Tuesday, October 12, 2010

குறுக்கே கோழியும் முருங்கைக்கீரையும்

வாரே வா வாக்கிங் !
அமீரகத்தில் கோடை வெப்பம் குறைந்து வருவதால் வாக்கிங் போலாம்னு வீட்டில் இருந்து காலை எல்லோரும் கிளம்பி சென்றவுடன் சுதந்திரப்பறவையாய் வெளியே வந்தேன்.

வீட்டின் முன்புறம் உள்ள சாலையோர நடைபாதையில் வரும்பொழுது என்ன ஆச்சரியம்? குறுக்கே நாட்டுக்கோழி எந்த தோட்டத்தில் இருந்து தப்பித்து வந்ததோ! கால்நடைகளை காணமுடியாத அதிவேக சாலையோரத்தில் இப்படி ஒரு காட்சி.மனசுக்கு இதமாக இருந்தது.

ஆகா பச்சைபசேல்ன்னு நம்ம ஊர் கீரை போல் தெரியுதே!

அட ஆமாம் ,பொன்னாங்கண்ணியே தான்,இவ்வளவு செழிப்பாய் எப்படி?


அதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியுதே.நிறைய தூரம் வந்திட்டேனோ ! கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்.

மரத்திற்கடியில் தெரியும் பெஞ்சில் அமர வேண்டியது தான்.ஆங்காங்கு உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களும்,சிறுவர் பூங்காவையும் பார்த்து கொண்டு வந்ததில் ரொம்ப தூரம் வந்து விட்டேனோ!சரி திரும்பி விடுவோம் என்று வீட்டீற்கு வந்துவிட்டேன்.எடுத்த சிலபடம் ஒழுங்கா வரலை.


மறுநாள் வாக்கிங் வந்தால்

இதென்ன வம்பாய் போச்சு,நேற்று இருந்த கீரையை காணவில்லையே!கையில் பறிக்க முடிந்தால் பறிக்கலாம் என்று கவருடன் வந்தால் இப்படியொரு ஏமாற்றம்.


மாதம்மொருமுறை முடிவெட்டுவது போல் இப்படி வெட்டி சாய்த்து விட்டார்களோ!

சரி என்று நடக்க ஆரம்பித்தேன்,பழையபடி களைப்பாக இருக்கவே வீடு திரும்ப முடிவு செய்தேன்.வீட்டருகே வரவும் பக்கத்து வீட்டில் வேலை பார்க்கும் தமிழ் தம்பி, அக்கா பக்கத்தில் முருங்கைக்கீரை இருக்கு வேண்டுமா என்று கேட்க நானும் சரியென்றேன்.பொன்னாங்கண்ணி கிடைக்காத ஏமாற்றம்,முருங்கை நிறைவு செய்தது,ஒரே பாலக் சாப்பிட்ட சலித்ததால் இது எனக்கு மிக்க மகிழ்வை தந்தது.

இனி என்ன வேலை ஆய்ந்து பொரியல் வைக்கவேண்டியது தான்.

தேவையான பொருட்கள் ;

முருங்கைக்கீரை - 2 - 3 கப்

சின்ன வெங்காயம் - ஒரு கப்

மிளகாய் வற்றல் -3

சீரகம்- அரைடீஸ்பூன்

உ.பருப்பு - 1 டீஸ்பூன்

பூண்டு பல் - 4

பாசி பருப்பு - ஒரு கைகுத்து

தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உ,பருப்பு,சீரகம்,வற்றல் போட்டு வெடிக்க விட்டு,நறுக்கிய பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்,ஆய்ந்து கழுவிய கீரையை சேர்க்கவும்,தேவைக்கு உப்பு விரும்பினால் பின்ச் சோடாஉப்பு சேர்க்கவும்,தண்ணீர் தெளித்து மூடி போடவும்.5 நிமிடம் கழித்து திறந்தால் கீரை நன்கு வதங்கி சஃப்டாக பச்சையாக இருக்கும்.வேக வைத்த பாசிப்பருப்பை தேங்காய் துருவல் சேர்க்கவும்,

பிரட்டி விட்டு 2 நிமிடம் வைத்து இறக்கவும்.அப்படியே பரிமாறவும்.சும்மாவே சாப்பிடலாம், ஆகா என்ன ருசி ! அளவாய் சாப்பிடனும்.சத்தானதும் ஆரோக்கியமானதும் கூட.


--ஆசியா உமர்.

32 comments:

அன்னு said...

கடைசில வாக்கிங் போகலை நீங்க. கோழியயும், கீரையயும் எப்ப வீட்டுக்கு கொண்டு போலான்ட்டு முடிவு பண்ணிட்டு, ரெஸ்ட்டும் எடுத்துட்டு, அதுல (//உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களும்,சிறுவர் பூங்காவையும்//) வேற பார்த்துட்டு வந்தாச்சு...அடுத்த நாள் பேக்கெட் வேற தூக்கிட்டா??? ஆஹா...நல்ல வாக்கிங். இப்படித்தான் செய்யோனும். :))

கலக்குங்க...இங்க குளிர் வாட்ட ஆரம்பிச்சிருச்சு!! :(

asiya omar said...

அட அன்னு,முதலில் உங்கிட்ட மாட்டிட்டேனா?நினைச்சேன்,யாராவது வாருவாங்கன்னு,ஆனால் உடன் உங்க கருத்தை பார்த்து மிக்க மகிழ்ச்சி.நன்றி.கீரை டேஸ்ட் எப்படி?

Chitra said...

அந்த கோழியை ரோஸ்ட் செய்றது எப்படின்னு சொல்லப் போறீங்க என்று நினைத்தேன்..... முருங்கை கீரை....... எங்க ஊரில கிடைக்க மாட்டேங்குதே..... ம்ம்ம்ம்.... இனி நெல்லைக்கு வரும் போது, கண்டிப்பாக சாப்பிடணும் ....
அப்புறம், உங்களுக்கு பொன்னாங்கண்ணி கீரை பற்றிய கவலை.... எனக்கு, இப்போ அந்த கோழி, யார் வீட்டு குழம்பில் கொதிக்குதோனு இருந்துச்சு.....

அமைதிச்சாரல் said...

முருங்கைக்கீரை துவரன் எனக்கும் ரொம்ப பிடிச்ச ஒண்ணு. அப்றம் கோழியை பிடிச்சுட்டு வந்தீங்களா :-)))))

Cool Lassi(e) said...

A very good narration and an awesome keerai poriyal!

asiya omar said...

சித்ரா வருகைக்கும் நல்ல நகைச்சுவைக்கும் நன்றி.

asiya omar said...

வாங்க அமைதிச்சாரல்,கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

cool lassie,thanks for your lovely comments.

புவனேஸ்வரி ராமநாதன் said...

Nice.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தலைப்பே வித்யாசமா இருக்கே. Super.

asiya omar said...

thanks bhuvana.

அன்னு said...

ஏனுங்கக்கா..இங்கே பசலைக்கீரைஅயி தவிர வேறெதும் கண்ணுல பட மாட்டெங்குதுன்னு நானே டென்சனா இருக்கேன்...அதுல கீரை டேஸ்ட் எப்படின்னு வேற கேள்வியா....அழுவாச்சி அழுவாச்சியா வருது எனக்கு :((

asiya omar said...

அன்னு,dont worry,ஊர் போகும்பொழுது டேஸ்ட் பண்ணலாம்.

ஸாதிகா said...

தோழி அல் ஐனில் ஒரு அம்மணி கேமராவும் கையுமாக அலைந்து கொண்டே இருக்காங்க என்று தகவல் வந்தது.இப்பதான் புரியுது.

ஸாதிகா said...

தோழி ரொம்ப சுவாரஸ்யமாக உள்ளது.படங்களும்,பதிவும்.தொடர்ந்து உங்கள் ஊரைக்காட்டுங்கள்.இருட்டிலேயே வந்துட்டு இருட்டோடு திரும்பி போனாதால சரியா பார்க்கலே.:-(

ஸாதிகா said...

அப்படியே அந்த கோழியையும் துரத்திப்பிடித்து வந்து குழம்பாக்கி பதிவு போட்டு இருக்கலாம்,அவ்வ்வ்வ்வ்வ்

ஸாதிகா said...

அத்தனையும் அழகா தந்து முருங்கைக்கீரைப்பொரியலையும் வித்தியாசமாக தந்தமைக்கு நன்றி தோழி.பிரிட்ஜில் ஆய்ந்து வைத்த கீரை உள்ளது.நாளைக்கே இது போல் சமைத்து விடுகின்றேன்.

asiya omar said...

ஸாதிகா வந்து கருத்துக்களை அள்ளி தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.வீட்டுப்பக்க்கம் உள்ள மாஸ்க் பக்கம் உங்க கார்,எங்க வீட்டிற்கு திரும்பியிருக்கனும்.அந்த ரோடு முழுவதும் இப்படி அழகான நடைபாதை.நிச்ச்யம் கீரை செய்து சாப்பிடுங்க.

நாடோடி said...

ச‌கோ.. ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ந‌ல்லா வ‌ந்திருக்கு.. முருங்கை கீரை பொரிய‌ல் எல்லாம் எப்போதோ சாப்பிட்ட‌து.. ஞாப‌க‌ம் இல்லை .. :)

asiya omar said...

ஸ்டீபன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

சூப்பர். முருங்கைக்கீரை இப்ப நிறைய இடங்களில் கிடைப்பதில்லை. நிறைய இரும்புச் சத்துள்ள ஒரு விஷயம்.

கிட்டத்தட்ட எங்க அம்மா இப்படித்தான் செய்வாங்க. இன்னும் ஒரு விஷயம் கூட இருக்கும். அரிசியை நன்றாக வறுத்துப் பொடி செய்து அதையும் சேர்ப்பார்கள். நல்லா சுவையாக இருக்கும்.

நாக்கில் எச்சில் ஊறுகிறது படங்களைக் கண்டவுடன்.

நீங்க போட்டோவும் நல்லா புடிக்கிறீங்க

தெய்வசுகந்தி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! முருங்கைக்கீரையை நினைவு படுத்தி அழ வெச்சுட்டீங்க! எனக்கு ஒரு பார்சல் அனுப்பிடுங்க! இல்லேன்னா வய்யித்து வலி வந்துரும்! :-))))

asiya omar said...

கோபி,வருகைக்கு நன்றி.உங்க அரிசியை பொடித்து போடற டிப்ஸ் அருமை,நானும் அரிசியுடன் சீரகமும் சேர்த்து பொடித்து வைத்திருப்பேன்,இன்ஸ்டெண்ட்டாய்.இனி சிறிது தூவி விடுகிறேன்.

asiya omar said...

தெயவசுகந்தி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.நன்றி.

vanathy said...

முருங்கை கீரை .. பார்க்கவே ஆசையா இருக்கு. பதிவு அருமை.

Tech Shankar said...

Thanks dear buddy!

Welcome to : amazingonly.com

by

TS

LK said...

//அந்த கோழியை ரோஸ்ட் செய்றது எப்படின்னு சொல்லப் போறீங்க என்று நினைத்தேன்///

nanum athan ninachen

Mahi said...

சூப்பரா இருக்கு உங்க ஊர்..ப்ரெஷ் முருங்கைக் கீரையுமா? என்ஜாய் ஆசியாக்கா!:)

asiya omar said...

கருத்திற்கு நன்றி மகி.

u$$$ said...

hi asiya akka

After a very long time going through ur blog. you have presented things wonderfully. yeah the weather is changing. Hopeing to meet you on EID.

Cheers
Ussss

asiya omar said...

thanks usman for your visit & lovely comments,yah,insha allah we will meet on eid holidays.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா - நடைப்பயிற்சி போகும் பொது கோழி - பொன்னாங்கண்னிக்கீரை - எல்லாம் பாத்துட்டு - மறுநாள் ஆசையாப் போனா ஒண்ணூம் இல்லை - பாவமே - ம்ம்ம் கடசியா முருங்கைக் கீரையாச்சும் கிடைச்சுதே ! - சரி சரி அத எப்படிச் சமச்சுச் சாப்பிடறதுன்னு ஒரு பதிவு போட்டாச்சு - படங்கள் எல்லாம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா