Monday, November 22, 2010

இறால் பார்பிகியூ / Prawn Barbecue


தேவையான பொருட்கள் ;
இறால் - 1 கிலோ
சிக்கன் டிக்கா பார்பிகியூ மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
லைம் பெரியது -1
கொடைமிளகாய் - 2
வெள்ளை வெங்காயம் - 2
தக்காளி - 2
ஆலிவ் ஆயில் - 1 -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதுஇறாலை வாலுடன் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.நன்கு அலசி தண்ணீர் வடிகெட்டவும்.பின்பு பார்பிகியூ மசாலா, லைம் ஜூஸ்,உப்பு,ஆலிவ் ஆயில் சேர்த்து ஊறவைக்கவும்.வெங்காயம்,கொடைமிளகாய்,தக்காளி ஆகியவற்றை சதுர துண்டாக கட் செய்து கொள்ளவும்.
இறால் நன்கு ஊறிய பின்பு பார்பிகியூ ஸ்டிக்கில் கொடைமிளகாய்,இறால்,வெங்காயம்,இறால்,தக்காளி,இறால்,கொடைமிளகாய்,
இறால்,தக்காளி,வெங்காயம் இப்படி வரிசைப்படி அடுக்கி ரெடி செய்து கொள்ளவும்.ஒரு ஸ்டிக்கில் நான்கு இறால் வரும் படி அடுக்கி ரெடி செய்து வைத்து கொள்ளவும்.

பார்பிகியூ அடுப்பில் நெருப்பு உண்டானவுடன் நாம் ரெடி செய்த இறால் ஸ்டிக்கை இப்படி கம்பி ப்லேட்டில் அடுக்கி சுடவும்.

லேசாக வெந்து சிவக்க ஆரம்பிக்கும் பொழுது திருப்பி வைக்கவும்,மறுபடியும் திருப்பி வைக்கவும்.வெந்து மணம் வரும் பொழுது எடுக்கவும்.
சுவையான ப்ரான் பார்பிகியூ ரெடி.
அப்படியே அடுக்கி வைத்து சுட்ட பின்பு குபூஸ்,ஹமூஸ்,சாஃப்ட் ட்ரிங்ஸ் அல்லது ப்ளாக் டீயுடன் அருமையாக இருக்கும்.

சுட்ட பின்பு யார் பார்த்து கொண்டு இருப்பாங்க,அப்படியே ஒவ்வொரு ஸ்டிக்காக எடுத்து சுடச்சுட சாப்பிடவேண்டியது தான். இது தவிர சிக்கன் ,மட்டன் பார்பிகியூவும் ரெடியாச்சு.நாங்க லேடீஸ் வாக்கிங் போய் வருவதற்குள் அவர்கள் சுட்டு முடித்து விட்டார்கள்.வந்தவுடன் ஆர்வத்துடன் சாப்பிட்டதில் போட்டோ எடுக்க மறந்து விட்டது.
என்னுடைய சிக்கன் பார்பிகியூவை பார்க்க இங்கு (கிளிக்கவும்)செல்லவும்.


-ஆசியா உமர்.

17 comments:

LK said...

enna solla.. present

asiya omar said...

thanks l.k.

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்...இறால் பிரியர்களுக்கு ஏற்ற ரெசிபி...

GEETHA ACHAL said...

நாங்களும் இதே மாதிரி தான் ப்ரானை க்ரில் செய்வோம்...மிகவும் சூப்பராக இருக்கு...

நியபகம் செய்து விட்டிங்க...ஆனாலும் இப்பொழுது செய்யமுடியாது...இனிமேல் ஏப்ரல் மாதம் தான் செய்ய்வேண்டும்...

ஒரே குளிர்...அதுக்குள்ளே இங்கே snowவர ஆரம்பித்துவிட்டது....

Kanchana Radhakrishnan said...

present asiya.

ஸாதிகா said...

ஆஹா..அருமை.படமே கண்ணைக்கட்டுதே.பார்பிகியூ நேஷன் என்றொரு ரெஸ்டாரெண்டில் ஸ்டார்டர் ஆக அன்லிமிடெட் கிரில்ட் ஐட்டம் தருவார்கள்.அங்கு இதே போல் இறால் சாப்பிட்ட ஞாபகம் படத்தைப்பார்த்தும் வருகின்றது.

angelin said...

thanks for sharing the recipe asiya.
ippo garden pakkam pogave mudiyadhu.freezing cold.
may or june im going to do this

Mahi said...

ஆசியாக்கா,சுறா,எறா,மட்டன்னு கலக்கறீங்கோ.மீ தி ப்ரெசென்ட்!:)

Chitra said...

Super!! Super!!! Super!!!

சே.குமார் said...

இறால் பிரியர்களுக்கு ஏற்ற ரெசிபி...

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.

கீதா ஆச்சல் மிக்க நன்றி.

காஞ்சனா மிக்க நன்றி.

ஸாதிகா மிக்க நன்றி.இப்படி பார்பிகியூ அயிட்டம் அன்லிமிடட்டாக சாப்பிட்டாலும் ஒண்ணும் செய்யாது.ஆரோக்கியமாகனதும் கூட.

ஏஞ்சலின் மிக்க நன்றி.நிச்சயம் செய்து பாருங்க.

மகி வருகைக்கு மிக்க நன்றி.

சித்ரா வருகைக்கு மிக்க நன்றி.

குமார் வருகைக்கு மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

இப்படி எல்லாம் படமும் (பாடமும்-செய்முறையும்) போட்டு எங்களை ............!! என்ன சொல்றதுன்னு தெரியல மேடம். நீங்களே ஃபில் அப் பண்ணிங்க!! ஹா..ஹா..

vanathy said...

பார்த்து கொஞ்ச நேரம் ஜொள்ளு விட்டுக்கொள்ள வேண்டியது தான். நல்லா இருக்கு.

Roshan said...

barbecued prawns look superb...superb idea too..

asiya omar said...

அப்துல் காதர்

வானதி

ரோஷன்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

நானானி said...

பார்பிக்யூ ஹோட்டல்களில்தான் சாப்பிட்டிருக்கிறேன். வீட்டில் செய்ததில்லை.
ரொம்ப அருமையாயிருக்கு.

Priya said...

சூப்பர் ப்ரான் பார்பிகியூ!