Friday, November 19, 2010

சுறாப்புட்டு

தேவையான பொருட்கள் ;
சுறாமீன் துண்டுகள் - அரைகிலோ
வெங்காயம் - அரைகிலோ
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு( விரும்பினால்)
பூண்டு - முழுபூண்டு(15 -20 பூண்டு பல்)
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
தேங்காய் துருவல் - 3 - 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1- அரைடீஸ்பூன்(விரும்பினால்)
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன் ( சுவைக்கு ஏற்ப)
உப்பு - தேவைக்கு

மீனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி இலை, இஞ்சி,பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பின்பு கொதிக்கும் நீரில் மீன்,உப்பு போட்டு 5 நிமிடம் மீனை வேக வைத்து,வெந்து விட்டதா என்று பார்த்து உடன் எடுக்கவும்.


வேகவைத்து எடுத்த மீனை முள் இல்லாமல் உதிர்த்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு வெடிக்கவும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் உதிர்த்த மீனை போட்டு பிரட்டவும்.மீன் வெங்காயத்துடன் சேர்ந்து நல்ல புட்டு மாதிரியானதும்,தேங்காய் துருவல் சேர்த்து சிறிது பிரட்டவும்.உப்பு சரிபார்க்கவும்.காரத்திற்கு விரும்பினால் மிளகுத்தூள் சேர்க்கலாம்.நறுக்கிய மல்லி இலை சிறிது தூவி இறக்கவும்.



சுவையான சுறாப்புட்டு ரெடி.இதனை சாதம்,குழம்பு,ரசம் இவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.அப்படியேயும் சாப்பிடலாம்.காரம் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தபடி மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.சுறாப்புட்டை பலரும் பலவிதமாய் செய்வார்கள்,இது ஒரு வகை.
-ஆசியா உமர்.

21 comments:

Gopi Ramamoorthy said...

அப்படிப் போடு. back with a bang அப்படிங்கற மாதிரி சரியான ஒரு டிஷ். ஏதோ ஒரு படத்தில் ராஜ்கிரண் சும்மா அள்ளி அள்ளி சாப்பிடுவார். மீன் மாதிரியே தெரியாது. முட்டைக்கோஸ் கறி மாதிரிதான் இருக்கும்.

LK said...

welcome back sago

Kousalya said...

தோழி நலமா?

சுறா புட்டு செய்ய பொறுமை வேணும் ஆனா டேஸ்ட் அபாரம் தான்.

ஸாதிகா said...

சுறா மீன் சாப்பிடுவதில்லை.பிரஷண்ட்

ஆமினா said...

நானும் கிட்டதட்ட இதே மாதிரி தான் செய்வேன். எனக்கு அப்படியே ஒரு பாக்ஸ்ல வச்சு அனுப்பிவிடுங்க ஆசியா!

asiya omar said...

ஆமாம் கோபி,ராஜ்கிரண் சாப்பிடுவது அவர் படத்தில் எப்படியும் ஒரு சீன் வந்து விடும்.நன்றி கருத்திற்கு.

asiya omar said...

எல்.கே மிக்க நன்றி.

கௌசல்யா மிக்க நலம்.ஆமாம் வெங்காயம் நன்கு வதங்கவேண்டுமே!

ஸாதிகா தோழி ,சுறாமீன் சாப்பிடுவதில்லையா?ஓ.கே.வருகைக்கு மகிழ்ச்சி.

ஆமினா வாங்க,கருத்திற்கு நன்றி.

சசிகுமார் said...

Nice

மனோ சாமிநாதன் said...

சுறாப்புட்டு அருமை ஆசியா! எனக்கு சுறா பிடிப்பதில்லை. அதனால் வேறு சில மீன்களில் நானும் கிட்டத்தட்ட இதுபோல செய்வதுண்டு!

Kurinji said...

parka nalla erukku, but seivathu kastama erukum pola...

asiya omar said...

சசிகுமார் மிக்க நன்றி.

மனோ அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

குறிஞ்சி வருகைக்கு நன்றி.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா சாப்பிட ஆசையா இருக்கு

kavisiva said...

சுறாமீன் அதிகம் சமைப்பதில்லை. ஃப்ரிட்ஜில் திருக்கை மீன் இருந்துச்சு. செய்து சாப்பிட்டாச்சு :). நல்லா இருந்துச்சு ஆசியா! நான் மீன் புட்டு இதுவரை இப்படி செய்ததில்லை.

நன்றி உங்களுக்கும் உங்கள் தோழி லெக்ஷ்மிக்கும் :)

பூங்குழலி said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் .பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு ...

jagadeesh said...

அக்கா, வாங்க.

நானானி said...

நான் வாழைக்காயில் புட்டு செய்வேன்.
இதே போல்.
ஆனா சுறாவை ப்ஃரைதான் பண்ணத்தெரியும்.

அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.

asiya omar said...

சதீஷ்குமார் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

கவிசிவா மிக்க நன்றி.

பூங்குழலி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

ஜெகதீஸ் வருகைக்கு மகிழ்ச்சி.

நானானி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

டிலீப் said...

சுறாப்புட்டு பிரமாதம் அக்கா ....

சே.குமார் said...

intha vidukuraiyil engal roomil seithom... coconut serkkavillai.

asiya omar said...

டீலீப் மிக்க நன்றி.

குமார் மிக்க மகிழ்ச்சி.எப்படியிருந்ததுன்னு சொல்லலையே.

vanathy said...

அக்கா, நல்லா இருக்கு. நான் தேங்காய் துருவல், மிளகாய்த்தூள் சேர்த்து செய்வேன்.