Wednesday, December 8, 2010

இறால் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கிரேவி

தேவையான பொருட்கள் ;
இறால் - உரித்தது -25
கத்திரிக்காய் - 150 கிராம்
உருளைக்கிழங்கு- 150 கிராம்
தக்காளி -150 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
(விரும்பினால் அத்துடன் முந்திரி-3)
கறிமசாலா- 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்(காரம் விரும்பினால்)
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வெங்காயம் ,தக்காளி,உருளை,கத்திரிக்காய்,மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும்.

இறாலை உறித்து சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு,கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்,சிறிது உப்பு சேர்த்து நன்கு மசிய விடவும்.


அத்துடன் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேக விடவும்.கத்திரிக்காய் வெந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.


கறிமசாலா எல்லாம் சேர்த்து பிரட்டவும்,இறால் சேர்க்கவும்,பிரட்டி வேகவிடவும்,


ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். மசாலா வாடை அடங்கி இறால் வெந்து வரும்.


அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்க்கவும்.நன்கு கொதிவரவும் மூடி அடுப்பை சிம்மில் சிறிது நேரம் வைத்து,நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான இறால் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கிரேவி ரெடி.
இது சாதம் சப்பாத்தி ரொட்டி வகைகளுடன் அருமையாக இருக்கும்.தினமும் ஏதாவது குழம்பு, கிரேவி இருந்தால் இரவு சப்பாத்திக்கு வசதியாக இருக்கும்.காரம் அவரவர் விருப்பத்திற்கு கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்,கறி மசாலா அல்லது குழம்பு(கலந்த) மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.

--ஆசியா உமர்.

36 comments:

வெறும்பய said...

ஆஹா.. இன்னைக்கு ட்ரை பண்ணிற வேண்டியது தான்...

Gopi Ramamoorthy said...

யம்மி.

இது நல்ல உணவு. காய்கறி, அசைவம் கலந்த ஒரு balanced food.

இட்லி, கல்தோசைக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அசத்துங்க!

LK said...

present

மகி said...

அருமையா இருக்கு ஆசியாக்கா!

asiya omar said...

வெறுபய முதல் கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

கோபி,ஆமாம் இட்லி தோசைக்கும் மிக அருமையாக இருக்கும்.கருத்திற்கு மகிழ்ச்சி.நன்றி.

asiya omar said...

எல்.கே.வருகைக்கு மகிழ்ச்சி.

மகி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஆமினா said...

பாக்கும் போதே செம டேஸ்ட்ன்னு தெரியுது

Chitra said...

இறாலுடன் காய்கறி சேர்த்து சமைத்ததில்லை. இந்த ரெசிபி நல்லா இருக்குதே....

சசிகுமார் said...

Nice

asiya omar said...

ஆமினா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

சித்ரா, இறாலுடன் கத்திரிக்காய் அல்லது உருளைக்கிழங்கு பொருத்தமாக இருக்கும்.சமைத்து பாருங்க.கருத்திற்கு மகிழ்ச்சி.

சசிகுமார் நன்றி.

Geetha6 said...

பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.

மின்மினி RS said...

பார்க்கும்போதே ரொம்ப நல்லாருக்கு ஆசியாக்கா. ஒருநாள் இதேமாதிரி செய்து பார்த்திட வேண்டியதுதான்.

எம் அப்துல் காதர் said...

இது அத்தனையும் நீங்க சமைச்சு சாப்டுட்டு தானே எங்க கண்லேயே காட்றிங்க. இருக்கட்டும் இருக்கட்டும் (ஹா..ஹா :)))) ஆஹா நல்லாவே இருக்கு!!

இளம் தூயவன் said...

ஆஹா ஆஹா, வாச மனம் தம்மாம் வரை வந்துடுச்சி.

சே.குமார் said...

அருமையா இருக்கு ஆசியாக்கா!

ஸாதிகா said...

இறால் கிரேவி சூப்பர்.இப்படி சமைப்பதால் அளவும் அதிகம் ஆகும்

asiya omar said...

கீதா6
மின்மினி
அப்துல் காதர்
இளம் தூயவன்
சே.குமார்
ஸாதிகா

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

இலா said...

Looks yummy ;))

Krishnaveni said...

such a great recipe, yumm

asiya omar said...

இலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

கிருஷ்ணவேணி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ,நன்றி.

GEETHA ACHAL said...

ஆஹா...எனக்கு மிகவும் பிடித்த குழம்பு...இத்துடன் 2 முருங்கைக்காயும் போட்டால்...ஆஹா...சுவையினை என்னத சொல்ல...அத்துடன் அவித்த முட்டை..எனக்கு பிடித்த சூப்பர்ப் காம்பினேஷன்..எல்லாமே நொடியில் காலியாகிவிடும்...அடுத்த வாரம் செய்துட வேண்டியது தான்..நன்றி அக்கா...

asiya omar said...

கீதா ஆச்சல் கருத்திற்கு மகிழ்ச்சி.முருங்கைக்காய் சேர்த்தால் இன்னும் அருமையாகவே இருக்கும்.செய்து பாருங்க.

தளிகா said...

ஆசியாக்கா உங்க குறிப்புகள் எல்லாமே சுவையாக இருக்கும்.யாருமே சமைத்து பார்க்கலாம்..உங்க சின்னஞ்சிறு உலகத்தின் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கேன்:-)

myth-buster said...

இறாலுடன் வெஜிடபிள் சேர்த்து சமைத்ததில்லை. சூப்பர் ரெசிபி.

asiya omar said...

தளிகா

மித்பஸ்டர்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மாதேவி said...

நல்ல சமையல்.
அசைவம் என்னால் சாப்பிடமுடியாதே. பிள்ளைகளுக்குச் செய்து கொடுக்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர். இதைப்பார்த்தா ஸ்டார்ஜன் கண்டிப்பா செய்யணும்பாரே :)

Magia da Inês said...

♥♥ Olá, amiga!
♥ A receita é tudo de bom!!!Com todos esses ingredientes deliciosos.♥♥
Seu blog está muito bonito. ♥
♥ Beijinhos.
Brasil♥♥

asiya omar said...

அக்பர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.செய்து சாப்பிட்டு பார்க்கவும்.

அஹமது இர்ஷாத் said...

nice..looking good.

Kanchana Radhakrishnan said...

pesent asiya.

asiya omar said...

magia
welcome.thanks for visiting my blog.

asiya omar said...

ahamed irshad

kanchana

thanks for your visit and comments.

மனோ சாமிநாதன் said...

ராலுடன் எந்த காய் சேர்த்துச் செய்தாலும் அருமையாகத்தான் இருக்கும்! நன்றாக இருக்கிறது ஆசியா இந்த குறிப்பு!!

Jaleela Kamal said...

ஆசியா இறாலுடன் எந்த காய் சேர்த்தாலும் அருமை தா

இறால் முருங்கக்காய்,
கத்திரி, ஆலு எல்லாமே சூப்பர் மண்மாக இருக்கும்