Tuesday, December 14, 2010

டோக்ளா - Dhokla


டோக்ளா குறிப்பை அகிலாவின் Dish Name Starts With D -Event - டிற்கு அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 150 கிராம்
பச்சை மிள்காய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன்
சோடா உப்பு- கால்ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1டீஸ்பூன்
கடுகு - அரைஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரைஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
பெருங்காயம் - 2 பின்ச்


கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து எடுக்கவும்.

அத்துடன்,இஞ்சி,பச்சை மிளகாய்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்தில் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்கவும்.

மாவுடன் சோடா உப்பு கரைத்து விட்டு நன்கு கலந்து
விடவும்.கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்.
குக்கரில் வைக்கும் படியான ஒரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் தடவி அதனில் அரைத்த கொண்டைக்கடலையை வைக்கவும்.

குக்கரின் அடியில் தண்ணீர் விட்டு தட்டு போட்டு டோக்ளா மாவு ரெடி செய்த பாத்திரத்தை வைக்கவும்.பாத்திரத்திற்கு ஒரு மூடி போடவும்.பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

ஆறியவுடன் நெய் அல்லது எண்ணெய் தடவிய தட்டில் கவிழ்த்து துண்டு போடவும்.

ஒரு கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை,பெருங்காயம் தாளித்து கொட்டவும்,தேங்காய் துருவல் ,மல்லி இலை தூவி அல்ங்கரிக்கவும்.விருப்பப்பட்டால் எலுமிச்சை ஜூஸ் பிழிந்து சாப்பிடவும்.

சுவையான சத்தான ஆரோக்கியமான டோக்ளா ரெடி.
இதனை சட்னியுடன் பரிமாறலாம்.வாயு தொந்திர உள்ளவர்கள் குறைவாக சாப்பிடவும்.குஜாராத்தில் கடலை மாவு வைத்து செய்வார்களாம்,
நான் கொண்டைக்கடலை பயன்படுத்தி செய்து பார்த்தேன் அருமையாக வந்தது.
-ஆசியா உமர்.


40 comments:

Kurinji said...

Supera erukku, romba naala seiynumu ninaithukkondu erunthen, eni seiyavendiyathuthan.
Kurinji

Geetha6 said...

சூப்பர் சத்தான டோக்ளா !!

வெங்கட் நாகராஜ் said...

வடக்கில் தில்லியிலும் இந்த டோக்ளா ரொம்ப பிரபலம். பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவாங்க. மிருதுவா, நல்லா இருக்கும்..

கோவை2தில்லி said...

நான் கடலை மாவில் செய்திருக்கேன். ஆனா இது கொண்டக்கடலையில் வித்தியாசமா இருக்கு. கடலைமாவை விட கொண்டக்கடலை வயிற்றுக்கு நல்லது. நிச்சயமா செய்து பார்க்கிறேன். நன்றி.

ஆமினா said...

தெளிவான செய்முறை ஆசியா

asiya omar said...

குறிஞ்சி கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பாருங்க.

asiya omar said...

கீதா6 வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

asiya omar said...

வெங்கட் நாகராஜ்

கோவை2தில்லி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

asiya omar said...

நன்றி ஆமினா,கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி.

Kousalya said...

எனக்கு தெரியாத புது டிஷ் தோழி...செய்து பார்த்திட்டு சொல்றேன்பா

Priya Sreeram said...

arumai---miga miga arumai ! i have always used besan (gram flour) to make dhokla ! i liked this way too- will try out soon !

புவனேஸ்வரி ராமநாதன் said...

செய்முறை விளக்கப்படங்கள் எப்போதும் போல் அருமை.

Aruna Manikandan said...

looks healthy and delicious :)

அஸ்மா said...

சூப்பரா இருக்கே...! சாப்பிடும்போது கொஞ்சம் பசை மாதிரி இருக்குமா? அல்லது ஓரளவுக்கு கெட்டியாக இருக்குமா ஆசியாக்கா?

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சாப்பிட தோணுது நான் கடலை மாவில் தான் கேள்வி பட்டுஇருக்கிறேன், நல்ல step by stepa இருக்கு செய்து பார்திட்டு சொல்கிறேன்.

Gayathri's Cook Spot said...

I have tried it with besan. Using chole is new to me..

asiya omar said...

கௌசல்யா மிக்க நன்றி.

ப்ரியா மிக்க நன்றி.

புவனா மிக்க நன்றி.

அருணா மிக்க நன்றி.

அஸ்மா பேஸ்ட் மாதிரி இருக்காது,காரவடை டேஸ்ட் இருக்கும்.இட்லி மாதிரி சாஃப்டாக இருக்கும்.

சாருஸ்ரீ மிக்க நன்றி.

Akila said...

arumaiyana dhokla dear.... thanks for sending to my event...

Gopi Ramamoorthy said...

சூப்பர் டோக்ளா.

THOPPITHOPPI said...

கிறிஸ்துமஸ் அலங்காரம் அருமை

Kanchana Radhakrishnan said...

விளக்கப்படங்கள் அருமை.

Ananthi said...

டோக்ளா, செய்முறை படங்களுடன்... தெளிவா இருக்குங்க..
எனக்கு பிடிச்ச டிஷ்.. செய்து பார்கிறேன்.. நன்றி :)

Chitra said...

very nice recipe!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ....

மனோ சாமிநாதன் said...

டோக்ளா நன்றாக இருக்கிற‌து ஆசியா! அதுவும் கொண்டக்கடலையில் செய்வது வித்தியாசமாக இருக்கிறது!

Krishnaveni said...

such a healthy dhokla, our family's fav, yours looks yumm

asiya omar said...

காயத்ரி
அகிலா
கோபி
தொப்பி தொப்பி
காஞ்சனா
ஆனந்தி
சித்ரா
நண்டு நொரண்டு
மனோ அக்கா
கிருஷ்ணவேணி

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

Mahi said...

கொண்டைக்கடலைல டோக்ளா-வா? புதுசா இருக்கு ஆசியாக்கா! இதுக்கு ஈனோ ப்ரூட் சால்ட் போட வேணாமா? அப்படின்னா உடனே செய்துடுவேனே! :)

LK said...

சூப்பர்

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

Gayathri's Cook Spot said...

There is an award waiting for you. Please accept..

Jaleela Kamal said...

கொண்டைக்கடலி புது ஐடியா தான்

தயிர் சேர்க்கலையா?
(நானும் ரெசிபி அனுப்பி இருக்கேன் ஆனால் லின்க் கொடுக்க தான் நேரம் இல்லை)

ஸாதிகா said...

புது விதமாக அல்லவா இருக்கு.சூப்பர் தோழி.ஒரு முறை டிரை பண்ணி விடுவோம்.

asiya omar said...

மகி
எல்.கே.
தமிழ் வலைப்பூக்கள்
காயத்ரி
ஜலீலா
ஸாதிகா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

vanathy said...

super recipe, akka.

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு. செய்து பார்க்க சொல்லணும். வாழ்த்துகள் மேடம்!!

asiya omar said...

வானதி
சகோ.அப்துல் காதர்

கருத்திற்கு மிக்க நன்றி.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html

Asiya Omar said...

தென்காசித் தமிழ் பைங்கிளி அறிமுகம் செய்தமைக்கு நன்றி.வருகைக்கு மகிழ்ச்சி.

கூகிள்சிறி .கொம் said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html