Friday, November 26, 2010

சின்னஞ் சிறிய உலகம் - பகுதி - 3


பகுதி – 1 இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.

பகுதி – 2 இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.

இன்ஸ்ட்டியூட்டே அல்லோகலப்பட்டது.டைரக்டர் ஓடி வந்து எங்களிடம் விஷயத்தை தெரிவித்து விட்டு அவர் சிசிடிவியை வாட்ச் செய்ய அவர் கேபினுக்குள் சென்றுவிட்டார்.

அட்டெண்டர்ஸ் இங்கு மங்கும் ஓடி தேடுகின்றனர்.எல்லா ரூமும் பளிச்சென்று கண்ணாடி அறை என்பதால் பார்க்கும் படி தான் இருக்கும். ஆனால் நான் தேடியமட்டும் எங்கும் பார்க்க முடியவில்லையே,டைரக்டர் ரூம் சென்று கேட்கவோ,டிவியை பார்க்கவோ முடியலை.இறுதியில் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவந்தது,ஆனால் அந்த ரூமை வெளியில் இருந்து பார்க்கமுடியாது,

அது ப்ரேயர் ரூம்.வெளியே நாங்கள் எல்லாம் கூடி நின்றுவிட்டோம். “ஷாஜூ,லிசா” என்று நான் சத்தமாக அழைத்த வண்ணமிருந்தேன்.ரூமை ஷாஜு மூடி தாழ் போட்டு விட்டதால் என் உயிரே என் கையில் இல்லை.

என் பொறுப்பில் இருந்த இரண்டு குழந்தைகள், “நான் என்ன செய்வேன்”,என்று பதட்டத்துடன் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.கதவை உடைக்க ஏற்பாடு நடந்து விட்டது. திடீரென்று ஒரு ஐடியா வந்து, நான் ”ஷாஜு, உனக்கு பிரியாணி வாங்கி வந்திருக்கிறேன்” என்று சத்தம் கொடுத்தேன்,அதற்கு “ஆசியா டீச்சர்!” என்று ஷாஜு சொல்வது கேட்டது. நானும் விடாமல் ”சாஜு உனக்கு மட்டும் தான் பிரியாணி லிசாவை விட்டு விட்டு உடனே வந்தால் தருவேன்” என்று சொன்னது தான் தாமதம், கதவு திறந்து வெளியே வந்தான் ஷாஜு. எல்லா ஸ்டாஃபையும் ஒரே இடத்தில் பார்த்ததில் பிரியாணியை கூட மறந்து, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குற்ற உணர்ச்சியுடன் கிளாஸ்ரூம் சென்று தலையை கவிழ்த்து படுத்து கொண்டான்.


“அப்பாடா!”,எனக்கு போன உயிர் திரும்பி வந்தது.அதற்குள் நான் சென்று லிசாவின் கசங்கிய ஆடைகளை சரி செய்து அழைத்து வந்தேன்,எந்த அசம்பாவிதமும் நடக்கும் முன்பு உஷாரானது, நான் செய்த புண்ணியமோ என்று நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துவது தவிர எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அதற்குள் பிள்ளைகளை அழைத்து செல்ல பெற்றோர் வரவும்,பத்திரமாய் ஒப்படைத்து விட்டு டைரக்டர் ரூம் சென்று சாரி சொன்னேன்.
அவரும், “It’s o.k .you are such a talented lady ” என்று சமாதானமாக சொன்னார்.
நிம்மதியான மனதுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

--ஆசியா உமர்.

படம் - நன்றி கூகிள்.

36 comments:

வெங்கட் நாகராஜ் said...

சஸ்பென்ஸ் தீர்ந்தது - நல்ல சமயத்தில் உங்களுக்கு பிரியாணி யோசனை வந்தது தான் முக்கியம். நல்ல பகிர்வு சகோ. நன்றி.

LK said...

அட இப்படி ஒரு ஐடியாவா ??

//“It’s o.k .you are such a talented lady //

அவ்.. பொய்

asiya omar said...

வெங்கட் எல்லாரும் ரொம்ப ஆர்வமாக இருந்ததால் உடனே பகுதி - 3 போட்டாச்சு.கருத்திற்கு நன்றி.

asiya omar said...

எல்.கே. கருத்திற்கு நன்றி.டைரக்டர் திட்டியதை சொன்னால் அதற்கு ஒரு பதிவு போடனும்.கடைசியில் சமாதானத்திற்கு சொன்னதை மட்டும் சொன்னேன்,இல்லைன்னு எனக்கும் தெரியுமே!

ஆமினா said...

இப்ப தான் நிம்மதியே வந்தது!!

நல்ல பகிர்வு

நன்றி ஆசியா

ராமலக்ஷ்மி said...

நல்லதாயிற்று. சமயோஜிதமாகக் கையாண்டு இருந்திருக்கிறீர்கள் சிக்கலை. பிரியாணி காப்பாற்றியது.

Kurinji said...

Really u r a talented lady Asiya!

இலா said...

It is a very touhing experience . I know it takes years to share it with all of us. I commend your quick thinking , dedication and kind hearted service akka. I dont know if i have that big heart :)

asiya omar said...

ஆமினா
ராமலக்‌ஷ்மி
குறிஞ்சி
இலா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Riyas said...

நல்லாயிருக்கே..

S.Menaga said...

பகுதி 2,3 படித்தேன்,சிக்கலை சமயோசிதமா செயல்படுத்திருக்கிங்க அக்கா,இப்போதான் நிம்மதியா இருக்கு...

Chitra said...

You are such a talented lady. Super!

எம் அப்துல் காதர் said...

// டைரக்டர் திட்டியதை சொன்னால் அதற்கு ஒரு பதிவு போடனும்//

போடுங்களேன்!! (ஹை ஜாலி!!) அவ்வ்வ்வவ் ..!!

ஆமா என்ன இம்புட்டு அவசரம். இப்ப தான் வந்து கமெண்ட்ஸ் போட்டுட்டு திரும்பி பார்த்தா இன்னொரு பதிவு. சஸ்பென்ஸ ஒரு நாள் ரெண்டு நாள் வச்சிருந்தா தானென்ன?. அம்மாடியோவ்..!!

//It’s o.k .you are such a talented lady// உண்மை தான். சும்மாவா நாங்கல்லாம் உங்களை மேடம்னு கூப்பிடுறோம்!!

asiya omar said...

ரியாஸ் மிக்க நன்றி.

மேனகா மிக்க நன்றி.

சித்ரா மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் நீங்க 2 நாள் லேட்டாக வந்து முதல் இரண்டு பகுதியையும் படித்ததால் மூன்றாவது பதிவு உடன் போட்டமாதிரி இருக்கு.தினம் ஒரு பகுதின்னு போஸ்ட் செய்தேன்.
கருத்திற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.

நானானி said...

//“It’s o.k .you are such a talented lady ”//....of course, with a good presense of mind!!!

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்கள் பதிவுகளில் சிறந்த பதிவு, இந்த தொடர் ..

சௌந்தர் said...

பிரியாணி நல்ல ஐடியா உண்மையில் நீங்க talented lady தான்

vanathy said...

நல்லா இருக்கு தொடர் முடிவு.

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல சஸ்பென்ஸ் ஆசியா......வாழ்த்துக்கள்......

asiya omar said...

நானானி
கே.ஆர்.பி
சௌந்தர்
வானதி
சங்கரி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மங்குனி அமைச்சர் said...

பரவாயில்லை பிரியாணி எல்லாத்துக்கும் யூஸ் ஆகுது

சிநேகிதன் அக்பர் said...

//You are such a talented lady. //

செய்த காரியத்துக்கு பாராட்டு பொருந்தும்.

asiya omar said...

மங்குனி அமைச்சர் கருத்திற்கு மிக்க நன்றி.

அக்பர் நலமா?ஊரில் இருந்து வந்தாச்சா?

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Krishnaveni said...

you have a very good presence of mind and really a talented person

asiya omar said...

thanks krishnaveni for your loving comments.

மனோ சாமிநாதன் said...

பிரியாணிகூட சில சமயம் சிக்கல்களுக்கு தீர்வாகிறது பாருங்கள் ஆசியா!
சமயோசிதமாக நடந்து சிக்கலைத் தீர்த்ததற்கு இனிய பாராட்டுக்கள்!!

Gayathri's Cook Spot said...

The way you handled the situation is great.

சே.குமார் said...

நல்ல பகிர்வு.

asiya omar said...

கிருஷ்ணவேனி,

மனோ அக்கா

காயத்ரி

குமார்

கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ம்ம் அங்க பிரியானி வேல செஞ்சி இருக்கு.

அந்த நேரத்தில் தோனனுமே
இதே போல் பிள்ளை ரூமில் நுழைந்து கொ|ண்டு சாவிக்காக நான் பட்ட பாடு அல்லாஹு அக்பர்.

சுந்தரா said...

பிரச்சனை நேரங்களில் அநேகருக்கு புத்தி வேலைசெய்யாது. நீங்க புத்திசாலித்தனமா யோசிச்சிருக்கீங்க.
பாராட்டுக்கள்!

அன்னு said...

சுப்ஹானல்லாஹ், எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இனியும் அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும், இப்படிப்பட்ட குழந்தைகளின் நெஞ்சிலும் விஷம் தூவியுள்ள சமூகத்தை நினைத்தால்....லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

angelin said...

konjam late aagi vittadhu.
read all the3 posts.
asiya you're really great.ungal presence of mind enakku nicchayam varadhu.(mayakkam pottu vilundhuruppen}

eager to read your next post .

kavisiva said...

அன்னிக்கே படிச்சுட்டேன் ஆசியா. பின்னூட்டம் போட முடியாமல் போய் விட்டேன்.

சமயோசிதமாக யோசித்திருக்கீங்க! நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் நடக்கும் முன் தடுத்து விட்டீர்கள்

asiya omar said...

ஜலீலா
சுந்தரா
அன்னு
ஏஞ்சலின்
கவிசிவா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.