Thursday, October 28, 2010

மஞ்சள் பூசணி கறி

Padhu's Pumpkin Curry


தேவையான பொருட்கள் ;

மஞ்சள் பூசணி நறுக்கியது - 2 கப்

புளி - சிறிய நெல்லி அளவு

மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்

சாம்பார் பொடி - ஒன்னரை டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா அரைடீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

வெங்காயம் - 1

பெருங்காயம் - பின்ச்

கருவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு - தேவைக்கு




மஞ்சள் பூசணி தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.



நறுக்கிய பூசணி,மஞ்சள் பொடி,உப்பு,புளிக்கரைசல் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வேக வைக்கவும்.



10 நிமிடத்தில் வெந்து இப்படி காணப்படும்.புளித்தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை சேர்த்து வெடித்ததும்,பெருங்காயப்பொடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



பின்பு வேகவைத்த பூசணியை சேர்க்கவும்,பிரட்டி விடவும்.



தாளித்த பூசணியில் சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும்,உப்பு சரிபார்க்கவும்,ஏற்கனவே உப்பு சேர்த்து வேக வைத்ததால் பார்த்து உப்பு போடவும்.5 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.


சுவையான மஞ்சள் பூசணி கறி ரெடி.
இதனை சாதம்,சப்பாத்தியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.இந்த முறையில் சமைத்தால் இனிப்பு சுவை தெரியாமல் தொட்டு கொள்ள அசத்தலாக இருக்கும்.



--Thanks Padhu.





PADHU - வின் குறிப்பை காண இங்கு(கிளிக்கவும்) செல்லவும்.

-ஆசியா உமர்.


50 comments:

LK said...

differenta irukke

asiya omar said...

மிக்க நன்றி, சகோ.எல்.கே.

புதிய மனிதா. said...

அசத்தல் குறிப்பு அக்கா ..எனக்கு நீங்கள் போட்டிருக்கும் படங்கள் மிக பிடிக்கும் அதிலும் Watermark இல் உங்கள் ப்ளாக் பெயர் போட்டு வெளியிடுவது எவ்வளவு dedicateடாக பதிவிடுகிறீர்கள் என்பது புரிகிறது ..கலக்குங்க ....

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதிய மனிதா.

பதிவுலகில் பாபு said...

பார்க்கும்போதே சாப்பிடனும்னு தோனுது.. :-)))

Padhu said...

I am very happy that you liked it Asiya Omar. Curry looks very delicious!!

asiya omar said...

பாபு மிக்க நன்றி.

asiya omar said...

padhu thanks for your lovely comment.

கக்கு - மாணிக்கம் said...

தூள்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு. செய்முறைப்படங்கள் அருமை.

asiya omar said...

கக்கு மாணிக்கம்

புவனா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மின்மினி RS said...

ரொம்ப நல்லாருக்கு ஆசியாக்கா. எளிமையா இருக்கு. செய்து பாக்கணும். நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சூப்பரா செய்திருக்கீங்க ஆசியாக்கா. நல்லாருக்கு.

asiya omar said...

மின்மினி

ஸ்டார்ஜன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Chitra said...

ஆஹா... ரொம்ப நல்லா வந்து இருக்கே!

Nithu Bala said...

அருமையான குறிப்பு ஆசியா...படங்களும் சுபெர்ப்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு செய்து பார்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

presentation is good.

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நிதுபாலா வர்ங்க,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

சாருஸ்ரீ செய்து பாருங்க,மகிழ்ச்சி.

புவனா மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...

குறிப்பும்,ப்ரெசண்டேஷனும் அருமை அக்கா!!

Vijiskitchen said...

சூப்பர் கறி. எனக்கு ரொம்ப பிடித்த கறி.

Geetha6 said...

மிக அருமை சகோதரி !

Mano Saminathan said...

பரங்கி கறியை அழகான புகைப்படங்களுடன் சொல்லிய விதம் அருமை ஆசியா!!

அன்னு said...

எனக்கு அந்த குட்டியூண்டு ஆமைதான் வேணும்...... :((((((

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

விஜி வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

மனோ அக்கா வருகைக்கு மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கீதா6 வருகைக்கு மிக்க நன்றி.உங்க ப்ளாக்கில் கருத்து தெரிவிக்கவே முடியலை,என்னான்னு பாருங்க.

asiya omar said...

அன்னு,அந்த ஆமை எனக்கு ரொம்ப பிடித்தமானது,டெய்சோவில்(daiso - japan shop,எல்லா நாட்டிலும் இருக்குமே) வாங்கினேன்,கிடைத்தால் உனக்கு ஒண்ணு வாங்கி வைக்கிறேன்.

Gopi Ramamoorthy said...

சூப்பர் கறி. அப்புறம் அந்த ஆமைக்கு டேஸ்ட் பண்ணக் கொஞ்சம் கொடுங்க பாவம். ஏங்கிப் போய்ப் பார்க்கிறது:)

asiya omar said...

கோபி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஊட்டிவிடலாம்னு பார்த்தால் ஆமை வாயை திறக்கமாட்டேன்கிறது.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல குறிப்பு நன்றிங்க ஆசியா.

எம் அப்துல் காதர் said...

இனிப்பில்லாம இருக்குமா? அப்ப நல்லா தானிருக்கும். வாங்கி சமைக்க சொல்லிடுவோம். அருமை!!

Krishnaveni said...

lovely recipe, looks yum yum

asiya omar said...

நித்திலம்

அப்துல் காதர்

கிருஷ்ணவேனி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சே.குமார் said...

அசத்தல் குறிப்பு அக்கா.

ஸாதிகா said...

பூசணிக்காயில் கறி.டிரை பண்ணிடுவோம்.கூடவே ஆமை எட்டிப்பார்ப்பது அழகு.

THOPPITHOPPI said...

தீபாவளிக்கு அசத்திட வேண்டியதுதான்

asiya omar said...

சே.குமார் வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

தோழி ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

தொப்பி வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

மகி said...

நல்லா இருக்கு ஆசியாக்கா.இந்தக்காய் ஒருமுறை வாங்கி,தோல் சீவ முடியாம அவஸ்தைப்பட்டேன்,அதோட சரி! இப்ப இங்கே ஹாலோவீன் சீஸன்..எங்கே பாத்தாலும் பம்கின்தான். ஆனா நம்ம ஊர் ருசி இருக்குமான்னுதெரில.

எனக்கு இந்தக்காயில பிடித்ததே அந்த ஸ்வீட் டேஸ்ட்தான்.:)

asiya omar said...

நல்லாயிருக்கும் மகி,சின்னதாக பம்கின் ஒண்ணு வாங்கி நாலு ரெசிப்பி செய்து பார்த்திடலாமே.இங்கு கட் செய்து சிறிய துண்டு துண்டாக கிடைக்கிறது.மகி பீலர் ஒண்ணு வாங்கிட்டீங்கன்னா எல்லா காயும்,பழமும் தோல் சீவுவதற்கு வசதியாக இருக்கும்.

ஜிஜி said...

பாக்கும்போதே ரொம்ப நல்லா இருக்குங்க.பூசணிக்காயை 10நிமிடம் பாத்திரத்தில் வேக வைப்பதற்கு பதிலா குக்கரில் ஒரு விசிலில் வேக வைக்கலாமா?குழைஞ்சிடுமா?

asiya omar said...

ஜிஜி ஆமாம் குழைந்து விடும்,பக்குவமாக வெந்தால் நல்லாவரும்.செய்து பாருங்க.வருகைக்கு நன்றி.

sundara said...

பூசணிக்காய் கறி பாக்கவே அழகா இருக்கு.

இனிப்பைப்போக்க இப்படியொரு வழி இருப்பது இப்பதான் தெரியுது :)

Jaleela Kamal said...

மஞ்சள் பூசனியும் கூடவே ஆமையும் சூப்பர்

asiya omar said...

சுந்தரா

ஜலீலா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

vanathy said...

super recipe & super turtle, akka.

asiya omar said...

Vanathy thanks for your lovely comment.

Mahi said...

ஆசியாக்கா,பீலர் என்கிட்ட இருக்கு.ஆனா நான் வாங்கிய காய் பச்சைகலர் தோல் உள்ளது.தோல் கல்லு மாதிரி!!கத்தில சீவியும் அசையல.:-|

நம்ம ஊர் நாட்டு காய் சாப்பிட்ட நாக்குக்கு இந்த ஊர் காய் பிடிக்கல.:) நீங்க சொன்னதுக்காக வாங்கிப் பார்க்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

akka i did this romba nalla irunthathu.

asiya omar said...

செய்து பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி சாருஸ்ரீ.