Wednesday, October 27, 2010

பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார்



பருப்பை முதலில் நன்கு அலசி கால் மணி நேரம் ஊறவைக்கவும்.குக்கரில் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து மஞ்சள்பொடி, பெருங்காயம்,1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 3 விசில் வைத்து இறக்கவும்.வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.


தேவையான பொருட்கள் ;
துவரம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - கால்டீஸ்பூன்
ரெடிமேட் சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்+ அரைடீஸ்பூன்
கடுகு-அரைஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - சிறியது 5
பீன்ஸ் - 10
கேரட் - 1
கருவேப்பிலை ,மல்லி இலை -சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

பரிமாறும் அளவு - 4-6


கத்திரிக்காய்,முருங்கைக்காய்,பீன்ஸ்,கேரட்,,தக்காளி,மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய காய்கறியோடு,சின்ன வெங்காயம் 10,தக்காளி,புளிக்கரைசல்,தேவைக்கு உப்பு,சாம்பார் பொடி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைக்கவும்.காய் மூழ்கும் அளவு தண்ணீர் இருக்குமாறு வைக்கவும்.ஒரு விசில் தான் வைக்கவேண்டும்.அதிக நேரம் வைத்தால் காய் குழைந்து விடும்.விருபினால் 5 சின்ன வெங்காயத்தை தாளிக்க நறுக்கி வைக்கவும்.இல்லாவிடில் வெங்காயம் சேர்க்காமலும் தாளிக்கலாம்.

குக்கரை திறந்தால் சாம்பாருக்கான காய் வெந்து இப்படி காணப்படும்.நேரம் இருந்தால் தனியாக பாத்திரத்திலும் காய் வேக வைக்கலாம்.


அத்துடன் வேகவைத்த பருப்பை கலந்து மல்லி இலை தூவி கொதிக்க விடவும்.உப்பு சரி பார்க்கவும்.கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.

பின்பு தாளித்து கொட்ட ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம்,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை வெடித்ததும் சின்ன வெங்காயம் சிறிது நறுக்கியது சேர்த்து வதக்கி,அரைஸ்பூன் சாம்பார் பொடி,பின்ச் பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கி உடன் ரெடியான சாம்பாரில் கொட்டவும்.


தாளித்து கொட்டியதும் கலந்து விடவும்.


கமகமக்கும் பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் ரெடி.

இதனை காலையில் இட்லி,தோசைக்கு வைத்து சாப்பிடலாம்,மதியம் சாதத்திற்கும் அருமையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள வெறும் அப்பளம் இருந்தாலே போதும்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.


--ஆசியா உமர்.

33 comments:

LK said...

தனியா இருக்கும் அனைவருக்கும் உபயோகம் ஆகும்

புதிய மனிதா. said...

பேச்சிலர்ஸ் ஈசி சாம்பார் பண்ணிடலா அருமை ...

R.Gopi said...

ஹலோ...

என்னங்க இது... ஈசியான பேச்சிலர்ஸ் சாம்பார்னு சொல்லிட்டு, ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டீங்களே...

பதிவின் ஆரம்பத்தில் வெறுமே பருப்பு என்று போட்டு இருக்கீங்களே... பேச்சலர்ஸ்னா, கொஞ்சம் விபரமா துவரம்பருப்புன்னு சொல்ல வேண்டாமா (நிஜமாவே துவரம்பருப்பு தானா, நான் ஏதோ குன்சா சொன்னேன்...)...

செய்து பார்த்து விடுவோம்... எவ்ளோ ஈசியா இருக்குன்னு!!

asiya omar said...

எல்.கே கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

புதியமனிதா செய்து பாருங்க.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

கோபி சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி.சாம்பாருக்கு துவரம் பருப்பு தான் சொன்னது சரியே.
கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

Chitra said...

Quick and easy recipe.... super!

சாருஸ்ரீராஜ் said...

ஈசியா இருக்கு அக்கா , பேச்சிலர்ஸ் மட்டும் தான் செய்யனுமா என்னா நாமளும் செய்து பார்திடுவோம்.

Gopi Ramamoorthy said...

இதுக்கும் நார்மல் சாம்பருக்கும் என்ன வித்தியாசம்? ரெண்டுமே ஒண்ணாத்தான் படுது எனக்கு. ஈஸி சாம்பார்னு சொல்லி பேசிலர்சை ஏமாற்றுகிறீர்கள்:))))

பதிவுலகில் பாபு said...

என்னங்க பேச்சுலர்ஸ் சாம்பார்னு இவ்லோ ஸ்டெப்ஸ் சொல்லியிருக்கீங்க.. சரிங்க ட்ரை பண்ணிப்பார்த்துடலாம்.. :-))

asiya omar said...

புவனா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

சாருஸ்ரீ நான் எப்பவும் அடிக்கடி இப்படி தான் ஈசியாக செய்வேன்.காய் தான் மாற்றி மாற்றி போடுவேன்.

asiya omar said...

கோபி இன்னொரு கோபி வந்ததால் உங்களை கோபிராம் என்று அழைக்கலாம் தானே.சாம்பார் நிறைய வகையாக செய்யலாம்.நான் இந்த முறைப்படி குவிக்காக செய்துவிடுவேன்.பெயர் எல்லாம் விளம்பர ட்ரெண்ட் தான்.

asiya omar said...

வருகைக்கு நன்றி.பாபு இந்தளவு ஸ்டெப்ஸ் இல்லாமல் எப்படி சாம்பார் செய்வது.செய்து பாருங்க,ரொம்ப ஈசி தான்.

மங்குனி அமைசர் said...

எச்சூச்மி மேடம் , நான் கல்யாணம் பண்ணிட்டேன் , இப்ப இந்த சாம்பார எப்படி வைக்கிறது ?

asiya omar said...

மங்குனி அமைச்சர் கல்யாண ஆகியும் நிறைய பேர் வெளி நாடு,வெளியூரில் forced bachelor ஆக இருக்காங்க,அவங்க எப்பவும் ஹோட்டலில் சாப்பிடமுடியாதில்லையா?அவங்களுக்கு தான் இந்த குறிப்பு.அமைச்சர் நிறைய பேர் மடிகணினியோட குறிப்பு பார்த்து கிச்சனில் சமைக்கிறாங்க தெரியுமா?எனக்கு மெயில் வந்திருக்கு.

Mrs.Menagasathia said...

என் செய்முறையும் இதே தான்,எண்ணெயும் குறைவாகவே செலவாகும்..அருமை!!

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி மேனு.

சௌந்தர் said...

நல்ல பதிவு பெயர் பொருத்தமா இருக்கு..!

சசிகுமார் said...

thanks akka

மின்மினி RS said...

சாம்பார் சூப்பர்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சாம்பார் நல்லா செய்திருக்கீங்க ஆசியாக்கா.

asiya omar said...

சௌந்தர் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

மின்மினி நலமா?ரொம்ப நாளாச்சு.கருத்திற்கு மகிழ்ச்சி.

ஸ்டார்ஜன் ஊரில் அனைவரும் நலமா?வருகைக்கு நன்றி,மகிழ்ச்சி.

vanathy said...

super sambar!

எம் அப்துல் காதர் said...

பேச்சிலர்ஸ் சாம்பார் ஃபேமிலி மெம்பெர்ஸ் சாப்பிடக் கூடாதா என்ன? அருமையா இருக்கு!!

asiya omar said...

சசி குமார் வருகைக்கு மிக்க நன்றி.

வானதி கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.அப்துல்காதர் அட இது எல்லாரும் வைக்கிற சாம்பார் தான்,நாம பேச்சிலர்ஸ்க்கு சொல்லி கொடுப்போமேன்னு தான்,ஆனால் பாருங்க இப்ப எங்களை விட பேச்சிலர்ஸ் அருமையாக சமைக்கிறாங்க,இங்க இருக்கிற எங்க சொந்தகார பசங்க எல்லாம் என்னமா சமைக்கிறாங்க.அவங்க கிட்ட சில பக்குவம் நாம கேட்டு தெரிஞ்சிகிடவேண்டியது இருக்கு.

Mahi said...

ஹா..ஹா! பேச்சிலர்ஸ் சாம்பார்னு பேரை வெச்சு,மாட்டிகிட்டீங்களா ஆசியாக்கா? :)

சாம்பார் நல்லா இருக்கு.

ஜிஜி said...

ஈசியா இருக்குங்க..நானும் செஞ்சு பாக்குறேன்.

asiya omar said...

மகி

ஜிஜி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

சுலபசாம்பார்தான்.ஏகப்பட்ட காய்கலவை சேர்ந்திருப்பதால் சத்தும் கூட.

asiya omar said...

ஆமாம்,ஸாதிகா. தவறாது வந்து பின்னூட்டம் தந்தது மிக்க மகிழ்ச்சி.

Umm Mymoonah said...

Wow! looks just like hotel style sambar, but this easy. Thank you for linking with Any One Can Cook :)

asiya omar said...

thanks for your comments umm mymoonah.