Wednesday, October 20, 2010

புடலங்காய் பருப்பு

தேவையான பொருட்கள் :
புடலங்காய் - 300 கிராம்
மசூர் தால் - ஒரு கைகுத்தளவு
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 3 பல்
மல்லி கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -3
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிள்காய் - 1
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


புடலங்காய்,வெங்காயம் சிறியதாக நறுக்கி வைக்கவும்.


மசூர் தாலை ஒரு கால் மணி நேரம் ஊறவைக்கவும்.



ஊறிய பருப்பை கொதிக்கும் நீரில் போட்டு வெந்தால் 5-10 நிமிடத்தில் முக்கால் வேக்காடு வெந்து ஒன்றொன்றாய் இருக்கும்.தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன்,கடுகு,உ.பருப்பு,வற்றல்,கருவேப்பிலை,தட்டிய பூண்டு போட்டு தாளிக்கவும்.


நறுக்கிய வெங்காயம்,புடலங்காய் சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்கியதும் மஞ்சள் தூள்,சீரகத்தூள்,உப்பு சேர்க்கவும்.

புடலங்காயை பிரட்டி விட்டு மூடி போட்டு வேகவைக்கவும்.

5 நிமிடத்தில் வெந்து விடும்.பருப்பு சேர்க்காமல் வெறும் தேங்காய் மிளகாய் துவைத்து போட்டும் பொரியல் போலவும் செய்யலாம்.

தேங்காய் மிளகாய் சேர்த்து,வேக வைத்த பருப்பும் சேர்க்கலாம்.

நன்கு பிரட்டி விட்டு 2 நிமிடம் வைக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவவும்.


சுவையான புடலங்காய் பருப்பு ரெடி.

பருப்பு வெந்து விடாமல் ஒத்தை ஒத்தையாக இருக்கவேண்டும்.இல்லாவிடில் கூட்டு போல் இருக்கும்.மசூர் தால் இப்படி காய்கறிகளில் வெந்து சேர்ப்பது இலகுவானது,சீக்கிரம் வெந்து விடும்.இது மாதிரி முள்ளங்கி,பீன்ஸ்,கோஸ்,கீரை போன்றவற்றை செய்யலாம்,கிட்டதட்ட உசிலி டேஸ்ட் வரும்.

-ஆசியா உமர்.

23 comments:

Krishnaveni said...

wow, that looks super yummy

asiya omar said...

மிக்க நன்றி மகிழ்ச்சி கிருஷ்ணவேணி.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர் பொரியல்..ஆசியாக்கா புடலங்காயை அரிந்ததும் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்து அலசினால் அதிலுள்ள ஒருவித வாசனை போகும்..சீக்கிரமாகவும் வேகும்...

Kousalya said...

//சுவையான புடலங்காய் பருப்பு ரெடி.//

சாப்பிட நான் ரெடி...!!

:))

asiya omar said...

மேனகா கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.ஆனால் இந்த புடலங்காய் விதை கூட இல்லாமல் பிஞ்சாக ஸ்பாஞ்சாக இருந்தது.அதனால் வாடை எதுவும் தெரியவில்லை.

asiya omar said...

நன்றி கௌசல்யா.
ஆகா! பரிமாற நான் ரெடி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பொரியல் அருமை.

asiya omar said...

கருத்திற்கு நன்றி புவனேஸ்வரி.

Chitra said...

Good one.

p.s. Snow peas இல்லாத மட்டன் கூட நல்லாத்தான் இருக்குதுங்க... :-)

Gopi Ramamoorthy said...

சூப்பர் டிஷ்.

முழுதும் புரதம், நார் சாது நிறைந்தது.

LK said...

பருப்பு உசிலி மாதிரியே இருக்கே, பார்சல் அனுப்புங்க

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.மட்டனோடு காய்கறியும் சேர்த்து செய்தால் குழந்தைகள் சாப்பிடுவாங்களேன்னு சேர்ப்பது தான்பா.

asiya omar said...

கோபி,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எல்.கே.வாங்க,ஆமாம் பார்க்க பருப்பு உசிலி மாதிரி தான் இருக்கும்.

சசிகுமார் said...

thanks

கக்கு - மாணிக்கம் said...

மிளகாய் வற்றல், சிவப்பு மிளகாய் - இரண்டும் ஒன்றுதானே அம்மா?!
குறிப்பே சுவையாக இருக்கு.

பதிவுலகில் பாபு said...

நிறைய ஐட்டங்கள் சமைக்கத் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க சூப்பர்..

asiya omar said...

சசி குமார் வருகைக்கு மகிழ்ச்சி.

கக்கு மாணிக்கம் வருகைக்கு நன்றி,சிவப்பு மிள்காய் என்பது பழுத்த மிளகாய்,மிள்காயே சிவப்பாய் இருக்கும்.

பாபு வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

சே.குமார் said...

புடலங்காய் பொரியல் சூப்பர் அக்கா.

Kanchana Radhakrishnan said...

பொரியல் சூப்பர் asiya.

ஸாதிகா said...

நாங்களும் இதே முறையில்தான் செய்வோம் ஆசியா,

asiya omar said...

குமார் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

காஞ்சனா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

vanathy said...

very nice recipe!

asiya omar said...

நன்றி வானதி.