Sunday, December 5, 2010

சேனைக்கிழங்கு கறி

தேவையான பொருட்கள் ;
சேனைக்கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மல்லி,கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன்
மிள்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
சோம்புத்தூள் - அரைடீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் மண் போக அலசி வைக்கவும்.

உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு வேக வைத்து தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காயந்தவுடன் நறுக்கிய வெங்காயம்சேர்க்கவும், நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு கரம்மசாலா சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை,உப்பு சேர்த்து பிரட்டவும்.
எல்லாம் வதங்கியதும் மசாலா வகைகளை சேர்த்து பிரட்டி விடவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை கொதிக்க விடவும்.உப்பு சரி பார்க்கவும்.

சேனைக்கிழங்கை சேர்த்து பிரட்டி மூடி போட்டு வேகவிடவும்.மசாலா சுண்டி வரும் பொழுது கருவேப்பிலை தூவி பிரட்டி இறக்கவும்.

சுவையான சேனைக்கிழங்கு கறி ரெடி.இதனை சாதம் சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
-ஆசியா உமர்.


29 comments:

LK said...

இது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டா அருமையா இருக்கும்

ஆமினா said...

தெளீவா சொல்லியிருக்கீங்க!!

செய்து பாக்கணும் :)

Chitra said...

அருமை. சேனைக் கிழங்கில் மீன் வறுவல் மாதிரி செய்வார்களே..... அந்த ரெசிபி தாங்க, ப்ளீஸ்!


Dr.Sameena Prathap
said...

Hi,

Arumaiyaana senaikilangu curry...:)Nalla side dish...:)

Dr.Sameena@

http://www.myeasytocookrecipes.blogspot.com

Kurinji said...

romba nalla erukku...

asiya omar said...

எல்.கே உடனடி கருத்திற்கு எப்பவும் மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

ஆமினா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சித்ரா ஏற்கனவே சேனைக்கிழங்கில் நீங்க கேட்ட மாதிரி ஒரு ரெசிப்பி கொடுத்துள்ளேன்,
http://asiyaomar.blogspot.com/2010/10/blog-post_06.html
செக் செய்யவும்.

asiya omar said...

டாக்டர் சமீனா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

குறிஞ்சி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே நல்லா இருக்கு சகோ. பகிர்வுக்கு நன்றி.

Geetha6 said...

வாவ் ..படங்களை பார்க்கும் பொழுது உடனே சாப்பிடனும் போல இருக்கு !

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த காய்...அம்மா இதனை வைத்து காரகுழம்பு செய்வாங்க...அது எனக்கு மிகவும் பிடிக்கும்...

எனக்கு இங்கு இந்த காய் frozenயில் தான் கிடைக்கும்..அதுவும் நல்லா இருக்காது அதனால் வாங்குவதில்லை...ஆனா ஞாபகம் செய்துவிட்டிங்க...நன்றி...

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு ஆசியா.பார்த்தவுடனே செய்து விடவேண்டும் போல் படம் அத்தனைஅ ழகாக வந்திருக்கு.

asiya omar said...

குறிஞ்சி மிக்க நன்றி.

புவனா மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

கீதா ஆச்சல் இந்த சேனைக்கிழங்கில் எனக்கு என்ன சமைத்தாலும் பிடிக்கும்.

asiya omar said...

கீதா ஆச்சல் சேனைக்கிழங்கில் என்ன சமைத்தாலும் எனக்கு பிடிக்கும்.கருத்திற்கு நன்றி.

ஸாதிகா செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கும்,கருத்திற்கு நன்றி.

S.Menaga said...

super recipe, me too like the yam recipes...

Kanchana Radhakrishnan said...

பார்க்க நல்லா இருக்கு .பகிர்வுக்கு நன்றி.

THOPPITHOPPI said...

// இது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டா அருமையா இருக்கும்

//

LK said...
என்னங்க பாஸ் டிஷ் சொன்னா காம்பினேசன் சொல்லுரிங்க சமையல் பிரியரோ

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சேனைக்கிழங்கு கூட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். இதேமாதிரி வீட்டுலயும் செய்து தருவாங்க.. ரொம்ப நல்லா செய்திருக்கீங்க ஆசியாக்கா.

asiya omar said...

மேனகா கருத்திற்கு மிக்க நன்றி.

தொப்பி வருகைக்கு மிக்க நன்றி.

asiya omar said...

ஸ்டார்ஜன் கருத்திற்கு மகிழ்ச்சி.அப்பப்ப வந்து போங்க சகோ.

Mahi said...

சூப்பர்ப்! அந்த ப்ளேட்டை அப்படியே இந்தப்பக்கம் தள்ளிடுங்க.:P

சே.குமார் said...

தெளீவா சொல்லியிருக்கீங்க!!

myth-buster said...

ரெசிபி சூப்பர்...செய்து பார்க்க வேண்டும் போல உள்ளது.

அஸ்மா said...

அருமையா இருக்கு ஆசியாக்கா! ஹாஸ்டலில் இருக்கும்போது சேனைக் கிழங்கில் கூட்டு மாதிரி ஒன்று வைப்பார்கள். அதை பலமுறையிலும் முயன்று பார்த்து ஓரளவுக்கு அந்த டேஸ்ட் வந்துள்ளது :) அதுப்போல் சேனைக்கிழங்கு கூட்டு உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்க ஆசியாக்கா.

asiya omar said...

மகி மிக்க நன்றி.

குமார் மிக்க நன்றி.

மித்பஸ்டர் செய்து பாருங்க.

அஸ்மா நிச்சயம் சேனை கூட்டு போடுகிறேன்.
அனைவரின் வருகைக்கும் மகிழ்ச்சி.

vanathy said...

அக்கா, சூப்பரோ சூப்பர்.

இளம் தூயவன் said...

செய்முறை மற்றும் படங்கள் அருமை.