Monday, November 1, 2010

பட்டர் சிக்கன்

இந்த பட்டர் சிக்கன் ரெசிப்பியை டாக்டர் சமீனாவின் சிக்கன் ரெசிப்பி இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள் :
போன்லெஸ் சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50- 75 கிராம்
மிளகாய்த்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
புளிக்காத தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா - கால்ஸ்பூன்
ஏலம்,பட்டை,கிராம்பு - தலா 1
கசூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 3
முந்திரி பருப்பு - 8
ரெட் கலர் - பின்ச்(விரும்பினால்)
உப்பு - தேவைக்கு

சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி கழுவி தண்ணீர் வடிகட்டவும்,அத்துடன் மிள்காய்த்தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம்மசாலா,உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.





தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு வைக்கவும்,பின்பு தோல் உரித்து கொள்ளவும்.


நறுக்கிய வெங்காயம்,முந்திரியை கடாயில் 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் விட்டு வதக்கவும்,நன்கு வதங்கியதும் ஆறவைக்கவும்.




ஆறிய வெங்காயம்,முந்திரியுடன் தோல் உரித்த தக்காளி சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.





ஒரு கடாயில் பட்டர் போட்டு பட்டை,கிராம்பு,ஏலம் தலா ஒன்று போட்டு வெடிக்க விடவும்.



அதில் மசாலாவில் ஊறிய சிக்கனை போட்டு பிரட்டவும்.10 நிமிடத்தில் வெந்து விடும்.

வெந்த சிக்கனில் அரைத்த வெங்காயம்,முந்திரி,தக்காளி பேஸ்ட் சேர்க்கவும்.


அத்துடன்,அரைஸ்பூன் மிளகாய்த்தூள் ,கசூரி மேத்தி,தேவைக்கு தண்ணீர் சேர்த்து தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.மூடி போடவும்,கிரேவி கெட்டியாகி வரும்.விரும்பினால் சிறிது ஃப்ரெஷ் கிரீம்.சேர்க்கலாம்.பிரட்டி சிறிது மூடி இறக்கவும்.


இப்பொழுது பட்டர் சிக்கன் ரெடியாகி விட்டது,வேண்டுமானால் ஒரு பின்ச் கலர் சேர்க்கலாம்,ஹோட்டலில் பரிமாறுவது போல் இருக்கும்.கசூரி மேத்தி சேர்ப்பது அவசியம், ருசி அருமையாக இருக்கும்.பட்டர் சிக்கன் ரெடியான பின்பு அரைஸ்பூன் சீனி சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.



சுவையான பட்டர் சிக்கன் ரெடி.

மல்லி இலை தூவி பரிமாறவும்.இதனை நாண்,சப்பாத்தி,பரோட்டா,ஃப்ரைட் ரைஸ்,நூடுல்ஸ் வகைகளுடன் பரிமாறலாம்.விரும்பினால் சமைக்கும் பொழுது டொமட்டோ கெச்சப் சிறிது சேர்க்கலாம்.நான் ஃப்ரெஷ் கீரீம் சேர்க்கவில்லை,இதே முறையில் செய்து பார்க்கவும்.அசத்தலாக இருக்கும்.சிக்கன் ஊறவைத்து வேக வைப்பதால் சாஃப்ட்டாக இருக்கும்.
--ஆசியா உமர்.

23 comments:

LK said...

good

சௌந்தர் said...

நல்ல டிஷ்....

Chitra said...

என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்.... சூப்பர் ரெசிபி!

asiya omar said...

எல்.கே வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சௌந்தர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கருத்திற்கு மகிழ்ச்சி சித்ரா, வருகைக்கு மிக்க நன்றி.

சசிகுமார் said...

அருமை

சே.குமார் said...

படத்துடன் விளக்கம் அருமை அக்கா.

மங்குனி அமைசர் said...

சே.குமார் said...

படத்துடன் விளக்கம் அருமை அக்கா.////

எப்பயும் மேடம் படத்தொடதான போடுவாங்க ?யாருப்பா இது ஊருக்கு புதுசா ????

asiya omar said...

சசி குமார் மிக்க நன்றி.

சே.குமார் மிக்க நன்றி.

மங்குனி அமைச்சர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

பட்டர் சிக்கன் கமகமக்கின்றது.

Mahi said...

தெளிவான படங்கள் ஆசியாக்கா! ரெசிப்பி நல்லா இருக்கு.

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

மகி மிக்க நன்றி.

Pavithra Srihari said...

mouthwatering dish

asiya omar said...

thanks pavithra for your visit &comment.

Mrs.Menagasathia said...

woww looks awesome....

Krishnaveni said...

our daughter's fav dish, looks yummy

Pushpa said...

Delicious butter chicken curry,Superb

simplehomefood.com

சுந்தரா said...

அருமையான ரெசிபி...குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

பகிர்வுக்கு நன்றி!

asiya omar said...

மேனகா

கிருஷ்ணவேணி

புஷ்பா

சுந்தரா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

எங்கூட்டு ரங்க்ஸுக்கு பிடிச்சது :-))

தளிகா said...

ஆசியாக்கா இன்று உங்க பட்டர் சிக்கன் செய்தேன் ..ரொம்ப சுவையா இருக்கு..வதக்கி அரைப்பதால் நல்ல சுவை ..இதற்கு முன் அரைத்து சேர்க்கும் குறிப்புகளை தான் பார்த்திருக்கிறேன் அது எனக்கு பிடிக்காது..நன்றி ஆசியாக்கா

asiya omar said...

மிக்க மகிழ்ச்சி தளிகா.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

jaffar sathiq said...

How much amount of cream I have to add

Asiya Omar said...

jaffar, unga tastekku serthu kollalam.one or 2 table sp.