Wednesday, December 15, 2010

உல்லாச படகு பயணம் / Joyful Cruise Trip.




முசந்தம் - ஒமான் மற்றும் துபாய் மரீனா உல்லாச படகு பயணம்
Musandam - Oman and Dubai Marina Dhow Cruise.கடலுக்குள் அதுவும் படகில் பயணம் போவதே ஒரு சுகானுபவம் தான்,அதுவும் ஒரு கூட்டமாக ஜாலியாக போவது நல்ல மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ரொம்ப நாட்கள் முன்பு ஓமானில் உள்ள முசந்தம் என்ற பிக்னிக் ஸ்பாட்டுக்கு டூர் போய் வந்தோம்,அப்ப ப்ளாக் எல்லாம் ஆரம்பிக்கலை,அதனால அப்ப எடுத்த சில போடோஸ்,அடுத்து இந்த மாதம் துபாய் மரீனாவில் dhow cruise போய் வந்தோம்.எனவே இரண்டையும் உங்கள் பார்வைக்கு தந்தால் யு.ஏ.இ-யில் இருப்பவர்கள் வருகிற விண்டர் விடுமுறையில் முடிந்தால் சென்று வரலாம் தானே! மற்றவர்கள் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

நாங்கள் அபுதாபியில் இருந்து மாலை கிளம்பி ராசல் அல் கைமா சென்று இரவு தங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஷாம் வழியாக ஒமான் பார்டர் போய் சேர்ந்தோம்.அதிகாலை போனால் விஷா ஸ்டாம்பிங் செய்யும் இடத்தில் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும்.(விடுமுறை நாட்களில் சிரமம் தான்)
முதலில் முசந்தம் பற்றிய சில காட்சிகள்

இது போகிற வழி,இப்படி பாறைகள் ஒரு பக்கம் மறுபக்கம் கடலின் ஆர்ப்பரிக்கும் அலைகள்,காரில் வளைந்து வளைந்து மலை மீது ஏறி போகும் பொழுது அதன் இயற்கை காட்சிகள் அப்பப்பா! கண்கொள்ளாகாட்சி.

நாங்கள் ஆன்லைனிலேயே படகில் பயணம் செய்ய முன் பதிவு செய்துவிட்டதால் சரியான நேரத்திற்கு அந்த ஆபிஸ் முன்பு போய் சேர்ந்தோம்.அவர்கள் படகுகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்கள்.நாங்கள் போர்டிங் ஆகி போட் கிளம்ப காலை ஒன்பதரை ஆகி விட்டது.அவர்கள் குறிப்பிட்ட நேரம் காலை மணி ஒன்பது முதல் மாலை 5 மணி வரை.


கடலுக்குள் 20 கிலோமீட்டர் சென்று விட்டு திரும்பி கொண்டு வந்து விடுவார்கள்.மதியம் அருமையான லஞ்ச் ,திரும்ப மாலை தேனீர் உடன் சுற்றுலா முடிவு பெற்றது.

அப்படியே கடல் அலைகள் இரைச்சலோடு நிறைய பாறைகளும் கடலும் உள்ள அழகிய இடத்தை சென்று அடைந்தோம்.தீடீரென்று படகு ஓட்டுனர்கள் விசில் அடிக்க எங்கிருந்தோ நான்கு,நான்காய்,ஜோடியாய்,ஒற்றையாய் டால்பின்கள் துள்ளி குதித்து ஓடி வந்தது.படகையொட்டி டால்பின் செல்லும் பொழுது படகில் இருந்தவர்கள் அனைவரும் போட்ட சத்த ஆர்ப்பாட்டத்தில் டால்பின்கள் மகிழ்ந்து மேலே துள்ளி துள்ளி விளையாட்டு காட்டியது.நாங்கள் சென்ற சமயம் நிறைய டால்பின் வந்ததாய் படகோட்டி சொன்னார்.


அதன் பின்பு கொஞ்சம் தூரம் சென்று பாறைகள் சூழ இருந்த இடத்தில் நீச்சல் செய்ய அனுமதித்தார்கள்.பாறைகள் சூழ அலைகளற்ற அமைதியான இடம்,தண்ணீர் பச்சை நிறமாய் அடியில் கடல் தாவரங்கள்,அழகிய சிப்பிக்கள் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக நீச்சல் அடித்து சந்தோஷப்பட்டது ரசிக்கும் படி இருந்தது.இப்படி இரண்டு இடங்களில் சாப்பிடும் முன்பும்,பின்பும் நீச்சல் அடிக்க அரை அரை மணி நேரம் அனுமதித்தார்கள்.ஒரு சந்தோஷம் என்னவென்றால் நீண்ட நாட்கள் கழித்து நானும் நீச்சல் அடித்தது தான்.பெண்கள் யாருமே இறங்காமல் இருந்த பொழுது நான் தைரியமாக முதலில் கடலில் இறங்கினேன்,அமைதியாக படகில் அமர்ந்திருந்த பெண்கள் எழுந்து நின்று உற்சாகமாக கையை அசைத்தார்கள்.நான் நீச்சல் முடித்து ஏறி வரும் பொழுது என்னருகே அமர்ந்திருந்த ஈரான் நாட்டு பெண்மணி என்னை ஆரத் தழுவி அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிகழ்வு என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.படத்தில் நீச்சல் அடிக்கும் என் மகன்.


மதியம் சரியாக நேரத்திற்கு சாப்பாடு கடல் நடுவே சிறிய போட்டில் சூடாக வந்தது,ஃபிஷ் ஃப்ரை, மந்திரைஸ்,தால்ச்சா,குபூஸ்,ஹமூஸ்,பிக்கிள்,
பப்பட் என்று அருமையான சாப்பாடு.

இது தான் சின்ன போட்டில் இருந்து பெரிய போட்டிற்கு சாப்பாடு ஏற்றும் காட்சி.பக்கத்து போட்டிற்கு கொடுக்கும் பொழுது கிளிக்கியது.உண்ட மயக்கம் அப்படியே வானம் தாலாட்ட,அலைகள் பாட்டு பாட சிறு தூக்கம்.எழுந்து சூடாக டீ பரிமாறியதை குடித்து விட்டு கடல் பயணத்தை ரசித்த வண்ணம் ஏறிய இடம் வந்து கரெக்டாக மாலை ஐந்து மணிக்கு சேர்ந்தோம்.
எடுத்த சில போட்டோக்களை பகிர்ந்து உள்ளேன்.
அடுத்து

துபாய் மெரீனாவில் Dhow Cruise

இங்கு இரவு போர்டிங் நேரம் எட்டு மணி,எட்டரை மணிக்கு ப்டகு கிளம்பி அப்படியே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போட்டில் பயணம் செய்து இரவு பத்தரை மணி வரை சுற்றி வந்தோம்,அங்கு அமைந்துள்ள வானுயர கட்டிடங்கள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


இது தான் நாங்க ஏற வேண்டிய படகு,ரெடியாக இருந்தது.

இந்த அழகான படகில் தான் சென்று வந்தோம்,ஆன்லைனில் தேடி ஆஃபர் சமயம் பதிவு செய்து போய் வந்தால் நம்ம வசதிக்கு தகுந்தபடி இருக்கும்.

ஆகா படகில் ஏறியாச்சு,ஸ்டார் ஹோட்டல் அளவிற்கு சீட்டிங் அரேஞ்மென்ட் அருமையாக இருந்தது.அழகான மரவேலைப்பாடுள்ள் படகில் கீழ் தளம் ஏ.சி செய்யப்பட்டு கண்ணாடி ஜன்னலுடனும்,படகின் மேல் தளம் திறந்த வெளியாய் இருந்தது.நாங்கள் குழந்தைகள், குடும்பம் என்று பெரிய கூட்டமாக சென்றதால்(சுமார் 20 நபர்கள்) கீழ்தளத்தில் அமர்ந்து கொண்டோம்.

குறிப்பிட்ட நேரத்தில் படகு கிளம்பி விட்டது,இரவு வெளிச்சம் மனதிற்கு இதமாகவும்,ரம்யமாகவும் இருந்தது.எங்கும் சிரிப்பொலி,மகிழ்ச்சியான உரையாடல் என்று அமர்க்களமாக இருந்தது.

அப்படியே மரீனா வெஸ்டில் படகு உலா வந்தது.



எங்கள் படகில் இருந்து மற்றொரு படகை எடுத்த போட்டோ தான் இது.

படகில் அரபி பாட்டுகளுடன் கூடிய அரைமணி நேர டான்ஸ் ப்ரோகிராமும் இருந்தது.

படகில் ஏறியவுடன் முதலில் ஜூஸ்,அதனை தொடர்ந்து buffet dinner ஆரம்பமானது,வெரைட்டியான உணவு வகைகள்,மதியம் லைட்டாக சாப்பிட்டு பசியுடன் சென்றால் தான் இரவு ஒரளவாவது சாப்பிட முடியும்.


இந்த படம் மட்டும் உங்களுக்காக என் மொபைலில் கிளிக்கியது.இதற்கு மேல் அசத்தலான டெசர்ட்ஸ் வேறு,எப்படி நேரம் போனதுன்னே தெரியலை,மேல் தளத்தில் டீ இருப்பதாக சொல்ல மேலே போய் திறந்த வெளியில் நின்று சிறிது நேரம் ரசித்து விட்டு கீழே இறங்கினால் அதற்குள் மணி பத்தரை ஆகி விட்டது,இறங்கும் இடமும் வந்து விட்டது. இரவு வெளிச்சத்தில் என் மொபைல் கேமரா படங்கள் தெளிவாக இல்லை.ஆகவே அனைத்து படங்களும் என் அண்ணன் மகன் உஸ்மான் கேமராவில் அழகாக எடுத்து தந்தது.
உஸ்மானுக்கு என் அன்புகனிந்த நன்றி.
பயணங்கள் முடிவதில்லை.



--ஆசியா உமர்.

45 comments:

Chitra said...

Awesome photos! உணவு ஐட்டம்ஸ் பார்த்தேன். உங்களுக்கு இன்னைக்கு வயிறு வலிச்சா, கம்பெனி பொறுப்பு எடுக்காது. :-)

தமிழ் திரட்டி said...

தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilthirati.corank.com/

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்களும் கட்டுரையும் ரொம்ப நல்லாயிருக்கு.

LK said...

நல்ல பயணம் நல்ல போட்டோஸ்

vanathy said...

படங்கள், விளக்கம் எல்லாமே நல்லா இருக்கு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் பயண அனுபவமும், அங்கே எடுத்த படங்களும்.. ரொம்ப சூப்பரா இருந்ததுங்க..

நீங்க திறந்த வெளியில் நின்று... டீ குடிக்க போனீங்கன்னு சொன்னது, நானும் போய் நின்று வேடிக்கை பார்த்தது போல் இருந்தது.. :)
நன்றி...

asiya omar said...

சித்ரா கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

தமிழ் திரட்டி வருகைக்கு நன்றி.

asiya omar said...

புவனா

எல்.கே.

வானதி

ஆனந்தி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஆஹா..தோழி,எங்களையும் அழைத்துச்சென்று சுற்றிக்காட்டியது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.படங்களும்,விளக்கமும் பிரமாதம்.

இளம் தூயவன் said...

படங்கள் அருமை,படித்தவுடன் சுற்றி பார்த்தது போல் இருந்தது.நன்றி சகோதரி.

வெங்கட் நாகராஜ் said...

பயணம் பற்றிய விளக்கங்களும் புகைப்படங்களும் அருமை சகோ. மிக்க நன்றி.

சே.குமார் said...

பயணங்கள் முடிவதில்லை... நல்ல பயணம்.


படங்களும் கட்டுரையும் ரொம்ப நல்லாயிருக்கு.

Gayathri's Cook Spot said...

Nice snaps.

Magia da Inês said...

♥ Olá, amiga!♫
♫♥ Que lindo... muito, muito bonito!!!
♫♫ Beijinhos. ♥♫
♫♥ Brasil
♫♫♫♥

கோவை2தில்லி said...

படங்களும் ,விளக்கங்களும் அழகாக இருந்தது. நன்றி.

Kurinji said...

nice snaps...
Kurinji

ஆமினா said...

அப்படியே நானும் அங்கே போன மாதிரி இருந்துச்சு ஆசியா

சூப்பர்

mahavijay said...

mohram ku enna special panna porenga?

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள்

asiya omar said...

ஸாதிகா
இளம் தூயவன்
வெங்கட் ராமராஜ்
சே.குமார்
காயத்ரி
அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

magia thanks for your comments and visit.

asiya omar said...

கோவை2டில்லி

குறிஞ்சி

ஆமினா

மஹாவிஜய்

சசிகுமார்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

மங்குனி அமைச்சர் said...

நல்ல டிர்ப்புங்க............

Priya Sreeram said...

wow---amazing, fab clicks and i actually felt that i have toured these places through ur lovely blog !

சாருஸ்ரீராஜ் said...

பயண அனுபவம் அருமையாக இருந்தது. மொகரம் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

படங்களும் அனுபவங்களை விவரித்த விதமும் மிக அருமை!

மின்னுது மின்னல் said...

இன்னும் கொஞ்சம் தக்வல் சொல்லி இருக்கலாம் :)

முசந்தம் - ஒமான் ஆன்லயனில் எங்க பதிவு பண்ணுனீங்க

போட்டுக்கு ஒரு ஆளுக்கு எவ்வளவு வரும்

போக வர உள்ள தூரம்
இன்னும்....

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான உல்லாச படகு பயணம்

Kanchana Radhakrishnan said...

படங்களும்,விளக்கமும் பிரமாதம்.

Krishnaveni said...

wow, beautiful place, will visit sometime

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமை. பயணங்கள்தான் வாழ்வை செம்மையாக்குகின்றன.

மகி said...

Nice place and beautiful photos!

எம் அப்துல் காதர் said...

அருமையான பயணக் கட்டுரை மேடம்!! படங்களும் அருமை!!

எவ்வளவு சார்ஜ் பண்றாங்க PER PERSON??

asiya omar said...

அமைச்சர் மிக்க நன்றி.
ப்ரியா மிக்க நன்றி.
ராமலஷ்மி மிக்க நன்றி.

asiya omar said...

மின்னுது மின்னல் வருகைக்கு நன்றி.நீங்க யு.ஏ.யில் இருந்து எங்கிருந்து கிளம்புறீங்க என்பதை பொறுத்து தூரம் வேறுபடும்.நாங்க எங்க போவதாய் இருந்தாலும் ஒரு குரூப்பாக சேர்ந்து போவது வழக்கம்,குரூப் டிஸ்கவுண்ட் என்று உண்டு,ஆஃபர் என்பதால் திர்ஹம் நூறு ப்ளஸ் வரும்.நேரத்திற்கு தகுந்தபடி வேறுபடலாம்.

asiya omar said...

ஜலீலா
காஞ்சனா
கிருஷ்ணவேணி
அக்பர்
மகி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் வருகைக்கு நன்றி.
அவர்கள் குறிப்பிட்ட 3 நாட்களில் பதிவு செய்தால் இவ்வளவு ரேட் என்று சில சமயம் ஆஃபர் வரும்,அதில் புக் செய்து போனதால் மற்ற நாட்களில் திர்ஹம் 270 நபருக்கு,ஆனால் நாங்கள் போனது குரூப்பாக(குரூப் டிஸ்கவுண்ட் - யு.ஏ.யில் உள்ள எங்க குடும்பத்தார் 20 நபர் போனோம்) அதுவும் அவர்கள் குறிப்பிட்ட தினத்தில் என்பதால் நபருக்கு திர்ஹம் 110 தான்.போட்டில் கிட்ட தட்ட மேல் தளம் கீழ் தளம் என்று நூறு பேர் இருந்தாங்க.

u$$$ said...

very to see my pic posted for ur blog

asiya omar said...

nice to see your comments.thanks for your visit usman.

nishakhaja said...

pasport visa guide yaarum illamae inda didiyai ungaludan azhaidu chendra unakku oru mmmmmmma and my anvancd HAPPY NEW YEAR 2 AL OF U.bye.

asiya omar said...

thanks for your lovely comments nisha akka.adikkadi vaangka akka.

தளிகா said...

என்னமோ ஒண்ணு உங்க எழுத்தில் ஸ்பெஷலா இருக்கு ஆசியாக்கா அது என்னன்னு தான் கண்டுபிடிக்க முடியல...சிம்பிளா எல்லோருக்கும் புரியும்படியா தெளிவாவும் எழுதறீங்க..குறிப்பா படித்து முடித்ததும் நேரில் போய் வந்த மாதிரி மனசு சாந்தமாகிடுது

Asiya Omar said...

மிக்க நன்றி தளிகா அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

cheena (சீனா) said...

அன்பின் ஆசியா உமர் உல்லாச படகுப் பயணம் படங்களுடன் பதிவாகியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா