தேவைப்பட்டால் இன்னும் மோர் சேர்க்கவும்.கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.

மோர் சேர்த்தவுடன் குழம்பு பதமாக ஆகிவிடும்.நுரை கூடி கொதி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.

சுவையான வறுத்தரைத்த வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.
இது சாதத்துடன் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்,குழம்பில் உள்ள வெண்டைக்காயின் ருசி அசத்தலாக இருக்கும்.
-ஆசியா உமர்.


41 comments:

vanathy said...

சூப்பரா இருக்கு குழம்பு. செய்து பார்க்க வேண்டும்.

அமைதிச்சாரல் said...

வெண்டைக்காய் மோர்க்குழம்பு நல்லாருக்கு..

asiya omar said...

வானதி மிக்க நன்றி.செய்து பார்த்து விட்டு சொல்லுங்க.

asiya omar said...

அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...

ஆஹா மோர் குழம்பா..சூப்பர்ர்ர்..எலுமிச்சை ஊறுகாய்+உருளை வறுவலும் இருந்தால் சும்மா ஒரு பிடி பிடிப்பேன்...

asiya omar said...

கருத்திற்கு நன்றி மேனகா,மிக்க மகிழ்ச்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

எனக்கு பிடித்தது.

asiya omar said...

மிக்க நன்றி புவனா.

LK said...

yummuy. fav more kulambu

asiya omar said...

thanks l.k.

கோமதி அரசு said...

இன்று உங்களின் வறுத்தரைத்த மோர் குழம்பு தான் எங்கள் வீட்டில்.

நன்றி.

புதிய மனிதா.. said...

அருமையான குறிப்பு ..

asiya omar said...

கோமதி அரசு தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

சசிகுமார் said...

எப்பவும் போல சூப்பர் அதுவும் எனக்கு பிடித்த மோர்குழம்பு

ஸாதிகா said...

மோர்க்குழம்பு கமகமக்கிறதே.

மங்குனி அமைசர் said...

எனக்கு புடிச்ச டிஸ்ல இதுவும் ஒன்னு

asiya omar said...

சசி குமார் கருத்திற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.

asiya omar said...

ஆமாம் ஸாதிகா நிஜமாகவே மோர் குழம்பு வீடு முழுவதும் கமகமத்தது.பிள்ளைங்க வந்தவுடன் என்னம்மா சமைச்சீங்கன்னு ஆர்வமாக சாப்பிட்டாங்க.

asiya omar said...

அமைச்சர் உங்க வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நல்லாருக்கு.. செய்து பாக்கணும்.

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்டார்ஜன்.

சிநேகிதி said...

ரொம்ப அருமையாக இருக்கு

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மோர்குழம்பு என் ஃபேவரிட் ஆசியா....நன்றி.

முகப்பு said...

அருமை, சில எளிமையான பேச்சிலர் சமையல் சொல்லுங்களேன்.

asiya omar said...

சிநேகிதி கருத்திற்கு மிக்க நன்றி

நித்திலம் கருத்திற்கு மிக்க நன்றி.

முகப்பு
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.நிச்சயம் கேட்ட படி குறிப்பு கொடுக்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

வறுத்து அரைத்தது இல்லை அக்கா, ஊற வச்சு தான் அரைபேன் செய்து பார்கிறேன் , உருளை வறுவலுடன் சாப்பிட பிடிக்கும்

சசிகுமார் said...

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html

asiya omar said...

சாருஸ்ரீ கருத்திற்கு நன்றி.


நிச்சயமாய் சசி குமார்,நானும் ஓட்டு போட்டு விட்டேன்.நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வறுத்தரைத்துச் செய்ததில்லை ஆசியா.. செய்து பார்க்கிறேன்..

asiya omar said...

வருகைக்கு நன்றி தேனக்கா.

asiya omar said...

வருகைக்கு நன்றி தேனக்கா.

Pushpa said...

Yummy and flavorful mor kuzhambu...Super delicious

Pushpa @ simplehomefood.com

asiya omar said...

thanks puspha for your visit and lovely comment.

Krishnaveni said...

my fav mor kuzhambu, very nice photos, great

சுந்தரா said...

வெண்டைக்காய் மோர்க்குழம்பு...வறுத்தரைத்த வாசத்தோடு...ஆஹா,கட்டாயம் செய்துபார்க்கணும்.

asiya omar said...

மிக்க நன்றி சுந்தரா.மகிழ்ச்சி.

Heymalatha said...

Hai sister I am Ramya,Radhika's(krishnavel) sister

asiya omar said...

hai ramya,thanks for your visit.

R.Gopi said...

பசி நேரத்துல பார்த்து இருக்கக்கூடாதோ!!

சூப்பர் டேஸ்டா இருக்கும்னு செய்முறை பார்த்தாலே (படித்தாலே) தெரியுது...

ரெசிப்பிக்கு நன்றி....

asiya omar said...

கருத்திற்கு நன்றி கோபி .மிக்க மகிழ்ச்சி.

Jeyanthi said...

Superb...