Monday, December 6, 2010

வெண்டைக்காய் பூண்டு புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்;
வெண்டைக்காய் - 300 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பூண்டு - 20 பல்
பச்சை மிளகாய் - 3
மல்லி காருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உ.பருப்பு - அரைடீஸ்பூன்
வெந்தயம் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்னரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு

வெண்டைக்காயை நன்கு அலசி தண்ணீர் துடைத்து கொஞ்சம் நீளமாக நறுக்கி வைக்கவும்
பின்பு ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும்.

ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உ.பருப்பு,வெந்தயம் ,கருவேப்பிலை போட்டு பொரியவும் நறுக்கிய வெங்காயம் போடவும்,வதக்கவும்,உரித்த முழு பூண்டு பல் போடவும்.சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.

குறிப்பிட்ட மசாலா தூள்களை சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

புளியை கரைத்து விடவும். உப்பு சரி பார்த்து கொதிக்க விடவும்.
வதக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்.

மூடி போட்டு வேகவிடவும்.நன்றாக வெண்டைக்காய் வெந்து வரும்,அடுப்பை சிம்மில் வைக்கவும்,எண்ணெய் மேல் வரும்.விரும்பினால் சிறிது நறுக்கிய மல்லி இலை தூவவும்.


சுவையான வெண்டைக்காய் பூண்டு புளிக்குழம்பு ரெடி.ப்லைன் சாதத்தில் விட்டு சாப்பிடவும்,தொட்டு சாப்பிடவும் அருமையாக இருக்கும்.விரும்பினால் காரம் கூட்டி கொள்ளலாம்.
-ஆசியா உமர்.

30 comments:

Krishnaveni said...

my fav kuzhambu, looks very nice

jagadeesh said...

ஆஹா, எல்லாம் எனக்காக.

myth-buster said...

படங்களோடு விளக்கம் சுபெர்ப். இன்றைக்கு இதை எப்படியாவது ட்ரை பண்ணி பார்க்க வேண்டும் ....ம்ம்ம்ம்

LK said...

பூண்டு போட்டு பண்ணது இல்லை . முயற்சி செய்கிறேன்

valarmathi said...

good recipe
thanx!

Kurinji said...

mouthwatering here....

Gayathri's Cook Spot said...

Poondu vendaikkai combination is very new. Love to try!

asiya omar said...

கருத்திற்கு மிக்க நன்றி கிருஷ்ணவேணி.

asiya omar said...

ஆஹா ,ஜெகதீஸ் நீண்ட நாட்களாக காணோம்,புளிக்குழம்பு ரெசிப்பி முன்பொரு முறை கேட்டிருந்தீங்க,இதுவும் உங்களுக்காகத்தான்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மித் பஸ்டர் ட்ரை செய்து பாருங்க,மிகவும் பிடிக்கும்.

asiya omar said...

எல்.கே வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

asiya omar said...

வளர்மதி உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

குறிஞ்சி மிக்க மகிழ்ச்சி.நிச்சயம் செய்து சாப்பிடுங்க.

asiya omar said...

காயத்ரி கருத்திற்கு மிக்க நன்றி.உங்கள் வீகன் ரெசிப்பிக்கள் எப்பவும் சூப்பர்.

சே.குமார் said...

indru engal araiyil ithuthaan akka...

asiya omar said...

சே.குமார் சமைத்து பார்த்தாச்சா? மிக்க நன்றி,மகிழ்ச்சி.பசியோடு சாப்பிடும் பொழுது அசத்தலாக இருக்குமே!

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா.. சூப்பர்.

ஆமினா said...

நானும் இப்படி தான் செய்வேன்!!

ஆனாலும் அந்த கடைசி போட்டோ என்னை பாத்து மொறைக்குது. அது எங்க வீட்டுக்கு வரணுமாம் :))

ஸாதிகா said...

எனக்கு பிடித்த ஐட்டத்துடன்ன்(வெண்டைக்காய்)பிடிக்காத ஐட்டம் போட்டு(பூண்டு)செய்து இருக்கீங்க தோழி.

vanathy said...

akka, super recipe.

asiya omar said...

புவனா
ஆமினா
ஸாதிகா
வானதி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Gopi Ramamoorthy said...

நல்ல பசி நேரம். வெண்டைக்காய் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பூண்டு ரத்த அழுத்தத்திற்கு நல்லது.

Chitra said...

வெஜ். ஐட்டம்களும் - தூள் கிளப்புறீங்க!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பார்த்தஉடனே சாப்பிடணும் போல இருக்கே.. நன்றி பகிர்வுக்கு..

THOPPITHOPPI said...

படம் அருமை

சாருஸ்ரீராஜ் said...

எனக்கு பிடித்த வெண்டைகாய் புளிகுழம்பு. சூப்பரா இருக்கு .

எம் அப்துல் காதர் said...

ஆஹா பட்டைய கெளப்புமே இந்த பூண்டு புளிக் குழம்பு!! இதை நெய் சோத்துக்கு தான் நான் விரும்பி சாப்பிடுவேன் சூப்பரா இருக்கும். ஞாபாகம் காட்டிடீங்க ம்ம்ம்..

asiya omar said...

கோபி
சித்ரா
ஸ்டார்ஜன்
தொப்பி
சாருஸ்ரீ
அப்துல் காதர்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் புளிகுழம்பு.

மகி said...

ஆஹா!சூப்பர் குழம்பு! :P