Tuesday, December 21, 2010

பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 300 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பாசிப்பருப்பு- 50 கிராம்
மிளகாய் வற்றல் - 4
சீரகம்- அரைடீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு

பீட்ரூட்,வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்,பாசிப்பருப்பை லேசாக வெதுப்பி உதிரியாக வேக வைத்து எடுக்கவும்,சீரகம், 3 மிளகாய் வற்றல் மிக்சியில் சுற்றி,அத்துடன் தேங்காய் சேர்த்து பரபரவென்று அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உ.பருப்பு,மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம்,பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.சிறிது மூடி விடவும்.

பீட்ரூட் வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும்,சிறிது உப்பு சேர்க்கவும்,சிறிது உப்பு கூடினாலும் கடுத்தது போல் ஆகிவிடும்.


அரைத்த தேங்காய்,மிளகாய்வற்றல்,சீரகம் விழுதை சேர்க்கவும்.நன்றாக பிரட்டி பச்சை வாடை போக விடவும்.

நறுக்கிய மல்லி இலை தூவவும்.
சுவையான சத்தான பீட்ரூட் பொரியல் ரெடி.

இது சாதம் சப்பாத்தியுடன் பரிமாற அருமையாக இருக்கும்.

-ஆசியா உமர்.

36 comments:

LK said...

பாசிப் பருப்பு சேர்த்து .. வித்யாசமா இருக்கு

மனோ சாமிநாதன் said...

நன்றாக இருக்கிறது பீட்ரூட் பொரியல் ஆசியா! கேரளாவிலும் கிட்டத்தட்ட இதுபோல செய்வார்கள். சில சின்ன வெங்காயங்களையும் மிக்ஸியில் சுற்றி எடுத்து தாளிக்கும்போதே வதக்கி செய்வார்கள்.

மகி said...

சூப்பரா இருக்கு.பீட்ரூட்டும் இருக்கு,செய்து பார்த்துசொல்றேன் ஆசியாக்கா! :)

ஸாதிகா said...

பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கும் பிடித்த மாதிரி சமைத்துக்காட்டிவிட்டீர்கள் ஆசியா.

asiya omar said...

நன்றி எல்.கே.

மனோ அக்கா கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மகி செய்து பார்க்கவும்,எந்த பொரியல் செய்தாலும் முடிந்தளவு பாசிப்பயறு சேர்க்க பார்ப்பேன்.விரும்பினால் மட்டும் ஒரு சிறிய பல் பூண்டு சேர்க்கலாம்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வித்தியாசமா இருக்கு. இது மாதிரி செய்து பார்க்கணும். சப்பாத்திக்கு பீட்ரூட் சூப்பர்.

myth-buster said...

நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். செய்து பார்க்க வேண்டும். ரெசிபீக்கு நன்றிகள்.

அமைதிச்சாரல் said...

சத்துள்ள பொரியல்..

Gopi Ramamoorthy said...

எனக்கு பீட்ரூட் கொஞ்சம் சாப்பிட்டாலே திகட்டிடும். திகட்டாம இருக்கா ஏதாவது வழி இருக்கா:)

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா, இதே செய்முறை தான் ஆனால் நான் கடலை பருப்பு சேர்த்து செய்வேன், சில சமயம் பருப்பு எதும் சேர்க்காமல் செய்வேன் , என் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த பொரியல். நானும் பொரியல் வகை அனைத்திற்கும் சிறிது பாசிபருப்பு சேர்த்து கொள்வேன்.

வெங்கட் நாகராஜ் said...

பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல் - நல்லா இருக்கும் போல இருக்கே. சிறு வயதில் பச்சையாகவே பீர்ரூட் துருவி சர்க்கரை சேர்த்து சாப்பிடுவேன் - அது நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு நன்றி சகோ..

Priya Sreeram said...

yummy and i also try n add paasi paruppu to my sabzis !

இளம் தூயவன் said...

பீட்ருட் அருமை. உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து.

Geetha6 said...

colourful.
super images.

மங்குனி அமைச்சர் said...

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 100 கிராம் /////

என்னது வெங்காயமா? , அதுவும் 100 கிராமா ? அந்த அளவுக்கு எங்ககிட்ட வசதி இல்லைங்க மேடம்

asiya omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க நன்றி.

புவனா செய்து பாருங்க,உங்களுக்கு பிடிக்கும்.

மித் பஸ்டர் மிக்க மகிழ்ச்சி.

அமைத்திச்சாரல் மிக்க நன்றி.

asiya omar said...

கோபி கொஞ்சம் காரசாரமாக பொரியல் வைத்தால் திகட்டாது.

சாருஸ்ரீ நானும் கடலைபருப்பு சேர்த்து செய்துபார்க்கிறேன்,கடலைபருப்பென்றால் இன்னும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

asiya omar said...

வெங்கட் ,எனக்கும் பீட்ரூட்டை சாலட் மாதிரி சாப்பிட பிடிக்கும்.கருத்திற்கு நன்றி.

ப்ரியா கருத்திற்கு மகிழ்ச்சி.

இளம் தூயவன் கருத்திற்கு மிக்க நன்றி.

கீதா கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

அமைச்சரே !எனக்கு வெங்காயம் இல்லை என்றால் சமையலே முடியாது போல் இருக்கும், இல்லாமலும் சமைக்கலாம்.இந்த பொரியல் அருமையாக இருக்கும்.

சங்கவி said...

படங்களைப் பார்த்ததும் பசிக்குது...

Kurinji said...

romba arumaiya erukku...
Kurinji

சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு அக்கா,செய்து பார்க்க வேண்டும்.

Umm Mymoonah said...

Very healthy poriyal, I can have this everyday.

Gayathri's Cook Spot said...

Super poriyal..

mahavijay said...

different recipe i will try this

mahavijay said...

pls post mutton dalcha...

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.

asiya omar said...

சங்கவி
குறிஞ்சி
சே.குமார்
உம்மைமூனா
மஹாவிஜய்
காஞ்சனா

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

அக்கா இன்னைக்கு இந்த முறையில் தான் பீட்ரூட் பொரியல் நான் இட்லியுடன் சாப்பிட்டு பார்த்துடேன் சூப்பராக இருந்தது...

asiya omar said...

செய்து பின்னூட்டம் தெரிவித்தமைக்கு நன்றி சாரூஸ்ரீ.

vanathy said...

நல்லா இருக்கு உங்க ரெசிப்பி. கடைசி போட்டோ சூப்பர்.

Mahi said...

ஆசியாக்கா,இந்தப்பொரியலை 2 முறை செய்துட்டேன்,போட்டோதான் எடுக்க முடியல.
ரெசிப்பிக்கு நன்றி!

ரமா said...

ஆசியா உங்களோட இந்த பீட்டூட் பொரியல் செய்துபார்தேன்.சூப்பராக வந்தது.டேஸ்டும் சூப்பர்.படம் எடுத்துவைத்திருக்கிறேன்.
நான் உங்க ப்ளாக் பார்ப்பேன். இதுவே முதல்முறை பதிவிடுவது.டைம்தான் சிரமமாக இருக்கிறது.மன்னிக்க.

asiya omar said...

வானதி வருகைக்கு மிக்க நன்றி.

மகி மிக்க மகிழ்ச்சி,பொரியல் செய்து ப்ளாக்கில் போட்டாச்சு போல,பார்த்தாச்சு.மிக்க நன்றி.

asiya omar said...

ரமா உங்கள் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றி.நேரம் கிடைக்கும் பொழுது வாங்க.