Saturday, December 18, 2010

சுண்ட வத்தக்குழம்பு சுட்ட அப்பளம்


தேவையான பொருட்கள் ;
காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு
நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன்
முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6-8
கடுகு - கால்ஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
கடலை பருப்பு- 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு பெரிய பல் -3
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு



முதலில் வெறும் வாணலியில் மல்லி,சீரகம்,மிளகு,கடுகு,வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்,அதிலேயே பாதி சுண்டவத்தலை(15-20) வறுத்து எடுத்து அரைக்க எடுத்து வைக்கவும்.பாதியை குழம்பில் போட வைக்கவும்,இதனில் பாதி சுண்ட வத்தலையும் சேர்த்து அரைப்பதால் குழம்பு காரம்,கசப்பு,புளிப்பு என்று சுவை அருமையாக இருக்கும்.



பின்பு அதே வாணலியில் பூண்டு,கருவேப்பிலை வறுத்து அத்துடன் அணைத்து பொருளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி ஆறவைக்கவும்.



புளியை ஊறவைக்கவும்.வறுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.




புளிக்கரைசலோடு அரைத்தவற்றை சேர்த்து கரைத்து தேவைக்கு உப்பு சேர்த்து வைக்கவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு பாதி சுண்டவத்தலை எண்ணெயில் போட்டு பொரிய விடவும்.


சுண்ட வத்தல் பொரியவும் அரைத்த விழுது புளிக்கரைசலை சேர்க்கவும்.


நன்கு கொதி வரும்,சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் வற்ற விடவும்.



குழம்பு வற்றி இப்படி வரும்.


குழம்பு சிவப்பாய் பார்க்க அழகாய் இருக்க ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து உடன் ரெடி ஆன வத்தக்குழம்பில் கொட்டி கலந்து விடவும்.நன்கு கலந்து விடவும்.


சுவையான சூப்பரான வத்தக்குழம்பு ரெடி.



அப்பளம் ஓவனில் சுட நான்கு அப்பளத்தை இப்படி 40 செகண்டு வைத்து எடுக்கவும்.


இப்படி பொங்கி சூப்பராக வரும்.இப்ப 40 நொடியில் சுட்ட அப்பளம் ரெடி.






சுடசுடச்சாதம்,சுண்ட வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம் ரெடி.

இது எங்க பெரியம்மா மகள் ரஹ்மத் அக்கா சொல்லித் தந்தது.வெங்காயம்,தக்காளி,தேங்காய் சேர்க்காததால் ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். அஞ்சறைப்பெட்டியில் உள்ள அனைத்து பொருளும் சேரும் இந்த வத்தக்குழம்பு சூப்பராக இருக்கும். காரம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றல் கூட்டி கொள்ளலாம்.என் மாமாவிற்கு இந்த வத்தக்குழம்பு செய்தால் மிகவும் பிடிக்கும்.


--ஆசியா உமர்.




54 comments:

ஆமினா said...

சுட்ட அப்பளம் என்பது இது தானா???

இப்ப தான் பாக்குறேன்!!!

அந்த வத்த குழம்பு என் கண்ண ரொம்பவே உறுத்துது ஆசியா!!!

எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு....

LK said...

வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ஆகா என்ன ஒரு இணை.. நன்றி

மங்குனி அமைச்சர் said...

பசி நேரத்துல இப்படி போட்டோவோட போட்டு எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிர்றதே உங்க வேலையா போச்சு ......... (பாத்தா உண்டனே ரொம்பப் பசிக்குது ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

THOPPITHOPPI said...

வாசம் நல்லாதான் இருக்கு

சௌந்தர் said...

எனக்கு வத்தக்குழம்பு ரொம்ப பிடிக்கும்

asiya omar said...

ஆமினா மிக்க நன்றி.
எல்.கே. மிக்க நன்றி.

asiya omar said...

அமைச்சரே,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

தொப்பி தொப்பி மிக்க நன்றி.

சௌந்தர் எனக்கும் வத்தக்குழம்பு ரொம்ப பிடிக்கும்.கருத்திற்கு மிக்க நன்றி.

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

அமைச்சரே,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.////


என்னாது கருத்துக்கு நன்றியா? .....எங்களுக்கு பசிக்கிறது உங்களுக்கு சந்தோசமா இருக்கு ...... மரியாதையா அந்த சாப்பாடு பிளேட்ட பார்சல் அனுப்பி விடுங்க (சாப்பாடோடதான் ..... அப்புறம் நீ பிளேட் மட்டும் தான கேட்டன்னு நக்கல் பண்ணக்கூடாது )

asiya omar said...

அமைச்சரே தட்டோடு சாப்பாடு தானே அனுப்பிட்டா போச்சு.

நானானி said...

இது எங்க ஊர் ஃபேமஸ் ஆச்சே!
யாரையாவது விருந்துக்கு கூப்பிட்டால் ‘எனக்காக ஒன்னும் மெனக்கிட வேணாம். சுட்ட அப்பளமும் வத்தக் குழம்பும் இருந்தால் போதும்’ என்பார்கள்.

அதுவே அமிர்தம்!!!கூடவே பொட்டுக்கடலை துவையலும் இருந்திட்டால் தேவாமிர்தம்.

பதிவுலகில் பாபு said...

படங்களைப் பார்க்கும்போதே அருமையாக இருக்கே.. அசத்தல்..

jagadeesh said...

அக்கா, உங்க blog திறந்தா பழமா கொட்டுது. அத்தோட அருசுவையான குழம்பையும் செஞ்சு காமிசுடீங்க. உங்களுக்கு நா ஒரு வோட்டு போட்டிருக்கேன், தமிழ்மணத்துல.

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக் இருக்கு ஆசியா/

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆகா ...

சே.குமார் said...

அக்கா எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு சுண்டவத்தல்....
இது புதுசா இருக்கு அரச்சு கலக்குறது, அல் ஐனுக்கு வந்தா சாப்பிடலாமோ?

Mano Saminathan said...

அருமையாக இருக்கிறது சுண்டைக்காய் வத்தல் குழம்பு ஆசியா! சின்ன வெங்காயம் சேர்க்காமல் வித்தியாசமாக இருக்கிறது!! புகைப்படமும் அழகு!

asiya omar said...

நானானி கருத்திற்கு நன்றி.அட பொட்டுக்டலை துவையல் ஆமாம்,அருமையாக இருக்கும்.இனி துவையல் அப்பளம் காம்பினேஷனில் சாப்பிட்டு பார்க்கணும்.

Kanchana Radhakrishnan said...

அருமை.

asiya omar said...

பதிவுலகில் பாபு கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

ஜெகதீஸ் வருகைக்கும் கருத்திற்கும் ஓட்டிற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஜலீலா மிக்க நன்றி.

நண்டுநொரண்டு மிக்க நன்றி.

asiya omar said...

சே.குமார் வருகைக்கு மகிழ்ச்சி.இப்ப அலைன் வந்தாலும் குழம்பு ரெடியாக இருக்கு.

asiya omar said...

மனோ அக்கா உங்க கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Chitra said...

எனக்கு வெஜ் ஐட்ட குழம்பு வகைகளில் மிகவும் பிடித்த ஒன்று. நாவில் நீர் ஊற வச்சுட்டீங்க.....

மகி said...

aahaa! kaalangkaaththaala jollu vida vaikkareengale asiyakkaa? :P :P

புவனேஸ்வரி ராமநாதன் said...

செம காம்பினேஷன்.

எம் அப்துல் காதர் said...

டைரக்டர் ஆசியா உமர் அவர்களுக்கு!!!!!!!!!

// என் மாமாவிற்கு இந்த வத்தக்குழம்பு செய்தால் மிகவும் பிடிக்கும்.//

அது சரி,, சீக்ரெட் ஆப் சக்ஸஸ் இப்ப தானே விளங்குது. :-)))

சுட்ட அப்பளத்தில் உங்கள் பெயர் போடாததால் நாங்கள் சாப்பிடு வதில்லை என்று சபதம் செய்தி ருக்கிறோம்.

why??
we are using one n only "asia omar's" branded name product only :-)))

asiya omar said...

காஞ்சனா மிக்க நன்றி.

சித்ரா கருத்திற்கு மகிழ்ச்சி.

மகி, அய்யோ!அனுப்பிவைக்கவா?

புவனா மிக்க நன்றி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் நல்ல உன்னிப்பாக பார்க்கறீங்க போல.இப்படி சில சமயம் தவறிவிடுகிறது.அது சரியாக உங்க கண்ணில் மட்டும் பட்டுவிடுகிறது. பேங்க்கில் வேலை பார்ப்பவர்கள் அல்லவா?

அமைதிச்சாரல் said...

ஆஹா!!.. மேட் ஃபார் ஈச் அதர் ஜோடியாச்சே :-))

ஸாதிகா said...

ஆஹா.சுண்டவத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும் மண மணக்கின்றதே.நாங்களும் இந்த காம்பினேஷனில் அடிக்கடி செய்வோம்.

Denzil said...

ovenல சுட்ட அப்பளம்? புதுமையான ஐ
டியா. நாளைக்கே செய்து பார்த்துறேன். (அப்பளம் மட்டும்தான்!). Thanks for sharing!

angelin said...

super combination.parkumbothe pasikkudhu ..

Nithu Bala said...

sundaikaai, sundai vathal ellam sapittu rombha naal achu...kittathatta maranthey pona ninaiyil, niyabagapaduthi vittuteenka..arumaya irukku.

asiya omar said...

ஸாதிகா
denzil
angelin
nithubala

thanks for your visit and comments.

மாதேவி said...

வத்தல் குழம்பும் சுட்டஅப்பளமும் சுவைக்கின்றன.

Geetha6 said...

Madam I feel hungry now after seeing this!!

asiya omar said...

மாதேவி ,உங்களின் சுண்டை காரக்குழம்பை பார்த்தவுடன் தான் எனக்கு வத்தக்குழம்பு செய்யும் ஆர்வம் ஏற்பட்டது.

கீதா வருகைக்கு மகிழ்ச்சி.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Several tips said...

மிகவும் அருமை

RAZIN ABDUL RAHMAN said...

வத்தல் குழம்ப பத்தி,வாசனை வர்ர அளவுக்கு அழகா விளக்கிய சகோ ஆசியா அவர்களுக்கு,பலத்த கரகோஷம்..(கேக்கல'னா நா பொருப்பில்ல ஆமா)

எப்டீங்க..இந்த காம்பினேஷன்லா நம்ம பயபுள்ளைக கண்டுபுடிச்சானுகன்னு தெரியலையே..ஒரே ஒரு குழம்புக்கு எவ்ளோ ஐட்டம் ஆட் பண்ரானுவ..அதுவும்,எல்லா ஒடம்புக்கு நல்லதா பாத்து...தெரமகார பயலுகதான்..
அதும் இல்லாம அந்த குழம்புக்கு ஸைட் டிஷ் வேர பெர்ஃபெக்ட்டா மேச் பண்ரது..

சுண்டக்காய் இருக்கே அத காய்,கனி ஸ்டேஜ்'ல யூஸ்பண்ணவே முடியாது...
அத காயவச்சு மோர்,சிலபல ஐட்டங்கல ஆட் பண்ணி,அவுட்புட் எடுத்து,அதையும் டேஸ்ட்டா சமக்கிறோம் பாருங்க..அங்கதா நாம நிக்கிறோம்..

நன்றி...

தேவன் மாயம் said...

அசத்துங்க!

Kurinji said...

mouthwatering here Asia...
Kurinji

mahavijay said...

veg & non-veg rendume kalakuringa...

ஹாஜி முஹம்மது மஸ்தான் said...

உன்னுடைய செயல் கண்டு மிக்க மகிழ்ச்சியாகவும்,பெருமையாகவும் உள்ளது - அக்காள் செய்யது மீறாள்.

asiya omar said...

several tips
razin
தேவன் மாயம்
குறிஞ்சி
மகா விஜய்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஹாஜி கருத்திற்கு மகிழ்ச்சி.உம்மாக்கு என் ப்ளாக்கை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

Gayathri's Cook Spot said...

Very inviting..

Gopi Ramamoorthy said...

பின்றீங்க போங்க. எல்லா வித சமையலும் உங்களுக்குத் தெரியும் போல!

vanathy said...

சூப்பரோ சூப்பர். படங்கள் அழகு.

Ramani said...

சுட்ட அப்பளமா ? பொறித்த அப்பளமா ?

Mahi said...

Nice Anjarai petti Asiya akka! :)

You know what? I thought of calling you for the thodarpathivu. But somehow missed to include that in the post! ;)

Thanks for the link!

Asiya Omar said...

சுட்ட அப்பளம் தான் ரமணி சார்.

chitra said...

vathakulampu pakkave romba nalla iruku. romba thanks

Radha said...

Migavu suvaiyaga irunthathu.............. Thank you...