Monday, November 1, 2010

மீன் தலை மிளகாணம்

தேவையான பொருட்கள் :
சங்கராமீன் தலை - 6-8
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள்- 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - முக்கால் ஸ்பூன்
சீரகத்தூள் - முக்கால்ஸ்பூன்
பூண்டு பல் - 10
சின்ன வெங்காயம் 10 +5
தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லியளவு
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -2 இணுக்கு
உப்பு - தேவைக்கு

மீனை சுத்தம் செய்து தலையை கட் செய்து நன்கு கழுவி அலசி உப்பு மஞ்சள் போட்டு் உலசி கழுவி வைக்கவும்.
மீன் துண்டை பொரிக்க மசால் தடவி ரெடி செய்து வைக்கவும்
.
அரைக்க வேண்டிய மிளகு,சீரகம்,மல்லி,மஞ்சள் தூள் வகைகளையும்,தேங்காய்,பூண்டு,சின்ன வெங்காயம்,தக்காளி ரெடி செய்து வைக்கவும்.
மிக்ஸியில் மேலே குறிப்பிட்டதை போட்டு அரைத்து எடுக்கவும்.

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவைக்கு தண்ணீர் கலந்து நன்கு கொ்திக்க வைக்கவும்.மசாலா வாடை அடங்க வேண்டும்,பின்பு மீன் தலையை போட்டு திரும்ப நன்கு கொதிக்க விடவும்.அத்துடன் புளித்தண்ணீரை சேர்க்கவும்.புளி குறைச்சலாகத்தான் இருக்கணும்,மிளகு காரம் தூக்கலாக இருக்கவேண்டும்.நன்கு கொதிக்கலைன்னால் ஆணம் வெடுவெடுன்னு இருக்கும்.
ஆணம் ரெடியானவுடன் தாளிக்க ஒரு பாத்திரத்தில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு வெடித்ததும்,கருவேப்பிலை,சின்ன வெங்காயம் நறுக்கியது கொஞ்சம்,போட்டு சிவற வதக்கி எடுக்கவும்,இந்த தாளிப்பு ரொம்ப முக்கியம்,இது தான் ஆணத்திற்கு ருசியை தரும்.நல்ல எண்ணெய் தான் உபயோகிக்க வேண்டும்.
.
ரெடியான மிளகாணத்தில் தாளித்ததை கொட்டவும்.


தாளித்து கொட்டியதும் ஆணத்தை கலந்து விடவும்.
சுவையான மீன் தலை மிளகாணம் ரெடி.
இது மழைக்காலத்தில் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.இதற்கு ப்லைன் சாதம், மீன் பொரிச்சது,பீன்ஸ் பொரியல்,பொரித்த அப்பளம் அருமையான காம்பினேஷன்.கோதுமை தோசைக்கும் தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்.இந்த மீனை செந்நாரை என்றும் சொல்வாங்க.இங்கு யு.ஏ.இ -யில் சுல்தான் இப்ராஹிம்,சுல்தான் ஹேடி,சுல்தான் ஹட்டா,சுல்தான் கன்னான் என்ற பெயர்களில் வெரைட்டியாக கிடைக்கிறது,நான் இங்கு உபயோகித்து இருப்பது சுல்தான் இப்ராஹிம் மீன்.
--ஆசியா உமர்.

20 comments:

புதிய மனிதா. said...

அருமையான டிப்ஸ் அக்கா

LK said...

present sago :)

kavisiva said...

ஆசியா தக்காளியையும் சேர்த்து அரைக்கணுமா? இன்னிக்கு டின்னருக்கு செய்யலாம்னு இருக்கேன்

பிரவின்குமார் said...

பயனுள்ள குறிப்புகள்.

Geetha6 said...

waav!!!nice!

asiya omar said...

புதியமனிதா மிக்க நன்றி.

எல்.கே வருகைக்கு நன்றி.

கவிசிவா தக்காளியையும் சேர்த்து தான் அரைக்கவேண்டும்,நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.

asiya omar said...

பிரவீன் குமார் மிக்க நன்றி.

கீதா மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...

superra irukke..will must try it!!

ஆமினா said...

நல்ல குறிப்பு. மீன் தலையை தனியா குழம்பு வைப்பது வித்தியாசமான முறை.

நான் இருக்கும் ஊரில் கடல் மீன் கிடைப்பதே கஷ்ட்டம் :(

கிடைக்கும் போது செய்துட்டு சொல்றேன் ஆசியா

வாழ்த்துக்கள்

vanathy said...

நல்லா இருக்கு உங்க ரெசிப்பி.

asiya omar said...

மிக்க நன்றி வானதி .தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

Krishnaveni said...

wow, that looks tempting, thanks for sharing

Gopi Ramamoorthy said...

சூப்பர் மிளகானம். செங்கரா மீன் கிடைக்கவில்லை என்றால் வேறெந்த மீன் சரியா வரும் இதுக்கு?

Chitra said...

இது மழைக்காலத்தில் செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.இதற்கு ப்லைன் சாதம், மீன் பொரிச்சது,பீன்ஸ் பொரியல்,பொரித்த அப்பளம் அருமையான காம்பினேஷன்.கோதுமை தோசைக்கும் தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்


......நல்லா பாருங்க.... அது மழை இல்லை. என் வாயில இருந்து கொட்டுற நீர்!!!!! ஜூப்பரு!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிளகானமா? மிளகாணமா?
ஆணம் என்பது குழம்புக்கு ஈழத்தில்
சில பகுதிகளில் குறிப்பிடும் சொல்.

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

ஆமினா கருத்திற்கு மிக்க நன்றி.

கிருஷ்ணவேணி கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கோபி,சுறாஎலும்போடு கூடிய துண்டுகளை போட்டு செய்யலாம்.,விரால் குட்டி மீனிலும் இந்த ஆணம் வைக்கலாம்.

asiya omar said...

யோகன் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி,இது கவனக்குறைவால் ஏற்பட்டது.சரி செய்து விடுகிறேன்.நன்றி.

பாத்திமா ஜொஹ்ரா said...

வஞ்சிரம் மீனின் தலையில் செய்யலாமா அக்கா?

asiya omar said...

பாத்திமா ஜொஹ்ரா தாராளமாக செய்யலாம்.செய்து பாருங்க,வருகைக்கு நன்றி.