Tuesday, November 23, 2010

சின்னஞ் சிறிய உலகம்

பகுதி - 1

நாங்கள் அபுதாபிக்கு வந்த புதிது பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல பஸ் ஏறியவுடன் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பது வழக்கம்.
எங்கள் ஏரியா பள்ளிக்கூடங்கள் நிறைந்தது.அவசர அவசரமாய் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளில் விட்டு செல்லும்
அந்த அழகையும்,படபடப்பாய் நுழையும் ஆசிரியைகளையும் ரசித்து விட்டு தான் வீட்டினுள் செல்வேன்.

எத்தனை நாள் தான் வேடிக்கை பார்ப்பது நாமும் இங்குள்ள பள்ளிகளில் வேலை தேடினால் என்ன?என்ற யோசனை வரவே என் கணவரிடம் கேட்டேன்,அவரோ போரடிச்சுதுன்னா கம்ப்யூட்டர் கிளாஸ் போயேன் என்று 500 திர்ஹம் கொடுத்து சேர்த்து விட்டார்,நானும் 24 மணி நேரத்தில்(தினமும் ஒரு மணி நேரம்,24 நாட்கள்) ஏதோ படித்து முடித்து விட்டேன்,டிப்ளமா சர்டிஃபிகேட்டுடன் வெளிவந்தது தான் மிச்சம்.

அந்த இன்ஸ்டியூட்டில் special need children கவனித்து பாடம் சொல்லி கொடுக்கும் பகுதி இருந்தது.என்னுடைய கம்ப்யூட்டர் கோச் நீங்க வேண்டுமானால் ட்ரைனியாக சேருங்கள் ஒரு மாதத்தில் உங்களை நிரந்தர பணியாளராக நியமித்து விடுவார்கள்,என்று சொன்னதால் நானும் சந்தோஷப்பட்டு சேர்ந்தேன்,நமக்கு தான் நேரம் போகலையே !

மனநலம் உடல் நலம் குறைந்த அந்த குழந்தைகளோடு தினமும் காலை ஒன்பது மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை நேரத்தை செலவழித்து வந்ததில் ரொம்ப பிஸியாகிப் போனேன்.என் குழந்தைகள்,கணவரை விட அந்தக்குழந்தைகளின் கவலையே எனக்கு பெரிதாகிப்போனது.

எனக்கு ஆறு குழந்தைகள் கொடுக்கப்பட்டது,எகிப்து,சூடான்,எத்தியோப்பியா,இந்தியா,இலங்கை,பாகிஸ்தான் என்று மல்டிநேஷனல் ஒவ்வொரு குழந்தையுடனும் ஒவ்வொரு அனுபவம்.அதனை எழுதினால் இந்த இடுகை பற்றாது.வகுப்பறையில் கேமரா இருக்கும்,இன்ஸ்ட்டியூட்டின் டைரக்டர் அப்ப அப்ப குழந்தைகளையும் என்னையும் கவனித்து கொண்டு இருப்பார்.ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு என்ன கற்று கொடுக்கப்பட்டது,என்றும்,அவர்களுடைய நடவடிக்கை பற்றியும் நோட்ஸ் பெற்றோருக்கும்,இன்ஸ்ட்டியூட்டிற்கும் சப்மிட் செய்ய வேண்டும்.

ஒரு மாதம் கடந்தது,குழந்தைகளின் பெற்றோருக்கு என்னை மிகவும் பிடித்து போனது,வருகிறவர்கள் எல்லாம் மிஸ் நீங்களாவது மாறாமல் இருக்க வேண்டும் என்று விடாமல் கேட்டு கொண்டார்கள்,அதன் அர்த்தம் அப்ப எனக்கு புரியலை.

மூன்று மாதம் கழிந்தது,அப்பொழுது தான் சம்பளம் இல்லாமல் ட்ரைனியாக எவ்வளவு நாள் இருப்பது,நிரந்தர வேலை கேட்போம் என்று டைரக்டரை சந்திக்க சென்றேன்,.அதுவரை என்னை அன்பாக நடத்தியவர்கள் நான் சம்பளம்,வேலை என்று கேட்டவுடன் கடுமையாக மேடம் உங்களுடைய டிகிரியோ வேளாண்மை,நாங்க நிரந்திர வேலை தர முடியாது,வேலையை விட்டு நின்று கொள்ளலாம் என்று நாக்கூசாமல் சொன்னவுடன் மனம் கனத்து அப்படியே வீட்டிற்கு வந்து விட்டேன்.அவர்கள் தான் என்னை அழைத்தது,நானா வேலை கேட்டேன்.

என்னுடைய ப்ரெண்ட்ஸ் ஏதாவது சம்பளம் உண்டா என்று கேட்டுப்பார் என்று சொன்னதால் நானும் போய் கேட்டேன்,நீங்க ட்ரெய்னி தான் நோ சாலரின்னு அங்குள்ள அக்கவுண்டண்ட் சொல்லிவிட்டார்,சரி என்று 3 மாதம் வேலை செய்ததற்கு ஒரு ட்ரெய்னி சர்டிபிகேட் கொடுங்க என்று டைரக்டரிடம் சென்று கேட்டேன்,அப்படி கொடுக்கும் வழக்கம் இல்லை,நாங்க ட்ரெய்னிங் ஸ்கூல் நடத்தலைன்னு கொஞ்சம் கடுமையாக பதில் வந்தது.ஒ.கே.சார் பை ..ன்னு சொல்லிட்டு வந்து விட்டேன்.


இது என் அனுபவம்,ஆழம் தெரியாமல் எங்கேயும் காலை விடக்கூடாது.நானும் அந்த குழந்தைகளுக்கு சேவை செய்ததாக மனதை தேற்றிகொண்டேன்.,இதனை ஒரு சமூக நல அமைப்பிற்கு செய்திருந்தால் மனதிற்கு நல்ல சந்தோஷமாவது கிடைத்து இருக்கும்..ஒரு குழந்தைக்கு மாதம் குறைந்தது 1000 திர்ஹம் வாங்கும் இடத்தில் எதற்கு சும்மா வேலை செய்யவேண்டும். ?இது மாதிரி அங்கு படிக்க வருபவர்களை இப்படி வேலை வாங்கி அனுப்புவது அங்கு சாதாரணம் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.

அனுபவங்கள் தொடரும்..

--ஆசியா உமர்.

படம் - நன்றி கூகிள்.

பகுதி - 2 படிக்க இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.
பகுதி - 3 படிக்க இங்கு (கிளிக்கவும்) செல்லவும்.

34 comments:

LK said...

நம்மால் சில காலம் அந்த குழந்தைகள் மகிழ்வாக இருந்தனர் என்று மனதை தேத்திக் கொள்ள வேண்டும். ஏமாற்றுபவர்கள் எங்கும் உள்ளனர்

Mrs.Menagasathia said...

சிறிது காலம் உங்களால் அந்த குழந்தைகளும்,பெற்றோர்களும் நிச்சயம் மகிழ்வாய் இருந்திருப்பார்கள்..அனுபவங்களை தொடருங்கள்...

Kurinji said...

Nalla sevai seithullergal!

பிரவின்குமார் said...

மிகவும் சிந்திக்க வைத்த அனுபவம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகுதான் முடிவு எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. தங்களது அனுபவ பகிர்வு.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்ல விஷயம் செய்துள்ளீர்கள். அனுபவங்களை தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களால் அந்த குழந்தைகளுக்கு மூன்று மாத காலம் நல்ல ஆசிரியர் கிடைத்தது நினைத்து மகிழ்ச்சி. இது போல ஏமாற்றுபவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை காணும்போது வருத்தம்.

asiya omar said...

எல்.கே கருத்திற்கு மிக்க நன்றி.

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

குறிஞ்சி கருத்திற்கு மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

நல்ல அனுபவம் + உஷார்ப் பதிவு.

இங்கும் இது மாதிரி ரிலீஸில் வேலைக்கு சேர்பவர்களை சம்பளம் கொடுக்காமலே வேலை வாங்கும் அவலம் + ரிலீஸை மாற்றிக் கொண்டு சம்பளத்துக்கு நெருங்கும்போது வேலை இல்லை என்று சொல்லும் தந்திரம்.

பரவாயில்லை நீங்க ஏதோ "சதக்கா" செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்க நன்மை தராசில் சேரட்டும்.

asiya omar said...

பிரவீண்குமார் உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

புவனா கருத்திற்கு மிக்க நன்றி.

வெங்கட் உங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சே.. என்ன மனுசங்கள்.. அந்த குழந்தைகள் மனதிலும் அவர்கள் பெற்றோர் மனதிலும் இடம் பிடித்திருக்கீங்க.. ரொம்ப சந்தோசமா இருக்கு ஆசியாக்கா..

நல்ல பகிர்வு..

angelin said...

i had the same experiance.adhanaal padippai mootai katittu.craft course.beading sewing cardmaking endru seyya aarambithen.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம்.சகோ ஆனாலும் நீங்க வேல பாத்ததுக்கு சம்பளம் கேட்டது ரெம்ப தப்பு.(just kidding)கல்லமில்லாத அந்த குழந்தைங்க மாதிரி மேனேஜ்மெண்ட நெனச்சுடீங்க..விடுங்க இதுக்கான தகுதியான வெகுமதி இறைவனிடம் தங்களுக்கு உண்டு...

அன்புடன்
ரஜின்
http://sunmarkam.blogspot.com

Krishnaveni said...

great work, nice write up.....

Mahi said...

ஆசியாக்கா,அந்த போட்டோல இருப்பது நீங்களா? :)

ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்.மூன்று மாதகாலம் குழந்தைகளுக்கு நல்ல ஆசானாய் இருந்திருக்கீங்க..அதை மட்டும் நினைவில் வைத்துக்கோங்க.மத்ததை மறந்துடுங்க.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க நன்றி.

ஸ்டார்ஜன் வாங்க,கருத்திற்கு நன்றி.

ஏஞ்சலின் கருத்திற்கு நன்றி.

ரசின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கிருஷ்ணவேனி கருத்திற்கு மகிழ்ச்சி.

மகி,நன்றி கூகிள் என்ற வாசகத்தை பார்க்கலையோ!வருகைக்கு மகிழ்ச்சி.

GEETHA ACHAL said...

சரியாக சொன்னீங்க...

குழந்தைகளும் அவங்க பெற்றோரும் சிறிது காலம் மகிழ்வாக இருந்தாங்க என்று தான் நினைத்து கொள்ள வேண்டும்...

ஆனா இல்லாதவங்களுக்கு செய்தால் பராவயில்லை..காசு புடுங்குற ஸ்கூலில் செய்தது தான் மிகுந்த வேதனை அளிக்கும்...

அதுவும் நாம் சம்பளம் கேட்காத வரைக்கும் நல்ல நடத்திட்டு அப்புறம் அவங்க புத்தியினை காட்டுவது தப்பு...

மனோ சாமிநாதன் said...

ஆசியா! முதலில் கை கொடுங்கள்! இந்த மாதிரி குழந்தைகளைக் கவனிக்க மிகுந்த பொறுமையும் கருணையும் வேன்டும்!

நீங்கள் எழுதியது மாதிரி, ஆழம் தெரியாமல் எதிலுமே நுழைந்து விடக்கூடாது.
நன்கு விசாரித்த பின்னரே இந்த மாதிரி பொது நல சேவைகளில் இறங்க வேண்டும். பொது நல சேவை என்று சொல்லிக் கொன்டு இந்த மாதிரி ஏமாற்று வேலைகளை நிறைய நிறுவங்கள் இந்தியாவில் செய்கின்றன! இந்த மாதிரி விஷயத்தில் தீர விசாரிப்பதுகூட ஒரு முறை அல்ல, பல முறை விசாரித்தே இற‌ங்க வேண்டும்!

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கீழே உள்ள லிங்கில் பார்க்க

http://kuttisuvarkkam.blogspot.com/2010/11/blog-post_23.html

சசிகுமார் said...

arumai

Chitra said...

இது மாதிரி அங்கு படிக்க வருபவர்களை இப்படி வேலை வாங்கி அனுப்புவது அங்கு சாதாரணம் என்று பின்பு தெரிந்து கொண்டேன்.


..... என்னங்க.... இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க.... எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!

ஸாதிகா said...

ஒரு நல்ல காரியம் செய்ததற்கு சந்தர்ப்பத்தைத்தந்த இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்வோம்.எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்ற்ர்ர்கள்.

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மிக்க நன்றி.

மனோ அக்கா பாராட்டிற்கு மிக்க நன்றி.

ஆமினா வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி.

சசிகுமார் மிக்க நன்றி.

சித்ரா கருத்திற்கு மிக்க நன்றி.

ஆமாம்,ஸாதிகா அப்படி தான் நானும் நினைத்து கொண்டேன்,இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்து செய்ததே திருப்திதான்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

என்ன அநியாயம். ஆசியா.. இப்படி எல்லாம் வேற உழைப்பை சுரண்டுறாங்களா.. வித்யா தானம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்..

ஒ.நூருல் அமீன் said...

உங்கள் சேவையை நினைத்ததும் சந்தோசமாக இருந்தது. ஏமாந்ததை பிறருக்கு எச்சரிக்கையாக்கி இருக்கின்றீர்கள் இதுவும் ஒரு சேவை தான்.

asiya omar said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தேனக்கா.

vanathy said...

உடல் நலம் குன்றிய குழந்தைகளுக்கு தானே (இலவச ) சேவை செய்தீங்க. பணத்தை விட மனத் திருப்தி என்று ஒன்றும் உண்டல்லவா.
நல்ல பதிவு, அக்கா.

asiya omar said...

ஓ.நூருல் அமீன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வானதி கருத்திற்கு மிக்க நன்றி.

அன்னு said...

//நம்மால் சில காலம் அந்த குழந்தைகள் மகிழ்வாக இருந்தனர் என்று மனதை தேத்திக் கொள்ள வேண்டும்.//

அதே!!. எல்லா இடங்களிலும் நாம் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்காது. இந்த குழந்தைகளின் மகிழ்ச்சியும், அதற்காக இறைவன் தங்களின் எத்தனையோ பாவங்களை போக்கியிருப்பான், அதையே நற்கூலியாக கருதவும். மற்றபடி, இரண்டாம் பாகமும் படித்த பின் தான் தெரிகிறது, நீங்க எவ்வளவு ஒன்றிப் போயிருந்திருக்கீங்கன்னு :(

asiya omar said...

நன்றி அன்னு கருத்திற்கு.வருகைக்கு மகிழ்ச்சி.

kavisiva said...

கை கொடுங்கள் ஆசியா! இவர்களைப் போன்ற கடவுளின் குழந்தைகளோடு பழக கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஏமாற்றுவர்களால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது. இறை என்ற ஒன்று இருக்கிறது. அவன் கவனித்துக் கொள்வான்.

அன்புடன் மலிக்கா said...

அனுபவம் பிறக்கு பாடம்.

நல்லதொரு பகிர்வுக்கா.

asiya omar said...

கவி சிவா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

வாங்க மலிக்கா,கருத்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

Jaleela Kamal said...

முதலே படித்து விட்டேன், ஆனால் பதில் தான் போட முடியவிலை, அப்ப

இங்கு என் தங்கையும் சொல்லி இருக்கிறார், இதுபோல் டிரெயினியா வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள்ம், கிடையாது என்று,
நானும் பிள்லைகளை பஸ் சில் ஏற்ற போகும் போது வேடிக்கை பார்த்து வருவேன்,

ரொம்ப நல்ல இருக்கும்.