Monday, December 13, 2010

ஹாட் & சோர் வெஜ் சூப்


தேவையான பொருட்கள் ;
கேரட் - 1
கொடைமிள்காய் - 1
பட்டன் மஷ்ரூம் - 5
முட்டை கோஸ் - 50 கிராம்
தண்ணீர் - 1 லிட்டர்
மேகி அல்லது நார் சூப் கியுப் -2
சோயாசாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
ஹாட் சில்லி டொமட்டோ சாஸ்- 2 டேபிள்ஸ்பூன்
ஒயிட் வினிகர் - 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 2 டேபிள்ஸ்பூன்
பெப்பர் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைப்பட்டால்
ஸ்பிரிங் ஆனியன் - சிறிது அலங்கரிக்க
கேரட்,கொடைமிள்காய்,மஷ்ரூம்,முட்டை கோஸ் பொடியாக கட் செய்து கொள்ளவும்,மிள்கை பொடித்து கொள்ளவும்,தேவையான சாஸ் வகைகளை ரெடியாக எடுத்து வைத்து கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் எடுத்து 2 சூப் கியூப் போட்டு கொதிக்க விடவும்.
நறுக்கிய காய்கறிகளை சேர்க்கவும்.கொதி வரட்டும்.

கார்ன் ப்ளோரை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.


காய்கள் இப்படி வெந்து வரும்.


சோயா சாஸ்,ஹாட்சாஸ்,வினிகர் சேர்க்கவும்.கலந்து விடவும்.சூப் கியுப்பில் உப்பு இருக்கும் தேவைப்பட்டால் உப்பு சிறிது சேர்க்கலாம்.அரைஸ்பூன் பெப்பர் பவுடர் சேர்க்கவும்.

கொதி வந்தவுடன் அடுப்பை குறைக்கவும்.

கரைத்து வைத்த கார்ன் ப்ளோரை கலந்து மெதுவாக ரெடியான சூப்பில் சேர்த்து கலந்து விடவும்.பின்பு மீது அரைஸ்பூன் பெப்பர் சேர்க்கவும்.நறுக்கிய வெங்காயத்தாள் சேர்க்கவும்.
சூடாக பரிமாறவும்.தேவைக்கு ப்ரெஷ் பொடித்த பெப்பர் சேர்த்து கொள்ளவும்.
சுவையான ஹாட் & சோர் வெஜ் சூப் ரெடி.
குளிர்காலத்தில் இந்த சூப் தொண்டை காது மூக்கு எல்லாவற்றிருக்கும் இதமாக இருக்கும்.
--ஆசியா உமர்.

30 comments:

ஸாதிகா said...

வாவ்..இந்த சூப் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவசியம் உங்கள் முரையில் செய்து பார்த்து விடுகின்றேன்.படமும் சூப்பர்.அப்புறம்..ஸ்லைடிங் இல் உங்கள் அவார்டுகள் வெகு அழகாய் மிளிர்கின்றன.வாழ்த்துக்கள் தோழி.

Gayathri's Cook Spot said...

Very healthy soup..

Akila said...

wow my favorite one dear...... bookmarked...

Priya Sreeram said...

supera irukku--i love soups n this one gets my attention !

Chitra said...

Picture perfect! :-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

'சூப்'பரா இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

சூப் சூப்பரா இருக்கு.

இளம் தூயவன் said...

சகோதரி சிம்பிள் மெதட்.அருமை .

சே.குமார் said...

Padaththudan Soop arumaiya vanthirukku.

ஆமினா said...

படங்கள் அனைத்தும் அருமையா வந்துருக்கு. இங்கே பயங்கர குளிர். அதுக்கு ஏத்த மாதிரி சூப் கொடுத்துருக்கீங்க. கண்டிப்பா நாளைக்கு செய்யணும்...........

asiya omar said...

ஸாதிகா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

gayathri
akila
priya sreeram

thanks for your loving comments.

asiya omar said...

சித்ரா மிக்க நன்றி.

புவனா மிக்க நன்றி.

சாரு சூப்பராக செய்து பார்க்கவும்.

இளம்தூயவன் கருத்திற்கு மகிழ்ச்சி.

சே.குமார் மிக்க நன்றி.

ஆமினா இங்கும் குளிர் ஆரம்பிச்சாச்சு.தினமும் சூப் குடித்தால் அருமையாகவே இருக்கும்.

vanathy said...

சூப்பரா இருக்கு. நானும் செய்து பார்க்க வேண்டும்.

Kanchana Radhakrishnan said...

healthy soup.

GEETHA ACHAL said...

இந்த குளிர் காலத்திற்கு ஏற்ற சூப்...அருமையாக இருக்கின்றது...

தெய்வசுகந்தி said...

Nice looking healthy soup!!

சுந்தரா said...

சூப் செய்முறையும் படங்களும் அருமை.

இந்தவாரம் செஞ்சுடவேண்டியதுதான்.

அஹமது இர்ஷாத் said...

சூப் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

Vijisveg Kitchen said...

எனக்கு சூப் ரொம்ப பிடிக்கும். அதில் சோர் வெஜ் சூப் நானும் செய்வேன்.
கல்க்கறிங்க எல்ல ரெசிப்பிஸ் அசத்தல்.

Gopi Ramamoorthy said...

எனக்கு இந்த சூப் ரொம்பப் பிடிக்கும். அம்மாவுக்கும்!

asiya omar said...

வானதி
காஞ்சனா
கீதா ஆச்சல்
தெய்வசுகந்தி
அஹமது இர்ஷாத்
விஜி
கோபி
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

எம் அப்துல் காதர் said...

இந்த சூப் அருமையா இருக்கு படத்தோட சேர்த்து இந்தப் பக்கம் தள்ளுங்க!! அதென்ன பலூன் பலூனா பறக்குது அதெப்படி??

asiya omar said...

சகோ.அப்துல் காதர் வருகைக்கு நன்றி.இந்த பலூன் பறப்பது பூச்சொரிவது போல் நீங்களும் செய்யலாம்.அதற்கு சகோ.சசி குமார் ப்ளாக் போய் பாருங்க.கிறிஸ்த்மஸ் ஸ்பெஷல் ப்ளாக்கில் வித விதமான டிசைன் விழ வைக்கன்னு இருக்கும்.
http://vandhemadharam.blogspot.com/

Mahi said...

சூப் சூப்ப்ப்ப்ப்ப்ப்பர்! :)

ஆசியாக்கா,/மேகி அல்லது நார் சூப் கியுப் -2/ இதுதான் எங்கே கிடைக்கும்னு எனக்கு தெரில.
வழக்கம்போல காய்கள் அழகா கட் பண்ணிருக்கீங்க! :)

LK said...

சூப் நல்லா இருக்கும் போல இருக்கு, நன்றி சகோ

Jaleela Kamal said...

சூப் சூடாக அழகான ப்வளில்.


மஷ்ரூம் பெரிய பையனதவிர யாருக்கும் பிடிக்காது ஆகையால்நான் மஷ்ரூம் சேர்க்காமல் செய்வேன்
(அருசுவையில் கொடுத்து இருக்கேன்.)

asiya omar said...

மகி
எல்.கே
ஜலீலா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..

நேரமிருந்தால் வருகை தாருங்களேன்..


http://blogintamil.blogspot.com/2011/08/4.html

மஞ்சுபாஷிணி said...

படிக்கும்போதே அருமையாக இருக்கிறது... செய்தும் பார்க்க தோன்றுகிறது...

அன்பு நன்றிகள் தோழி பகிர்வுக்கு...