Sunday, November 14, 2010

இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் - குர்பானி - சிறுகதை

மற்றும் குர்பானி சிறுகதை

பெருநாள் விருந்துபுனித தியாகப் பெருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாட அனைவருக்கும் எங்களின் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த சிறப்பு சிறுகதையை படித்து மறக்காமல் கருத்து சொல்லுங்க.

குர்பானி

மழை கொட்டி தீர்த்து லேசாக தூரல் விழுந்து கொண்டிருந்தது, வாசலில் கெட்டிகிடந்த மழைநீரில் பேத்திகளுக்கு காகிதக்கப்பல் செய்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தார் சாகுல் ஹமீது. பேத்திகள் லுப்னா, ஷமீரா, ரிஃப்கா மூவரும் அவரை விட்டு சிறிது நேரம் கூட பிரிவதில்லை. அவர் பொழுது எப்பொழுதும் பேத்திகளுடனேயே கழிந்து கொண்டிருந்தது.
வாப்பா,வாப்பா...

“என்னமா லுப்னா ?” என்று பாசத்துடன் ஆறாம் வகுப்பு படிக்கும் தன் செல்ல பேத்தியின் தலையை கோதி விட்டார் சாகுல் ஹமீது.

“ஹஜ்ஜுப்பெருநாள் வருதே நம்ம வீட்டுல கிடா பிடிக்கலையா ?”

“பிடிக்கனும், செவ்வாய்க்கிழமை சந்தையில போய் தான் பிடிக்கனும், ஏமா, இப்ப என்ன அவசரம், ஒரு வாரத்திற்கு முன்னாடியே பிடிச்சிடலாம்” என்றவரிடம் ,

“வாப்பா நாம இந்த வருஷம் குர்பானி கொடுக்க வேண்டாம்,
போனதடவை ஹஜ்ஜுப் பெருநாளப்ப தான் சிக்கன் குனியா வந்துச்சு, ஊரெல்லாம் காய்ச்சல், நடக்க முடியாம எத்தனை பேர் நம்ம ஊரில் கஷ்டப்பட்டாங்க” என்றாள் லுப்னா.

“சரிமா, ஆனால் குர்பானி கொடுப்பது நம்ம கடமைம்மா, இத்தனை வருஷமா கொடுத்திட்டு வர்ரோம்லே” என்றார்.

“வாப்பா எல்லாரும் மதராஸாவிற்கு பணம் கொடுக்கறாங்களாம், அங்க நம்ம சார்பா குர்பானி கொடுத்திடுவாங்களாம், அப்படி செய்வோமா?” என்றாள் விடாப்பிடியாக லுப்னா.

“இல்லமா நம்ம வாசலில் வைத்து தான் கொடுக்கணும், அது தானே முறை, இத்தனை வருஷமாக அப்படி தானேமா நடக்குது,”

“வாப்பா எல்லாரும் வாசலில் வைத்து கொடுத்து இரத்தம் எல்லாம் அப்படியே கிடக்கும்,மண்ணை போட்டு மூடினாலும், இப்ப மழை காலம் மழை பேய்ஞ்சா நாறிப்போகும், கொசு வரும், திரும்ப எல்லாருக்கும் காய்ச்சல் வரும்”.

“ஆமா, என்னமா செய்ய, நாம் கிடா கொடுத்து நம்ம சொந்தபந்தம், அக்கம் பக்கம், வசதியில்லாத ஏழை ஜனங்கள் எல்லாருக்கும் கறி கொடுத்து பழகிட்டோமே? அதை எப்படி நிறுத்தறது?”

“வாப்பா நம்ம ஊரில் slaughtering house இருக்கா?”

“அப்படின்னா என்னமா?”


“அது தான் வாப்பா ஆடு, மாடு வெட்டற இடம்.”

“அட ஆமா இருக்கு, அரசாங்கமே கெட்டி போட்டிருக்கே!
போன வருஷம் கூட சட்டம் கொண்டாந்தாங்களே, கறிக்கடைகாரங்க எல்லாம் அங்க போய் தான் வெட்டி கொண்டு வரணும் என்று, அதற்கு கூட போராட்டம்,கடையடைப்பு நடந்துச்சே!
இப்ப யாரும் அங்க போய் வெட்டுறமாதிரி தெரியலையே, ஒரு கிடாவிற்கு ரூபாய் இருபத்தைந்து கொடுக்கணும் என்று அரசாங்கம் சட்டம் போட்டது அது முடியாதுன்னு எல்லாரும் கடையை அடைச்சாங்க, அதனை எட்டு ரூபாயாக குறைக்க சொல்லி தான் போராட்டம்.
நம்ம ஊர் மக்களுக்கு தான் தினமும் கறி சாப்பிடனுமே, ஊர் எப்படி நாறிப்போனாலும் பரவாயில்லை, நோய் வந்து அவதிப்பட்டாலும் புரியலை, சுத்தம் சுகாதாரம் யார் பார்க்கிறா?”என்றார் சாகுல் ஹமீது.

“வாப்பா மற்றவங்களை பற்றி பேசவேண்டாம்,நாம ஆரம்பிச்சு வைப்போம், அங்கே கொண்டு போய் குர்பானி கொடுத்து, வெட்டி சுத்தமாக கறியை மட்டும் எடுத்து வந்து நம்ம வீட்டில் வைத்து பங்கீடு செய்யலாம்”.

“இதுவும் நல்ல யோசனை தான்”.


“நாம இந்த வருஷம் செய்தால் நம்மளை பார்த்து நாலு பேர் செய்வாங்க, அப்படியே எல்லாரும் இப்படி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா பெருநாள் சமயம் ஊர் சுத்தமாக இருக்கும்,
நம்ம ஜனங்க இருக்கிற இடத்தில் கொடுப்பதால் தானே புதுசு புதுசாக நோய் வருதுன்னு டிவியில் கூட சொன்னாங்க போன வருஷம், நம்ம இஸ்லாமியர்கள் இருக்கிற ஊர்களை தான் இந்த சிக்கன் குனியா அதிகம் தாக்கியதாக டிவியில் காட்டினாங்களே வாப்பா”

“ சரிமா, ஆனால் அது சிரமமாச்சே!”என்றார் சாகுல் ஹமீது.

“வருஷத்தில் ஒரு நாள் சிரமம் பார்த்தால் முடியுமா வாப்பா? நம்ம ஊருக்கும் மக்களுக்கும் எது நல்லதோ அதை கடைபிடிக்கணும், அப்ப தான் எல்லாரும் நல்லாயிருப்பாங்க”.

என்ற பேத்தியின் அறிவான பேச்சை கேட்டு வாயடைத்து போனார் சாகுல்ஹமீது.

--ஆசியா உமர்

46 comments:

எம் அப்துல் காதர் said...

தியாகத் திருநாளுக்கு ஏற்ற கதை - பொதுவில் எல்லோரும் சுகாதாரமா வாழனும் என்ற அக்கறை. good post!!

தங்களுக்கும் தங்களின் குடும்பாத்தார் அனைவர்களுக்கும் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

LK said...

பெருநாள் வாழ்த்துக்கள் சகோ. நல்ல கருத்துள்ள கதை


Dr.Sameena Prathap
said...

Hi,

Eid mubarak to you and your family!!:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

துளசி கோபால் said...

பிஞ்சுகள் தெளிவா இருக்காங்க. அதுவே நல்ல சகுனம்.

விழாக்கால வாழ்த்து(க்)கள்.

Mrs.Menagasathia said...

இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்!! கதை ரொம்ப நல்லாயிருக்குக்கா..

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

நான் போட்ட கமெண்ட் எங்கே??

asiya omar said...

சகோ.அப்துல்காதர் மிக்க நன்றி.
எல்.கே மிக்க நன்றி.

asiya omar said...

thanks sameena and wish you the same.

asiya omar said...

கே.ஆர்.பி செந்தில் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

துளசி கோபால் மிக்க நன்றி.

மேனகா சத்யா மிக்க நன்றி.

புவனேஸ்வரி மிக்க நன்றி.

asiya omar said...

தோழி ஸாதிகா எந்த கமென்ட் ?உங்கள் கமெண்ட் எதுவும் பார்க்கவில்லையே,இங்கும் ஜிமெயிலிலும் செக் செய்து விட்டேனே,தோழி.உங்கள் கருத்தை எப்பொழுதும் எதிர்பார்த்து இருப்பது வழக்கம்.

angelin said...

happy eid to you and your family.

அமைதிச்சாரல் said...

ஈத் முபாரக் ஆசியா..

ஸாதிகா said...

ஆசியா தோழி,பெருநாள் விருந்தில் ஷீர் குருமா மிஸ்சிங்???எங்கள் ஊரிலும் எங்கள் இல்லத்தில் பல வருடங்களாக வீட்டுக்கு முன் வைத்து குருபான் கொடுப்பதில்லை.ஆட்டுதொட்டியில் வைத்தே அறுத்து வெட்டி துண்டங்கள் போட்டு அளவீடு செய்து பாலித்தீன் பைகளில் போட்டு தந்து விடுவார்கள்.சுத்தத்திற்கு சுத்தமும் ஆச்சு.வேலையும் சுலபம்.கதையை அழகாக கொண்டு சென்றுள்ளீர்கள் கருத்து மிக்கது.வாழ்த்துக்கள் தோழி.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரிக்கும் குடுமப்த்தின அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

kavisiva said...

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் ஆசியா! நல்ல சமூக அக்கறையுள்ள கதை ஆசியா! மாற்றங்கள் தனி மனிதனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கதைகள் படிக்காத என்னையும் படிக்க வச்சுட்டீங்க :)

asiya omar said...

ஏஞ்சலின் மிக்க நன்றி.

அமைதிச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.ஹைஷ் நீண்ட நாள் கழித்து வருகை புரிந்தமைக்கு மகிழ்ச்சி.வாழ்த்திற்கு நன்றி.

asiya omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.தோழி படங்களை நல்லாபாருங்க,சேமியா ஜ்வ்வரிசி கீர் பரிமாறியிருக்கேன்.எங்க ஊரை மனதில் வைத்து எழுதிய கதை.

asiya omar said...

கவிசிவா உங்களைப் போன்ற இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள் இந்த கதையை பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியே.
மிக்க நன்றி.

kavisiva said...

அய்யோ ஆசியா நான் அந்த லிஸ்டில் இல்லை :)

மங்குனி அமைச்சர் said...

பெருநாள் வாழ்த்துக்கள்..........உண்மை........ ஊரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்

பதிவுலகில் பாபு said...

அசத்தீட்டீங்க..

உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..

Geetha6 said...

வாழ்த்துக்கள்!!!

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும், ஆசியாக்கா! எங்க ஊரில் பெருநாளன்று அங்கு போய் அறுப்பதற்கு கூட்டம் நிரம்பி வழியும் என்று, நிறைய பேர் வீட்டு கொல்லைகளில் கொஞ்சமா குழி தோண்டி அதற்கு நேரே வைத்து அறுத்து, அதிலேயே கழிவுகளையும் போட்டு மூடிவிடுவோம். ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக இருக்கும். பிறகு வீட்டுக்குள் வைத்து கறி பங்கீடு வேலைகள் நடக்கும். உங்க கதையிலும் நல்ல அட்வைஸ் உள்ளது.

உங்க‌ளுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இந்நன்னாளிலே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

பெருநாள் வாழ்த்துக்கள். நல்ல கருத்துள்ள கதை.

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஆசியா!!

asiya omar said...

மங்குனி அமைச்சர் கருத்திற்கு மிக்க நன்றி.

பதிவுலகில் பாபு கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கீதா 6 கருத்திற்கு மிக்க நன்றி.

அஸ்மா கருத்திற்கு மிக்க நன்றி.

காஞ்சனா கருத்திற்கு மிக்க நன்றி.

மனோ அக்கா கருத்திற்கு மிக்க நன்றி.

அஹமது இர்ஷாத் said...

இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகி said...

ஈத் முபாரக் ஆசியாக்கா! கதை நன்றாக இருக்கு.

yarl said...

இனிய பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி

ஆமினா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

இலா said...

அனைத்து தோழமைக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஆசியா அக்கா! கதை அருமை!
உடல்நலம் தேறி வாங்க நல்லபடியா. மிஸ்ஸிங் யூ !

அன்புடன் மலிக்கா said...

தாங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாக திருநாள் வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஆசியா!

சிந்திக்க வைக்கும் சிறுகதை மிக அருமை.

சுந்தரா said...

அறிவுரை சொல்லும் கதை...அருமை.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!

விருந்து பிரமாதம்.

மாதேவி said...

இனிய ஹஜ்பெருநாள் வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

விருந்து ரொம்ப பலமா இருக்கு , நல்ல சமூக சிந்தனை உள்ள கதை
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

Geetha6 said...

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

Vijisveg Kitchen said...

உங்களூக்கும் உங்க குடும்பத்தாருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.

சர்ஹூன் said...

இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

சிறுகதை அருமை

சே.குமார் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...

சிறுகதை அருமை.

asiya omar said...

வாழ்த்துக்கள் மற்றும் கதைக்கு கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.