Tuesday, March 30, 2010

ஆட்டுக்கால் கிளியர் சூப்

தேவையான பொருட்கள் ; 
ஆட்டுக்கால் - 1 -2 செட்,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி - 1,மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒன்னரை டீஸ்பூன்,
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
உப்பு- தேவைக்கு,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கருவேப்பிலை,மல்லி இலை -சிறிது,
தேங்காய் முந்திரி பேஸ்ட் - அரை கப் (விரும்பினால்)
செய்முறை :
வெங்காயம்,தக்காளி,மிளகு,சீரகம்,மல்லித்தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் சேர்த்து குக்கரில் வைத்து மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை முக்கால் மணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும்.உப்பு சேர்க்கவும்.அப்படியே மல்லி இலை தூவி பரிமாறினால் சூப்பர் சுவையுள்ள சத்தான கிளியர் சூப் ரெடி.


அதனுடன் அரைத்த தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைத்து கட் செய்த மல்லி இலை சேர்க்கவும்,எண்ணெயுடன் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து சிவந்ததும் கால் ஸ்பூன் சில்லி பவுடர் சேர்த்து தாளித்து கொட்டினால் கெட்டி சூப் ரெடி.

குழந்தைகளுக்கு கொடுக்க காரம் குறைத்து சேர்க்கவும். .இது பரோட்டா சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
குறிப்பு:அறுசுவையில் நானில் ஆட்டுக்கால் சால்னா குறிப்பு உள்ளது,அது ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கப்படத்துடன் உள்ளது.

Monday, March 29, 2010

பருப்பு முருங்கைக்காய்

தேவையான பொருட்கள் ; துவரம் பருப்பு - 150 கிராம்,முருங்கைக்காய் - 2, சின்ன அல்லது பெரிய வெங்காயம் - 100 கிராம்,தக்காளி -100 கிராம்,மிளகாய் - 2, மல்லி இலை - சிறிது , இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்,மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்,சீரகத்தூள் -கால்ஸ்பூன்,உப்பு -தேவைக்கு ,தாளிக்க -எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன் ,நெய் - 1 டீஸ்பூன்,கடுகு -அரைஸ்பூன் ,மிளகாய் வற்றல் -2, கருவேப்பிலை -2 இணுக்கு.
குக்கரில் பருப்பு,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,மிளகாய்,இஞ்சிபூண்டு பேஸ்ட்,மசாலாத்தூள்,மல்லி இலை,மிள்காய் சேர்க்கவும்.


பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கப் அதிகம் விடவும்.குக்கரை மூடி 4 விசில் விடவும்.


ஆவி அடங்கியபின்பு குக்கரை திறந்து பார்த்தால் பருப்பு வெந்திருக்கும்.வீடே மணக்கும்.



அத்துடன் கட் செய்த முருங்கைக்காயையும்,உப்பையும் சேர்க்கவும்.

மீண்டும் குக்கரை மூடி ஒரு விசில் வைத்தால் முருங்கைக்காய் பக்குவமாக வெந்துவிடும்.



பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு,மிளகாய் வற்றல்,வெங்காயம்,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கமகமக்கும் சுவையான பருப்பு முருங்கைக்காய் ரெடி.முருங்கைக்காய் சாப்பிட வெண்ணெய் மாதிரி இருக்கும்.
இதனை சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

-ஆசியா உமர்.














Sunday, March 28, 2010

மட்டன் மக்ரோனி

இந்த ரெசிப்பியை Shama's Fast Food Event - Pasta, Snehithi's Party Snacks Event அனுப்புகிறேன்.

தேவையான பொருட்கள் ; மக்ரோனி -400 கிராம்,வெங்காயம் -3,தக்காளி -3,மிளகாய் -3,இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 டீஸ்பூன்,கரம்மசாலா -அரைஸ்பூன்,மட்டன் - கால் கிலோ (ஸ்மால் பீஸ்)எண்ணெய் -4 டேபிள்ஸ்பூன்,ஃப்லேவர் ஃபில்டெர்ஸ் - 10 கிராம்,(ப்ளைன் நூடுல்ஸ் பேக்கில் உள்ள மசாலா)அல்லது சில்லி பவுடர், கறிமசாலா - 1டீஸ்பூன்,சிக்கன் கியுப் - 1,உப்பு - சிறிது,மல்லி இலை- சிறிது,ரம்பை இலை -1

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,நறுக்கிய வெங்காயம்,ரம்பை இலை,இஞ்சி பூண்டு,கரம் மசாலா,மிள்காய்,தக்காளி,கறிமசாலா ,உப்பு சேர்த்து வதக்கி,கறியும் சேர்த்து மூன்று விசில் வைத்து இறக்கவும்.


வெந்த கறியோடு தேங்காய்ப்பால் அல்லது தேங்காய்ப்பால் பவுடர் 4 டேபிள்ஸ்பூன் சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.


கொதிவரவும் மக்ரோனியை சேர்க்கவும்.


மக்ரோனியை சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் இருப்பதை உறுதி செய்து குக்கரை மூடி 3 விசில் அல்லது அடுப்பை குறைத்து கால் மணி நேரம் வைக்கவும்.


சுவையான மட்டன் மக்ரோனி ரெடி.இதனை காலை,மாலை,இரவு டிஃபனாக சாப்பிடலாம்.தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.




சுவை ரிச்சாக அபாரமாக இருக்கும்.குக்கரில் செய்வதால் சஃப்டாக இருக்கும்.
-ஆசியா உமர்.

Saturday, March 27, 2010

முருங்கையும் மொசுக்கொட்டையும் (கம்பளிப்பூச்சி)

அப்பாடா இப்படியும் ஒரு அவதியை அனுபவிக்கனும்னு இருக்கு போல.வீட்டின் பின்புறம் முருங்கை மரம் இருந்து செழிக்க பூவும்,பிஞ்சும்,காயும்,கீரையும் சாப்பிட்டு மகிழ்ந்தது ஒருகாலம்.
அந்த முருங்கைக்கு என்ன ஆனது.தீடீரென்று ஒரு நாள் மொசுக்கொட்டை-(எங்க ஊரில் இப்படி தாங்க சொல்வாங்க,) (hairy caterpillar)ஒண்ணு இரண்டு கண்ணில் தட்டுப்பட்டது,எடுத்து எடுத்து போட்டேன்,மற்நாள் முழுவதும் கூட்டமாய் கூட்டமாய் மாநாடே போட்டுவிட்டது,பூச்சி மருந்து வாங்கி அடித்தோம்,அடித்த வேளை தான் காணாமல் போகும்,திரும்பவும் கூட்டமாய் எங்கிருந்து வருமோ வந்துவிடும்.காலையில் எழுந்தால் இந்தக்கவலை தான்,மரத்தை என்ன செய்வது என்று யோசனையில் ஒரு மாதம் ஓடியது,


கூட்டமாக மொசுக்கொட்டைதீடீரென்று ஒரு நாள் கை,கால் எல்லாம் அரிப்பு கண்ணில் அரிப்பு,இடது கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருந்தது,அவில் மாத்திரை,மிளகு கஷாயம்,ஊசி போட்டாச்சு,விஷக்கடி இறக்கியாச்சு கண்ணில் நீர் வடிவதும் அரிப்பும் நிற்கவில்லை.
கண் ஆஸ்பத்திரிக்கு போனால் அங்கு எல்லாம் முடிந்து வர பாதி நாளாகிவிட்டது.இறுதில் பார்த்தால் மொசுக்கொட்டையின் மயிர்க்கால்கள் என் கண்ணில் இருந்ததாம்,டாக்டர் கஷ்டப்பட்டு எடுத்து அந்த அவதியில் இருந்து விடுதலை தந்தார்,அவருக்கு பெரிய சல்யூட் அடிக்காத குறைதான்.


இதற்கிடையில் அக்கம் பக்கம் எங்கவீட்டில் மொசுக்கொட்டை வந்துவிட்டது என்று ஒரே அமர்க்கள்ம்.கொத்துக்கொத்தாய் சாட்டைசட்டையாய் வாட்டசாட்டமாக காய்க்கும் முருங்கையை வெட்ட வேண்டிய வேளை வந்தது.பச்சை பசேல் என்று இருந்த மரம் ஏதோ முடி எல்லாம் உதிர்ந்து எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன் கதை தான்.


முருங்கைமரத்தை வெட்ட ஆள் வந்தாச்சு.அப்பதான் திடீரென்று ப்ளாக்கர் மூளை விழித்தது.சிலவற்றை கிளிக்கினேன்,வந்த தாத்தா ஒரு பவரான டிடர்ஜண்ட் சோப் வேணும்,அதுவும் அந்த பிராண்ட் தான் வேணும் என்று சொல்ல உடனே வாங்கி கொடுத்தோம்.அதனை பக்கெட்டில் தண்ணீரில் கரைத்து குவளை வைத்து மரத்தின் மீது அடித்து ஊற்ற அத்தனை மொசுக்கொட்டையும் சுருண்டு விழுந்தது.
பின்பு மரத்தை வெட்டி எரித்து விட்டு ஜாலியாக 2மணி நேர வேலைக்கு ரூ 400 வாங்கிவிட்டு நடை கட்டினார் தாத்தா.


ரெடியான பவரான சோப் கரைசல்.



முருங்கை மரம் மறைந்தது.ஆசை யாரை விட்டது,ஒரே ஒரு கொப்பு வைத்து கொள்ளலாம் என்று போட்டு வைத்ததில் திரும்பவும் மொசுக்கொட்டை நடமாட ஆரம்பித்து விட்டது.சுத்தமாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விடுவதே இதனை தடுக்கும் ஒரே வழி.திரும்ப ஒரு கொப்பை வைத்தால் மரத்தை உண்டாக்கி விடலாம்.கண்ணில் ஒன்று,இரண்டு தட்டுப்படும் பொழுது தீப்பந்தம் வைத்து காட்டினால் கருகி விடும்,இல்லை சோப் கரை சல் நல்ல் மருந்து.(இது அனுபவ தாத்தாவின் யோசனை) முருங்கை மரம் வீட்டில் வைத்து இருப்பவர்கள் உஷாராக இருக்கவும்.

ஒரு வேளாண் பட்டதாரியாக பூச்சி மருந்து சொல்லனும்னால்

மோனோகுரோட்டோபாஸ் 20 ml -ஐ 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து அடிக்க வேண்டியது தான்,20 வருடத்திற்கு முன்னாடி படிச்சது.

--ஆசியா உமர்.

Friday, March 26, 2010

முட்டை தக்காளி பொரியலும்,அவார்டும்

தேவையான பொருட்கள்;

முட்டை-2, காய்வெட்டான தக்காளி-4,மிளகாய் - 2,வெங்காயம் - 3,மல்லி,கருவேப்பிலை -சிறிது,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,கடுகு உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்,சில்லி பவுடர் -கால்ஸ்பூன்,தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,உப்பு-தேவைக்கு.


க்டாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு உளுத்தம்பருப்பு,நறுக்கிய மிளகாய்,கருவேப்பிலை தாளித்து,நறுக்கிய வெங்காயம்,தக்காளி,உப்பு,சில்லிபவுடர் சேர்த்து வதக்கவும்.



வதங்கியவுடன் முட்டையை அடித்து மேல் ஊற்றி விடவும்.




முட்டை வெந்து வரும்பொழுது தேங்காய் துருவல் போடவும்.






பிரட்டிவிடவும்.சுவையான முட்டை தக்காளி பொரியல் ரெடி.இதனை சாதம்,சப்பாத்தி,ப்ரெட் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேனகா சத்யா எனக்கு தந்த விருது,மகிழ்ச்சியுடன் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.










To the award winners,please pass this on to your favourite bloggers !

Here are the Rules :

1.Put the logo on your blog or within your post.

2.Pass the award on to 12 bloggers.

3,Link the nominees within your post.

4.Let the nominees know they have recieved this award by commenting on their blog.

5.Show the love and link to person from whom you recieved this Award.


இந்த விருதினை சுமஜ்லா,மகி,சித்ரா,ப்ரபா,கீதாஆச்சல்,ஜெய்லானி,மங்குனி அமைச்சர்,இலாஅதிரா,சகோ.ஹைஷ்,கவிசிவா,தமிழ்குடும்பம் ஆகியவர்களுக்கு பிரியமுடன் வழங்குகிறேன்.மேனகா என் மற்ற தோழிகள் அனைவருக்கும் கொடுத்து விட்டதால் மிக்க மகிழ்ச்சி,பாராட்டுக்கள்.

--ஆசியா உமர்.

Wednesday, March 24, 2010

என்னைக் கவர்ந்த பத்து பெண்கள்

இந்த அருமையான தொடர் பதிவில் என்னையும் கோர்த்துவிட்ட மகிக்கு மிக்க நன்றி.எல்லாரும் இதைபற்றி எழுதி களைத்து அப்பாடான்னு இருக்கும் பொழுது நாம எழுதினால் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்காது?நினைப்பு தான். எனக்கு பிடித்த பெண்களை பற்றி அனைவரும் எழுதி தள்ளிவிட்டர்கள்,இவர்களையும் அவர்களோடு சேர்ப்போம்.

1. மல்லிகா பத்ரிநாத் - சமையற்கலை நிபுணர்.
சமையலில் இவங்களோட எளிமையான அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடிக்கும்,தொலைக்காட்சியில் இவரின் செய்முறையை பார்த்து நாமும் இப்படி குறிப்பெல்லாம் கொடுக்கணும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டேன்.அதன் பின்பு இப்ப சந்தர்ப்பம் கிடைத்து கொடுத்து வருகிறேன்.


2. எலிசபெத் மகாராணி
இவர் நடை உடை பாவனை எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.எங்க அம்மாவின் வீட்டில் இளம்வயது எலிசபெத் மகாராணியின் படம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும்.அங்கு போகும் பொழுதெல்லாம் அதனை ரசிக்காமல் வந்ததில்லை.

3. சரோஜினி நாயுடு அம்மையார் இவஙக்ளை உலகே அறியும்,'nightingale of india ' என்று அழைக்கப்படுபவர்.தேர்ந்த கவி,சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.

4.எழுத்தாளர் சிவசங்கரி: எனக்கு மிகவும் பிடித்த பெண் எழுத்தாளர்.இவருடைய இயல்பான எழுத்து நடையால் எல்லோர்ரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த புகழுக்குடையவர்.இவருடைய நாவல்கள் சினிமாவாகி சரித்திரம் படைத்து இருக்கிறது.ஆல்கஹால்,ட்ரக் இதனைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் இவருடைய கதைக்கள் மிகப்பிரபலம்.
5.ஷோபனா ரவி , தமிழ் செய்தி வாசிப்பாளர்.தூர்தர்சனை இவருடைய செய்தி வாசிப்பை கேட்கவும்,அவரின் நேர்த்தியான உடை,அலங்கார அழகை பார்க்கவே வைப்பதுண்டு.நான் இவரின் மிகப்பெரிய ரசிகை. இவர் செய்தி வாசிக்கும் தோரணையே அனைவரையும் கவரும்.
6.சுதா மூர்த்தி -சமூக சேவகி ,எழுத்தாளர்.

இன்போசிஸ் பவுண்டேஷன் நடத்தி வருபவர்.இன்போஸ்சிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் துணைவியார்.ஒரு தேர்ந்த பொறியளால்ர்.இவருடைய அனுபவ எழுத்துக்கள் ,கதைகள்21 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு எல்லோராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இவரைப்பற்றி ஒரு தனி இடுகையே இடலாம்,அத்தனை மதிப்பும் மரியாதையும் இவர் மீது எனக்கு உண்டு.

7. பழம்பெரும் ஹிந்தி நடிகை -நர்கிஸ் தத்

இவரின் அழகில் மயங்காதோர் இல்லை.இவருடைய் உருக்கமான நடிப்பை பார்க்கவே mughul-e-azam படத்தை திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன்.

8.பத்மா சுப்ரமணியம்: பரதநாட்டியக்கலைஞர் -பரத நாட்டியம் என்றாலே இவரின் பெயர் தான் முதலில் நமக்கு நினைவிற்கு வரும்.இவர் ப்ரோகிராம் ஒளிபரப்பினால் அப்படியே நேரம் போவது தெரியாமல் லயித்து இருந்துவிடுவதுண்டு.

9.அஞ்சு பாபி ஜார்ஜ் : விளையாட்டு வீராங்கனை.இந்தப்படம் எனனோட பேவரைட்,என் ரூமில் நீண்ட காலம் வைத்து இருந்தேன்.அழகும் அறிவும் ஆற்றலும் படைத்தவர்.விளையாட்டுதுறையில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர்.
10.சுஆதா அஸ்லம் ,என் இனிய தோழி:
என்னுடன் கல்லூரியில் பயின்றவர்.மிக நெருக்கமான தோழியரில் முதன்மையானவர்.என் பால்யம் முதல் இன்று வரை பழகியவர்களுல் என் மனதைக்கவர்ந்த தோழி.என் மீது பாசமும்,கரிசனையும்,நீங்கா அன்பும் கொண்டவர்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய நட்பு.எப்பவாவது சந்தித்தாலும்,போனில் பேசினாலும் அதற்கு காரணம் அவளாகத்தான் இருப்பாள்,நான் போன் பண்ணனும்னு நினைப்பேன் அவள் உடன் பேசிவிடுவாள்.நீ எங்கே போனாலும் விடமாட்டேன்னு சொல்வாள்.எல்லாவற்றிலும் சிற்ந்த என் உயிர்த்தோழி.1985 முதல் பழக்கம்.
இந்த பெரிய சங்கிலித்தொடரில் நானும் ஒருத்தி என்று நினைக்கும் பொழுது மிக சந்தோஷமாக உள்ளது.வாய்ப்பிற்கு மகிழ்ச்சி மகி.
-ஆசியா உமர்.

தங்கை சிங்கை ப்ரபாதாமுவை தொடர்ந்து பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


Tuesday, March 23, 2010

முட்டை குழம்பு / Egg Kuzhambu

தேவையான பொருட்கள்;-
முட்டை -4
உருளைகிழங்கு - 200 கிராம்(விரும்பினால்)
வெங்காயம்- 2
தக்காளி -2
மிளகாய் - 2
மல்லி கருவேப்பிலை - சிறிது
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -கால்ஸ்பூன்.
மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள்,மிளகுத்தூள் தலா அரைஸ்பூன்
கறிமசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்,முந்திரிபருப்பு-4 (அரைக்க)
உப்பு - தேவைக்கு.
முதலில் முட்டை, உருளையை வேகவைத்து தோலுரித்து கொள்ளவும்.

நான்கு நபர்களுக்கு.

செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கட்செய்த பாதி வெங்காயம் வதக்கி,இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம்மசாலா,மிளகாய்,மல்லி கருவேப்பிலை வதக்கவும்.


மீதியுள்ள வெங்காயம்,தக்காளி,மசாலா பொருட்கள்,தேங்காய்,முந்திரிபருப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்


அரைத்த மசால் கலவையை கடாயில் வதக்கியவற்றுடன் சேர்க்கவும்,நன்றாக அடிபிடிக்காமல் வதக்கவும்,சிம்மில் வைக்கவும்.



கிரேவி மணம் வரவும்,தண்ணீர் சேர்த்து நன்கு கொதிவந்ததும் அவித்த முட்டை லேசாக கீறி,விரும்பினால் உருளைகிழங்கும் போட்டு பிரட்டி விடவும்.எண்ணெய் மேலெழும்பி வந்து குழம்பு ரெடியாகி விடும்.இது ஊற்றி சாப்பிடுவது போல் கெட்டியாக இருக்கும்.இதனை சாததுடன் பரிமாற சுவை அபாரமாக இருக்கும்.




ஏதாவது சிம்பிளாக செய்யனும்னால் இந்த முட்டை குழம்பை செய்து அசத்திவிடலாம்,உடன் பொரித்த அப்பளம் இருந்தால் போதும்.சாப்பாடு உள்ளே போவதே தெரியாது,

--ஆசியா உமர்.

சும்மா இருந்தாலும் சுறுசுறுப்பா யோசிக்கிறாங்க

எனக்கு வந்த சில SMS

1.என்னதான் கூகிள் பெரிய வெப்சைட்டாக இருந்தாலும் அதுல கோவில்ல காணாமல் போன செருப்பை தேடி தரமுடியுமா?
யோசிங்க,tecnology too have some drawback.

2.political தத்துவம்
என்னதான் கருணாநிதி DMKவாக இருந்தாலும் அவர் சொட்ட மண்டையில் யாராவது கொட்டுனா அம்மான்னு தான் கத்துவார்.

3.கணவர்:குழந்தை அழுதுட்டு இருக்கு,நீ சீரியல் பார்த்துட்டு இருக்கே,
மனைவி:சும்மா இருங்க,அதுவும் சீரியல் பார்த்திட்டு தான் அழுவுது.

4.std -1:நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?
std-2:இப்பதான் board-டில் திருக்குறளை எழுதிட்டு திருக்குறளை எழுதியது யாருன்னு கேக்கிறாங்க?

5.சிக்கன் குனியா is spreading again so சிக்கன் சாப்பிடும் பொழுது குனியாம சாப்பிடுங்க.

6.EXAM PATTERN BY YEARS;
IN 1995 -ANSWER ALL QUESTIONS
IN 2000-WRITE ONLY 5 QUESTIONS
IN 2008 WRITE EITHER A OR B.
IN 2015 -READ ONLY QUESTIONS
IN 2020- THANKS FOR COMING TO EXAM,HOW IS IT?

-ஆசியா உமர்

Friday, March 19, 2010

மீன் முருங்கைகாய் சால்னா

தேவையான பொருட்கள் ;


ஊளி மீன் - 300கிராம்,வெங்காயம்-2,தக்காளி - 2,புளி -எலுமிச்சை அளவு,பச்சை மிளகாய் - 3,பூண்டு - 6பல்,மல்லி,கருவேப்பிலை - சிறிது, தேங்காய் -அரைத்தது - அரை கப்,உப்பு - தேவைக்கு,எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,

கடுகு,வெந்தயம்,உளுத்தம்பருப்பு - தலா அரைஸ்பூன்.மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,மீன் மசாலா - 2 டேபிள்ஸ்பூன்



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,தட்டிய பூண்டு மிள்காய் சேர்த்து,உப்பு சேர்த்து வதக்கவும்.



வதங்கியவுதும் மிளகாய்த்தூள்,மீன் மசாலா சேர்க்கவும்.


புளித்தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

முருங்கைக்காயை தனியே உப்பு மஞ்சள்,தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.




புளித்தண்ணீர் சேர்த்து மசாலா நன்கு கொத்தித்ததும் மீன் போட்டு 5 நிமிடம் கழித்து முருங்கைக்காய் சேர்த்து அகப்பை போடாமல் கொதிக்க விடவும்.



மீன் ,முருங்கைக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விட்டு கொதிவந்து குழம்பு மணம் வந்து எண்ணெய் மேலே வரவும் இறக்கவும்.செம ருசியான மீன் முருங்கைக்காய் சால்னா ரெடி.இதனை சாதம் ,சப்பாத்தி,நெல்மாவு ரொட்டியுடன் பறிமாறலாம்.