Wednesday, December 29, 2010

விஜியின் அழைப்பு - புத்தாண்டு தொடர் பதிவு

அன்புடன் அனைவருக்கும் இனிய புத்தாண்டு (2011) நல்வாழ்த்துக்கள்.

"2010" வருட டைரி மற்றும் ‘2011-ல் நீங்கள் சாதிக்க அல்லது விரும்புகிற எண்ணங்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த வருடமாவது இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்று கற்பனையுடன் கனவு காண்பது வழக்கம். இந்த வருடமும் நிறைய எண்ணங்கள் இருக்கு.
2011 –ல் என் மகனின் கல்லூரி வாழ்க்கை ஆரம்பமாகப் போகிறது, என் மகள் பத்தாம் வகுப்பு, எல்லாம் வல்ல இறைவன் அருளால் எந்த இடையூறும் இல்லாமல் என் மகனின் கல்லூரி,மற்றும் மகளின் பள்ளி வாழ்க்கையும் வெற்றிகரமாக நல்லவிதமாக இருக்கவேண்டும் என்பது தான் எங்களின் முதல் எண்ணம்.
இரண்டாவது எண்ணம் என்னுடைய எடையை குறைக்க வேண்டும்,வருஷம் வருஷம் எடையை குறைக்கிறேன்னு சபதம் எடுத்து குறைத்தபாடில்லை,என்ன செய்வது? எடையை குறைத்தால் ஒட்டியாணம் வாங்கித் தருவதாய் ஒருத்தர் ஒத்த காலில் நிற்கிறார்.எப்படியாவது இந்த வருடமாவது அவர் சொன்ன அளவு எடையை குறைக்க வேண்டும் என்ற வைராக்கியம், பார்ப்போம்.

2010 டயரி குறிப்பு :
ஜனவரி :
முந்தைய வருடம் நெல்லையில் மாமாவிற்கு உடல் நலமில்லை என்று இருந்ததால் எல்லாருக்கும் வந்த சிக்கன் குனியா எனக்கும் வந்து என்னை முடக்கி போட்ட சோகம் மறக்க முடியாதது.

பிப்ரவரி : சிக்கன் குனியாவினால் பாதிக்கபட்டதால் பொழுதும் போகாமல் சோகத்தில் இருந்து மீள இந்த சமைத்து அசத்தலாம் ப்ளாக் ஆரம்பித்த சந்தோஷமான மாதம்.

மார்ச்: மாமாவும் உடல் நலம் தேறி வெளியே போகவர இருந்தது மகிழ்ச்சி.ப்ளாக் நிறைய நேரத்தை எடுத்து கொண்டது.

ஏப்ரல்: -யு.ஏ.இ கிளம்ப ஏற்பாடு,ரொம்ப பிஸியாக கழிந்த மாதம். 15 ம்தேதி மகனையும் அவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.மகள் ஸ்கூல் சேர்த்தது,ப்ளாக் இடுகைகள் தொடர்ந்தது, அப்புறம் மிக முக்கிய செய்தி பிரபலபதிவர் ஸாதிகாவின் அமீரக வருகை, அவரை துபாயில் சென்று சந்தித்தது தோழி ஜலீலா, மனோ அக்கா மற்றும் பலரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது.அடுத்த நாள் ஸாதிகா அல் ஐன் வந்த பொழுது என்னை பார்க்க வந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

மே:- ப்ளாக்கில் 30 இடுகை போட்டு அசத்தினேன்,என்னுடைய திருமணநாள் கொண்டாட்டம்.அதன் பிறகு மங்களூர் விமான விபத்து மனதை பிரட்டி போட்டதும் நிஜம்.நெல்லையை சேர்ந்த ஜாஸ்மின் என்ற மாணவி பத்தாம் வகுப்பில் முதலாக தேர்வு பெற்றது மகிழ்ச்சியை தந்தது.

ஜூன்: –தொடர்ந்து ஜூனிலும் 30 இடுகை.என்னுடைய நூறாவது பதிவு, முதல் கதை ஆஷாகுட்டியை எழுதினேன் என்பதும் மகிழ்ச்சி. பிள்ளைகளின் பரீட்சை முடிந்து விடுமுறை,ஊர் கிளம்ப ஆயத்தம்.

ஜூலை:- விடுமுறையை கழிக்க நெல்லை வருகை. என் கணவரின் பிறந்தநாள், அடுத்த மகிழ்ச்சியான நிகழ்வு அண்ணன் மகனுக்கு அக்காள் மகளை திருமணம் செய்தது இரண்டும் சொந்தம் என்பதால் திருமண கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக கழிந்தது. 2003 –ல் கிரகப்பிரவேஷம் செய்து அதன் பின்பு ஒரிரு வருடங்கள் தங்கி பின்பு பூட்டிய வீட்டை திறந்து திரும்ப சொந்தம் பந்தம் நட்பு என்று 300 நபர்களை அழைத்து எங்கள் வீட்டு விசேஷத்தில் ஒரு பெரிய கெட்டுகெதர், விருந்து விசேஷம் என்று மகிழ்ச்சியாக கழிந்த மாதம்.
ஆகஸ்ட்: – திரும்ப யு.ஏ.இ பயணம்.கோடை விடுமுறை என்றாலும் பையன் +2 என்பதால் டியூசன் படிப்பு என்றும் .நோன்பு மாதம் என்பதால் நேரம் வேகமாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.என்னுடைய பிறந்த நாளும் இந்த மாதம் தான்.

செப்டம்பர்:- புனித நோன்பு பெருநாள் கொண்டாட்டம், விடுமுறை என்று சந்தோஷமாக கழிந்தது.எந்திரன் படம் ரிலீஸ் வேறு தமிழ் நாட்டை அல்லோகலப்படுத்தியதை மறக்க முடியுமா?

அக்டோபர்:- என் இரண்டு குழந்தைகளின் பிறந்த தினங்கள் கொண்டாட்டம்,ப்ளாக்கில் 200 வது பதிவு.
நவம்பர்: – கொஞ்சம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சரியானது.தொடர்ந்து அக்காவின் யு.ஏ.இ வருகை,ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறை கொண்டாட்டம், பிக்னிக்ஸ் என்று மகிழ்ச்சியாக கழிந்தது.
டிசம்பர்: – யு.ஏ.இ யின் தேசிய தின கொண்டாட்டம் விடுமுறை,விண்டர் ஹாலிடேய்ஸ், படிப்பு என்று குழந்தைகளுடன் நேரம் கழிந்து கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த வருடம் நிறைய நல்ல விஷயங்கள் மற்றும் மறக்க முடியாத சம்பவங்களும் நடந்தது.

பிறக்கின்ற புது வருடத்தில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று புதுப்பொலிவுடன் நிறைவான வாழ்க்கை வாழ என் நல்வாழ்த்துக்கள்.
விஜி நிறைய தகவல்கள் கேட்டிருந்தாங்க,நானும் அப்ப அப்ப ப்ளாக்கில் பகிர்ந்து கொண்டு வந்தமையால் திரும்ப ரிப்பீட் செய்தால் போரடித்து விடும்.
இந்த தொடர் குறித்த விபரத்தை தோழி விஜியின் ப்ளாக் சென்று பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். (கிளிக்கவும்)
விஜி பத்து நபர்களை ஏற்கனவே அழைத்து இருக்காங்க.
நான் இதனை தொடர அழைப்பது மனோஅக்கா,மேனகா,மகி,புவனேஸ்வரி,கௌசல்யா,வானதி,அஸ்மா,ஆமினா,சகோ.எல்.கே,சகோ.இளம் தூயவன்.

--ஆசியா உமர்.

36 comments:

வெங்கட் நாகராஜ் said...

பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Priya Sreeram said...

What a Read ! loved it ---hope u cross many more milestones in the year ahead ! wishing u & Family a Great 2011

அமைதிச்சாரல் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியா.

Kousalya said...

தோழி தொடர் பதிவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்களா...? நன்றி தோழி.

புத்தாண்டு வாழ்த்துக்கள் , புது வருடம் உங்களுக்கு எல்லா சந்தோசத்தையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்.

இளம் தூயவன் said...

ரொம்ப அருமையாக வெளிப்படையாக மனதில் பட்டதை எழுதி உள்ளீர்கள். உங்கள் தொடர் பதிவு அழைப்பை ஏற்று கொள்கிறேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையாக உங்களுடைய சந்தோச தருணங்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். இனி பிறக்கப்போகும் புத்தாண்டில் எல்லா வளமும் இறைவன் அருளால் பெற்று வளமோடு வாழ்த்துகிறேன்.

மிக்க மகிழ்ச்சி ஆசியாக்கா. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

தொடர்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி ஆசியாம்மா. "பதிவுலகில் நான்" என்ற தலைப்பில் நீங்கள் அழைத்த பதிவை நான் தொடராததற்கு மன்னிக்கவும். பதிவுலகில் புதிது என்பதால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. இந்த தொடர்பதிவை நிச்சயம் தொடர்கிறேன். நன்றி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

இனிய தருணங்களை மகிழ்வாய் பறிமாறிய உங்கள் எழுத்து நடை அசத்தல்தான் ஆசியா.இனி வரும் நாளெல்லாம் இனிதாய் மகிழ வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

டைரிஎல்லாம் எழுதுவீங்களா? நல்ல பழக்கம் தான். நாமே ஒரு டைரி தான் என்று எழுதுவதில்லை :-))) மகள் மகன் எல்லாம் நல்லா வருவாங்க dont worry mom. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

எல் கே said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி. விரைவில் எழுதுகிறேன்

ஆமினா said...

இந்த வருஷத்துக்குள்ளையே எழுதணூமா???????

சீக்கிரமே எழுத முயற்சி செய்கிறேன். ஆனா கண்டிப்பாக தொடர்கிறேன் ஆசியா!!!

chelas said...

வாழ்த்துக்கள் madam.

Geetha6 said...

Happy New Year

கோவை2தில்லி said...

பகிர்வுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

சுக துக்கங்களை நன்றாக பகிர்ந்து உள்ளீர்கள், அடுத்த வருடமும் உங்களுக்கு மகிழ்ச்சியாக கடக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆசியா.

Gopi Ramamoorthy said...

புத்தாண்டு வாழ்த்துகள் சிஸ்டர்:)

mahavijay said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
உங்கள் கனவுகள் நிஜமாக வாழ்த்துகள்..

angelin said...

very nice .thanks for sharing.
wish you and your family a blessed happy ,prosperous 2011

Kanchana Radhakrishnan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Akila said...

wishing you and your family a fantastic and prosperous new year ahead dear....

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி.புத்தாண்டு வாழ்த்துகள்.

Vijisveg Kitchen said...

asia very good writing.
Really u are the geat.

நான் இப்போது தான் ப்ளாக் பக்கம் வந்தேன். என்னோட கம்யூட்ட ப்ராப்ளமானதினால் வர இயலவில்லை.
மன்னிக்கவும்.

ரொம்ப நன்றாக ஒவ்வொரு மாதத்தையும் குறிப்பாக மறவாமல் நினைவு வைத்து எழுதியுள்ளாதை நான் மனதார பாராட்டுகிறேன்.
2011 ல் எல்லாம் வல்ல இறைவன் எந்த குறையுமில்லாமல் வாழ்க்கைய சந்தோஷமாக வைக்க நானும் வேண்டுகிறேன்.
உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி.நன்றி. என் தொடர்பதிவை ஏற்று அழகான எழுத்தில் அசதிட்டிங்க.

revathi said...

"Happy New Year" to you and your family...very nice write up.... Padikarathukku romba nallaa irunthathu... Itha puthaandu iniya tharungalal niraiyattum..
Reva.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

உங்கள் இலட்சியங்கள் நிறைவேறவும், புத்தாண்டு இனிதாக அமையவும் என் வாழ்த்துக்கள்!

Magia da Inês said...

° • ♫ "Happy MMXI !!!...
°º ♫°° ♫♫ Feliz Ano Novo!!!!...
° ·. •*• ♫

Bj♥s
Brasil °º♫
°º
° ·.

மனோ சாமிநாதன் said...

தொடர்பதிவிற்கு என்னை அழைத்திருப்பதற்கு அன்பு நன்றி ஆசியா!
உடனேயே எழுத முடியவில்லை. எப்படியும் சில நாட்களில் எழுதி விடுகின்றேன்.

ஹைஷ்126 said...

அருட்பேராற்றலின் கருணையினால்

தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

இப் புத்தாண்டு முதல்

உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்

பெற்று வாழ்க வளமுடன்.

asiya omar said...

வாழ்த்தும் கருத்தும் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

Mahi said...

Wish you a very Happy New Year Asiya akka!

2010 memories are nice to read! Tkz for linking me.

kasthurirajam said...

beautiful.Belated wishes for the happy and properous new year 2011

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. வருடம் முழுக்க நடந்ததை.. மாதம் விடாமல் படித்தேன்..
உங்க குழந்தைகள்.. எதிர்காலம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்.. :-)

அப்புறம் அந்த எடை குறைப்பு சமாச்சாரம்.. எல்லாரும் நியூ இயர்-ல எடுக்கிற சபதம் தான்னு நினைக்கிறேன்..
இந்த வருசமாவது.. அந்த ஒட்டியாணம் வாங்கி விடுங்க.. :-)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

Jaleela Kamal said...

அருமை.
எடைக்குறைப்பு நானும் தான் ஆனால் ஒரு மாததுக்கு மேல் பின்பற்ற முடியாது