Wednesday, December 1, 2010

ஐக்கிய அரபு அமீரகம் -தேசிய தின கொண்டாட்டம்வருடம் தோறும்  தேசிய தினம் ஐக்கிய அரபு அமீரத்தில் டிசம்பர் 2 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கடைகள் எங்கும் கொடி விறபனை தான். நாடெங்கும் விளக்கு அலங்கரிப்பும் அமர்க்களப்படுகிறது.கார்கள் ஜோடித்து பவனி வரும் அழகு நாடெங்கும் கண்கொள்ளாகாட்சி.

ஐக்கிய அரபு அமீரகம் பற்றிய சிறிய குறிப்பு.

பின்வரும் 7 அமீரகங்களைக் கொண்டுள்ளது: இவை கூட்டமைத்த நாள் தான் தேசிய தினமாக கொண்டாப்படுகிறது.

அபுதாபி (தலை நகர்)

துபாய்

சார்ஜா

அஜ்மான்

ராஸ் அல் கைமா

உம் அல் குவெய்ன்

ஃபுஜெய்ரா


ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.
1960களின் தொடக்கத்தில் அபுதாபியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அபுதாபியின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை அங்கு வியாபித்திருந்த பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல்கடந்த ஆட்சிப்பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற பிரச்சினைகளினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை.
துபாய் நகரின் ஒரு பகுதி.
துபாயில் தற்பொழுது கட்டப்பட்ட மிக உயரமான புர்ஜ் கலீபா.


இது அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மாஸ்க். அற்புதமான படைப்பு.இவர் தான் ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட (லேட்) ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் 1971 ஆம் ஆண்டில் பிரித்தானியா பாரசீகக் குடாப்பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி,துபாய்,சார்ஜா, அஜ்மான், உல் அல் குவெயின் மற்றும் புஜெய்ரா என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. 1972ல் ராஸ் அல் கைமாவும் இவற்றுடன் இணைந்தது. எஞ்சிய இரண்டு நாடுகளான பஹ்ரைன், கத்தார் ஆகியவை இக் கூட்டமைப்பில் இணையாது விலகிக் கொண்டன. ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.
ஷேக் கலீபா பின் சையத் அல் நஹ்யான் இவர் தான் யு.ஏ,இ யின் ப்ரெஸிடெண்ட்.
ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம் , வைஸ் பிரசிடென்ட் மற்றும் யு.ஏ.யின் ப்ரைம் மினிஸ்டர் பதவியை வகிப்பவர்.இவர் காலத்தில் துபாய் மிகவும் முன்னேற்றம் அடைந்து,பின் சரிவை சந்தித்தது.தற்சமயம் அபுதாபி ஷேக் கலீபா பின் சையத் உதவியுடன் மீண்டும் வளர்ந்து வருகிறது.


தேசிய தினத்தை குதூகலமாக கொண்டாடும் குழந்தைகள்.

யு.ஏ.யில் வசிக்கும் அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்கள். இந்த வாரம் முழுவதும் அரசாங்க விடுமுறை.குதூகலமாக கொண்டாடுங்க.

பதிவு பெரிதாக வேண்டாம் என்று செய்தி குறிப்பையும் படங்களையும் குறைத்து கொண்டேன்.எனக்கு தெரிந்த செய்திகளும்,மற்றும் கூகிள் உதவியுடன் சில செய்திகள்,படங்களும் சேர்த்து வெளியிட்டு உள்ளேன்.

- படங்கள் நன்றி கூகிள்

- அல் ஐனிலிருந்து

ஆசியா உமர்.


27 comments:

Chitra said...

நல்ல தகவல் தொகுப்பு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றிங்க.

ஸாதிகா said...

நிறையதகவல்கள் அறிந்து கொண்டேன் ஆசியா.நன்றி.

ஆமினா said...

நல்ல தகவல் ஆசியா!!!

நன்றி நல்ல பதிவுக்கு

Gopi Ramamoorthy said...

எமிரேட்ஸ் தான் அமீரகமா? இவ்வளவு நாள் தெரியாது.

அஞ்சு நாள் லீவு. நிறைய சமைச்சுப் பதிவாப் போடுங்க!

asiya omar said...

சித்ரா மிக்க நன்றி,முதல் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

ஸாதிகா இன்னும் தகவல் திரட்டி போடலாம் தான்.பதிவு பெரிதாகிவிடுமே என்று குறைத்து விட்டேன்.மகிழ்ச்சி.

asiya omar said...

ஆமினா வாங்க மகிழ்ச்சி.கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

கோபி வருகைக்கு மகிழ்ச்சி.ஏற்கனவே சமைத்து குறிப்பு எடுத்தது நிறைய இருக்கு.வரிசையாக போட வேண்டியது தான் வேலை.

சசிகுமார் said...

//இது அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிராண்ட் மாஸ்க். அற்புதமான படைப்பு.//

அருமை

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பரான பதிவு.
5 நாள் லீவா , எங்க்ளுக்கெல்லாம் 3 நாள் தான்

kavisiva said...

நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஆசியா! நன்றி!

Myth_Buster said...

மிக அருமை சகோதரி. குறிப்புக்கள் அருமையாக தெளிவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தகவல் தொகுப்பு சகோ. உங்களுக்கும் தேசிய தின கொண்டாட்ட வாழ்த்துக்கள்.

asiya omar said...

சசி குமார் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

ஜலீலா வாங்க,பாராட்டிற்கு நன்றி.ஐந்தாம் தேதிவரை லீவு தோழி.

asiya omar said...

கவிசிவா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

மித் பஸ்டர் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

தகவல் தொகுப்பு அருமை ஆசியா!

Gayathri's Cook Spot said...

Very informative!

Tamilbookmark.co.cc said...

தமிழ் வலைப்பதிவர்களே!
புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
‍தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.cc

S.Menaga said...

thxs for sharing akka!!

பித்தனின் வாக்கு said...

நல்லா படம் பார்த்தமுங்க. ஆமா அந்த பிரியாணி சட்டி படம் காணமே. பிரியாணி தீர்ந்து போச்சா?

vanathy said...

நல்ல தகவல்கள். அழகான படங்கள். 5 நாட்கள் லீவா?? ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கறேன்.

Kousalya said...

படங்களும் தகவல்களும் அருமை தோழி. தெரியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன்.

சாருஸ்ரீராஜ் said...

பதிவுலகின் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன்.

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

அரபு அமீரகம் பற்றிய தகவல்களுக்கு நன்றி... ஆசியா-ம்மா

asiya omar said...

கருத்து தெரிவித்த அனைத்து நட்புள்ளங்களுக்கு மிக்க நன்றி.