Monday, December 27, 2010

மாங்காய் மீன் குழம்பு

தேவையான பொருட்கள்;
மீன் - அரை கிலோ
மாங்காய் - 1
சின்ன வெங்காயம் - 15
அல்லது பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 6 பல்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1- ஒன்னரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 சிறிய கப்
அல்லது அரைத்த தேங்காய் விழுது - 3 டேபிள்ஸ்பூன்
மல்லி கருவேப்பிலை - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரைஸ்பூன்
வெந்தயம் - அரைஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மீனை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் உப்பு போட்டு அலசி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு,மல்லி இலை பொடியாக நறுக்கி வைக்கவும்.சதை பற்றான கொட்டையில்லாத சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.புளி ஊறவைக்கவும்.தேங்காய் அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காயவும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்,தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து மூடவும்,நன்கு மசிந்து விடும்,அத்துடன் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும்.மசாலா வாடை அடங்கி மணம் வரவேண்டும்.

நன்கு கொதி வரவும் மீனை போடவும்.


சிறிது கொதி வரவும் நறுக்கிய மாங்காய் சேர்க்கவும்.மாங்காயும் மீனும் வெந்து வரும்.



அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.நன்கு கொதிவரவும் அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் மேல் வரவும் குழம்பு ரெடி. விரும்பினால் மல்லி இலை தூவி இறக்கவும்.


சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி,நறுக்கிய மாங்காய்,சிறிது நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்வதால் குழம்பு சூப்பராக இருக்கும். காரத்திற்கு தகுந்தபடி மிளகாய்த்தூளை குறைத்து கொள்ளலாம்.


--ஆசியா உமர்.




30 comments:

Gopi Ramamoorthy said...

வெறும் அசைவமா இல்லாமல், கூட ஒரு காயும் இருந்தா எனக்கு எப்பவுமே புடிக்கும்.

மாங்காய் புளிப்பில் மீன். நல்ல வித்தியாசமான டேஸ்டா இருக்கும்னு தோணுது.

ஹர்ஷினி அம்மா said...

ஆசியா அக்கா பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு... இந்த வாரம் கண்டிப்பக இந்த குழப்பு இருக்கும்.

சசிகுமார் said...

கோவில் யாத்திரை எல்லாம் முடிந்தது இனி ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான் நம்ம அக்கா உதவியோடு.

அமைதிச்சாரல் said...

ரொம்பவே நல்லாருக்கும். எங்கம்மா நெத்திலிமீன் போட்டு செஞ்சுதருவாங்க.

தமிழ்தோட்டம் said...

ரொம்ப அருமையா இருக்கு சமையல் குறிப்புகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ஸாதிகா said...

மீன் குழம்புக்கு மாங்காயும்,கறிக்குழம்புக்கு உருளைக்கிழங்கும் செம காம்பினேஷன்.அதிலும் நீங்க செய்து காட்டியது அசத்தல் ஆசியா.

சே.குமார் said...

இது எங்கள் அம்மா செய்வார்கள் அக்கா. நான் சாப்பிட்டு இருக்கிறேன். அருமையா இருக்கும்.

asiya omar said...

கோபி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

ஹர்சினி அம்மா வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.நலமா?நிச்சயம் செய்து சாப்பிட்டு பாருங்க.

asiya omar said...

சசி குமார் கருத்திற்கு மகிழ்ச்சி.

அமைதிச்சாரல் மிக்க மகிழ்ச்சி.நெத்திலி மீன் குழம்பும் சூப்பராக இருக்கும்.

asiya omar said...

தமிழ்தோட்டம் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

asiya omar said...

ஸாதிகா கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

சே.குமார் கருத்திற்கு மகிழ்ச்சி.

jagadeesh said...

அருமையான ரெசிப்பீ அக்கா.

ஆமினா said...

மாங்காய் போட்டா? நாக்கு ஊறுதுங்க!!!

angelin said...

this is my favourite dish asiya.
enga amma ippadithaan seyvaanga.
thanks for sharing this tasty ,yummy,
recipe.

Kurinji said...

Superb combination...
Kurinji

Kanchana Radhakrishnan said...

Presnet asiya.

சங்கவி said...

பதிவ பார்த்ததும் பசிக்குதுங்க...

பதிவுலகில் பாபு said...

பார்க்கும்போதே பசிக்குதே.. ம்ம்ம்.. சூப்பர்..

இளம் தூயவன் said...

செய்முறை மற்றும் படங்கள் அருமை.

vanathy said...

Wow! looking delicious.

RAZIN ABDUL RAHMAN said...

அக்கா,மாங்கா மீனோட காம்பினேஷன்,நல்லாத்தான் இருக்கு..மாங்காய் புளிப்போட மீன் ஃfலேவர் மாறிடாது??..

ஆனா டிஸ்ச பாக்கும் போது நல்லாவே இருக்கும்னு தோனுது..

சமையலும்,படங்களும்,பதிவும்,குறிப்பும்தொகுப்பும்,அருமை..

அன்புடன்
ரஜின்

asiya omar said...

ஜெகதீஸ்
ஆமினா
ஏஞ்சலின்
குறிஞ்சி
காஞ்சனா
சங்கவி
பாபு
இளம்தூயவன்
வானதி
ரஜின்

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

revathi said...

I am so glad to visit your blog....I am so happy... "mangai meen kuzhambu"...Enna solla, epadi solla...pasiyai thoonduthu...I am very happy to follow you...please do visit my space and let me know what you think..
Reva.
www.kaarasaaram.com

ஹர்ஷினி அம்மா said...

"மாங்காய் மீன் குழம்பு" தான் இன்னைக்கு எங்க வீட்லே ரொம்ப சுவையாக இருந்தது அக்கா...குறிப்புக்கு நன்றி :-)

asiya omar said...

ரேவதி வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

ஹர்ஷினி அம்மா குழம்பு செய்து பார்த்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

mahavijay said...

இந்த குழம்பில் மீனை விட மாங்காய்க்கு
ருசி அதிகம்.உங்க blog வந்தாலே பசி வந்துவிடுகிறது...

எம் அப்துல் காதர் said...

இந்த குளிர் நேரத்துல மீன் வாங்க போகனுமான்னு இருந்தேன். பார்த்தவுடன்.. ம்ம்ம்ம்!! போறேன்... போறேன்.. சூப்பர்!!

asiya omar said...

மஹா விஜய் கருத்திற்கு மகிழ்ச்சி.

asiya omar said...

சகோ.அப்துல் காதர் செய்து சாப்பிட்டுவிட்டு நிறை குறைகளோட கருத்து சொல்லுங்க.மகிழ்ச்சி.