Sunday, November 28, 2010

அல் ஐன் - பகுதி-1, விருந்தும்,விருதுகளும்அல்-ஐன் பற்றிய இந்த பதிவில் கிரீன் முபஸ்ஸரா,ஜெபல் ஹஃபீத் என்ற சுற்றுலா இடங்கள் பற்றி பார்ப்போம்.ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் ஐன் சிட்டி ஒரு அழகான ஒயாசிஸ்(பாலைவனச்சோலை),துபாயில் இருந்து அல்- ஐன் சுமார் 2 மணி நேர பயணம்.(100கி.மீ வேகத்தில் வந்தால்)முதல்படம் ஜெபல் ஹஃபீத் என்ற மலைப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கிரீன் முபஸ்ஸரா.இந்த சிறிய சுடு நீர் ஊற்று(ஹாட் ஸ்ப்ரிங் ஸ்பாட்)முக்கியமான இடம்.
இது ஜெபல் ஹஃபீத் ஏறியவுடன் அங்கு உச்சியில் உள்ள ஜெபல் டாப் ரெஸ்டாரண்ட்(சின்ன கட்டிடம்)அந்த மலை இரவின் வெளிச்சத்தில் அழகோ அழகு.
இது ஜெபல் ஹஃபீத்தில் இருந்து எடுக்கப்பட்ட அல்-ஐன் ஊரின் ஒரு பகுதி.இந்த மலைப்பாதை உலக டாப் 10 (mountain drive) மலைப் பயண பாதைகளுள் ஒன்றாகும்.

இதுவும் ஜெபலில் இருந்து எடுக்கப்பட்ட அல் -ஐன் ஊர் தான்.

சுடு நீர் ஊற்றில் இருந்து வரும் ஓடையில் குழந்தைகள் விளையாடும் அழகை பாருங்களேன். கிரீன் முபஸ்ஸராவில் இருக்கும் இந்த கட்டிடம் ஹாட் வாட்டர் ஸ்விம்மிங் பூல்.குளிக்க விருப்பமுள்ளவர்கள் சென்று குளிக்கலாம்.கட்டணம் 5 திர்ஹம்.குளிர் காலத்தில் அங்கு குளிப்பதற்கு இதமாக இருக்கும்.

கிரீன் முபஸ்ஸராவில் உள்ள அமைதியான,அழகான ரெஸ்டாரண்ட்.ஆனால் நாங்கள் அங்கு போகும் பொழுது எல்லாம் கையிலேயே சமைத்து எடுத்து சென்று விடுவது வழக்கம்.இந்த வியூவையும் பாருங்க,மலை பாறையில் புல் வளர்த்து எவ்வளவு அழகாக இருக்கு.


புல்மலையில் ஏறினால் இந்த அழகான ஃபவுன்டெய்ன்.

இருட்ட ஆரம்பித்தவுடன் விளக்கு வெளிச்சத்தில் கிரீன் முபஸ்ஸரா.


குழந்தைகள் உல்லாசமாக விளையாடும் பகுதி.

ஆங்காங்கு இப்படி பார்ப்பிகியூ அடுப்புகள் நெருப்பு கங்குடன் இருக்கும்,நாம் அடுப்பு எடுத்து சென்றால் கங்கு உண்டாக்க நெருப்பு இங்கிருந்து எடுத்து கொள்ளலாம்.அங்கிருக்கும் அடுப்பில் கூட பார்பிகியூ செய்து அசத்தலாம்.

சுற்றி பார்க்க குதிரை வண்டி. ஒய்வெடுக்க அங்கங்கு கூடாரங்களும் உண்டு. அப்புறம் toboggon run இருக்கு.5 திர்ஹம் கொடுத்தால் திரில்லாக குதூகலிக்கலாம்.அதன் படம் எடுக்க தவறி விட்டேன்.

குழந்தைகளை விளையாடவிட்டு விட்டு நாம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.நாங்க எடுத்த ஒரு சில படங்கள் தான் இவை. நல்ல ரசித்திருப்பீர்கள், அடுத்து அல்-ஐனின் மற்றொரு இடத்தில் சந்திக்கலாம்.


விருந்து

இது தீபாவளிக்கு என் கணவரின் நண்பர் பாலசுப்ரமணியம்,லக்‌ஷ்மி தம்பதியினர் தந்த விருந்து.என் கணவரும் அவருடைய நண்பரும் கல்லூரியில் ஒன்றாக பயின்று,பின்பு தமிழ்நாடுமின்சாரவாரியத்தில் வேலை பார்த்து,இப்ப இங்கும் ஒன்றாக வேலை பார்ப்பதால் நட்பு அன்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒயிட் ரைஸ்,ரசம்,மோர்,வடை பாயாசம் எல்லாம் இருந்தது,பேச்சு சுவாரசியத்தில் படங்கள் எடுக்காமல் விட்டு விட்டேன்.


விருது

சரி இப்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியான தருணம்.எனக்கு ரசிகன் ப்ளாக்ஸ்பாட் சகோ.சௌந்தர் இந்த எனது மண் எனது கலாச்சாரம் விருதை தந்து அசத்தி இருக்கிறார்.அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதைப்பார்த்தவுடன் எங்கள் வயல்,எங்கள் வீட்டு உழவன்,உழவி நினைவும்,என் கல்லூரி நாட்களில் எனக்கு அங்கு தந்த 5 சென்ட்டில் நெற்பயிர் விளைவித்து,அறுவடை செய்ததும் மலரும் நினைவுகளாய் மனதை மகிழ்விக்கிறது.

இது மகிகிச்சன் ப்ளாக்ஸ்பாட் தோழி மகி தந்த லவ்லி ப்ளாக் விருது.மிக்க நன்றி மகி.

இந்த இரண்டு விருதையும் நான் ஸாதிகா,மனோஅக்கா,ஜலீலா,கவிசிவா,இலா,கௌசல்யா,சிநேகிதி,அஸ்மா,தளிகா,ஆமினா,குறிஞ்சி,கிருஷ்ணவேணி,காஞ்சனா, ஆகியவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எல்லாருக்கும் கொடுக்கணும் என்று ஆசை தான் மற்ற தோழிகளும் பகிரவேண்டாமா?


--ஆசியா உமர்.

56 comments:

ரஹீம் கஸாலி said...

கலக்கலான படங்கள். விருதுக்கு வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான படங்கள். தங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Kousalya said...

தோழி படங்கள் ஒவ்வொன்றும் செம அசத்தலா இருக்கு... விருந்தும் சூப்பர்...

அட எனக்கு விருது வேற கொடுத்து இருக்கீங்க...! ரொம்ப சந்தோசமா கொடுத்த விருதை பெற்று கொண்டேன்...!

நன்றி தோழி.

சௌந்தர் said...

என்னுடைய விருதை ரசித்து பெற்று கொண்டதற்கு நன்றி அக்கா..மற்றவர்களுக்கும் பகிர்ந்து விருதை பெருமை படுத்திவிட்டிர்கள்

Jaleela Kamal said...

ஆசியா இங்கு இருந்ததில் இரு முறை தான் அல் அயின் போயிருக்கேன். நான் பார்த்த அந்த இரண்டு இடஙக்ளுமே அழகோ அழகு,
இன்னும் நீஙக்ள் போட்டுள்ள் இடம் எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு இனி போனால் பார்க்கனும்.

Jaleela Kamal said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்,.
இப்போதைக்கு நான் என் பிளாக்www.samaiyalattakaasam.blogspot.com இதில் தொடர்கிறேன். முடிந்த போது வரவும்.

Jaleela Kamal said...

al ain படத்த பார்த்து கொண்டே இருகக்னும் போல் இருக்கு, நானும் போன் இடங்கள் சில பகுதி போட்டோ எடுத்து வைத்துள்ளேன்.

Jaleela Kamal said...

வெண்ணீர் ஊற்று இருக்குன்னு கேள்வி பட்டு இருக்கேன், இப்பதான் பார்க்கிரேன், ரொம்ப அருமை,
நாங்கள் சென்றது, ஆண்கள் , பெண்களுக்கு என்று தனியாக கட்டி இருந்த swimming pool சென்றோம்

asiya omar said...

மிக்க நன்றி ரஹீம் கஸாலி.

புவனா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கௌசல்யா பாராட்டிற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா உங்கள் வருகைக்கும் அடுக்கடுக்கான கருத்திற்கும் மிக்க நன்றி.உங்களுடைய எல்லா இடுகையும் பார்த்து கருத்தும்,ஓட்டும் எப்பவும் போட்டு விடுவதுண்டு.மகிழ்ச்சி.

Kurinji said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ! படங்கள் மிகவும் அருமை !

ராமலக்ஷ்மி said...

விருதுக்கு வாழ்த்துக்கள்.

படங்களுடனான பகிர்வு மிக அருமை.

Kurinji said...

விருதுக்கு மிக்க நன்றி ஆசியா!

LK said...

படங்கள் அருமை. விருது கிடைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

விருதுக்கு நன்றி தோழி.அல் ஐனில் கிரீன் முபஸ்ஸரா சென்றேன்.உங்களின் அருமையான இந்த படங்களைப்பார்க்கும் பொழுது நிறைய மிஸ் பண்ணிவிட்டதாக படுகின்றது.சுடுநீர் ஓடையில் கால்களை நனைத்தபடி இதமாக இருந்த அனுபவத்தினை இன்னும் மறக்க இயலவில்லை.உங்கள் விருந்தோம்பலையும்தான்.அழகான வியூவில் தெளிவான படங்கள் எடுத்த உங்கள் கைகளுக்கு அண்ணனை வைரக்காப்பு வாங்கிப்போடச்சொல்லுங்கள்.

maha said...

i like ur blog.......

Chitra said...

Very nice photos. Super!

Congratulations for the lovely awards!

Riyas said...

AL AIN சூப்பரா இருக்கே போக வேண்டும்,,

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கு. விருது பெற்ற உங்களுக்கும், நீங்கள் அளித்த விருதுகளைப் பெற்றுக் கொள்ளும் அனைந்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ராமலஷ்மி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எல்.கே வாழ்த்திற்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

அல் ஐன் பற்றிய புகைப்படங்கள், தகவல்கள் அருமை! நானே இன்னும் சரியாகப் பார்த்ததில்லை. என்னைப் போன்ற ஆட்களுக்கெல்லாம் இந்த தகவல்கள் மிகவும் உதவும். நன்றி ஆசியா!

இர‌ண்டு விருதுக‌ளும் மிக‌ அழ‌கு. அவற்றை அடைந்த‌‌த‌ற்கு என் அன்பு வாழ்த்துக்க‌ள்!
அவற்றை என‌க்கும் பகிர்ந்த‌த‌ற்கு என் ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி ஆசியா!

asiya omar said...

தோழி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.கரெக்டாக பாயிண்டை பிடிச்சிட்டீங்களே!இந்த போட்டோஸ் நான்,அவர்,என் அண்ணன் மகன் ஆகியவர்கள் எடுத்ததில் செலக்ட் செய்து போட்டது.நான் போட்டோக்களை மொபைலில் எடுத்து தான் போடுகிறேன்.விஷேச நாட்களில் ரொம்ப கூட்டமாக இருக்கும்.சாதாரண வீக்கெண்ட்டில் ரிலாக்ஸ்ட்டாக பார்க்கலாம்.

asiya omar said...

மஹா உங்களின் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

உங்க சமையல் போஸ்டிங் நாக்குக்கு விருந்து. உங்க இந்தப் பதிவு கண்களுக்கு விருந்து.

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

சமையல் செய்வது போலவே போட்டோவும் அருமையாகப் பிடிக்கிறீர்கள். எனக்கு ரெண்டுமே வருவதில்லை.

Nithu Bala said...

arumayana padankal asiya..

asiya omar said...

சித்ரா மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ரியாஸ் வந்து பாருங்க.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

கோபி வருகைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.உங்கள் எழுத்துக்கள்,கவிதைகள்,கதைகள் போல் எனக்கு எழுத வருவதில்லையே.

asiya omar said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மனோ அக்கா உங்கள் கருத்து மிக்க மகிழ்வை தந்தது.சில இடங்களை பார்க்க பார்க்க தான் அதன் அழகு புலப்படும்.ஒரு முறை ரிலாக்ஸ்டாக வந்திட்டு போங்க.

நிதுபாலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

S.Menaga said...

படங்கள் செம அழகா இருக்குக்கா..விருதுக்கு வாழ்த்துக்கள்!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அனைத்தும் பார்க்கவேண்டிய அருமையான இடங்கள். போட்டோஸ் ரொம்ப அருமையா எடுத்திருக்கீங்க..வாழ்த்துகள் ஆசியாக்கா. பகிர்வுக்கு நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

படங்களும் அதை விவரித்த விதமும் செல்லத்தூண்டுகிறது. விருதுக்கு வாழ்த்துகள். :)

angelin said...

photos are very nice.congrats for the award.double congrats for sharing it with others.

எம் அப்துல் காதர் said...

சென்று வந்த இடங்களை எல்லாம் நீங்கள் எழுத எழுத இன்னொரு தடவை பார்க்கணும் போலத்தான் இருக்கு!! விருதுகளுக்கு வாழ்த்துகள்.

Kanchana Radhakrishnan said...

விருதுக்கு மிக்க நன்றி ஆசியா!

Krishnaveni said...

beautiful pictures, congrats for the awards and thanks a lot for sharing with me

ஆமினா said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியா!

எனக்கும் பகிர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி!!

GEETHA ACHAL said...

படங்கள் அனைத்தும் அருமை...நேரில் பார்த்தது போல இருக்கு...அழகாக படம் எடுத்து காட்டி இருக்கின்றிங்க...நன்றி...

விருதுக்கு வாழ்த்துகள்...

சசிகுமார் said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.

asiya omar said...

மேனகா
ஸ்டார்ஜன்
அக்பர்
ஏஞ்சலின்
அப்துல் காதர்
காஞ்சனா
கிருஷ்ணவேனி
ஆமினா
கீதா ஆச்சல்
சசிகுமார்

அனைவரின் கருத்திற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மிக்க மகிழ்ச்சி.

சே.குமார் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்...
விருந்து பார்க்கும் போதே பசியை அழைக்கிறது.
அல் ஐன் போட்டோஸ் அருமை.... அடிக்கடி வந்த இடங்கள்... ரொம்ப அழகு.

polurdhayanithi said...

parattugal
polurdhayanithi

u$$$ said...

very nice pictures of al-ain. u have well sorted out and posted wonderful snaps which all describes the place.

congrats for the blog awards. cheers ussss

asiya omar said...

குமார் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.

தயாநிதி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

yah usman,thanks,hope that you noted your 4 snaps,that day we people enjoyed lot know.

maha said...

already unga blog ku vanthierukean but comment pannathu illa ennoda friends ellorum muslims thaan. koothanallur la (thiruvarur dist.) erukanga thanks for ur reply

அஸ்மா said...

இப்போதுதான் உங்களின் விருதைப் பார்க்க முடிந்தது, ஆசியாக்கா! முதலில் ஸாரி. உங்களின் பகிர்வில் எனக்கொரு பங்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி.

அல் ஐன் படங்கள் செல்ஃபோனிலேயே இவ்வளவு அருமையாக எடுத்திருக்கிறீர்கள் ஆசியாக்கா! பாராட்டுக்கள். உங்களின் 'சின்னஞ் சிறிய உலகம்' 3 பகுதிகளும் படித்துவிட்டேன். நல்ல அனுபவமும் திறமையும், மாஷா அல்லாஹ்!

Mahi said...

விருதுக்கு வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

படங்கள் எல்லாம் அருமையா இருக்கு..நிறைய எழுதிட்டீங்க ஒரு வாரத்துக்குள்ள..மெதுவா வந்து படித்துப் பார்க்கிறேன்.

kavisiva said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ஆசியா!
விருதுக்கு மிகவும் நன்றி ! விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும்

asiya omar said...

மஹா
அஸ்மா
மகி
கவிசிவா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

vanathy said...

படங்கள், விருந்து எல்லாமே சூப்பர்.
விருதுக்கு வாழ்த்துக்கள், அக்கா.

தளிகா said...

விருதினை பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி ஆசியாக்கா..இதனை எப்படி வாங்குவது என்று தான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்

asiya omar said...

வானதி மிக்க நன்றி.மகிழ்ச்சி.

தளிகா, விருதினை இங்கிருந்து காப்பி செய்து உன்னுடைய டெஸ்க்டாப்பில் பேஸ்ட் செய்து,பின்பு அட்டாச் செய்து கொள்ளவும்.வருகைக்கு மகிழ்ச்சி.

பதிவுலகில் பாபு said...

படங்கள் மிகவும் அருமை..

ஹரிஸ் said...

படங்கள் அருமை...

Jaleela Kamal said...

ஓ எனக்கும் விருது கொடுத்து இருக்கீங்களா?
மிகக் மகிழ்சி தோழி

Meerapriyan said...

al-ain padangal, thagavalkal arumai.naangal paarkkaatha apurvamaana idangalai kan munne kondu vandadarku nandri.-meerapriyan.blogspot.com