Wednesday, December 22, 2010

பேக்(கிங்)கும், ஆனி ஆன்ட்டியும் / Baking & Annie Auntyஅபுதாபியில் இருந்த சமயம் என் மகளை ஆர்ட் & கிராஃப்ட் கிளாஸ்க்கு உமா என்கிற தோழி வீட்டிற்கு அனுப்பி வந்தேன்,அப்படியே அங்கு நானும் தையல் கற்று கொண்டேன்.எத்தனையாவது முறைன்னு யாரோ கேட்கிற மாதிரி இருக்கு? எனக்கே தெரியலை,எல்லாரும் பாவாடை தாவணியில் இருந்து சுடிதாருக்கு மாறினாங்க,நான் மட்டும் என்னவாம்?சேலையில் இருந்து சுடிதாருக்கு மாறினேன், சுடிதார் தைக்க பழகத்தான் போனேன், தைக்க படிக்க பத்து வகுப்புகள், 250 திர்ஹம்,படித்ததோடு சரி,எனக்கு மட்டும் ஒரு சில சுடிதார் தைத்தேன், நான் தைத்த சுடிதார் தான் எனக்கு பிடித்தது, சோம்பல் தான் காரணம்,என்ன செய்ய? எதையும் உருப்படியாக செய்ததாக சரித்திரம் நம்ம கிட்ட இல்லை.

அந்த சமயம் என்னைப்போல் அங்கு வந்த ஆனி ஆன்ட்டியை பார்த்து ஆச்சரியமாக இருந்தது வயது அறுபதுக்கு மேல் இருக்கும்.என்னிடம் ரொம்ப பிரியமாக பழகினாங்க,வீட்டிற்கு வரும்படி அடிக்கடி அழைத்ததால் நானும் சென்று வந்தேன்,அங்கு போனால் ஒரு ஆர்ட் கேலரிக்குள் நுழைந்த உணர்வு.அப்படியொரு அழகாக வீட்டை வைத்திருந்தாங்க,இரண்டு மகன்கள் என்றும் அவர்கள் இருவரும் மருத்துவர்கள் என்றும் ஒருவர் துபாயில்,மற்றொருவர் இந்தியாவில் இருப்பதாகவும்,பொழுது போக எல்லாம் கற்று கொண்டதாகவும், அவர்களின் சுறுசுறுப்பை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சரியம்,போரடித்து இருந்த எனக்கு அவர்கள் பழக்கம் கிடைத்ததும் புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது.

பொதுவாக என்னுடைய நட்பு எப்பொழுதும் என்னுடன் வயது மூத்தவர்களுடன் தான், என்பதாலோ என்னவோ,நிறைய அக்கா,ஆன்ட்டிஸ் பழக்கம். ஆன்ட்டி நிறைய செய்முறை வகுப்புக்கள் பொழுது போக்காக எடுத்து வந்தாங்க.ஒரு பெரிய லிஸ்டே வைத்திருந்தாங்க,சரி என்று நான் பேக்கிங் செலக்ட் செய்து அந்த கிளாஸ்க்கு வருவதாக சொன்னேன்,நான்கு வகுப்பு ஒரு செட் என்றும், முன் பணமாக 200 திர்ஹம் கொடுத்து விட்டால் நான்கு கேக் வகை சொல்லி தருவதாயும்,எதுவும் வகுப்பிற்கு எடுத்து வரவேண்டாம் என்றும் சொல்லியதால் மகிழ்ச்சி.

நானும் வாரம் ஒரு நாள் என்று மாதத்தில் நான்கு நாட்கள் சென்று வெரைட்டியாக கேக்குகள் செய்யவும் கற்று கொண்டேன்,கேக் செய்து 2/3 எனக்கு,1/3 ஆண்ட்டிக்கு என்று பகிர்ந்து கொள்வது வழக்கம்.ஆனால் ஒவ்வொரு நாளும் ஹோம்வொர்க் தருவாங்க மறுவாரம் அவங்க சொன்ன விதமாய் கேக் செய்து எடுத்துட்டு போகனும், ஓவனோ அல்லது குக்கிங் ரேஞ் இருந்தால் கேக் செய்து விடலாம்,ஒரு சில சாமான் வாங்கினால் போதும்,என்று ஒரு பெரிய லிஸ்டே தந்தாங்க,நானும் ஆசையாக வாங்கி கேக் செய்து பார்த்து நன்கு தெரிந்து கொண்டேன்.

அவங்க சொல்லி தந்த விக்டோரியா சாண்ட்விச் கேக் (Victoria Sandwich Cake)என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.சாதாரண ஃபோம் கேக் செய்து அதனை கட் செய்து இடையில் Kissan Jam தடவி லேயர் லேயராக வைத்து மூடி கட் செய்து பரிமாறும் பொழுது குட்டீஸ்கு மிகவும் பிடித்திருந்தது.அப்புறம் தான் தெரிந்தது Kissan Jam காரணம் என்று. இப்ப என்னுடைய குழந்தைகள் வளர்ந்தாலும் கிஸான் ஜாம் மீது உள்ள ஆசை மட்டும் போகவில்லை.


நான் படித்ததை இலவசமாக எனக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்தேன்,ஜாலியாக இருந்தது.என்னுடைய செய்முறை நோட்ஸ் பல இடம் சுற்றி பின்பு தொலந்தே போனதுன்னா பார்த்துகோங்க.நிறைய அவங்க கிட்ட இருந்து கத்துகிட்டேன்,இப்ப அவங்க கேரளாவில் எங்க இருக்காங்கன்னு தெரியலை,என்னோட மெயில் ஐ.டி கொடுத்தேன்,அவங்க ஐ.டி வாங்காமல் விட்டு விட்டேன்,இல்லாட்டி நிறைய டவுட் கேட்டு தெரிந்திருக்கலாம்.
கிறிஸ்துமஸ், புது வருடம் வரவும் ஆனி ஆன்ட்டி நினைவு வந்து விட்டது.
பாத்திரங்கள் என் உபகரணங்கள் பகுதிக்கு இடுகையிட்டு நாளாவதால் என் பேக்கிங் பாத்திரங்கள் பற்றி இங்கு சிலவற்றை பகிர்ந்து இருக்கிறேன்.


இந்த பேக்கிங் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது,இதில் கேக் மாவு ஊற்றி வைத்தால் எடுப்பது ஈசி. 3 பகுதியாக இருக்கும்.

இதில் வெறுமே ரவுண்டாகவும் செய்யலாம்,நடுவில் இடைவெளி விட்டும் செய்யலாம்.இந்த ஹார்ட் பேக்கிங் ட்ரே எனக்கு மிகவும் பிடிக்கும்.


இதுவும் இரண்டு பகுதியாக இருக்கும்.கேக் பேக் செய்து எடுப்பது ஈசி.

கப் கேக் மஃபின் ட்ரே..


மேலும் நான் அடிக்கடி பேக்கிங் செய்ய பயன்படுத்தும் இன்னும் சில பாத்திரங்கள், உபகரணங்கள்.


மெசரிங் கப் வாங்கினேன்..ரொம்ப உபயோகம்.

இந்த மெசரிங் ஸ்பூன் அளவு கரெக்டாக இருக்க வாங்கியது.

இந்த பவுல் எனக்கு மிக்ஸிங் செய்வதற்கு ரொம்ப வசதியாக இருக்கும்.


இது ஐஸிங் டிசைன் செய்ய உபயோகப்படுத்துவது.

இந்த கேக் ஸ்டாண்ட்  அலங்கரிக்கப்  பய்ன்படுத்துவது.

இதெல்லாம் ஆன்ட்டி சொல்லி வாங்கிய பொருட்கள்,எல்லாம் அலமாரியில் தூங்கிட்டு இருந்துச்சு,இப்ப தான் அவைகளை வெளியே எடுத்தேன்.

சரி என்று ப்ளாக்கில் போட்டாச்சு.

கேக் செய்ய ஆர்வம் தான்.பார்ப்போம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்காக என்னுடைய ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட்ஸ் கேக் செய்து பாருங்க.இதனை பார்க்க அறுசுவையை கிளிக் செய்யவும்.இது எனக்கு ஆனி ஆன்ட்டி சொல்லி தந்தது.நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த அந்த கேக்கின் ருசி இன்றும் என் நாவிலும் நினைவிலும் இருக்கு.அருமையாக வந்திருந்தது.


நான் 2008 -ல் அறுசுவையில் கொடுத்த இந்த கேக் ரெசிப்பியை பிரபல தின நாளிதழ் ஒன்று அப்படியே காப்பி பேஸ்ட் செய்து 2009 -ல் போட்டிருக்காங்க பாருங்க.
அதனை பார்க்க இங்கே செல்லவும்(கிளிக்கவும்).அந்த நாளிதழுக்கு நானும் என் பெயரையாவது குறிப்பிடும் படி மெயில் அனுப்பியும்,கமெண்ட்டிலும் தெரிவித்தும் பலனில்லை,இந்த ஒரு ரெசிப்பி மட்டும் இல்லை,இன்னும் சில கேக் ரெசிப்பிக்கள்,மற்றும் பல சமையல் குறிப்பும் காப்பி செய்து போட்டிருக்காங்க,உதாரணத்திற்கு இந்த ஒன்றை மட்டும் கோடிட்டு காட்டி இருக்கிறேன்.எல்லாம் நம்ம மக்கள் தானே பயன்பெறப் போறாங்கன்னு பேசாம இருந்திட்டேன், நமக்கு முட்டி மோத கொம்பு இல்லை.

என்னோட ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கேக்கை செய்து பாருங்க,அருமையாக இருக்கும்.உங்கள் அனைவருக்கும் என்னுடைய
இனிய கிறிஸ்த்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கேக் படம் உபயம் - கூகிள் - நன்றி.
---ஆசியா உமர்.

45 comments:

எல் கே said...

:)

சங்கவி said...

சூப்பர்.....

சாருஸ்ரீராஜ் said...

சூப்பரான பாத்திரங்கள் .நல்ல அனுபவம் ஹி ஹி நானும் தையல் கிளாஸ் போனேன். அவ்வளவு தான்.

Kurinji said...

pathiramum unga anubavmum super.
Kurinji

RAZIN ABDUL RAHMAN said...

சகோ..
அதென்ன ரூ 250 திர்ஹம்...புதுஸ்ஸால இருக்கு...
பழக்கதோஷம்தான..இங்க பொதுவா நம்மளுக்குள்ள பேசிக்கும்போது நாம யாரும் திர்ஹம்ங்ர வார்த்தைய அதிகம் பயன்படுத்த மாட்டோம்..ரூபா தான்..அதன் வெளிப்பாடுன்னு நெனக்கிறேன்..

அப்றோ நீங்க பேக்கரி வச்சுருக்குரத சொல்லவே இல்லையே..
இவ்ளோ ஐட்டம் வச்சுருக்கீங்க..

(just kidding)

அன்புடன்
ரஜின்

Priya Sreeram said...

omg-these baking vessels look sooo good and am sure makes baking more fun !

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி.

asiya omar said...

எல்.கே.வருகைக்கு மகிழ்ச்சி.மிக்க நன்றி.

மிக்க நன்றி சங்கவி.

asiya omar said...

சாருஸ்ரீ வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

குறிஞ்சி மிக்க நன்றி,மகிழ்ச்சி.

asiya omar said...

ரசின் அந்த ரூவை எடுத்து விட்டேன்,குறிப்பிட்டமைக்கு நன்றி.பேச்சு வாக்கு எழுத்திலும் மறதியாக வந்துவிட்டது போலும்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மிக்க நன்றி ப்ரியா.வருகைக்கு மகிழ்ச்சி.

மிக்க நன்றி அக்பர்.வருகைக்கு மகிழ்ச்சி.

Gayathri's Cook Spot said...

Nice recipe. Lovely cake pans..

mahavijay said...

dinakaranla ippadi copyadikiranga cha

super ra eruku cake utensils post ur cake recipes

ஸாதிகா said...

தோழி அல் ஐன் வர்ரேன்.எனக்கும் கேக் ரெஸிப்பி கற்றுக்கொடுக்கறீங்களா?ஆனால் பீஸ் தர மட்டேன்.

Jaleela Kamal said...

ஆசியா பதிவு அருமை.

கேக் உபகரணங்கள் ரொம்ப சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்.

தையல் பற்றி சொல்லும்போது, எனக்கு பல முறை சென்னையில் தையல் கிளாஸ் போயிருந்தாலும்,

இங்கு வந்து ஒரு குஜாராத்தி ஆண்டி பெயர் பாத்திமா. 50 வயது இருக்கும்.

அருமையாக் சுடிதார் தைக்க நேர்த்தியா டெயிலர் தைக்கும் அள்வுக்கு டிரெயின் செய்து விட்டார்கள்,. வாரம் ஒரு கிளாஸ் தான் போக முடியும் என்னால் .
அவர்கள் வீடும் அப்படி தான் அவ்வளவு அழகாக இருக்கும். கத்துக்க போன த விட , அவர்களை அன்று பார்க்க போகிறோம் என்ற எண்ணம் ரொம்ப நல்ல இருக்கும்.

கேக் பற்றி சொல்ல்னுமுன்னா
ஒன்லி ஸ்பாஞ் கேக் லெமன் கேக் மட்டும் தான் செய்வேன்.
பிற்கு உஙக்ள் ,மற்றும் மகி உடைய கேக் செய்து பார்த்தேன் அதோடு ஓவ்னும் ரிபேர்.


தினகரனா, ஹா ஹா இப்ப தான் கொஞ்சம் நாள் முன்பு அங்கு கமெண்ட் மூலமா என் ஆதஙக்ததை தீர்த்தேன்.

இப்ப உஙக்ள் குறிப்புமா?
என்ன செய்ய தினகரன குறை சொல்ல முடியது, இங்கு இருந்து காப்பி பேஸ்ட் செய்து அனுப்புவர்களை தான் அவர்கள் ( அது அறுசுவையிலும், நம் குறிப்புகளிலும் நல்ல ஊறியவர்கள் ட்தான் அனுப்பு கிறார்கள்,)

ஒரு முறை வெப் துனியாவில் என் குற்ப்பு பெயரில்லாமல் அப்ப திட்டி மெயில் போட்டதுக்கு, எங்களுக்கு தெரியாது மேடம் அனுப்பு கிறார்கள் போடுகிறோம் என்றார்கள்

ஸாதிகா said...

வீட்டு உபயோக உபகரணங்கள் போட்டு ரொம்ப நாளாச்சு என்று பார்த்தேன்.பகிவுக்கு நன்றி.அருமையான பாத்திரங்கள்.

ஸாதிகா said...

///எல்லாம் நம்ம மக்கள் தானே பயன் பெறப் போறாங்கன்னு பேசாம இருந்திட்டேன்.நமக்கு முட்டி மோத கொம்பு இல்லை// ஆஹா..தோழி அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவுகளா இருக்கீங்களே!!!சும்மா சொல்ல கூடாது..உங்களுக்கு கிரவுண்ட் கணக்கிலே..இல்லை,இல்லே..ஏக்கர் கணக்கிலே பெரிய மனசுதான்.

asiya omar said...

thanks gayathri for your loving comments.

thanks maha for your comments and your frequent visits.

asiya omar said...

ஜலீலா வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.ஜலீலா நிறைய புதியதாக முயற்சி செய்து எவ்வளவு குறிப்புக்கள் கொடுத்து இருக்கீங்க,உங்களையெல்லாம் பார்த்து தான் குறிப்பு கொடுக்கும் ஆசையே வந்தது.ஊக்கம் கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே!

asiya omar said...

ஸாதிகா உங்கள் அடுக்கடுக்கான கருத்துக்கள் பார்த்து மிக்க சந்தோஷம்.நேரில் பேசுவது போல் இருக்கிறது. வாங்க,சேர்ந்து இரண்டு பேரும் இன்னும் நிறைய கற்று கொள்ளலாம்.

அமைதிச்சாரல் said...

பண்டிகைக்கால குறிப்பு.. நல்லாருக்கு.

ஐத்ருஸ் said...

இப்போதுதான் உங்கள் ப்ளாகுக்கு வருகிறேன். திருட்டு பயமா படங்களுக்கும் காப்புரிமை வைத்திருக்கிறீர்கள்.

கோவை2தில்லி said...

நல்ல பகிர்வு. நான் என் மாமியாரிடமிருந்து தையல் கொஞ்சம் கற்றுக் கொண்டுள்ளேன். திருமணமானதிலிருந்து இதுவரை என் மாமியாரே எனக்கு பிளவுஸ் தைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல இடுகை சகோ. கேக் செய்ய பயன்படும் உபகரணங்கள் படம் போட்டு கடைசியாய் கேக் படமும் போட்டு இருந்தீங்க. கேக் எடுத்து சாப்பிட்டேன் ரொம்ப நல்லா இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

நல்ல பகிர்வு

தேவன் மாயம் said...

பார்க்க நல்லாயிருக்கு!

தேவன் மாயம் said...

ஆனி ஆண்டி எங்கிருந்தாலும் உடன் மேடைக்கு வரவும்!

vanathy said...

எனக்கும் தையல், கேக், கைவேலைகள் எல்லாமே கற்றுக்கொள்ள ஆசை ஆனால் பொறுமை குறைவு.
கேக் ட்ரேக்கள் எல்லாமே சூப்பரா இருக்கு.
ரெசிப்பி திருட்டு - சும்மா வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். திருடும் ஜென்மங்கள் திருந்தினால் தான் உண்டு.

angelin said...

wow ! cake trays are nice .
i like the heart shaped one.
i am going to try your cake recipe this year.
.WISH YOU A HAPPY PROSPEROUS NEW YEAR

ஆமினா said...

இப்படிலாம் விதவிதமா நிறைய ஜாமான் வாங்க கடைக்கு போவேன். ஆனாலும் காசையும் பாத்திரங்களையும் பார்த்துட்டு பாத்திரத்தை அப்படியே பத்திரமா வச்சுட்டு பணத்த சேவிங்க்ஸ்ல சேர்த்துடுவேன் (வேற எந்த சேவிங்க்ஸ்ன்னு கேக்காதீங்க ஆசியா)

அழகா இருக்கு!!

என் பேருல இருக்குற ஆனி ஆண்டியை விஷாரித்ததா சொல்லுங்க

எம் அப்துல் காதர் said...

// எத்தனையாவது முறைன்னு யாரோ கேட்கிற மாதிரி இருக்கு?//

யாரது??

//அவங்க சுடிதார் தைக்க பழக கொடுத்த காசை எனக்கு பேக்கிங் சொல்லி தந்து வசூலித்து கொண்டது வேறு விஷயம்.//

பார்ரா...!!

//பொதுவாக என்னுடைய நட்பு எப்பொழுதும் என்னுடன் வயது மூத்தவர்களுடன் தான், என்பதாலோ என்னவோ,நிறைய அக்கா,ஆன்ட்டிஸ் பழக்கம். //

அட்ரா சக்கைன்னானாம். வயசை குறைத்து காட்டிக் கொள்ள இது ஒரு யுக்தியா?? ம்ம்ம்ம் ...

//என்னோட மெயில் ஐ.டி கொடுத்தேன்,அவங்க ஐ.டி வாங்காமல் விட்டு விட்டேன்,இல்லாட்டி நிறைய டவுட் கேட்டு தெரிந்திருக்கலாம்.//

அவங்க ஞாபகமா, ஒரு மெயில் தயார் பண்ணி, அவங்களுக்கு போடுறதா நெனச்சிக்கிட்டு, உங்க மெயில் id கே ஒன்னு போட்டுக்க வேண்டியது தானே!!(சாரி இது சும்மா தமாஸுக்கு.) உங்க பீலிங்க்ஸ் தெரியுது. நிறைய நேரம் இது மாதிரி நடப்பது சகஜம் தான். விடுங்க!!

asiya omar said...

அமைதிச்சாரல் கருத்திற்கு மிக்க நன்றி.

ஐதுரூஸ் முதல் வருகைக்கு நன்றி.

asiya omar said...

கோவை2தில்லி

வெங்கட் நாகராஜ்

காஞ்சனா

தேவன் மாயம்

வானதி

தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

S.Menaga said...

very nice akka!!

asiya omar said...

ஏஞ்சலின் உங்கள் கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.இதை இதைதான் எதிர்பார்த்து இந்த இடுகை முன்பே பதிவு செய்தேன்.

ஆமினா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.சிக்கனமாக சேமித்து அதன் பயனை அடைய வாழ்த்துக்கள்.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் கருத்திற்கு மிக்க நன்றி.வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கற்றுகொள்ள எவ்வளவோ இருக்கு.

மகி said...

நல்லஅனுபவங்கள் ஆசியாக்கா! பேக்கிங் பொருட்கள் எல்லாமே அழகா இருக்கு!

கிறிஸ்மஸ் அன்ட் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

asiya omar said...

மேனகா உன்னை பார்க்க முடியலையேன்னு ரொம்ப தேடிட்டு ப்ளாக் வரை வந்து சென்றேன்.வருகைக்கு மகிழ்ச்சி.

asiya omar said...

மகி,வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.நீ மட்டும் பக்கத்தில் இருந்தால் உன்னிடம் பேக்கிங் பற்றி நிறைய கற்றுக்கொள்வேன்.

சே.குமார் said...

நல்ல பகிர்வு.

Geetha6 said...

வாழ்த்துகள் ! கேக் அருமை .

Magia da Inês said...

♥♫ Querida amiga,

"Que o Natal não seja apenas uma data... mas um estado de espírito a orientar nossa vida... e que o amor se renove a cada ano da nossa convivência."

♫♫♫ Feliz Natal!!!


…………(¯`O´¯)
…………*./ | \ .*
…………..*♫*.
………, • '*♥* ' • ,
……. '*• ♫♫♫•*'
….. ' *, • '♫ ' • ,* '
….' * • ♫*♥*♫• * '
… * , • Feliz' • , * '
…* ' •♫♫*♥*♫♫ • ' * '
' ' • . Navidad . • ' ' '
' ' • ♫♫♫*♥*♫♫♫• * ' '
…………..x♥x
…………….♥

Bj♥s

Krishnaveni said...

cake looks so pretty, awesome work

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு "அவார்ட்" கொடுத் திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

asiya omar said...

சே.குமார் மிக்க நன்றீ.
கீதா6 மிக்க நன்றி.
thanks magia
கிருஷ்ணவேணி மிக்க நன்றி.
அப்துல் காதர்
விருதிற்கு நன்றி.மகிழ்ச்சி.