Monday, November 29, 2010

ராகி சேமியா முளைகட்டிய பயறு - Sprouts Ragi Semiya


Ingredients :

Ragi semiya - 100 gm

Green gram sprouts - half cup

Onion - 100 gm

Green chilli -1

Chopped ginger - 1 tsp

Oil - 1 tbsp

Mustard seeds - half tsp

Black gram dhal - 1 tsp

Curry leaves - few

Chopped Coriander leaves -2 tsp

Lime juice - 1 tsp

Salt - to taste


Method :

1.Slice the onoin and finely chop the green chilli ,ginger and coriander leaves.
2.In a bowl add ragi semiya , hot boiling water and salt,let it stand for 2 minutes and then drain it.
3.Heat oil in a pan,add mustard seeds and black gram dhal when they splutter add curry leaves then chopped ginger,chilli and sliced onions then fry for 2 minutes.

4.Then add the green gram sprouts and mix well, add drained ragi semiya and again mix it, add salt and lime juice to taste.

5.Serve garnished with coriander leaves.



-Asiya Omar


தேவையான பொருட்கள்;

ராகி சேமியா – 100 கிராம்
பச்சை பயறு முளைகட்டியது – அரை கப்
வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிள்காய் – 1
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
கடுகு – அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
மல்லி இலை நறுக்கியது – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு

செய்முறை :

1.வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,மல்லி இலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
2.ஒரு பாத்திரத்தில் ராகி சேமியா எடுத்து அத்துடன் கொதிக்கும் நீரை சேர்த்து உப்பு போட்டு 2 நிமிடம் வைத்து வடிகட்டி வைக்கவும்.
3.ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்கவும் கருவேப்பிலை போட்டு நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம், சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4.அத்துடன் முளைகட்டிய பயறு,சேர்த்து வதக்கி,வடிகட்டிய ராகி சேமியா சேர்த்து கிளறவும்.அத்துடன் சுவைக்கு எலுமிச்சை சாறு,உப்பு சிறிது சேர்த்து பிரட்டி இறக்கவும்.
5.நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
6.சுவையான ஆரோக்கியமான சத்தான ராகி சேமியா முளைகட்டிய பயறு ரெடி.
பின் குறிப்பு :பச்சை பயறு முளைகட்ட பச்சை பயறை காலையில் ஊறவைத்து நன்கு ஊறியவுடன் தண்ணீர் வடிகட்டி ஒரு பனியன் போன்ற துணியில் பொதிந்து வைக்கவும். ஹாட் பேக்கை வெந்நீரில் அலசி, துணியில் பொதிந்த ஊறிய பயறை வைத்து மூடவும்.மறுநாள் திறந்து பார்த்தால் முளைகட்டிய பயறு ரெடி.

-ஆசியா உமர்.

34 comments:

LK said...

indlila sariya seralainu ninaikiren... enakum intha problem iruku ..

different receipe

Mahi said...

Nice n healthy food asiya akka!

Chitra said...

Present Madam..... இவ்வளவு healthy ஆக சாப்பிட, நாங்க இன்னும் ஆரம்பிக்கல.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... மட்டன் சாப்பிடணுமே!

பித்தனின் வாக்கு said...

wow, good asia, nice to look. please parcel it.

சே.குமார் said...

Photos Super.

asiya omar said...

எல்.கே ஆமாம்.நானும் என்னவோ என்று நினைத்தேன்.நன்றி.

மகி மிக்க நன்றி.

asiya omar said...

சித்ரா (நாங்களும் தான்,இவெண்ட்டிற்க்காக செய்து அதன் ருசியை பார்த்து அசந்து விட்டோம்,நிஜமாகவே ருசி அருமையாக இருந்தது.)ஊரில் எங்க அத்தைக்கு அடிக்கடி ராகி சேமியா செய்து கொடுப்பதுண்டு.

asiya omar said...

பித்தனின் வாக்கு வருகைக்கு நன்றி.

குமார் ருசியும் அருமையாக இருக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.

Kurinji said...

ராகி சேமியா எனக்கு மிகவும் பிடித்தது, அனால் அதில் பயிர் சேர்த்து இருப்பது புதுசாக உள்ளது .

LK said...

i dont know it happened to me thrice now...

Padhu said...

Thanks for this wonderful recipe

GEETHA ACHAL said...

Nice to see a recipe typed in English in Tamil blogs...

Healthy recipe...

asiya omar said...

kurinji
padhu
geethaadhal

thanks for your loving comments.

சாருஸ்ரீராஜ் said...

அடிக்கடி இதே முறையில் செய்வது உண்டு ஆனால் முளை கட்டிய பயிறு சேர்த்தது கிடையாது.

Gayathri's Cook Spot said...

Very healthy dish..

S.Menaga said...

நல்ல ஹெல்தியான புட்டு...

தமிழ்லயும் ரெசிபியை டைப் செய்து போட்டிருக்கலாம் அக்கா..

ஆமினா said...

நல்ல குறிப்பு!!

படங்களை பாக்க அவ்வளவு அழகு!!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பார்க்க வித்யாசமா செம டேஸ்டா இருக்கும் போல இருக்கு ஆசியா.. அசத்துங்க..

Umm Mymoonah said...

That looks like an extremely healthy dish. Thank you for sending this perfect healthy dish to the event.

vanathy said...

very tasty & healthy recipe.

Kanchana Radhakrishnan said...

healthy recipe.

LK said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

asiya omar said...

சாருஸ்ரீ,இந்த முளைகட்டிய பயறை எதனுடன் சேர்த்து சாப்பிட்டாலும் ருசி அருமை.

காயத்ரி மிக்க நன்றி.

ஆமினா மிக்க நன்றி.

தேனக்கா பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

மேனகா மிக்க நன்றி.தமிழிலும் டைப் செய்து போட்டாச்சு.உம் மைமூனாவிற்கு அனுப்புவதால் ஆங்கிலத்தில் போட்டேன்,தமிழ் தெரியாதவர்கள் அநேகர் அங்கு வந்து போவதால்.கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

um mymoonah
vanathy
kanchana

thanks for your loving comments.

asiya omar said...

எல்.கே விருதிற்கு மிக்க நன்றி.இதோ வந்து பெற்றுகொள்கிறேன்.

Gopi Ramamoorthy said...

நல்ல balanced dish. அப்பப்போ நிறைய இந்த மாதிரி டிஷும் எப்படி செய்றதுன்னு போடுங்க.
நன்றி

கார்த்திக் விருது குடுத்திருக்கார் போலயே. வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

ஆஹா..வித்தியாசமாக இருக்கே!

Krishnaveni said...

looks super healthy dish, yumm

asiya omar said...

கோபி
ஸாதிகா
கிருஷ்ணவேணி

கருத்திற்கு மிக்க நன்றி.

சௌந்தர் said...

சத்தான உணவு good post

THOPPITHOPPI said...

பச்சை பயறு முளைகட்டியது

இப்படிதான் இருக்குமா?

விச்சு said...

இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல ருசியான பதிவு ...