Sunday, October 31, 2010

மஷ்ரூம் டோபியாஸா /Mushroom Dopiaza

தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
முந்திரி பருப்பு -8
தக்காளி மீடியம் சைஸ் -1
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு - 1டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்குவெங்காயத்தில் பாதியை இப்படி துண்டாக நறுக்கி உதிர்த்து கொள்ளவும் மல்லி இலை நறுக்கி வைக்கவும்,காளான் சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய வெங்காயத்தை ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு இளஞ்சிவப்பாக வதக்கி எடுக்கவும்.


மீதி வெங்காயத்தை முந்திரி பருப்புடன் அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சிபூண்டு,கரம்மசாலா வதக்கி கொள்ளவும்.

அத்துடன் அரைத்த வெங்காயம் முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.2 நிமிடம் வதக்க வேண்டும்.வதக்கிய மசாலாவுடன் சுத்தம் செய்து வெந்நீரில் கழுவி நறுக்கிய காளான் சேர்க்கவும்.சிறிது வதக்கவும்.

அத்துடன் நறுக்கிய தக்காளி,மிளகாய்  சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.மூடி போட்டு வேகவிடவும்,தண்ணீர் ஊறும்,வற்றியவுடன் வதக்கிய வெங்காயம் சேர்த்து பிரட்டி சிறிது நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.மல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான மஷ்ரூம் டோபியாஸா ரெடி.இதனை நாண்,சப்பாத்தி,ரொட்டி வகைகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஃப்ரைட் ரைஸ் உடனும் அசத்தலாக இருக்கும்.சிக்கனிலும் இப்படி செய்யலாம்.
இன்னும் கிரேவி வேண்டுமானால் புளிப்பில்லாத கெட்டி தயிர் 2 டேபிள்ஸ்பூன் நன்கு அடித்து சேர்க்கலாம் அல்லது ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கலாம்.


--ஆசியா உமர்.

30 comments:

LK said...

காளான் சாப்பிடுவது இல்லை

asiya omar said...

பட்டன் மஷ்ரூம் அருமையாக இருக்கும்,எல்.கே.வருகைக்கு மிக்க நன்றி.

THOPPITHOPPI said...

தீபாவளிக்கு எல்லாரும் சமையல் பதிவா போட்டு அசத்துறிங்க.

மஷ்ரூம் டோபியாஸா- தீபாவளிக்கு செஞ்சிடவேண்டியதுதான்

kavisiva said...

மஷ்ரூம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுபோல் செய்து நான் ப்ரெட்டோடு சாப்பிடுவேன். வெரி டேஸ்டி!

asiya omar said...

தொப்பி தொப்பி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

வாங்க கவிசிவா,வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

present asiya.

முகுந்த் அம்மா said...

மஷ்ரூம்ல என்ன செய்யலாம்னு யோசிச்டே இருப்பேன். ரொம்ப வித்தியாசமான ரெசிபி இது. முயற்சி செய்து பார்க்கிறேன்.

Chitra said...

எனக்கு என்னமோ இதே ரெசிபில ஆட்டு ஈரல் போட்டு செய்தாலும் சூப்பர் ஆக இருக்கும் போல தெரியுது....
படங்களை பார்த்ததும், அப்படித்தான் தோணுச்சு.

ஸாதிகா said...

அருமையான குறிப்பு ஆசியா

Gopi Ramamoorthy said...

அப்படியே ஒரு ப்ளேட் லண்டனுக்குப் பார்சல்

asiya omar said...

காஞ்சனா வருகைக்கு மிக்க நன்றி.

முகுந்த் அம்மா உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

ஆமாம் சித்ரா செய்து பாருங்க.கருத்திற்கு நன்றி.

கோபி பார்சல் அனுப்பிட்டாப்போச்சு.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஆமினா said...

நைட் செய்துட்டு சாப்பிட்டேன் ஆசியா. காளான் வாசனையே மறஞ்சு சுவையா வந்துச்சு

asiya omar said...

நன்றி ஆமினா செய்து பின்னூட்டம் அளித்தமைக்கு மகிழ்ச்சி.

மங்குனி அமைசர் said...

அருமையான எனக்கு பிடிச்ச வெஜ் டிஸ் மேடம் , என் வீட்ல செய்ய சொல்லிடுறேன்

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நல்லாருக்கு ஆசியாக்கா.

asiya omar said...

மங்குனி அமைச்சர்

சசிகுமார்

ஸ்டார்ஜன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

vanathy said...

Wow! super recipe. Nice photos.

asiya omar said...

நன்றி வானதி .மகிழ்ச்சி.

Mahi said...

அடுத்த முறை மஷ்ரூம் வாங்கினதும் செய்துபார்க்கிறேன் ஆசியாக்கா! பார்க்கவே அருமையா இருக்கு.:P:P

Mahi said...

ஆசியாக்கா,மஷ்ரூம் டோபியாஸா செய்துட்டேன்..சூப்பரா இருந்தது.என்னவருக்கு பட்டன் மஷ்ரூம் அவ்வளவா பிடிக்காது,ஆனா இந்த டிஷ் ரொம்ப பிடித்திருந்தது.

பகிர்வுக்கு நன்றி!

asiya omar said...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மகி.தினமும் அரைமணி நேரம் மட்டும் நெட் உலா.

இமா said...

பார்க்க நல்லா தெரியுது, நானும் பண்ணப் போறேன்.

ravi said...

Akka,i like to make this in this weekend as it looks rich.

can u give gram measures for tomato?

//கரம் மசாலா - கால்ஸ்பூன்//
Is it teaspoon or tablespoon?

I have to take garammasala powder or whole(like cinnamon,cloves.. likethat)?

Expecting reply eagerly to make it.Thanks.

Asiya Omar said...

ரவி,கரம் மசாலா - கால் டீஸ்பூன்,கரம் மசாலா பவுடர் தான் எடுக்க வேண்டும். தான்,ஏலம் பட்டை கிராம்பு சேர்ந்த தூள்.அல்லது ரெடிமெடாக கிடைக்கும்.தக்காளி படத்தில் சைஸ் இருக்கே.75 கிராம் இருக்க்லாம்.நான் சும்மா ஒரு மீடியம் சைஸ் பழம் சேர்த்தேன்.இனி போகப் போக நீங்களும் குத்து மதிப்பாக போட்டு சமைக்க படித்து விடுவீர்கள் தம்பி.

ravi said...

அக்கா,
பதிலுக்கு நன்றி. உங்கள் மஷ்ரூம் டோபியாஸா இப்பொழுது தான் சாப்பிட்டோம்.frozen parotta வுடன் மிக மிக சுவையாக இருந்தது.friends க்கும் மிகவும் பிடித்திருந்தது.வீட்டு சாப்பாடு சாப்பிட்ட நிறைவு.சுவையான குறிப்புக்கு வாழ்த்தும்,நன்றியும்.


அறுசுவையில் நீங்கள் கொடுத்துள்ள கடாய் காளான் குறிப்பில், http://www.arusuvai.com/tamil/node/10456

கரம் மசாலா - கால் ஸ்பூன்,சீரகத்தூள் - அரை ஸ்பூன். மல்லித்தூள் - ஓன்னறை ஸ்பூன் என்று கொடுத்துள்ளீர்கள். டீஸ்பூனா,டேபிள்ஸ்பூனா? இந்த recipe செய்து பார்க்க விருப்பம்.


//இனி போகப் போக நீங்களும் குத்து மதிப்பாக போட்டு சமைக்க படித்து விடுவீர்கள் தம்பி. //

சமையலில் அனுபவம் இருப்பவர்களுக்கு ok அக்கா.நாங்கள் வெளியிலேயே சாப்பிட்டு எப்போதாவதுதான் roomல் சமைக்கிறோம்.இதேபோல் குத்துமதிப்பாக நாங்கள் போடும்போது tasteம் வருவதில்லை,பொருளும் வீணாகிஅறது,
திரும்ப சமைக்கும் ஆவலும் போய்விடுகிறது.நல்ல recipeஐ கூட spoil பண்ணிவிடுவோம்.
சொந்த அனுபவத்தில்தான்
சொல்கிறேன்.
சந்தேகத்தை கேட்டு
செய்யும்போது பொருளும் வீணாவதில்லை,உணவும் சுவையாக உள்ளது.

Asiya Omar said...

ரவி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.
அறுசுவையில் நான் கொடுத்த கடாய் காளான் மசாலா அளவு டீஸ்பூன்.ஆரம்பத்தில் கொடுத்தது.நான் அங்கு எடிட் செய்து விடுகிறேன்.இனி அளவுகள் சரியான அளவாக கொடுக்க முயற்சிக்கிறேன்.

ravi said...

அக்கா, உங்களின் கடாய் காளான் இன்று செய்தோம்.frozen parotta வுடன் அருமையாக இருந்தது.மறக்க முடியாத சுவை.இனி அடிக்கடி செய்வோம்.
அறுசுவையில் என் roommate feedback கொடுத்து விட்டான்.
சந்தேகத்திற்கு உடனடி பதில் கொடுத்ததற்கு நன்றி ,சுவையான கடாய் காளான் receipe ஐ பகிர்ந்து கொண்டமைக்கும் என் நன்றி அக்கா.
உங்கள் receipeக்கள் அனைத்துமே மிகவும் tasteஆக உள்ளன.