Tuesday, December 28, 2010

தமிழ்மண விருதுகள் -இரண்டாம் சுற்று.

பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் போட்டியில் இரண்டாம் சுற்றில் என் சிறுகதையான எம்மா -வும் இடம் பெற்று இருக்கு.கதையை படித்து பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.வாக்களிக்க இங்கு செல்லவும்.





சகோ. அப்துல்காதர் வழங்கிய ஆஹா பக்கங்களின் அட்டகாசமான விருதுகள். மிக்க நன்றி. மகிழ்ச்சி. இது காயத்ரி குக்ஸ்பாட் வழங்கிய அழகான விருது. மிக்க நன்றி. மகிழ்ச்சி.
இந்த விருதை பெற்றுக்கொள்ள என்னை பற்றி ஏழு விஷயம் சொல்லனுமாம். உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கிறேன்.
1. சொந்த ஊர் நெல்லை மாவட்டம். வசிப்பது அல் ஐன்- யு.ஏ.இ.
இப்போதைக்கு சமையற்கட்டே உலகம்னு வாழ்க்கை ஓடிகிட்டு இருக்கு.சமைப்பதும் பரிமாறுவதும் பிடித்தமான ஒன்று.
2. சொந்த பந்தம் நட்பு என்று என்னை சுற்றி பெரிய பாசக்கார வட்டமே இருக்கு.
3. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தூங்குவது, அதனால தூங்கு மூஞ்சி நினைச்சிடாதீங்க.சுறுசுறுப்புக்கு மறுபெயர் கூட நான் தான் என்றும் வைத்து கொள்ளலாம்.தூங்கி விழிக்கும் பொழுது கிடைக்கிற புத்துணர்ச்சியே தனிதான்.
4. அழகானவர்களை விட அன்பானவர்களை ரொம்ப பிடிக்கும்.
5. பொழுதுபோக்காக புத்தகம் படிப்பது ஆனால் இப்ப ப்ளாக்கே என் நேரத்தை எடுத்து கொள்கிறது.
6. விருப்பையும் வெறுப்பையும் நெருங்கியவர்களிடம் உரிமையோடு உடனே காட்டிவிடுவது என் இயல்பு.
7. தனிமை கிடைக்கும் பொழுது இறைவனை வழிபடுவது பிடிக்கும்.
இந்த விருதுகளை வெங்கட் நாகராஜ்,ஜெகதீஸ்,மஹா,சாருஸ்ரீ ஆகியவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மறக்காமல் உங்களை பற்றியும் சொல்லுங்க.
--ஆசியா உமர்.


31 comments:

ராமலக்ஷ்மி said...

இறுதிச் சுற்றில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் ஆசியா.

நெல்லை கைமணம்தான் உலகெங்கும் வீசிக் கொண்டிருக்கிறதா? சந்தோஷம்:)!

Gayathri's Cook Spot said...

Thank you so much...

vanathy said...

congrats, akka.

asiya omar said...

ராமலஷ்மி வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

காயத்ரி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஆஹா சூப்பர் விருது.. சுயவிவரம் அருமை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் மா..

asiya omar said...

வானதி வாழ்த்திற்கு நன்றி.மகிழ்ச்சி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

தமிழ்மணம் விருதுகள் பெற வாழ்த்துக்கள். எனக்கும் அவார்டா? உங்கள் விருதிற்கு மிக்க நன்றி. என்னைப் பற்றியும் எழுதணுமா? சரி எழுதிடுவோம்…. :)

ஸாதிகா said...

இறுதிச்சுற்றில் வெற்றி கிட்ட வாழ்த்துக்கள் தோழி.உங்களைப்பற்றி சொல்லும் பொழுது இதனையும் சேர்த்து சொல்லி இருக்கணும்.”நான் ரொம்ம்ம்ம்ம்ப மென்மையானவர்”என்று.

mahavijay said...

i like 4 & 6 points

அமைதிச்சாரல் said...

வெற்றிக்கும் விருதுக்கும் வாழ்த்துக்கள் ஆசியா.

சிநேகிதன் அக்பர் said...

நெல்லைக்காரங்கள்லாம் ரொம்ப நல்லவங்க போல :)

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

விருது பெற்றதற்கும் வாழ்த்துகள்

Gopi Ramamoorthy said...

வாழ்த்துகள், ஓட்டுப் போட என்ன குடுப்பீங்க:)

asiya omar said...

தேனக்கா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

புவனேஸ்வரி மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.

ஸாதிகா வாழ்த்திற்கு மகிழ்ச்சி.உங்க கதையும் இருக்கு.வாழ்த்துக்கள்.

மஹாவிஜய் கருத்திற்கு மிக்க நன்றி.

asiya omar said...

அமைதிச்சாரல் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.

சிநேகிதன் அக்பர் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.

கோபி வெற்றி பெற்ற பின்பு பார்ப்போமே!வருகைக்கு நன்றி.

Mahi said...

வாழ்த்துக்கள் ஆசியாக்கா!

jagadeesh said...

மிக்க நன்றி அக்கா, உங்க அன்புக்கும், விருதுக்கும்.

ஆமினா said...

விருதுக்கும் தமிழ்மண தேர்வுக்கும் வாழ்த்துக்கள்

சே.குமார் said...

தமிழ்மணம் விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

myth-buster said...

வென்றிட வாழ்த்துக்கள்.

எல் கே said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

தமிழ்மண விருது பெற வாழ்த்துக்கள்.

இளம் தூயவன் said...

இறுதி சுற்றில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

asiya omar said...

மகி
ஜெகதீஸ்
ஆமினா
சே.குமார்
மித்பஸ்டர்
எல்.கே
கோவை2தில்லி
இளம் தூயவன்

அனைவரின் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஜிஜி said...

சுயவிவரம் அருமை.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

asiya omar said...

நன்றி,ஜிஜி,வருகைக்கு மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் said...

தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்துகள்!! ஆமா விருது நாலு பேருக்கு மட்டும் தானா? கூடுதலா இன்னும் கொஞ்சம் பேருக்கு தான் கொடுத்தா என்ன?

asiya omar said...

சகோ.அப்துல் காதர் நீங்க தான் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்து விட்டீர்களே,வருகைக்கு மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

வாழ்த்துகக்ள்.
உங்களை பற்றி அறிந்ததில் சந்தோசம்,