Sunday, November 21, 2010

மட்டன் போன் சால்னா

தேவையான பொருட்கள்;
மட்டன் போன் - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி -2
பச்சை மிள்காய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
கறிமசாலாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மிளகுத்தூள் - அரைஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 4
அல்லது அரிசி(கூட்டு) மாவு - 1 டேபிள்ஸ்பூன்(விரும்பினால்)
தாளிக்க எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
சிக்கன் சூப் கியூப் - 1 (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
முதலில் எலும்பை நன்கு 5 தண்ணீர் கழுவி வடிகட்டி கொள்ளவும். குக்கரில் எலும்பு முழுவதும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.மேலே கசடு போல் மிதக்கும் அவற்றை கொட்டி விட்டு திரும்ப தண்ணீர் சேர்க்கவும்.கொதி வரும்.

பின்பு குறிப்பிட்ட மசாலா தூள் வகைகளை சேர்க்கவும்.


நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மல்லி இலை,பச்சை மிள்காய்,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,உப்பு,தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.


எல்லாம் சேர்ந்து கொதி வரும். குக்கரை மூடி வெயிட் போடவும். அடுப்பை குறைத்து அரைமணி நேரம் வைத்து இறக்கவும்.

மட்டன் எலும்பு வெந்து இப்படி காணப்படும்.வெந்து சூப் இறங்கியதற்கு அடையாளம் சால்னா பிசு பிசுன்னு இருக்கும்.

தேங்காய் முந்திரி பருப்பு அரைத்து அத்துடன் விரும்பினால் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.அல்லது கோகனட் மில்க் பவுடர் மூன்று டேபிள்ஸ்பூன் உடன் 1 டேபிள்ஸ்பூன் அரிசிமாவு தண்ணீரில் கலந்து வைக்கவும்.

குக்கரில் வெந்த எலும்பு சூப்பில் தேங்காய் கலவை விடவும்.
நன்கு கொதி வரும்.தேங்காய் வாடை மடங்கி சால்னா மணம் வரும்.விரும்பினால் வாணலியில் எண்ணெய் விட்டு சிறிது நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கி கருவேப்பிலை தாளித்து கொட்டலாம்.நான் தாளிக்காமல் அப்படியே பரிமாறுவதுமுண்டு.

சுவையான மட்டன் போன் சால்னா ரெடி.
இதனை,சப்பாத்தி,பரோட்டா,ரொட்டி,ஆப்பம்,இடியாப்பம்,சாதத்துடன் பரிமாறலாம்.குர்பானி கொடுத்து கறி எலும்பு என்று நிறைய இருந்தால் இப்படி சால்னா வைத்து அசத்தலாம். மட்டன் போன் தனியாக கிடைக்கும்.வாங்கியும் சமைக்கலாம்.வெளிநாடுகளில் தனியாக பேக் செய்து வைத்து இருப்பார்கள்.கொழுப்பு இல்லாததாய் பார்த்து வாங்க வேண்டும்.கறியை விட விலையும் குறைவு.சத்தானதும் ஆகும்.

-ஆசியா உமர்.

16 comments:

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கின்றது தோழி.

LK said...

present

asiya omar said...

ஸாதிகா மிக்க நன்றி.

எல்.கே மிக்க நன்றி.


Dr.Sameena Prathap
said...

Hi,

Mutton saalnaa super...yumm yumm...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

Mrs.Menagasathia said...

அசத்தலான சால்னா,அருமை!!

asiya omar said...

Thank you very much Dr.Sameena.


மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

Roshan said...

this is an interesting recipe with mutton bones...please drop in at my blog when you get time...

அஸ்மா said...

மட்டன் போனில் சூப்தான் செய்வோம். சால்னா செய்ததில்லை. நல்ல ஐடியா ஆசியாக்கா! பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

asiya omar said...

thanks for your visit and comments roshan.

Gopi Ramamoorthy said...

இது நல்லா வெந்திருக்குமா இல்லை ராஜ்கிரண் மாதிரி கடித்துச் சப்பிடனுமா?

GEETHA ACHAL said...

ஆஹா...சூபப்ராக இருக்கு...அருமையாக காம்பினேஷன்...இட்லி, தோசையுடன்..

asiya omar said...

கோபி இது கடித்து சாப்பிடுவது சிரமம்.வெந்திருக்கும்,உறிஞ்சி சாப்பிடனும்,முட்டெழும்பு கடினமாக இருக்கும்,பட்டை எலும்பு,நெஞ்செலும்பு,குறுக்கெலும்பு வெந்து விடும்.சூப் நன்றாக இருக்கும்.

asiya omar said...

கீதா ஆச்சல் எங்கே போயிட்டீங்க,வருகைக்கு மகிழ்ச்சி.

சசிகுமார் said...

அருமை

எம் அப்துல் காதர் said...

மட்டன் போனையும் விட்டு வைக்கக் கூடாதா?? சர்தான். காசை எப்படியெல்லாம் மிச்சப் படுத்தச் சொல்றீங்க. ம்ம்ம். நல்லா இருக்கு சகோ.

vanathy said...

அக்கா, சூப்பரோ சூப்பர்.