Thursday, November 25, 2010

சின்னஞ் சிறிய உலகம் - பகுதி- 2


பகுதி -1 பார்க்க இங்கே ( கிளிக்கவும்) செல்லவும்.


இது நடந்தது 2005 அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் மூன்று மாதம் அந்த இன்ஸ்ட்டியூட்டில் வேலை பார்த்தேன்.அங்கிருந்து வந்தவுடன் சும்மா இருக்கலை,எங்கள் வீட்டு பக்கம் உள்ள ஏழு பள்ளிகளுக்கும் நானே ஒரு சிவியை தயார் செய்து கொடுத்து விட்டு வந்தேன்.அங்குள்ள அனுபவத்தை பின்பு பார்ப்போம்.

இன்ஸ்ட்டியூட்டில் என் பொறுப்பில் இருந்த லிசா(எத்தியோப்பியா)வயது – 13,சபா – 6(பாகிஸ்தான்)சாஜு(கேரளா) வயது – 21 பற்றியும் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும இந்த பகுதியில் சொல்றேன்.
.
லிசா வாய் பேசமாட்டாள், எப்பொழுதும் எச்சி வடிந்து கொண்டு இருக்கும் இவளுக்கு எதுவும் சொல்லி கொடுக்க வேண்டாம், ஜஸ்ட் கவனித்தால் போதும்,அவளை இன்ஸ்ட்டியூட்டில் விட்டு செல்ல அவளது அப்பாவும்,அழைத்து செல்ல அம்மாவும் வருவதுண்டு.அவளால் எந்த தொந்திரவும் எனக்கு இருந்ததில்லை.ஆனால் அவளை மற்ற குழந்தைகளிடம் இருந்து பாதுகாப்பது தான் பெரிய சிரமம்.

சபா அழகு குட்டி,ஒரு இடத்தில் இருக்க மாட்டாள்,எங்காவது ஓடி ஒளிந்து விளையாடுவது இவளுக்கு ரொம்ப பிடிக்கும்.ஹைப்பர் ஆக்டிவ்,அவளை கவனித்து 3 மணி நேரம் பாதுகாப்பதே பெரிய வேலை,இதற்கிடையில் அவளை எழுத வைக்க வேண்டும்.ஒரு எழுத்து கூட எழுத தெரியாத அவளுக்கு ஆங்கில எழுத்துக்கள் சில,சில எண்கள் மட்டுமே நான் பணியாற்றிய நாட்களில் என்னால் கற்று கொடுக்க முடிந்தது.அவள் என்னுடன் வேனில் வந்து எனது பில்டிங்கில் இருந்து மூன்றாவது பில்டிங்கில் இறங்குவதால் அவளை இறக்கி விடும் வரை அவள் என் பொறுப்பு. ஒரு நாள் அவளின் அம்மா அழைத்து செல்ல வரவில்லை.

வேனில் இருந்து குதித்து பில்டிங்கை நோக்கி ஓடி விட்டாள்,வேன் ட்ரைவரோ அவளை அம்மாவிடம் விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டதால் எனக்கு படபடப்பு, மூன்று மாடி பில்டிங் தான் என்பதால் அன்று இலகுவாக கண்டு பிடிக்க முடிந்தது.அவள் பின்னாலேயே ஓடி வந்து பார்த்தால் லிஃப்ட் கிரவுண்ட் ப்ளோரில் இருக்கு,சபாவை காணோம்,அவள் ஒளிந்து விளையாடும் குணம் தெரியுமாதலால் மாடி படிகட்டு போகும் வழியில் மறைந்து இருப்பாளோ என்ற எண்ணத்தில் போய் பார்த்தால் அவள் பை இருக்கு அவளை காணோம்,மடமடவென்று படி ஏறி பார்த்தால் மூன்றாவது மாடியின் கதவருகே நிற்கிறாள்,இதற்குள் அவங்க அம்மாவும் வரவே அவளை ஒப்படைத்து விட்டு வருவதற்குள் போதுமென்றாகிவிட்டது. என் கணவரிடம் நடந்த விஷ்யத்தை வந்து சொன்னால் அவருக்கு பயங்கர கோபம்,உனக்கு எதுக்கு இந்த வேலை,ஏன் சிரமப்படுறேன்னு சத்தம் போட்டார்.


அடுத்து நம்ம சாஜூவை பற்றி சொல்றேன்,கேளுங்க,நல்ல குண்டான தேகம்,மீசை தாடியுடன் பெரிய பையன்,அவனுடைய கனவு அவங்க அப்பா வேலை பார்க்கும் ஆபிஸில் ஆபிஸ் பாய் ஆகவேண்டும் என்பது,அப்பா கூடவே இருக்கலாமாம், இந்த ஐடியா எப்படி அவனுக்கு வந்ததுன்னு தெரியலை,தினமும் சொல்வான்,அதற்கு அவனை தயார் படுத்த அவன் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் தினமும் கேட்பதும் அவனுக்கு எடுத்து சொல்வதும் அன்றாட வேலையில் ஒன்று.எந்த பொருள் புதிதாக யார் கொண்டு வந்தாலும் மாயமாய் மறைந்து விடும், அவன் பையில் தேடினால் இருக்கும்,அவனிடம் இருந்து வாங்கவும் முடியாது,மறுநாள் அவனுடைய அப்பா தான் கொண்டு வந்து தருவார்கள்.பிரியாணி என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்று எப்பவும் என்னிடம் சொல்வான்,அவன் அடிக்கடி எனக்கு பிரியாணி சமைக்க தெரியுமா என்று கேட்பதுண்டு,ஒரு நாள் அவனுக்காக பிரியாணி கூட செய்து எடுத்து போனேன்..எப்பவும் அவனுடன் சிரித்து பேசவேண்டும்.சிரிக்கவில்லை என்றால் ஒரு வேலையும் நடக்காது.ஒரு நாள் தீடீரென்று கொஞ்சம் கவனக்குறைவாய் மற்ற குழந்தைகள் பக்கம் திரும்பிவிட்டேன்.திரும்பினால் சாஜூவையும்,லிசாவையும் காணோம்,வகுப்பறைகள் முழுவதும் கண்ணாடி அறை தான்,நான் ஓடி தேடுவதற்குள் டைரக்டர் சிசிடிவியில் நடந்ததை பார்த்து விட்டு ஓடி வந்து விட்டார்.
அவர் டிவியில் பார்த்ததை சொன்ன பொழுது
என் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது..

-அனுபவங்கள் தொடரும்.


-ஆசியா உமர்.

பகுதி - 3 - பார்க்க இங்கே (கிளிக்கவும்) செல்லவும்.

படம் - நன்றி கூகிள்.

28 comments:

LK said...

அட. இப்படி நிறுத்திவிட்டீர்களே.

GEETHA ACHAL said...

அட...என்னது இப்படி சஸ்பன்ஸ் எல்லாம் வைத்து நிறுத்திவிட்டிங்க...சீக்கிரம் எழுதுங்க...

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
என்ன ஆசியா இப்படி பண்ணீட்டீங்க... நெஞ்செல்லாம் படபடன்னு இருக்கு!

சீக்கிரமா சொல்லிடுங்க என்ன ஆச்சுன்னு

ஸாதிகா said...

சுவாரஸ்யமாக இருக்கு.திகில் கதைபோல் சஸ்பென்சாக நிறுத்தி விட்டீர்கள். சீக்கிரம் உங்கள் நடுக்கத்திற்கான காரணத்தை பகிருங்கள்.

நானானி said...

நல்ல இடத்தில் சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்களே!!!

உண்மையிலே உங்களுக்கு ரொம்ப பொறுமையும் பரந்த மனசும் இருக்கு.

வாழ்த்துக்கள்!!!

asiya omar said...

எல்.கே
கீதா ஆச்சல்
ஆமினா
ஸாதிகா
நானானி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஒரிரு நாள் கழியட்டுமே.இன்னும் ஒரு பகுதி தான்.

சாருஸ்ரீராஜ் said...

சஸ்பன்ஸா இருக்கு தொடர்கதை மாதிரி தொடரும் போட்டுடிங்களே..

Kurinji said...

Romba nall erukku, adutha post seekiram podunga!

சசிகுமார் said...

waiting next post

சே.குமார் said...

என்னக்கா சஸ்பென்ஸ் வச்சி முடிச்சிட்டிங்க...

kavisiva said...

சஸ்பென்ஸ்???????????? அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் :)

Geetha6 said...

சஸ்பன்ஸ் !!!!!!!
thrilling........

Kanchana Radhakrishnan said...

சுவாரஸ்யமாக இருக்கு.

asiya omar said...

சாருஸ்ரீ
குறிஞ்சி
சசிகுமார்
சே.குமார்
கவிசிவா
கீதா
காஞ்சனா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Chitra said...

very interesting......

சங்கரியின் செய்திகள்.. said...

அடடா...நல்ல அனுபவம்...முதல் அனுபவத்தை எப்படியோ மிஸ் பண்ணிட்டேனே....

நன்றி ஆசியா - நித்திலம்.

ராமலக்ஷ்மி said...

உண்மைச் சம்பவம் ஆகையால் சஸ்பென்ஸில் நிறுத்தியது என்னவாயிருக்குமோ என கவலைப்பட வைக்கிறது. சீக்கிரம் அடுத்த பதிவு வரட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

அடடா, இப்படி சஸ்பென்ஸ் வைச்சுட்டீங்களே.. சீக்கிரமா சொல்லுங்க.

சௌந்தர் said...

நல்ல இடத்தில் தொடரும் போட்டுடிங்க ம்... சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க...

asiya omar said...

சித்ரா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சங்கரி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

ராமலக்‌ஷ்மி வருகைக்கு நன்றி.அடுத்த பதிவில் போட்டு விடுகிறேன்.

வெங்கட் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக சுவாரசியம் ... தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி ....

எம் அப்துல் காதர் said...

தொடர் அருமை siss. சஸ்பென்ஸ் தொடர வாழ்த்துகள்!!

asiya omar said...

சகோ.கே.ஆர்.பி. செந்தில்
சகோ.அப்துல் காதர்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சௌந்தர் வாங்க,கருத்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, நல்லா இருக்கு. நீங்கள் தொடரும் போடுவது நல்லாவே இல்லை ( சும்மா டமாஷ் ). தொடருங்கோ!

asiya omar said...

வருகைக்கு நன்றி வானதி.

Jaleela Kamal said...

இது போல் அனுபவம் எனக்கும் நிறைய இருக்கு, போட்டோகலை எடிட் பண்ண முடியாமல் , பாண்ட் பிரச்சனையால் பதிவு போட் முடியல.
பிறகு எழுதுகிறேன்.

asiya omar said...

வருகைக்கு நன்றி ஜலீலா.