Saturday, July 31, 2010

ஆசியாஸ் காளிஃப்ளவர் மஞ்சூரியன் (கிரேவி)

தேவையான பொருட்கள் ;

காளிஃப்ளவர் - மீடியம் சைஸ்

கார்ன்ஃப்லோர் - 3+3 டேபிள்ஸ்பூன்

மைதா - 3 டேபிள்ஸ்பூன்

முட்டை - 1 (விரும்பினால் மட்டுமே)

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 100 மில்லி

வெங்காயம் - 1 பெரியது

பச்சை மிள்காய் - 3

இஞ்சி துருவல் - 2 -3 டேபிள்ஸ்பூன்

சோயாசாஸ்- 2-3 டேபிள்ஸ்பூன்

டொமட்டோ சாஸ் -2-3 டேபிள்ஸ்பூன்

அஜினோமோட்டோ - கால்ஸ்பூன்

ரெட் கலர் - பின்ச்

ஸ்பிரிங் ஆனியன் - சிறிது


காள்ஃப்ளவரை சிறிய துண்டாக்கி கொத்திக்கும் நீரில் போட்டு உப்பு சேர்த்து சிறிது கொதிக்க வைக்கவும்.


கொதி வந்ததும் வடிகட்டி வைக்கவும்.

ஒரு பவுலில் கார்ன்ஃப்லோர்,மைதா,சில்லி பவுடர்,உப்பு,(விரும்பினால் முட்டை) சேர்த்து கரைத்து அதில் காளிஃப்ளவரை போட்டு கலந்து சிறிது நேரம் வைக்கவும்.

பின்பு ஒரு சாலோ ஃப்ரைபானில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளிஃப்ளவர் முழுவதும் போட்டு சிவற பொரித்து எடுக்கவும்.



வெங்காயம் பச்சை மிள்காய் இஞ்சியை பொடியாக கட் செய்து வைக்கவும்.

கடாயில் காளிஃப்ளவர் பொரித்த எண்ணெயையே விட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து சிவற வதக்கவும்.


வதங்கியதும் பொரித்த காள்ஃப்ளவரை சேர்த்து கிளறவும்.விரும்பினால் அஜினோமோட்டோ சேர்க்கவும்.

பின்பு சோயா சாஸ் சேர்க்கவும்.



சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.இதனை சிறிது பெப்பர் தூவி மல்லி இலை அல்லது ஸ்ப்ரிங் ஆனியன் கட் செய்து போட்டு அப்படியே சாப்பிட்டால் ட்ரை மஞ்சூரியன்.

ரெடி செய்த ட்ரை மஞ்சூரியனில் கார்ன்ஃப்ளோர் 300 - 400 மில்லி தண்ணீரில் கரைத்து விடவும்.அடி பிடிக்காமல் கிளறவும், டொமட்டோ சாஸ் ,பின்ச் ரெட் கலர் சேர்க்கவும்.ஸ்ப்ரிங் ஆனியன் கட் செய்து தூவி பரிமாறவும்.

சுவையான காளிஃப்ளவர் மஞ்சூரியன் ரெடி.இதனை நாண்,பரோட்டா, சப்பாத்தி.ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.




-ஆசியா உமர்

Thursday, July 29, 2010

சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Bottlegourd moongdal kootu

எங்களுக்கு பிடித்த காய்கறியில் சுரைக்காயும் ஒன்று.இந்த கூட்டு வைத்தால் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் ;

சுரைக்காய் - அரைகிலோ
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிள்காய் - 3
தேங்காய் துருவல் - 4 டேபிஸ்பூன்
மஞ்சள் தூள்- கால்- அரைஸ்பூன்
சீரகத்தூள் - அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் -சிறிது
கடுகு உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -1-  2 டேபிள்ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
மல்லி கருவேப்பிலை - சிறிது.

Serves -6

முதலில் பாசிப்பருப்பை சிவறாமல் இளந்தீயில் வெதுப்பி கொள்ள வேண்டும்.

சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.


பாசிப்பருப்பை சிறிது தண்ணீர்விட்டு வேகவைக்கவும்,பாதி வெந்ததும் சுரைக்காய் போடவும்,கொதி வந்ததும்,சீரகத்தூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.உப்புதூள் தேவைக்கு சேர்க்கவும்.பிரட்டி விடவும்,சுரைக்காயில் தண்ணீர் ஊறும்,மூடி போட்டு வேக வைக்கவும்.விரும்பினால் சிறிய தக்காளியும் சேர்க்கலாம்.
மிக்ஸியில் மிளகாயை இரண்டு சுற்று சுற்றி அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து பரபரவென்று அரைத்து எடுக்கவும்.

வெந்து வரும் சுரைக்காயுடன் அரைத்த தேங்காய் பச்சை மிளகாயை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விடவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.


நறுக்கிய மல்லி இலை தூவவும். உப்பு சரிபார்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும்,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போடவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து சிவறவும்,பெருங்காயம் போட்டு சிறிது வதக்கி தாளிச்சதை வெந்த சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டில் சேர்க்கவும்.
சுவையான சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு ரெடி.இது  சூடான சாதம் சப்பாத்தி,பூரிக்கு அருமையாக இருக்கும்.
பாசிப்பருப்பு தான் போட்டு செய்யனும் என்று இல்லை. கடலை,பருப்பு துவரம் பருப்பும் போட்டு செய்யலாம்.


--ஆசியா உமர்.

Monday, July 26, 2010

சிக்கன் பார்பிகியூ

நெல்லையில் சிக்கன் பார்பிகியூ செய்து அசத்திய பொழுது எடுத்தது.


தேவையான பொருட்கள் ;

போன்லெஸ் சிக்கன் - 2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்

கெட்டி தயிர் - 200 மில்லி


லைம் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்


சிக்கன் பார்பிகியூ மசாலா - 2 டேபிள்ஸ்பூன்

(விரும்பினால் சிறிது மசாலாவை கூட்டி கொள்ளலாம்.)


(சிக்கன் 65 மசாலாவும் உபயோகிக்கலாம்)


ட்ரை மிண்ட் பவுடர் - சிறிது


உப்பு - தேவைக்கு.

Serves - 8


தேவையான பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடிகட்டிய சிக்கனில் சேர்த்து கலந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்கவும் அல்லது முதல் நாளே ரெடி செய்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.



இது தாங்க நாம பார்பிகியூ செய்யப்போற அடுப்பு.எத்தனை கிலோ வேண்டுமானாலும் சுட்டு எடுக்கலாம்.ஒரு முறைக்கு அரைகிலோ வீதம் வைத்து எடுக்கலாம்.


அடுப்பினுள் உள்ளே ஒரு கம்பி தட்டும் ,மேலே கரி வைத்து அதன் மேல் ஒரு கம்பி தட்டும் வைக்குமாறு இருக்கும்.

இப்படி தான் அடுப்பு கரியை வைக்க வேண்டும்.பின்பு நாம் சிறிது எண்ணெய் கலந்த துணியை நெருப்பு பற்ற வைத்து போட்டால் நெருப்பு விரைவில் உருவாகிவிடும்.(சமையல் அல்லது தேங்காய் எண்ணெய் ,ஏன் உபயோகித்த எண்ணெயை கூட அடுப்பை பற்ற வைக்க பயன்படுத்தலாம். மசாலாவில் ஊற வைத்த சிக்கனை இப்படி கம்பி தட்டில் அடுக்கி கொள்ள வேண்டும்.

அடுப்பில் நெருப்பு உண்டானவுடன் ரெடி செய்த சிக்கனை வைத்து சுட வேண்டும்.


இருபுறமும் திருப்பி திருப்பி சுட வேண்டும்.அப்படியே மணம் அடுத்த வீட்டிற்கு கூட போகும் அளவு இருக்கும்.

சிக்கனை சுடும் பொழுது அத்துடன் வெங்காயம் கூட கங்கில் சுட்டு எடுக்கலாம்.

ப்ரவுன் ப்ரெட்,சுட்ட ஆனியன்,சிக்கன் சேர்த்து சாப்பிடும் பொழுது அசத்தலாக இருக்கும்.

சுவையான சிக்கன் பார்பிகியூ ரெடி.போட்டோ தான் சுமாராக வந்துள்ளது.எல்லோரும் மிக ஆர்வமாக சாப்பிட்ட்தால் போட்டோவில் அதிக கவனம் செலுத்த முடியலை.

ஜலீலாவின் பேச்சிலர்ஸ் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.


--ஆசியா உமர்.

Saturday, July 24, 2010

நெல் மாவு / Nel Maavu / Arisi Maavu..

ஊர் கிளம்ப பத்து பதினைந்து நாட்களே இருப்பதால் மாவு மசாலா என்று தயார் செய்ய ஆரம்பிச்சாச்சு,நெல் மாவு ரெடியாகி விட்டது,வேறு வேலை ப்ளாக்கில் போட்டாகனுமே.எங்க வீட்டு உழவி சங்கராவடை தான் மாவு வறுத்து தயார் செய்து தந்தது.

தேவையான பொருட்கள் ;

பச்சரிசி - 15 கிலோ
சிவப்பரிசி - 5 கிலோ
தேங்காய்த்துருவல் - 7 தேங்காய்


பச்சரிசியை நன்றாக கழைந்து மண் தூசி போக கழனியை வடிகட்டவும்.

அடுத்து கழைந்த அரிசியை ஊற வைக்கவும்.

பின்பு ஊறிய அரிசியை அரித்து எடுக்கவும்.


சிவப்பரிசி பச்சரிசி இரண்டையும் கலந்தே அரித்து வைக்கவும்.

பின்பு அதனை மிசினில் கொடுத்து நைசாக திரித்து வாங்கவும்.முன்பு குந்தானி உலக்கை கொண்டு விட்டிலேயே இடித்து அரித்து மாவை வறுப்பது வழக்கம்.மாவை கப்பி நீக்கி பின்பு அந்த கப்பியையும் இடித்து அரித்து நைசான மாவை வறுப்பது வழக்கம்.இப்ப யாரு வீட்டில் உலக்கை கொண்டு இடிக்கிறாங்க.மிசினில் திரிப்பது ஈசி என்று அது பழக்கத்திற்கு வந்து விட்டது.உலக்கையும் குந்தாணியும் சாய்த்து வைத்த மாதிரியே இருக்கு.


அடுப்பை கூட்டி பெரிய இரும்பு வாணலியில் முதலில் சிறிது எண்ணெய் தடவி தேங்காய் துருவல் போட்டு வறுத்து அதன்பின்பு மாவை போட்டு இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.



வறுத்த மாவை பெரிய பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்கவும்.மொறு மொறுப்பான கமகமக்கும் நெல் மாவு ரெடி.



பின்பு பாத்திரத்தை இப்படி துணி கொண்டு மூடி வைக்கவும்.வறுத்த மாவு நன்றாக ஆறி விடும்.பின்பு மறு நாள் மூடியுடன் கூடிய டப்பாக்களில் இறுக மூடி பாதுகாப்பாக வைக்கவும்.இந்த மாவு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.புட்டு,கொழுக்கட்டை,ரொட்டி,தக்கடி என்று இந்த மாவில் செய்து அசத்தலாம்.

--ஆசியா உமர்.

Thursday, July 22, 2010

கேபேஜ் எக் நூடுல்ஸ் / Cabbage Egg Noodles

தேவையான பொருட்கள் ;

நூடுல்ஸ் ரெடிமேட் பாக்கெட் -400 கிராம் (கறி மசாலா ஃப்ளேவர்)

முட்டை - 3

கோஸ் - கால் கிலோ

வெங்காயம் - 2 பெரியது

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - அரைஸ்பூன்

உப்பு - தேவைக்கு.

5 நபர்களுக்கு.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதி வந்ததும் நூடுல்சை
உடைக்காமல் அப்படியே போட்டு வேக வைத்து வடித்து வைக்கவும்.


கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், முட்டை கோஸ் சேர்த்து சிறிது உப்பு தூவி வதக்கவும்.




கோஸ்,வெங்காயம் வதங்கியதும் அடித்து வைத்த முட்டை விட்டு அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வெந்ததும் பிரட்டி விடவும்.


நூடுல்ஸ் பேக்கில் உள்ள கறி மசாலாவை தேவைக்கு சேர்க்கவும்.அதில் உப்பு இருக்கும்.


மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.



பின்பு அத்துடன் வேக வைத்து வடித்த நூடுல்ஸ் சேர்க்கவும்.நன்கு பிரட்டி தேவைக்கு மிளகுத்தூள் சேர்க்கவும்.


சுவையான கேபேஜ் எக் நூடுல்ஸ் ரெடி.குழந்தைகளுக்கும் ஏன் நமக்கும் கூட மிகவும் பிடிக்கும்.
--ஆசியா உமர்.


இதனை ஜலீலாவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.