Sunday, October 3, 2010

சிக்பீஸ் ஸ்டூ - chickpeas stew


.
தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டைக்கடலை - 100 கிராம்
தேங்காய்ப்பால் - கெட்டியாக 1 கப்(பெரிய பாதி தேங்காயில்)
தேங்காய்ப்பால் - (இரண்டாம் பால்) -2 கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2 -3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலம்,பட்டை,கிராம்பு - தலா 1
உப்பு - தேவைக்கு

கொண்டக்கடலையை நன்கு ஊறவைத்து(8 மணி நேரம்) ரெடி செய்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலம்,பட்டை,கிராம்பு போட்டு வெடிக்கவிடவும்,அடுத்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,அத்துடன்கருவேப்பிலை,கீறிய பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

வதங்கியதும்.மல்லித்தூள்,சீரகத்தூள் சேர்க்கவும்,பிரட்டவும்.
ஊறவைத்த கொண்டைக்கடலை சேர்த்து மறுபடியும் பிரட்டவும்.

தண்ணியாக உள்ள இரண்டாம் பால் இரண்டு கப் சேர்த்து ,உப்பு சிறிது போட்டு அடுப்பை மீடியம் நெருப்பில் வைத்து 5 விசில் விடவும்.

குக்கர் ஆவியடங்கியவுடன் திறக்கவும்.கொண்டைக்கடலை நன்றாக வெந்து இருக்கும்.


அத்துடன் கெட்டி தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும்.

சிம்மில் வைத்து கொதிவரவும் நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.உப்பு சரி பர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான சத்தான சிக்பீஸ் ஸ்டூ ரெடி.இதனை ஆப்பம், இடியாப்பத்துடன் பரிமாறலாம்.


சிக்பீஸ் ஸ்டூவை அப்படியேவும் சூப் போன்றும் சாப்பிடலாம்.
ஆப்பம் குறிப்பை காண இங்கு கிளிக்கவும்.
--ஆசியா உமர்.


11 comments:

LK said...

நான் கூட அசைவும்னு நினச்சு படிக்கல. இப்பதான் படிக்கிறேன் நன்றி சகோ

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி எல்.கே.

ஸாதிகா said...

தோழி வித்தியாசமாக இருக்கு.

asiya omar said...

கருத்திற்கு மகிழ்ச்சி.ஸாதிகா.

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு செய்து பார்கிறேன்.

asiya omar said...

சாருஸ்ரீ கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

சே.குமார் said...

நல்லா இருக்கு.

மாதேவி said...

சத்தான ஸ்டூ நன்றாக இருக்கிறது.

asiya omar said...

நன்றி, வருகைக்கு மகிழ்ச்சி மாதேவி.

Jaleela Kamal said...

ஸ்டு நல்ல இருக்கு சத்தாச்சே,கருப்பு
கொண்டைகடலை, முழு பாசி பயிறு, வெள்ளை கொண்டைகடலை, வேர்கடலை, எல்லாமே வாரத்தில் 3 முறை செய்துடுவேன்.

Asiya Omar said...

மிக்க நன்றி ஜலீலா.